ஐயப்பன் வாழ்க்கை வரலாறு

Ayyappan history in tamil – ஐயப்பன் வாழ்க்கை வரலாறு

Ayyappan history in tamil – ஐயப்பன் வாழ்க்கை வரலாறு

ஐயப்பன் வாழ்க்கை வரலாறு

ஐயப்பன் வாழ்க்கை வரலாறு || Ayyappan history in tamil :

பெயர் – ஐயப்பன்.
சிறப்பு பெயர்கள் – சாஸ்தா, தர்மசாஸ்தா, மணிகண்டன்.
பெற்றோர்கள் – சிவன் மோகினி (விஷ்ணுவின் அவதாரம்).
கோயில் அமைந்துள்ள இடம் – சபரிமலை (கேரள மாநிலம்).
மந்திரம் – ஓம் சாமியே சரணம் ஐயப்பா.
ஆயுதம் – வில்-அம்பு, வால்.
வாகனம் – புலி.
சிறப்பு பூஜைகள் – மண்டல பூஜை, மகரஜோதி விளக்கு பூஜை.

ஐயப்பன் வாழ்க்கை வரலாறு:- ஐயப்பன் என்பவர் இந்து கடவுள்களில் தென்னிந்தியாவில் முதன்மை பெற்ற கடவுளாக கருதப்படுகிறார். இவருடைய ஆலயம் கேரள மாநிலத்தில் சபரிமலை என்னும் இடத்தில் உள்ளது. இவர் விநாயகர் மற்றும் முருகனின் தம்பி ஆவர். ஐயப்பனின் வாழ்க்கை வரலாறு பற்றி இத்தொகுப்பில் முழுமையாக காணலாம்.

ஐயப்பன் வரலாறு || Biography of ayyappan story in tamil :

 • ஐயப்பன் வாழ்க்கை வரலாறு:- மகிஷாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்த அன்னை ஆதிபராசக்தியின் மீது கடும் கோபம் கொண்ட அவனது தங்கையான மகிஷி பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் இருந்து பல வரங்களை பெற்றாள்.
 • இதனால், பிரம்மன் அளித்த வரங்களை பயன்படுத்தி மகிஷி தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் மிகவும் கொடுமைப்படுத்தி துன்புறுத்தி வந்தாள்.
 • இதனால், ரிஷிகளும், முனிவர்களும் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தனர். இதனால், பிரம்மா சிவனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிஷியை அழிக்க முடியும் என வரம் அளித்தார்.
 • இதனால், பார்கடல் கடைந்த அந்த வேலையில் விஷ்ணு மோகினி அவதாரத்தை கண்டு ரசித்த சிவபெருமானுக்கும், மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தைதான் ஐயப்பன்.

பந்தளம் ராஜாவும் மணிகண்டனும் :

ஐயப்பன் வாழ்க்கை வரலாறு:-  அதே, சமயம் பாண்டியன் அரசாக இருந்த ராஜசேகரன் என்பவருக்கு குழந்தை இல்லாமல் பல ஆண்டு காலம் கடவுளை தரிசித்து வந்தார். அப்போது, வேட்டைக்கு வந்த பந்தளராஜா பம்பை நதிக்கரையில் குழந்தை அழுகும் குரலை கேட்டு அந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது அங்கு ஒரு குழந்தைக்கு பாதுகாப்பாக மயிலும், பாம்பும் பாதுகாப்புடன் அந்த குழந்தை பாதுகாத்து வந்தது.

இது தெய்வத்தால் நமக்கு தரப்பட்ட குழந்தை என்று எண்ணிய பந்தள ராஜா அந்த குழந்தையை தன் குழந்தையாக வளர்க்க முடிவு செய்தார். அந்தக் குழந்தையின் கழுத்தில் ஒரு மணி கட்டப்பட்டிருந்தது. இதனால் ஐயப்பனுக்கு “மணிகண்டன்” என பந்தளராஜா பெயரிட்டார்.

ஐயப்பனின் வேறு பெயர்கள் :

1. மணிகண்டன்.
2. பூதநாதன்.
3. பூலோகநாதன்.
4. தர்மசாஸ்தா.
5. எருமேலி வாசன்.
6. ஹரிஹரசுதன்.
7. கலியுக வரதன்.
8. ஹரிஹரன்.
9. கருணா சாகர்.
10. லட்சுமண பிராணதத்தா.
11. பந்தள ராஜன்.
12. பந்தளவாசன்.
13. பம்பாவாசன்.
14. சபரி வாசன்.
15. சபரீசன்.
16. சபரீசுவரன்.
17. சபரி கிரீசன்.
18. சாஸ்தா.
19. வீர மணிகண்டன்.
20. ஹரிஹர செல்வன்.

இப்படி, பல பெயர்களால் ஐயப்பன் மக்களால் அழைக்கப்படுகிறார்.

பந்தள மகாராஜா பட்டாபிஷேகமும் ஐயப்பனும் :

 1. இப்படி அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்த ராஜா அரசியிடம் கொடுத்தார். அந்த அரசிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
 2. ஐயப்பன் அரண்மனைக்கு வந்த சில நாட்களிலேயே அரசியும் கருவுற்று ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். மணிகண்டன் வந்த நேரம் நமக்கு இன்னொரு வாரிசு கிடைத்திருக்கிறது என்று ராஜாவும், அரசியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
 3. அரண்மனையில் நன்றாக வளர்ந்து வந்த மணிகண்டனுக்கு பந்தள மகாராஜா பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்தார்.

மந்திரி மற்றும் மகாராணியின் சதி :

 • அரண்மனையில் அனைத்திலும் சிறப்பாக விளங்கிய மணிகண்டன் அரசனால் தனக்கான மரியாதை போய்விடும் என்று எண்ணிய மந்திரி சதி செய்ய ஆரம்பித்தான்.
 • அதன்படியே மகாராணிடம் உங்களுக்கு பிறந்த குழந்தை இருக்கும் பொழுது மணிகண்டனுக்கு எப்படி “பட்டாபிஷேகம்” செய்ய முடியும் என்று பிற்காலத்தில் ராஜாவுக்கு பிறகு மணிகண்டன் தான் அரசனாக போகிறான் என்று ராணியின் மனதில் விஷத்தை விதைத்தான்.
 • இதனால், ஐயப்பனை கொல்ல திட்டம் தீட்டிய மகாராணி தனக்கு தீராத வயிற்று வலி உள்ளது என வைத்தியரிடம் புலிப்பால் கொண்டு வந்தால் மட்டும் தான் இந்த வயிற்று வலியை சரி செய்ய முடியும் என ஐயப்பனிடம் கூறச் செய்தாள்.

புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்ற ஐயப்பன் :

ஐயப்பன் வாழ்க்கை வரலாறு:- தாயின் சதித்திட்டத்தை அறிந்த இளம் பாலகன் மணிகண்டன் தனது 12-வயதில் புலிப்பால் கொண்டுவர காட்டுக்கு செல்கிறார்.

• அந்த நேரம் மகிஷியின் அட்டகாசம் அதிகமாக இருந்தது அப்போது ஐயப்பன் தன் வாளால் மகிஷியின் தலையை வெட்டினார். இதனால் மகிழ்ச்சி என்ற அரக்கியின் தோற்றம் மாறி அழகிய பெண் வடிவில் தனது சாபம் விமோசனம் பெற்று மாறினாள்.

• அந்த நேரம் மகிஷி ஐயப்பனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகிறாள். ஆனால், ஐயப்பனோ தனக்கு வரும் பக்தர்கள் எந்த வருடம் கன்னிச் சாமியாக வராமல் இருக்கிறார்களோ அந்த வருடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார்.

• மகிஷியின் மரணத்தால் தேவர்களும்,முனிவர்களும்,ரிஷிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் இந்திரன் புலியாக மாறினார்.தேவர்களும் புலிப்படையாக மாறினார்கள். ஐயப்பன் அவர்கள் மீது அமர்ந்து அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.

• இதனை கண்ட மக்களும் மகாராணியும் மிகுந்த பயத்தில் உறைந்து இருந்தனர். தனது தவறை எண்ணிய மகாராணி ஐயப்பனிடம் மன்னிப்பு கூறினாள்.

ஐயப்பன் கடவுளாக மாறிய தருணம் :

 • ஐயப்பன் இதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் பூமியில் அவதரித்த வேலை முடிந்துவிட்டது. அதனால்,நான் தேவலோகம் செல்லும் நேரம் வந்துவிட்டது எனக் கூறினார்.
 • மகனைப் பிரிய மனமில்லாத பந்தள ராஜா அவரின் நினைவாக ஒரு கோவில் கட்ட திட்டமிட்டார். அதற்காக ஐயப்பனிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 • அதற்கு, மறுப்பு தெரிவிக்காத ஐயப்பன் பந்தள ராஜாவிடம் எனது வில்லிலிருந்து புறப்படும் அன்பானது எங்கு பாய்கிறதோ அந்த இடத்தில் எனக்கு 18-படிகள் வைத்து கோவில் கட்டுமாறு ஆணையிட்டார்.
 • அதற்கு மறுப்பு தெரிவிக்க அதை பந்தளராஜா சரி என முடிவெடுத்தார். அதன்படி ஐயப்பன் பந்தல அரண்மனையில் தனது வில்லிலிருந்து இருந்து அம்பை விடுவித்தார்.
 • அந்த அன்பானது “சபரிமலை” என்னும் இடத்தில் பாய்ந்தது. அந்த இடத்தில் கோவில் கட்டுங்கள் எனக் கூறிவிட்டு தேவலோகம் சென்றார் ஐயப்பன்.
 • ஐயப்பனின் ஆணையின்படி அகத்திய முனிவரின் ஆலோசனை கேட்டு பந்தள மன்னர் தானே நேரடியாக மேற்பார்வை கொண்டு 18-படிகள் அமைத்து அழகிய கோயிலை கட்டினார்.
 • அப்போது இருந்து இப்போது வரை லட்சக்கணக்கான பக்தர்கள் 48-நாட்கள் விரதம் இருந்து சபரிமலை வந்து ஐயப்பனின் தரிசிக்கின்றனர்.

பம்பை நதிகரையின் சிறப்பு :

ஐயப்பன் வாழ்க்கை வரலாறு:- ஐயப்பனை காண வரும் பக்தர்கள் இந்த பம்பை நதிக்கரையில் நீராடிய பிறகு தான் சபரிமலை ஏறுகின்றனர்.

• இந்த, பம்பை நதி கங்கை நதி போன்று மிகவும் புண்ணியமான நதியாகும். ஐயப்பன் மணிகண்டனாக பிறந்த நதிக்கரை தான் இந்த பம்பை நதிக்கரை.

• இந்த பம்பை நதிக்கரையில் இருந்து 8-கிலோமீட்டர் தொலைவில் தான் சபரிமலை உள்ளது. இந்த இடத்துக்கு “பம்பா சக்தி” என்ற இன்னொரு பெயரும் உண்டு.

18-படிகளின் சிறப்புகள் மற்றும் விளக்கங்கள் :

முதல் படி – பிறப்பு நிலையற்றது.

இரண்டாம் படி – சாங்கிய யோகம்.

மூன்றாம் படி – கர்ம யோகம்.

நான்காம் படி – ஞான யோகம்.

ஐந்தாம் படி – சன்னியாசி யோகம்.

ஆறாம்படி – தியான யோகம்.

ஏழாம் படி – ஞான விஞ்ஞான யோகம்.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்.

ஒன்பதாம் படி – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்.

பத்தாம் படி – விபூதி யோகம்.

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்.

பனிரெண்டாம் படி – பக்தி யோகம்.

பதிமூன்றாம் படி – சேஷத்ர விபாக யோகம்.

பதினான்காம் படி – குணத்ரய விபாக யோகம்.

பதினைந்தாம் படி – புருஷோத்தம யோகம்.

பதினாறாம் படி – தைவாசுரஸம்பத் விபாக யோகம்.

பதினேழாம் படி – ச்ராத்தாதரய விபாக யோகம்.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்.

18-படிகளின் வாசம் செய்யும் தேவதாக்கள் :

ஒன்றாம் திருப்படி – சூரிய பகவான்.

இரண்டாம் திருப்படி – சிவன்.

மூன்றாம் திருப்படி – சந்திர பகவான்.

நான்காம் திருப்படி – பராசக்தி.

ஐந்தாம் திருப்படி – அங்காரக பகவான்.

ஆறாம் திருப்படி – முருகன்.

ஏழாம் திருப்படி – புதன் பகவான்.

எட்டாம் திருப்படி – விஷ்ணு பகவான்.

ஒன்பதாம் திருப்படி – குரு பகவான்.

பத்தாம் திருப்படி – பிரம்மா.

பதினொராம் திருப்படி – சுக்கிர பகவான்.

பனிரெண்டாம் திருப்படி – இலட்சுமி.

பதிமூன்றாம் திருப்படி – சனி பகவான்.

பதினான்காம் திருப்படி – எமதர்ம ராஜன்.

பதினைந்தாம் திருப்படி – இராகு பகவான்.

பதினாறாம் திருப்படி – சரஸ்வதி.

பதினேழாம் திருப்படி – கேது பகவான்.

பதினெட்டாம் திருப்படி – விநாயகப் பெருமான்.

மாலை அணியும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் :

ஐயப்பன் வாழ்க்கை வரலாறு:- ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள் பொதுவாக கன்னிச்சாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் 48-நாட்கள் கட்டாயம் விரதம் இருப்பது நல்லது.

• சிலர் 48-முதல் 60-நாள் வரையும் கூட சேலம் இருப்பார்கள் ஏனெனில் அவர்கள் ஜனவரி 15-ஆம் தேதி வரை மகரஜோதிக்கு ஐயப்பன் தரிசிக்க பெரும்பாதையில் நடந்து செல்வார்கள்.

• இந்த மாலை அணிவது கார்த்திகை 1-ஆம் தேதி அன்று அணிய வேண்டும்.
அதிலிருந்து, சரியாக ஒரு மண்டலம் அதாவது 48-நாட்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக வைத்து,அசைவ உணவு உண்ணாமல்,தினமும் காலை,மாலை என இரண்டு முறை குளித்து ஐயப்பனின் 108-சரணங்களை கூறி வழிபடுதல் வேண்டும்.

• அதுமட்டுமின்றி, முதல் முறையாக மாலை அணியும் கன்னிச்சாமி வீட்டில் கன்னி பூசை நடத்தி வழிபடுதல் வேண்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *