ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்
2023 மனதை உருக்கும் காதல் கவிதைகள்:
ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்: காதல் தோல்வி மற்றும் காதல் வெறுப்புக்கள் உள்ள ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் கவிதை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
1) நீ மட்டுமே போதும் என்று நினைத்திருந்தேன் நீயே நீ யார் என்று கேட்டு சென்றாய் கனத்த இதயம் கரை சேர துடுப்பாய் நீ வா.
2) துரோகம் என்பதை சுருக்கமாக சொன்னால் ஒருவரை அவருக்கு விருப்பமில்லாத செயலை செய்ய சொல்லும் அத்தனை பேருமே அவருக்கு செய்வது துரோகம் தான்.
3) எத்தனை முறை உன் வார்த்தையால் என் இதயத்தை தொலைத்து சென்றாய் ஆயினும் நீயே என் உயிரென நினைத்திருந்தேன். அரை நொடிப் பொழுதில் அத்தனையும் மறந்து நிற்கதியாக என்னை விட்டு சென்றாய். என்னவளே நீ என் துணையா அல்லது துரோகியா.
4) அன்பான உறவிடம் சில நிமிடங்கள் உரையாடினால் போதும். மனதின் சுமைகளும் சுகமாய் மாறும்.
5) ஒரு இதயத்தை உண்மையாக நேசித்துப்பார் ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்.
6) முகம் எது முகமது என்றே தெரியாமல் பழகிக் கொண்டிருக்கிறோம் பல மனிதர்களுடன்.
7) நீ என்னை நடத்தும் விதத்தில் நான் உன்னை நடத்தினால் ஒரு நிமிடம் கூட தாங்க முடியாது உன்னால் அன்பே.
8) உறவுகள் இரண்டு வகை. ஒன்று அன்பை தரும் மற்றொன்று அனுபவத்தை தரும். அன்பைத் தரும் உறவை மனதில் வை அனுபவத்தை தரும் உறவை நினைவில் வை.
9) மாற்றமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை விதி வரைந்த பாதையில் வாழ்க்கை பயணம்.
10) எவ்வளவு கருப்பாக இருந்தாலும் இரத்தம் சிவப்பு தான். எவ்வளவு சிவப்பாக இருந்தாலும் நிழல் கருப்புதான். வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களில் உள்ளது.
காதல் கவிதைகள் தமிழ் வரிகள்:
11) நம்மை மதிப்பவர்களை தேடி போகலாம் தப்பில்லை. ஆனால் நம்மை அலட்சியப்படுத்துவர்களை திரும்பி கூட பார்க்க கூடாது.
12) யோசிக்காமல் நேசித்தேன் அன்று ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்று யோசிக்கிறேன் இன்று.
13) அனுபவங்களை சேகரித்து வை இனி வரும் காலங்களில் எச்சரிக்கையோடு செயல்பட அதுவே உதவும்.
14) புருவ வில்லில் பார்வை அம்புகள் தொடுக்கிறாய் காயம்பட்ட எனக்கு காதல் மருந்திடுவாயா.
15) ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அணைத்திட தோன்றிய உறவு
நீ தான்.விழி வழியில் மது புகட்டி
மயங்க செய்தவள் நீ தான்.
16)கனிவுடன் மனதோடு உறவு கொள்பவள் நீ தான்.தனிமையில் தளராத மனம் கொண்டவள் நீ தான்.என் மனதை உன்னோடு
இளக செய்தவள்
நீ தான்.மனம் எனும் சொல்லிற்கு அழகு என்பதே அர்த்தம் என்பதை உணர
செய்தவள் நீ தான்.உன்னோடு தோள் சாய எனக்கும் ஆசையுண்டு என்றவள் நீ தான்.மனமிருந்தும் வெளிக்காட்டாமல் மறுத்தவள் நீ தான்.தமிழ் எழுத
இதமான மன உணர்வை தூண்டியவள் நீ தான்.முகம் காணாமல்
குரல் கேட்காமல்
என் மனம் கவர்ந்தவள்
நீ தான்.நின்று விட துடித்த இதயத்தை நிற்காமல் துடிக்க வைத்தவள்
நீ தான்.என் நினைவலையில்
எப்போதும் நீ தான்.
என் மனதுக்கு சொந்தக்காரி நீதான்.
17)காலை சூரியனும் கூட எனக்கு எதிரி தான் .
நீ கோலமிடும் அழகை பார்க்க என்னைப் போல் அவனும் வருவதால்.
18)உன் இதழ்களை போல்
உன் விழிகளுக்கும்
பொய் சொல்ல கற்றுக்கொடு.காதல் இல்லை என்று இதழ் சொல்வதை.உண்மையில்லை என்று விழி சொல்கிறது.
19)தங்கத்தில் வெள்ளி கலக்கப்பட்டதை
முதன் முதலில் கண்டேன்
என் தேவதை காலில் கொலுசு.
வாசமில்லா பூக்களை கண்டேன்
என் காதலி கை விரல் நகங்கள்.
உயிரோடு உள்ள போதே
என் இதயம் இடம் மாற கண்டேன்
உன்னை முதல் முறையாக பார்த்த போது.
20)நான் கனவுகள் கண்ட இரவுகளை விட உன்னை நினைத்து
கண்களை நனைத்த இரவுகள் தான் அதிகம்.எப்போது விடியும் என் இரவுகள் எப்போது காட்சியளிப்பார் என் காதல் கதிரவன்.
21)அந்த மேகமும் யாரையோ
காதலித்தது என்று நினைக்கிறேன்.விடாது கண்ணீர் சிந்திக் கொண்டேஇருக்கின்றது.
22)நான் உணர்ந்த காதலை நீயும் உணர்ந்தாய் வேறொரு பெண்ணிடம்.
நிமிடம் ஒ௫ முறை மரணம் கொண்டேன் என் மனதிடம்.
23)மை தீட்டி வந்தவளே.
என் மனதை களவாடி சென்றவளே.
மதி மயங்கி நின்றவனை.
உன் மாய விழியால் வென்றவளே.
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே.நீ இமை சிமிட்டி பேசியதால்.என் இளமை சிதைந்துதான் போனதடி இத்தனை அழகு உன்னிடம்.ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்.
24)ஏனோ என்னை புரிந்துகொள்ள முடியவில்லை உன்னால்.
புரியவைக்கவும் முடியவில்லை என்னால்.காதல் புரியவைப்பதும் அல்ல புரிந்துகொள்வதும் அல்ல
அதை உணர்ந்தால் மட்டுமே நீடிக்கும்.
25)பெண்ணே உன் கண் ஜாடையின் காதல் ஈர்ப்பில் சற்று தடுமாறி நிற்கின்றேன் உன்னை காதல் செய்யும் ஆசை இல்லை உன் கண்களை காவல் செய்யும் பேராசை உள்ளது.
26)கண்கள் கண்ட காதலை மனம் ஏனோ மறுக்கிறது.மனம் கானும் காதலை கண்கள் நம்ப மறுக்கிறது.
கண்களும் மனமும் காதல் செய்துஎன்னை ஏனோ குழப்புகின்றது.
27)எவ்வளவு நேரம் பார்த்தாலும் வெட்கம் கொள்ளவில்லை என் விழிகள் உன்னை பார்ப்பதில் மட்டுமே.
28)முந்தைய காலங்களில் பேசு பேசு
என்று கொஞ்சிய சில உறவுகள்
தற்போது பேசு பேசு என்று நம்மை கெஞ்ச வைக்கிறது
வாழ்வின் சூட்சுமம்
மனதினையும் சேற்றே சுழற்றுகிறது.
29)முகமா கண்களா அகமா சுகமா
காதலா க௫ணையா எதை கண்டு தொலைத்தேன் என் இதயத்தை
இன்று வரை கண்டறியவில்லை
காலமும் நேரமும் கண்டுகொள்ளவில்லை கடவுளும் காண்பாரோ காதலும் கை சே௫மோ.
30)என்னை தவிக்கவைத்து காக்கவைப்பதில் உனக்கு இன்பம் எனில் அதில் எனக்கோ பேரின்பம் பெண்ணே.
31)கண்கள் இ௫ந்தால் என்னைப் பார்
செவிகளில் திறன் இ௫ந்தால் என் கானங்களை கேள் தாய்மொழி தமிழாக இ௫ந்தால் என் கவிகளை கேள் மனதில் பாரமி௫ந்தால் என் தொலைபேசியை அழை உயிரில் காதல் இ௫ந்தால் என் காதலை பற்றியும் யோசி உன்னில் நானி௫ந்தால் ஆசையில் அள்ளி அரவணை அகிலம் போற்றும் காதலர்களாக வாழ்வோம்.ஆயுள் வரை அணுவனுவாக காதலிப்போம்.
32)நீண்ட நாள் காத்திருந்தேன் அன்பே உன் வருகைக்காக வந்தாயடி என் வாழ்க்கை முழுவதும் வசந்தம் தந்தாயடி.
33)நீண்டநேரம் நடந்த உரையாடலுக்குப் பின்பு வரும் மௌனங்களில் தொடர்கின்ற சொல்ல இயலாமல் மென்று விழுங்கிய ஆசைகள்.
34உன் அழகை நான் எழுத
ஓர் அழகான எழுதுகோள் தேடினேன்
கிடைக்கவேயில்லை உன் அழகை எழுத ஓர் அழகான எழுதுகோள்.
35)உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தாலும் அனைத்தையும்
மறந்து நான் ரசிப்பது உன்னுடன் பேசும் இனிமையான தருணங்களை
மட்டுமே.
36)காதலிக்காக கஷ்டப்பட்டு கண்ணீர் சிந்துபவர்கள் பலர் . காளைக்காக இஷ்டப்பட்டு ரத்தம் சிந்துபவர்கள் என் போல் சிலர்.
37)கானல் நீர் தேடி அலைந்த மான் போல் தாகத்துடன் தவிக்கிறேன்
உன்னை காணாது ஏக்கத்தில் காதல் தாக்கமும் மனதின் குழப்பமும் பாரமும் அதிகரித்து கொண்ட செல்கிறது எப்போது தீ௫ம் என் உயிர் வேதனை எப்போது சே௫ம் நம் கைகளில் திருமண தோரணை.
38)தூக்கம் தீர்ந்தபின்பும் கண்களை மூடி கனவில் பாதியில் விட்ட நம் காதல் உரையாடல்களை மனதிற்குள் முணுமுணுக்கிறேன் நீ வந்த கனவுகள்
விடிந்தாலும் விழித்தாலும் முடியாதவை.
39)இரவில் உன் கைகோர்த்து சில தூரம் நடந்திட நீ வேண்டும்.உன் மார்பினில் சிறிது சாய்ந்திட நீ வேண்டும்.என் கால் பிடித்து விட நீ வேண்டும்.என் சிறு பிள்ளைத்தன ஆசைகளை நிறை வேற்ற நீ வேண்டும்.என் புலம்பல்களை கேட்டிட நீ வேண்டும்.என் அன்பை கொட்டிட நீ வேண்டும்.உன் அன்பை பெற்றிட நீ வேண்டும்.உன் பிள்ளையாய் உன்னிடம் மாற நீ வேண்டும்.என் பிள்ளையாய் என்னிடம் நீ மாற நீ வேண்டும்.நம் காதல் கை கூட நீ வேண்டும்.யாரும் வாழாத வாழ்க்கையை வாழ நீ வேண்டும்.காத்திருக்கிறேன் நீ வேண்டும் என காலங்காலமாக.
40)காயத்திற்கு ம௫ந்து
காயப்படுத்தியவரிடமே
உள்ளது காதலில் மட்டுமே.பொய்யென அறிந்த மெய் மனம் அதையேதான்
எதிர்நோக்கி காத்திருக்கிறது காதலில் திளைத்தவ௫க்கு வாழ்க்கை முழுவதும்
அவ்வழியே.
41)யாரும் யாரையும் அளவுக்கு அதிகமாக நேசித்து விடாதீர்கள் அவர்களின் நிராகரிப்பில் நாமே முதலிடம் வகிப்போம்.
42)உன் இறுகிய மனதால் இளகிய என் மனம் வதைபடும் வலியை அறிவாயோ.
43)பூக்களும் தோற்று போகுமாம்
நீ சூடிய பூவின் அழகை பார்த்து
வாசமும் குறைந்தது விடுமாம்
நீ காட்டும் பாசத்தின் அழகை பார்த்து.
44)நீயோ உன்காதலை வெளிபடுத்தாமல் .உன் இதய இருட்டறைக்குள் பூட்டி வைத்து கொல்லாமல் கொல்கிறாய்.நானோ சுடராக உன் இதய இருட்டறைக்குள் புகுந்து.உன் காதலை வெளி கொணர
முயற்சிக்கிறேன்.
45)காலங்கள் கடந்து சென்றாலும் சரி என் கால்கள் கடந்து சென்றாலும் சரி இருப்பது ஓரிடத்தில் என் நினைவு எல்லாம் உன்னிடத்தில்.
46)அச்சம் மடம் நாணம் பயிர்ப்பெல்லாம் கொள்ள வேண்டாம்
காதல் கொள் போதும்.
47)நித்தம் வரும் நிலவு கூட மாதம் ஒருமுறை விடுமுறை எடுக்கிறது உன் நட்சத்திர நினைவுகள் தான் வானமாய் நிரந்தரமாகிறது.
48)கனவில் கதை கதையாய் பேசிவிட்டு நேரில் கண் முன் கண்ட நொடி வார்த்தையும் வரவில்லை
மொழிகளும் புரியவில்லை கண்ணீர் மட்டும் சத்தமின்றி கரை புரண்ட வெள்ளமாய்ப் பொழிகிறது.
49)நீ மழையை ரசிப்பவன்
நான் வெயிலை ஆராதிப்பவள்
நீ நிலவின் காதலன்
நான் கதிரவனின் காதலி
நீ அறிவை மட்டுமே தேடுபவன்
நான் அன்பை யாசிப்பவள்
நீ அழகில் நிறைந்தவன்
நான் எண்ணங்களால் நிறைபவள்
நீ மலர்களை ரசிப்பவன்
நான் வேரின் அழகை தேடுபவள்
நிறைய வேற்றுமைகள் உன்னில்
நிறைய மாறுதல்கள் என்னில்
இ௫வ௫க்குமிடையே இ௫ப்பது
தேசிய நெடுஞ்சாலை
எப்போது மாறும் காதலெனும் ஒற்றையடிப் பாதையாக.
50)விதையை கூட நான் தூவ வில்லை வி௫ட்சயமாய் உன் நினைவு வானளவு வளர்ந்தது எப்படி.
51) முதலில் நிமிடங்களை கடந்தேன் பின்பு நேரங்களையும் கடந்தேன் மெல்ல மெல்ல நாட்களையும் கடந்து விட்டேன் இப்போது மாதங்களும் ஓடி விட்டது நீ வர வில்லை இது என்ன உன் நிரந்தர பிரிவுகள் ஓத்திகையா.
52) தொலைத்த இடமும் தெரிகின்றது.
தொலைந்த பொருளும் தெரிகின்றது.
வலியும் வேதனையும் உணரப்படுகிறது.ஆனால் திருப்பி
மீட்கத்தான் முடிவதில்லை எல்லாமே நினைவுகளாக தான் இருக்கிறத.
53)நிலவொலில் மயங்கி கடல் அலைகள் நிலாவை பிடிக்க துண்ணியும் பொழுது எல்லாம் வெட்கி தலை குனிகிறேன் எட்டா நிலவுக்கு அலைகள் எடுக்கும் முயர்ச்சி கூட என்னவன்க்கு நான் ஏடுகவில்லை என்று.
54)உயிரே உன்னை கானாமல் இந்தஉலகமே பூத்து நந்தவனமாகவே இருந்தாலும் என் இதயம் இருட்டாகவே இருக்கும்.
55)புரட்சி போராட்டம் என்று நீ பேசினாலே பயத்தில் பத்தடி தள்ளி நின்றேன் இன்றோ நானும் ஒரு போராளியேஉன் நினைவுகளுடன் போராடுவதால்.