கணினியின் வரலாறு

History of Computer in tamil – கணினியின் வரலாறு

கணினியின் வரலாறு || History of Computer in tamil

கணினியின் வரலாறு

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் :

கணினியின் வரலாறு:- கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய அறிவியல் துறையில் மிகவும் வளர்ந்து விட்டது என்று கூறலாம். கணினி பயன்படாத துறையே இந்த உலகில் இல்லை. மனித உழைப்பும் நேரமும் பெரும் அளவில் சேமிக்கப்படுகிறது. 20-நூற்றாண்டின் ஓர் இணையற்ற கண்டுபிடிப்பாக கணினியை கூறலாம். ஏனென்றால், சில நொடிகளில் மில்லியன் கணக்குகளை செய்து காட்டுவதோடு மட்டுமல்லாமல், இதை சரியான முறைப்படி பயன்படுத்தினால் மனித மூளையை விட பல மடங்கு நுண்ணறிவுத் திறனுடன் வேலை செய்யும்.

• கணினி என்பது கட்டளைத் தொகுதிகள் அல்லது நிழல்களின் மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளை சரி செய்யும் இயந்திரம் ஆகும்.

• 1940-ஆம் ஆண்டு முதன் முதலில் கணினி அறிமுகப்படுத்தப்பட்ட போது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால், இப்பொழுது இருக்கும் கணினியுடன் அதை ஒப்பிட்டால் பல மடங்கு நம்மை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

• அதுமட்டுமின்றி, இப்பொழுது இருக்கும் கணினிகள் முன்பை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமில்லாமல், அவற்றை நம் மேஜை மேல், மடி மேல், ஏன் சட்டை பையில் கூட வைத்து பயன்படுத்தலாம்.

• பொதுவாக கணினி இரண்டு பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது அவை,

1. கணினியின் வன்பொருள் (hard ware) – இது கண்ணில் நாம் பார்க்கவும், தொடவும் முடியும் பாகங்களை கொண்டுள்ளது. இது கன்னிப்பெட்டியில் உள்ள அனைத்து பாகங்களும் அடங்கும்.

வன்பொருள்களில் மிகவும் முக்கியமானது நமது கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU), இதுதான் கணினியின் மூளை போன்ற கணக்கிடும் பகுதியாகும்.

வன்பொருள் சாதனங்கள் :

1. திரையகம் (monitor).
2. விசைப்பலகை (keyboard).
3. சுட்டி (mouse).
4. அச்சுப்பொறி (printer).
5. மையச் செயலகம் (CPU).

இவை அனைத்தும் கணினியின் வன்பொருளாக செயல்படுகிறது.

2. கணினியின் மென்பொருள் (software) – மென்பொருள் என்பது வன்பொருளுக்கு வேலை தரும் கட்டளைகள் அல்லது நிழல்களை குறிப்பதாகும். உதாரணமாக நம் கணினியில் கணிதங்கள் இழந்த பயன்படுத்தப்படும் “சொற்செயலி” ஒரு வகை மென்பொருள் ஆகும்.

கணினியின் வரலாறு || Biography of Computer – கணினியின் வரலாறு

முதல் முதலில் கணக்கிடுவதற்காக ஒரு எளிமையான மணிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதனை கணிப்பான் (calculator) என்றும் கூறலாம். இதுவே கண்ணி உருவாக காரணமாக இருந்த முதல் படிவமாக இருந்தது.

முதன் முதலில் பாரிஸ் நாரை சேர்ந்த “பிளேஸ் பாஸ்கல்” என்னும் அறிவியல் அறிஞர் இந்த கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.

அதன் பிறகு கிபி 1833-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் சென்ற இயற்பியல் அறிஞர் கல்வியை முதன் முதலில் வடிவமைத்தார்.

கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் “சார்லஸ் பாபேஜ்” ஆவார்.

1946-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ENIMAC (Electronic Numerical Integrator and Computer) கணினி தான் உலகின் மிகப்பெரிய மற்றும் முதல் கணினியாகும்.

இது நோக்கம் அமெரிக்க ராணுவ பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையை கணக்கிடுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கணினியாகும்.

இதன் எடை கிட்டத்தட்ட 27,000 கிலோ கிராமுக்கு மேல் இருக்கிறது. இது ஒரு பெரிய அறையவே முழுமையாக நிரப்பக்கூடிய அளவிற்கு பெரிதாக இருந்தது.

Read Also:- டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

கணினியின் வகைகள் – கணினியின் வரலாறு :

இன்று கணினியின் பயன்பாட்டிற்கு ஏற்ப பல வகையில் கணினியின் அளவு தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் கணினியின் பயன்பாடு இன்று உலக அளவில் அதிவேகமாக பரவி உள்ளது.

இன்றைய நிலையில் கணினியின் வகைகள் பல்லுடக வசதி கொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்க கணினி போன்ற நமது பயன்பாட்டிற்கு ஏற்ப பல கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

இது மட்டுமின்றி, கணினியை பயன்படுத்தவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கணினியின் வளர்ச்சியில் புது புது மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனுடன் இணையதளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் செய்திகள் நம்மால் உடனுக்குடன் பெற முடிகிறது.

கணினி வழிக் கல்வி :

1. இன்று கணினி பயன்பாட்டில் இல்லாத கல்வித்துறையே கிடையாது. ஆண்களும் பெண்களும் இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாக கணினிக் கல்வி கற்பித்தல் மிகவும் அவசியம் ஆகிவிட்டது.

2. கணினி வலி கல்வியானது நம் நாட்டில் மட்டுமின்றி, பிற வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு தருகிறது அதனால் நாட்டின் முன்னேற்றம் ஒருங்கே நடைபெறுகிறது என்பதை உண்மை.

3. கணினி மூலம் கல்வி கற்கும் முறையை கணினி வழி கல்வி ஆகும். வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானில், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலை என எல்லாவற்றையும் கணினி மூலம் கற்றுக் கொள்ள முடியும்.

4. கணினி வழியாக மொழிக்கல்வியும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். மொழியின் அடிப்படை திறன்கள் ஆன கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என தொடங்கி உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம், படம் வரைதல், குறிப்பு எடுத்தல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையத்தின் உதவியால் சுலபமாக கற்றுக் கொள்ள முடிகிறது.

5. ப்ரோக்ராமிங், டிசைனிங், இணையதள வடிவமைப்பு, புத்தக வடிவமைப்பு மென்பொருள் உருவாக்கம் போன்ற பல பயிற்சிகள் கணினியின் மூலம் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

6. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் மாற்றங்களை தவிர்க்க முடியாது அந்த மாற்றங்களுக்கு ஏற்ப கணினி வழி கல்வியை ஒவ்வொரு மாணவர்களும் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதனால், தனி மனித முன்னேற்றத்தையும் தேசிய முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியும்.

கணினியின் பயன்பாடுகள் :

• கணினியின் பயன்பாடு நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு கருவியாக மாறிவிட்டது. வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், தொலை தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு முதலிய பல்வேறு துறைகளில் கணினி இன்று பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

• அது மட்டும் இன்றி, வீடியோ கேம்கள், வரைபடம் வரைதல், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், கணித தீர்வுகள் போன்ற மனிதனால் கடுமையாக செய்யக்கூடிய வேலைகளை இன்று கணினி மிகவும் சுலபமாகவும் குறைந்த நேரத்தில் செய்து முடித்து விடுகிறது.

• பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள், தகவல் சேகரிக்கும் மையங்கள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் என அனைத்து துறைகளிலுமே கணினியின் பயன்பாடு பெருமளவில் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

• இன்று கணினி மூலம் உலகம் உள்ளங்கையில் அடங்கி விட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு கணினியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

• இந்த 21-ம் நூற்றாண்டில் கணினியின் பயன்பாடு கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை விட பல மடங்கு அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.

• இன்று ஒருவரை நேரடியாக பார்க்காமல் மின்னணு தகவல் வாயிலாக தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே உலகத்தில் நடக்கும் செய்திகளை இணையம் வாயிலாக கணினியை பயன்படுத்தி நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

• அதிக அளவு கணினி பயன்பாட்டில் உள்ள இந்த காலத்தில் தொழில்நுட்பு உத்திகள் அனைத்தையும் பயன்படுத்தி கணினி வழியாக நமக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் எளிதாக பெற முடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக கணினி இருக்கிறது.

• பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவை விரைவு செய்வதற்கும், உலக செய்திகளை அறிந்து கொள்ளவும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் புதுமைகளை கணினியின் உதவியின் மூலம் இணையதளம் வாயிலாக நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *