கல்லணை முழுமையான வரலாறு

Kallanai full history in tamil – கல்லணை முழுமையான வரலாறு

Kallanai full history in tamil – கல்லணை முழுமையான வரலாறு

கல்லணை முழுமையான வரலாறு

கல்லணையின் குறிப்பு || Kallanai dam biography :

கல்லணையை கட்டியவர் – கரிகால சோழன்.
கட்டிய ஆண்டு – 1-ஆம் நூற்றாண்டு.
கட்டிய இடம் – திருச்சியில் இருந்து 16-கிலோமீட்டர் தொலைவில் தஞ்சாவூர் சாலையில் காவேரி ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ளது.
உயரம் – 5.4 மீட்டர் (18 அடி)
அகலம் – 20 மீட்டர் ( 66 அடி)
நீளம் – 329 மீட்டர் ( 1079)

கல்லணை முழுமையான வரலாறு:- இந்தியாவிலுள்ள, அதுவும் தமிழ்நாட்டில் மிகப் பழமை வாய்ந்த அணை என்றால் அது கல்லணையாகும். இது கரிகாலச்சோழ மன்னனால் 1 – நூற்றாண்டில் காவேரி ஆற்றங்கரையின் மீது கட்டப்பட்டது.

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றில் வெள்ள காலங்களில் கொள்ளிடத்தில் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீரானது காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.

கல்லணை உருவான வரலாறு || Kallanai dam history in tamil essay:

  • இந்த கல்லணையானது கிபி 1-ஆம் நூற்றாண்டில் கரிகால சோழன் என்னும் மன்னனால் காவிரி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது.
  • தற்போதுள்ள, அணைகளில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பயன்பாட்டில் உள்ள அணை என்றால் இந்த கல்லணை மட்டுமே.
  • இந்த அணையை உலகின் மிகவும் பழமை வாய்ந்த நீர் பாசன திட்டம் முறை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் நெற்களசியமாக இருக்கும் தஞ்சை மாற்ற உதவியது இந்த கல்லணையே.
  • சோழ மன்னர்களில் பலம் வாய்ந்த மாவீரனாக போற்றப்படும் கரிகாலச்சோழனால் இந்த கல்லணை ஆனது கிபி-1 நூற்றாண்டில் திருச்சி காவேரி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது.
  • இந்த,கல்லணையின் நீளம் 1080-நீளமும், 66-அடி அகலமும்,18-அடி உயரமும், உள்ளடக்கியது. இந்தக் கல்லணையின் அடித்தளம் பெரும் மணலில் அமைக்கப்பட்டது. எந்த ஒரு தொழில்நுட்பம் இல்லாத கிபி 2-நூற்றாண்டில் இந்த கல்லணை கட்டிய தமிழர்களின் தொழில்நுட்பம் இன்றளவும் வியக்கதக்க ஒன்றாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

கல்லணை கட்டப்பட காரணம் :

கல்லணை முழுமையான வரலாறு:- இந்த கல்லணையானது காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தவும் நீரை பயன்படுத்தி காவிரி சுற்றியுள்ள பகுதிகளில் நீர் பாசன முறையை அதிகரிக்கவும் கட்டப்பட்டது.

இந்த கல்லணை கட்டப்பட்ட நோக்கம் காவிரி ஆற்றங்கரையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் இருக்கும் மக்கள் மற்றும் விவசாயத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. கொள்ளிடத்திலுள்ள தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது.

கொள்ளிடத்திற்கு தண்ணீர் செல்வதை தடுக்க விவசாய பயன்பாட்டுக்காகவும் காவிரி ஆற்றில் தண்ணீரை தேக்கி வைக்கவும் இந்த கல்லணையை கட்ட வேண்டும் என்று கரிகாலச்சோழன் எண்ணினார். இதற்காக ஆங்கிலேய பொறியாளர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு ஒரு வரைபடம் வரையப்பட்டது.

அதன்படியே,ஆங்கிலேய பொறியாளர்களும்,அணை கட்டுவதற்காக ஒரு வரைபடத்தை வரைந்தனர். அந்த வரைபடத்தில் உள்ளவாறு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனாலும்,சில தடுமாற்றங்களால் மீண்டும் மீண்டும் மறு கட்டமைப்பு செய்யப்பட்டது.

1851-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் காவிரி மற்றும் வெண்ணாறு போன்ற ஆறுகளில் தண்ணீரில் அளவை மேம்படுத்துவதற்கு இரு “ரெகுலேட்டர்கள்(தடுப்பான்கள்)” கட்டப்பட்டன. இவை, இரண்டும் கல்லணையில் இருந்து 2-கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த இரு ரெகுலேட்டர்களையும் கல்லணைக்கு பக்கத்தில் கொண்டு வருவது என அனைவராலும் முடிவு செய்யப்பட்டது. 1886-ஆம் ஆண்டு வெண்ணாற்றின் பாதை செயற்கை பாதையாக மாற்றப்பட்டது. காவேரி மற்றும் வெண்ணாற்றுக்கான ரெகுலேட்டர்கள் கட்டப்பட்டது. இதன் மூலம் கல்லணை மிக பிரம்மாண்டமான அளவில் யாரும் எதிர்பாராத மிகப்பெரிய கல்லணையாக உருவானது.

ஆங்கிலேய இன்ஜினியர்களின் பங்கு மற்றும் சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு :

கல்லணை முழுமையான வரலாறு:- இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படும் “சார் ஆர்தர் காட்டன்” ஆங்கில ஆய்வாளர் இந்த கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்தார்.

இந்த கல்லணை நாம் பார்க்கக்கூடிய மற்ற அணைகளில் உள்ள கல்லணை போன்று சாதாரண கல்லணை அல்ல.

1800-ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் ஆகிய பல ஆங்கிலேய பொறியாளர்கள் இந்த கல்லணை கட்டுவதற்கு பல தடுப்பான்களை கட்டினார். கல்லணை மட்டுமல்லாமல் கல்லணைக்கான கால்வாயும் கட்டப்பட்டது.

இறுதியாக 1934-ஆம் ஆண்டு மேட்டூர் அருகே அணை கட்டப்பட்டது.

கல்லணையின் பயன்கள் :

1. கல்லணை கால்வாய் கட்டப்பட்டதால் பல்வேறு தடுப்பான்கள் கொண்டு நவீனமயமாக்கப்பட்டது. இதற்கு “புதிய டெல்டா” என பெயரிடப்பட்டது.

2. இந்த கல்லணை கட்டியதன் மூலம் 6-லட்சம் ஏக்கருக்கு நீர் பாசன வசதி செல்கிறது. சாதாரணமான காலங்களில் காவிரி நீர் ஆழமாகவும், வேகமாகவும் ஓடும் கொள்ளிடத்தில் சூழல் நிலவும் பொழுது அதை தடுத்து வைப்பது தான் இந்த கல்லணையின் முக்கிய செயல்பாடாகும்.

3. இதனால்,தஞ்சை மற்றும் காவிரி சுற்றியுள்ள டெல்டா பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் பயிர்கள் நாசமாகாமல் அளவான நீரோடு அதிக விளைச்சலை தருகின்றன.

கல்லணையின் சிறப்புகள் :

• இந்த கல்லணையானது கல்லும், களிமண்ணும், சுண்ணாம்பும் கலந்த கலவையால் கட்டப்பட்டது.

• கல்லணையை கட்டி முடிக்க கிட்டத்தட்ட 30-ஆண்டுகளுக்கு மேலான ஆனது.

• சுமார் 13- அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி அணை கட்டப்பட்டது.பாறைகள் இணைப்புக்கு களிமண் கோர்த்து பயன்படுத்தப்பட்டது.

• 1839-ஆம் ஆண்டு கல்லணையின் மீது ஒரு பாலம் கட்டப்பட்டது. அந்தக் பாலத்தின் மீது நாம் நின்று கல்லணையை சுற்றி பார்த்தால் கல்லணையின் மொத்த பரப்பளவு சுற்றியுள்ள இயற்கை அழகும் நம் கண்ணுக்கு தென்படும்.

• கிபி 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது இந்த கல்லணையானது புதுப்பிக்கப்பட்டது. கேப்டன் மேஜர் “ஜிம் சர் ஆர்டர் காட்டன்” இடிக்காமல் பாதுகாத்தனர்.

• கிட்டத்தட்ட 2100-ஆண்டுகள் பழமையான இந்த கல்லணை இன்றளவும் காவிரி ஆற்றின் வெள்ளத்தை தடுத்து நிறுத்தி தொடர்ந்து எந்தவித சேதமும் இன்றி பயன்பாட்டில் உள்ளது.தான் மிகப்பெரிய ஆச்சரியம்.

• கல்லணை ஆண்டு காலம் சுமார் 2100-ஆண்டுகள் என்பதை கேட்ட ஆய்வாளர்களும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இன்றளவும் வியந்து பார்க்கின்றனர்.

• காலத்தால் அழிக்க முடியாத அளவில் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயிலும் இந்த கல்லணையும் ஏறத்தாழ ஒன்றுதான். ஏனெனில் இவை இரண்டுமே எவ்வளவு புயல், மழை, வெள்ளம் வந்தாலும் சேதம் அடையாமல் கட்டிய நாள் முதல் இன்றளவு வரை கம்பீரமாக உள்ளது.

கல்லணை டேம் வயது : 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

கல்லணை கட்டிய ஆண்டு : கிபி 1-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கல்லணை கட்டப்பட்டுள்ள இடம் :

திருச்சியில் இருந்து 16-கிலோமீட்டர் தஞ்சாவூர் சாலையில் பூதலூர் என்னும் கிராமத்தில் காவிரி ஆறு முகமிலிருந்து வடபுறம் கொள்ளிடம் ஆற்றின் தென் புறம் கட்டப்பட்டுள்ளது.

கல்லணையின் வேறு பெயர்கள் : “கிராண்ட் அணைக்கட்டு”.

கல்லணையின் தொழில்நுட்பம் : பாறைகள்,களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது.

கல்லணையின் சிறப்பு : .

6-லட்சம் ஏக்கர் பரப்பளவில் நீர் பாசனம் தேக்கி வைக்கப்படுகிறது.

கரிகாலச் சோழனின் வரலாறு மற்றும் மணிமண்டபம் :

கல்லணை முழுமையான வரலாறு:- பல நூற்றாண்டுகள் கடந்தும் எந்த ஒரு வெள்ளத்திலும் சேதமடையாமல் உறுதியோடு இருக்கும் இந்த கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பற்றிய ஒரு சிறந்த சான்றாகும்.

இந்த இத்தகைய பழமையான கல்லணையை கட்டிய கரிகாலச் சோழனை கௌரவிக்கும் விதமாக கல்லணையில் இருந்து “திருக்காட்டுப்பள்ளி” செல்லும் சாலையில் காவிரி ஆற்றங்கரையில் இடது ஓரத்தில் கரிகால சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணி மண்டபத்தில் கரிகாலச்சோழன் யானை மீது அமர்ந்த நிலையில் வெண்கல சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கல்லணையை பற்றிய சங்க கால குறிப்புகள் :

கல்லணை முழுமையான வரலாறு:- சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கை கட்டுபடுத்தி கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, “பொருநர் ஆற்றுப்படை” பாடல்களும், தெலுங்கு சோழ கல்வெட்டுகளும்,திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *