காமராஜர் வாழ்க்கை வரலாறு

History of Kamaraj in tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு

History of Kamaraj in tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு

காமராஜர் வாழ்க்கை வரலாறு

History of Kamaraj in tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு:- தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்த ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தில் இவர் ஆண்ட 9 ஆண்டு அரசியல் காலமும் தமிழக அரசின் பொற்காலமாகவே கருதப்படுகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இருக்கும் வேலை குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆங்காங்கே இலவச பள்ளிகள் இவரால் திறக்கப்பட்டது. இதனால் இவர் ‘கல்வி கண் திறந்தவர்’என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.படிக்காத ஏழை எளிய மக்களின் கல்வியில் அதிக அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.அது மட்டும் இன்றி ஏழை குழந்தைகளுக்கு பள்ளிகளில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தினை அறிமுக படுத்தினார்.

காமராஜர் பிறப்பு மற்றும் பெயர் வர காரணம் : history of Kamarajar life:

• காமராஜரின் பிறந்த நாள் – 1903 ஆண்டு ஜூலை 15 தேதி பிறந்தார்.

• காமராஜர் பிறந்த ஊர் – விருதுநகர்.

• காமராஜரின் பெற்றோர் – குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையார்.

• காமராஜரின் இறப்பு – 1975 ஆவது வருடம் அக்டோபர்-02 தேதி.

காமராஜர் தமிழகத்தில் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு 1903 ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவருடைய இயற்பெயர் காமாட்சி இந்த பெயர் காமராஜரின் அப்பா தங்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த குழந்தை என்று கருதி அவருடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் பெயரை இவருக்கு சூட்டினார்.ஆனால், காமராஜரின் அம்மா இவரை ராசா என்றே அன்போடு அழைப்பார்.காலப்போக்கில் இப்பெயரானது (காமாட்சி+ராஜா) காமராஜர் என்று மாறியது.

காமராஜரின் ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வி பயணமும் :

காமராஜர் வாழ்க்கை வரலாறு:- காமராஜர் அவர்கள் தனது ஆரம்பகால பள்ளி படிப்பை தனது சொந்த ஊரிலேயே 1908 ஆம் ஆண்டு ‘ஏனாதி நாராயண நித்யா’ சாலையில் பயின்றார். பின்னர் அடுத்த ஆண்டு உயர்நிலை பள்ளியான விருதுநகரில் உள்ள சத்ரிய வித்யாசால என்ற பள்ளியில் பயின்றார்.காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக் கொடுக்கும் தன்மையும் மற்றும் எல்லோருடனும் அமைதியாக பேசும் பண்பும் போன்ற நல்ல குணங்கள் அப்போது இருந்தே இருந்தன. ஆனால்,அவரால் தொடர்ந்து பள்ளி படிப்பை தொடர முடியவில்லை.ஏனெனில், காமராஜர் பள்ளியில் சேர்ந்த சிறிது நாட்களில் அவர் தந்தை இறந்துவிட்டார்.இதனால் காமராஜரின் தாயார் இவரை கஷ்டப்பட்டு வளர்த்தார். தாயார் கஷ்டப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத காமராஜர் தனது மாமா துணி கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

காமராஜர் அரசியலில் ஈடுபட்ட மற்றும் பணியாற்ற துவங்கிய தருணம் :

காமராஜர் தனது மாமா துணி கடையில் வேலை பார்க்கும் பொழுது பல தலைவர்களின் உரையாடல்களை கேட்டு அதில் ஈர்க்கப்பட்டார். முக்கியமாக டாக்டர் வரதராஜ நாயுடு,கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ச் ஜோசப் போன்ற தேச தலைவர்களின் பேச்சால் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குறிப்பாக ‘ஹோம் ரூல் இயக்கத்தின்’ ஒரு அங்கமாக மாறிய காமராஜர் பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.

காமராஜரின் சிறை வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பங்கு :

1. காமராஜர் முதன் முதலில் 1920ஆம் ஆண்டு தனது 16 வது வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை நினைத்துக் கொண்டார். அன்று முதல் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட தொடங்கினார்.

2. அப்போதைய ஆங்கில ஆட்சி காலத்தில் உப்பின் மீதான வரி அதிகமாக இருந்தது இதனால் காந்தியடிகள் உப்பிலுக்கு எதிராக உப்பு சத்தியாகிரக போராட்டத்தை இந்தியா முழுவதும் ஆரம்பித்தார்.

3. 1930 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் நடத்திய உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் ஒரு பகுதியில், வேதாரணியத்தை நோக்கி நடந்த திரளணியில் கலந்து கொண்ட காமராஜர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.அங்கு,கிட்டத்தட்ட ஒரு வருட கால சிறந்த தண்டனையை அனுபவித்தார். ஒரு வருட சிறை தன்மைக்கு பிறகு ‘காந்திய இரவின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

4. மீண்டும் 1940 ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வு சிக்கி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் பொழுதே விருதுநகர் நகராட்சி தலைவர் போட்டியில் நின்று வெற்றி பெற்றார்.

5. மேலும்,1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டதால் மறுமுறை சிறையில் அடைக்கப்பட்ட இந்த முறை மூன்று ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்தார்.

6. அது மட்டுமில்லாமல், “ஒத்துழையாமை இயக்கம்”,”வைக்கம் சத்தியாகிரகம்” ,”நாக்பூர் கொடி சத்தியாகிரகம்”பங்கேற்ற காமராஜர் அவர்கள் சென்னையில் “வாள் சத்யாகிரகத்தை” தொடங்கி நீல் சிலை சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கினார்.

7. இதுபோன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பங்கேற்றவர் ஆங்கிலேயர்களால் 6-முறை கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 9-ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துள்ளார்.

காமராஜரின் அரசியல் குரு – காமராஜர் வாழ்க்கை வரலாறு:

• அப்போதைய காங்கிரஸ் தலைவர்  இந்திய விடுதலை வீரர்”, “இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்”,”சிறந்த பேச்சாளர்”என புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தனது குருவாக காமராஜர் அவர்கள் மதித்தார்.

• 1936-ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற போது காமராஜரை கட்சியின் செயலாளராக நியமித்தார்.ஆனால்,இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சத்தியமூர்த்தி இறந்து விட்டார்.

• ஆனால்,காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் தேசிய கொடியை சத்தியமூர்த்தி வீட்டில் ஏற்றினார்.

• அதுமட்டுமின்றி,காமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்று அவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அதன் பிறகு தனது பணியை தொடங்கினார்.

தமிழக முதல்வராக காமராஜர் :

காமராஜர் வாழ்க்கை வரலாறு:- 1953 ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் மத்தியில் காங்கிரஸ் பலமாக இருந்தாலும் தமிழகத்தில் சற்று தனது பலத்தினை இழந்ததாகவே அப்போது இருந்தது.இதன் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியை துறந்தார்.

அதற்கு பதிலாக சி.சுப்பிரமணியம் என்பவரை முன்னிறுத்தினார். ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகளை பெற்றதால்,1953-ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழகத்தின் முதல்வராக காமாராஜர் நியமிக்கப்பட்டார்.

முதல்வராக காமராஜர் ஆற்றிய பணிகள் :

காமராஜர் தனது அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும் அவரை முன்மொழிந்த எம். பக்வத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

காமராஜர் மாணவர்களுக்கு கொண்டு வந்த இலவச மதிய உணவு திட்டம் :

காமராஜர் வாழ்க்கை வரலாறு:- காமராஜர் முதல்வரான பிறகு தனது முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை அகற்றி அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிக்கூடங்களை மீண்டும் திறந்தார்.அதுமட்டுமில்லாமல் தமிழக முழுவதும் 17,000 பள்ளிகளைத் திறந்து ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக “மதிய உணவு வழங்கும்”திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை எளிய மக்கள் கல்வி முன்னேற்றத்திற்கு வலிவகுத்தார்.

இந்திய அரசியலில் தலை சிறந்த பணியாக கருதப்பட்ட இந்த திட்டம் உலக அளவில் அனைவராலும் பாராட்டப்படும் திட்டமாக அமைந்தது எனலாம்.

இந்தத் திட்டத்தால் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்வி கற்பவரின் எண்ணிக்கை இவரது ஆட்சி காலத்தில் 37 சதவீதமாக உயர்ந்தது.

காமராஜர் காலத்தில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் தொழிற்சாலைகளும் :

தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலை செய்ய வேண்டும் என்று தனது சிந்தனையில் அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வர ஆரம்பித்தார். அவற்றின் முக்கியமான சிலவற்றை கீழே பார்க்கலாம்,

• பாரத மிகு மின் நிறுவனம்,ரயில் பெட்டி தொழிற்சாலை.

• நிலக்கரி புகைப்பட சுழல் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்காலை.

• கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை.

• நெய்வேலி நிலக்கரி திட்டம்,பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை.

• திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்,கல்பாக்கம் அணு மின் நிலையம்.

• ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்(MRL இதன் தற்போதைய பெயர் CPCL).

• கிண்டியால் மருத்துவ பணிக்காக அரசு மருத்துவமனையில் பரிசோதனை கருவிகள் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

இவ்வாறு, அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் மக்களுக்கு வருமானமும் வரும் வகையில் இருந்தது‌.படிக்காத அவர் கொண்டு வந்த இவ்வாறு பல திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து அவரின்,காமராஜரின் புத்தி கூர்மையை வெளிகாட்டியது.

தமிழக அணைகளில் காமராஜரின் பங்கு :

காமராஜர் வாழ்க்கை வரலாறு:- தமிழகத்தில் மின்சார மற்றும் நீர்வளத்துறைகள் மீது அதிக நாட்டம் கொண்டிருந்த காமராஜர் அந்தத் துறையிலும் பல திட்டங்களை கொண்டு வந்து அசத்தினார். அதில் முக்கியமாக “மேட்டூர் கால்வாய் திட்டம்”,”பவானிசாகர் அணை திட்டம்”, “காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்”,”மணிமுத்தாறு”,”அமராவதி”, “வைகை”,”சாத்தனூர்”,”கிருஷ்ணகிரி ஆரணி ஆறு”போன்ற நீர் பாசன திட்டங்களை ஏற்படுத்தினார்.

தேசிய தலைவர் பொறுப்பு :

மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் பதவியை விட மக்களின் முன்னேற்றமும் மற்றும் கட்சியின் மனதில் வைத்துக் கொண்டு “கேப்ளான்” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” அறிமுகப்படுத்தினார். திட்டத்தின் படி கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இளைஞர்களிடம் பதவியை ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். அதன்படி அக்டோபர் 2 தேதி 1963 ஆம் ஆண்டு தனது முதலமைச்சர் பதவியை துறந்து, பக்வத்சலனிடம் ஒப்படைத்துவிட்டு டெல்லிக்கு சென்றார்.

அதன் பிறகு அதே ஆண்டு அக்டோபர் 9 தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு மட்டும் அல்லாமல் லால் பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய்,செகன்சீகன் ராம்,எச்.கே. பட்டேல் போன்ற பதவியை துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர்.

1964 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு மரணம் அடைந்தவுடன் லால் பகதூர் சாஸ்திரியை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு 1966 ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி மறைவையொட்டி 48 வயதாகிய நேருவின் மகளாகிய இந்திரா காந்தியை இந்திய பிரதமராக நியமித்தார் காமராஜர்.

தமிழகத்தில் காமராஜரின் பங்கு :

• காமராஜர் தனது வாழ்நாளில் மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றியுள்ளார்.

• 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதன் முதலில் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றார்.

• அதன் பின்னர் வந்த இரண்டாவது தேர்தலில் 1957ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் காமராஜர்.

• அதன் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை காமராஜர் தன் வயப்படுத்தினார்.

• தன் வாழ்வில் திருமணம் கூட செய்யாமல் நாட்டு முன்னேற்றத்திற்காகவும் மக்கள் நலனுக்காகவும் மட்டும் கட்சியில் தொடர்ந்து பணிகளை செய்து வந்தார்.

தமிழகத்தில் காமராஜரின் நினைவு சின்னங்கள் :

1. காமராஜர் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2. சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் “காமராஜர் அரங்கம்” ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது.

3. காமராஜரை கெளரப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் அவருடைய திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

4.சென்னையில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்றில் காமராஜரின் பெயரை சூட்டி கௌரவப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு.

5. இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இவரின் முழு உருவ வெண்கல சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

6. 2020 ஆம் வருடம் அக்டோபர் 2-ஆம்தேதி காமராஜர் பெயரில் கன்னியாகுமரியில் ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

7. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.

8. கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் தொடர்பான புகைப்படங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

9. கிண்டியில் காமராஜரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

10. காமராஜர் இறந்த பிறகு 1976 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி இந்திய அரசு இவரை கெளவுரவப்படுத்தியது.

காமராஜரின் வேறு சில பெயர்கள் :

1. படிக்காத மேதை
2. கர்மவீரர் காமராஜர்
3. பெருந்தலைவர்
4. தென்னாட்டு காந்தி
5.வைக்கம் வீரர்
6.கல்விக்கு கண் திறந்தவர்
7. இந்தியாவின் கிங் மேக்கர்
8. கல்வியின் நாயகன்

காமராஜரின் எளிமை குணம் :

  • காமராஜர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதிலும் கடைசி வரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார்.
  • அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகளும் சட்டைகளும் புத்தகங்களும் மற்றும் அவரது பெட்டியில் 150 ரூபாய் பணம் மட்டுமே.
  • இத்தகைய எளிமையான தலைவரை இனிமேல் தமிழக மட்டுமல்ல இந்திய அரசியலும் காண்பது அரிது.
  • அரசியலில் நேர்மை வாய்மை தூய்மை நாணயம் என அனைத்தையும் பின்பற்றிய ஒரே நேர்மையான அரசியல் தலைவர் என்ற பெருமை காமராஜர் மட்டுமே சேரும்.
  • ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் மாமனிதராக திகழ்ந்த ஒரே தலைவர் காமராஜர் மட்டுமே.

காமராஜரின் இறப்பு :

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூக நல பணிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் , நாடு முன்னேற்றத்திற்கும் அயராது உழைத்து தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கர்மவீரர் காமராஜர் அவர்கள் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்று காலமானார். அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர் நடத்திய ஆட்சி முறை அவருடைய ஏழ்மை குணம் ஏழை எளிய மக்களுக்கு அவர் செய்த உதவி எப்பவும் யாராலும் மறக்கவும் முடியாது இனிமேல் அது போல் ஒரு தலைவர் வரவும் முடியாது.

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி மற்றும் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *