குடியரசு தினம் உருவான வரலாறு

Republic day history in tamil – குடியரசு தினம் உருவான வரலாறு

Republic day history in tamil – குடியரசு தினம் உருவான வரலாறு

குடியரசு தினம் உருவான வரலாறு

குடியரசு தினம் கட்டுரை :

குடியரசு தினம் உருவான வரலாறு:- மன்னர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்குள் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு மன்னர் ஆட்சி செய்தனர். ஆனால், ஒவ்வொரு மன்னர்களின் மனநிலை வேறுபட்டு காணப்பட்டது. இதனை, அறிந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வணிகம் செய்ய ஒரு சில பகுதிகளில் மன்னர்களிடம் அனுமதி வாங்கினர். இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் வணிக மட்டும் செய்யாமல் அவர்களது ஆட்சியை நிலைநிறுத்த முடிவு செய்தனர்.

இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களின் வருகை :

குடியரசு தினம் உருவான வரலாறு:-  இந்தியாவிற்கு முதன் முதலில் போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா தான் கப்பல் மூலம் இந்தியாவிற்கு வந்த முதல் போர்த்துகீசிய வணிகர் ஆவார். வந்தவர் இந்தியாவின் வணிக துறையை நன்கு புரிந்து கொண்டு போர்த்துக்கீசியர்கள் அனைவரையும் இந்தியாவிற்குள் அழைத்து வணிகம் செய்ய வைத்தார்.

வணிக திறமையை கண்டு வியந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிற்குள் வர ஆரம்பித்தனர். போர்த்துக்கீசியர்கள் வணிக வேலையை மட்டுமே பார்த்தனர் ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் செலுத்தி நிரந்தர ஆங்கிலேய ஆட்சியை கொண்டு வந்தனர்.

ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இந்தியா கிட்டத்தட்ட “200-ஆண்டுகள்” அவர்களது ஆட்சியில் அடிமையாக இருந்துள்ளது.

இந்தியாவின் சுதந்திர தினம் :

குடியரசு தினம் உருவான வரலாறு:-  ஆங்கிலேய ஆட்சியை வெறுத்த இந்திய மக்கள் இனிமேல் இவர்களின் கீழ் அடிமையாக இருக்க கூடாது என்று முடிவு செய்தனர். அதன்படி, பல தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் சொற்பொழிவு மூலம் தங்களுக்குள் மனம் தைரியத்தை வர வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். இது இந்திய நாடு முழுவதும் பேரலையாக பரவி முழு நேர போராட்டமாக தொடங்கியது.

தேசிய காங்கிரஸ் கட்சியின் உதவியால் இந்திய மக்கள் “மிண்டோ மார்லி சீர்திருத்தம்”, மாண்டேகு செமஸ் சீர்திருத்தம், காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு, “வெள்ளையனே வெளியேறு இயக்கம்”, “உப்பு சத்தியாகிரகம்” என ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர்.

மக்களின் கடும் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் அறிந்த ஆங்கிலேயர்கள் இதற்கு மேல் இங்கு இருந்து ஒன்றும் செய்ய இயலாது என்று கருதி கடைசியில், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-15 இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து இந்தியாவை விட்டு முழுமையாக வெளியேறினர்.

குடியரசு என்றால் என்ன? குடியரசு என்பதன் பொருள் :

  1. குடியரசு என்பதன் விளக்கம் “மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி என்று பொருள்”. இதற்கு மக்களாட்சி என்றும் பொருள் உண்டு.
  2. இதன் நோக்கம் மக்களுக்கு வாழத் தேவையான உரிமைகளையும் அவர்களுக்கு தேவையான நல் வாழ்வினையும் மக்களே முடிவு செய்து முன்நின்று நடத்த வேண்டும்.
  3. இந்தியாவில் 1950-ஆம் ஆண்டு மக்களாட்சி கொண்டுவரப்பட்டது.
  4. இதனை கொண்டாடும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் கொடிக்கம்பங்களில் மூவர்ண கொடியை ஏத்தி நாம் குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தினம் :

1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதன் முதலில் ஆங்கிலேயர்கள் உருவாக்கப்பட்ட அடிமை சட்டங்களை அகற்றி, அம்பேத்கர் தலைமையில் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தினத்தை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம்.

இந்த குடியரசு தினத்தை முதன் முதலில் கொடியேற்றி துவங்கி வைத்தவர் “ஜவஹர்லால் நேரு” ஆவார்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக “டாக்டர்.ராஜேந்திர பிரசாந்த்” அவர்கள் அம்பேத்கர் தலைமையில் நியமிக்கப்பட்டார்.

குடியரசு தினத்தை கொண்டாடும் முறைகள் – குடியரசு தினம் உருவான வரலாறு:

• குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடிகளில் மலர்களை வைத்து கட்டி உயரமான கம்பத்தில் ஏற்றி தேசிய கீதம் முழங்க, பறக்கவிட்டு மகிழ்வார்கள்.

• உலக நாடுகள் சுதந்திர தினம் என்று ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படும் போது, நம் இந்திய நாட்டில் மட்டும் இருமுறை மூவர்ண கொடியேற்றி கொண்டாடி மகிழ்கிறோம்.

• இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவ வீரர்களின் முன்னிலையில் நமது மூவர்ண தேசிய கொடி ஏற்றி சிறப்பிப்பார்.

• இந்த குடியரசு தினத்தன்று இந்திய நாட்டிற்காக ராணுவத்தில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள், பாராட்டுக்கள் வழங்கப்படும்.

• இந்தியாவில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் பாடி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும்.

சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் உள்ள வேறுபாடு :

1. சுதந்திர தினம் என்பது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆங்கிலேயர்கள் முழுமையாக இந்தியாவிற்கு விடுதலை அளிக்கப்பட்ட தினம்.இதனை சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம்.

2. குடியரசு தினம் என்பது 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நமக்கு தேவையான குடியுரிமை சட்டங்களை நாமே அரசியல் சாசனத்திற்கு கொண்டு வந்த தினம். இதனை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தின் சிறப்புகள் மற்றும் குடியரசு தினம் பற்றிய சில வரிகள் :

• குடியரசு தினம் என்பது 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நமக்கு தேவையான குடியுரிமை சட்டங்களை நாமே அரசியல் சாசனத்திற்கு கொண்டு வந்த தினம். இதனை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

• இந்தியாவின் முதல் குடியரசு தினம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டது.

• இந்தியாவின் முதல் குடியரசு தினத்தை முதன் முதலில் கொடியேற்றி தொடங்கி வைத்தவர் “ஜவகர்லால் நேரு” ஆவார்.

• இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் “டாக்டர்.ராஜேந்திர பிரசாந்த்” ஆவார்.

• குடியரசு என்பதன் விளக்கம் “மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி என்று பொருள்”. இதற்கு மக்களாட்சி என்றும் பொருள் உண்டு.

• இந்தியாவின் மக்கள் வாழ்வதற்கான சட்டங்களை அரசியல் சாசனத்திற்கு முதன் முதலில் கொண்டு வந்தவர் “டாக்டர்.அம்பேத்கர்” அவர்கள் ஆவார்.

• இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவ வீரர்களின் முன்னிலையில் நமது மூவர்ண தேசிய கொடி ஏற்றி சிறப்பிப்பார்.

• இந்த குடியரசு தினத்தன்று இந்திய நாட்டிற்காக ராணுவத்தில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள், பாராட்டுக்கள் வழங்கப்படும்

• இந்தியாவில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் பாடி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும்.

• சுதந்திர தினம் என்பது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆங்கிலேயர்கள் முழுமையாக இந்தியாவிற்கு விடுதலை அளிக்கப்பட்ட தினம். இதனை, சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம்.

• குடியரசு தினம் என்பது 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நமக்கு தேவையான குடியுரிமை சட்டங்களை நாமே அரசியல் சாசனத்திற்கு கொண்டு வந்த தினம். இதனை, குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

Read More:- சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *