சிறந்த தமிழ் கவிதைகள் – Best Tamil Quotes

சிறந்த தமிழ் கவிதைகள் – Best Tamil Quotes
சிறந்த தமிழ் கவிதைகள் – Best Tamil Quotes:
சிறந்த தமிழ் கவிதை வசனங்கள், best love quotes நாம் வாழ்க்கையில் மிகவும் அழகான காதல் கவிதை வசனங்கள் படித்து மட்டும் எழுதி இருப்போம்.
அப்படிப்பட்ட சிறந்த தமிழ் கவிதைகள் சிலருக்கு ஊக்கம் அளிக்கும் அல்லது வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் துவண்டு விழாமல் இருக்க உதவியிருக்கும்.
அப்படிப்பட்ட சிறந்த தமிழ் கவிதைகளை இந்த பகுதியில் நாம் பார்ப்போம்.
தமிழ் புதிய காதல் கவிதைகள் பூந்தோட்டம், புதிய தமிழ் காதல் பாடல் வரிகள்.
1) கவிதை என்றால் உன் கண்கள். கவிதை என்றால் உன் இதழ்கள். காதல் என்றால் உன் இதயம். பூமிக்கு வந்த பேரழகே.உன் கண்களால் என்னை கட்டிப்போட்டாய் அவிழ்த்து விட இன்னும் மனம் இல்லையோ உனக்கு.
உன் அழகில் மயங்கிய எனக்கு தெளிந்து வர மனமில்லை. பெண்ணே நீ பெண்ணா இல்லை அந்த பிரம்மன் படைத்த பூந்தோட்டமா. உன்னை பார்த்தால் கல்லுக்கும் காதல் வரும் முள்ளில் இருந்தும் ரத்தம் வரும்.
என் பிஞ்சு நெஞ்சை கெடுத்து சென்ற கவிதையே உன்னை ஒருநாளும் பிரிந்து செல்ல என் மனம் நினைப்பதில்லை. உன்னை போன்ற பெண்ணை இதுவரை நான் பார்த்ததில்லை உலகிற்கு வந்த தேவதையே உன் போல் யாரும் இல்லை.
உன் கால்களும் கவிதை பேசும் உன் கண்களும் கவிதை பேசும் நீ நடந்து சென்றாள் அந்தப் பாதையும் பூ மனம் வீசும்.
2) வானவில்லாக இருக்கும் பெண்ணே நீ பல வண்ணங்களில் ஜொலிக்கிறாய். உன்னை தென்றல் வந்து தீண்டி மறைந்து போகும் பொழுது என் மனம் தாங்கவில்லை. அருவி போல் இருக்கும் உன் கூந்தலில் குளித்து நீராட வந்த என்னை மூழ்கடித்து விடாதே பெண்ணே அதில் இறங்கி முத்து எடுக்க செய்வாயா.
மாலையில் மறையும் கதிரவன் போல் உன் முகம் ஜொலிக்கிறது. உன்னை பார்க்க இரு விழிகள் போதாது கண்மணியே கண் மயங்கி நின்றேன் என் காதலியே. அந்தத் தென்றலும் உன்னை தீண்டி செல்ல ஏங்கும் காலையும் உன் வரவுக்காக ஏங்கும்.
ஒரு மொட்டு போல் மலர்ந்திட மறுப்பாய் ஓர் கவிதையாய் என்னுள் வந்து பிறப்பாய், காலங்கள் பல கடந்து போகும் மரணமும் என்ன தீண்ட ஏங்கும். ஒரு நாள் என் விழிகளும் மூடிவிடும் என் உடம்பில் ஓடும் செங்குருதி ஓட்டமும் நின்றுவிடும் ஆனால் என் இதயம் எப்பொழுதும் உனக்காக மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கும் ,
3) மாலை என்னும் மயக்கத்திலே கவிதை என்னும் கிறக்கத்திலே. வெட்டியாக இருந்த என்னை கவிஞனாக மாற்றிய கவிதையே உன் பெயர் என்ன. சற்று தொலைவிலே உன் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்து போனேன்.
தூரத்தில் நீ வரும் பொழுது உன்னைப் பார்த்து வியந்து போனேன் வருவது பெண்ணா இல்லை பூந்தோட்டமாய் என்று,, கதிரவன் உனக்காக காத்திருக்க மாலையும் மறைய மறுக்குதே. கண்ணுக்குள் உன்னை வைத்து காத்திருப்பேன் காலம் அழிந்தாலும் உன் நினைவோடு கனவில் விழித்திருப்பேன்.
பெண் என்ற ஒரு காவியம் நீ பெண்ணென்று ஒரு கவிதை நீ. கண்கள் மூடி காத்திருப்பேன் காலம் முழுவதும் உனக்காக. நேரில் வரவில்லை எனில் கனவில் வந்தால் போதும் ஒரு முறை நான் பிறந்த பலனை அடைவேன். என் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதையாக மாற செய்வாயா பெண்ணே உனக்காக துடிக்கும் எப்பொழுதும் என் இதயம்.
சிறந்த தமிழ் கவிதைகள்
4) அக்கம் பக்கம் யாரும் இல்லா தனி வீடு ஒன்று வேண்டும். அந்திப்பகல் உன்னருகில் வாழ வேண்டும் என் ஆசையெல்லாம் உன்னோடு ஆயுள் வரை காத்திருப்பேன் இந்த மண்ணோடு, படுக்கை விரித்துப் போட்டேன் முல்லை குத்துதடி உன்னுடைய நினைவு நீ இல்லாத இந்த உலகை வெறுப்பேன் கடவுளே வந்து வாழ சொன்னாலும் மறுப்பேன் கவிதையாய் உன்னுள் வந்து பிறப்பேன், காலம் முழுதும் உன்னோட இருப்பேன்.
நீ தூக்கத்தில் உலர கண்டேன் தோரலை கூட விரும்பி நின்றேன் சிறு தும்மல் வந்தால் கூட உன் நினைவை நினைவில் கொண்டேன், எப்படியோ என்னை இழந்து நின்றேன் உன்னிடம், மனமே மயங்காதே அவளை மனைவி ஆக்கிவிட தயங்காதே, கண்களால் பார்த்தேன் காதல் வந்தது கைகள் கோர்த்தேன் உறவு வந்தது, மனமோ ஏதோ ஒன்று சொல்லத் தயங்குது உன்னிடம் இது காதல் மட்டும் அல்ல அதையும் தாண்டி உன்னுள் வந்த ஓர் உணர்வு, போ போ என்றாய் என்னை விட்டு வா வா என்றேன் உன் வீட்டை விட்டு,
5) அல்லி மலர்கள் போல் விழிகள் ஆணை மயக்கும் இதழ்கள்,, கொட்டும் அறிவிப்போல் கூந்தல் கண்களை மயக்கும் பற்கள், மொத்தத்தில் நீ அந்த நிலா உன்னைச் சுற்றிவர எனக்கு ஆசை ஆனால் தினமும் நீ என்னை சுற்றி வருகிறாய். என் கண்ணில் விழுந்த கண்மணியே.எப்போதோ நீ என்னவளாய் விட்டாய் என்னுள் தொலைந்த உன்னை எப்பொழுதும் பிரிந்து செல்ல மாட்டேன்.
அன்பே நீ கேட்டால் அந்த வானில் இருக்கும் சூரியனைக் கூட உன் நெற்றியில் வைக்கும் பொட்டாக நான் மாற்றி இருப்பேன். மலையில் இருக்கும் கற்களை கொண்டு உன் முகம் வரைந்து விடுவேன். மொத்தத்தில் இந்த உலகையே உனக்காக பரிசளிப்பேன் ஏனெனில் என் உலகமே நீதான் என்பதால் உன்னையே உன்னிடம் தர இயலாது கண்மணியே,
நான் காற்றாக மாறி உன்னுள் சுவாசிக்கவா இல்லை உன் விழியாக மாறி உன்னில் வாழ்ந்திட வா. நீ காலணிகள் இல்லாமல் நடந்து செல்வதற்கு எத்தனை ஆண்டுகள் தவம் செய்ததோ இந்த பூமி.
6) கண்ணே நீ காதல் என்பது கற்பனையா அல்ல காவியமா இல்லை நான் வரைந்த ஓவியமா, மலராக நீ இருந்தால் யாரும் உன்னை பறித்திட அனுமதிக்க மாட்டேன். தென்றல் வந்து உன்னை தீண்டிட என் மனம் நொறுங்கிப் போனது.
தென்றலை சிறை செய்யலாம் என்று நினைத்தேன் உன்னால் காற்றில்லாமல் வாழ முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் அதை நான் விட்டு விட்டேன். விழி மூடி நான் தூங்கும் ஒவ்வொரு இரவும் என் கனவில் வந்தாயடி என் இரவுகள் சுகமானது விழித்திட மனமில்லை. என் வீட்டிற்கு நீ வந்தாய் என் தோட்டத்தில் இருந்த ரோஜா மொட்டுக்கள் மலர்ந்தன.
தேடி தேடி கிடைத்த நல்ல உள்ளமும் நீதான் இனி தேடினாலும் கிடைக்காத நல்ல உறவும் நீதான், இப்போதும் எப்போதும் என் காதல் என்பது உன்னோடு மட்டும் தான். தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும்.
திருட்டுப் போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும். ஒரு தருணம் என் எதிரில் தோன்றுவாய் என்று வாழ்கிறேன் நானும். கண்ணே கலைமானே உன்னை கண்டு வியந்தேன் நானே. மயங்கி நின்றேன் நானே உன்னை தானே பொன்மானே நீ ஒரு தேனை வாடி புள்ளி மானே.
7) கண்ணான கண்ணே மயங்காதே மாங்குயிலே மரிக்கொழுந்து பூவிழியே பொன்மணியே. என்றென்றும் உன்னைத்தானே தேடி வருவேனே உன்னை நானே. என்னை போபோ என்று சொல்லாதே வீணை.
அடி உன்னால் தானே கவிஞனாய் ஆனேன், காலம் முழுவதும் மறக்காதே தேனே. அடி பெண்ணே உன்னை தானே உயிர் உள்ளவரை காப்பேன் நானே கடவுள் நான்தானே உன் போல் யாரும் இல்லை பொன்மானே.
உன் மேல் நானே காதல் கொண்டேனே நீ என்ன சொன்னாலும் உன்னை விட்டு போக மாட்டேன், அடி விழியே என் காதல் கவியே உன்னைப் பற்றி பாட தமிழில் இன்னும் வார்த்தை கண்டுபிடிக்கவில்லையே.
பனித்துளியாய் உன் மேல் விழுவேனே, உன் விரல் கொண்டு என்னை துடைப்பாய் நீயே, காமம் ஒன்று காதல் ஒன்று கவிதை ஒன்று பெண்ணாய் பிறந்தது இந்த பூமியில் இன்று,
8) மண்ணுக்குள் போனாலும்,உன் நினைவோடு காத்திருக்கும் உன் காதலன் நானடி ,என்னை விட்டு நீ சென்றாலும் உன்னை விட்டுக் கொடுக்காத உயிர் நானடி, அன்பே அமுதே ஆருயிர் நீயே, உலகில் உள்ள அத்தனை சொற்களைக் கொண்டு உன்னில் வடித்தேன், பூங்காற்று என்னை அவளிடம் கொண்டு போ,
ஏனென்றால் என்னுடைய இதயம் அவளிடம் இருக்கிறது,நான் உயிர் வாழ அவள் தேவை என்பதால், மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை மட்டுமே விரும்பினேன், ராதையே சீதையே பூங்கோதையே,
உன் விழிகள் கொண்டு என்னை ஒரு முறை உற்றுப் பார் என்னுள் இருக்கும் நீ தெரிவாய். கவிதை என்னும் பூந்தோட்டத்திலே காவல் வைத்தால் என்னை, காதல் கொண்டேன் உன்னை காலம் முழுவதும் காத்திருப்பேன், கலங்காதே கண்ணே.
9) தூக்கங்களை தூக்கி சென்றாய் இயக்கங்களை ஏந்தி சென்றாய், உன்னைத் தாண்டி போகும்போதே புன்னகை கூட போதையாய் மாறுதடி.
நீ சென்ற இடமெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ, நீ சூடும் பூவெல்லாம் ஒருபோதும் வாடாதே, இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன் மின்மினி பூச்சிகளை பறக்க விட்டாய், இந்த மண்ணில் சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில் தான் போய் சேரும்.
என்னை விட்டு நீ பிரிந்த ஒவ்வொரு மணித்துளியும் நரகமாய் போனதடி காதலியே. ஆண்டவனே ஆதரவுத்தா என்றேன் அன்பாய் நீ வந்தாய், ஆண்டவனே நிம்மதியை தாய் என்றேன் இறைவியாய் நீ வந்தாய், என்றோ வாசம் இழந்த ரோஜாவாக இருந்த என்னை உன் கைகள் தீண்டியதால் மீண்டும் வாசம் பிறந்தது.
10) மேகம் கருத்தது மழை வர போகுது என்று நினைத்தேன், சற்று தொலைவிலே நீ வந்ததால் உன் மேல் தொட்டுத் தழுவவே அந்த மேகம் வந்ததென்று புரிந்து கொண்டேன்.
உன் கருவிழிகள் கண்டு வியந்தேன், அது கருவிழிகளா அல்ல பணி மலையா என்று . என் வாழ்வில் அந்த நிலவாக நீ இரு ,உன் பிரதிபலிப்பில் நிழலாக நான் இருப்பேன்.
என்னை சூரியனாக சுட்டேஎரிக்காதே, நீராவியாக மாறி அப்பொழுது கூட உன்னை தொட முயல்வேன். உன் விரல் தீண்டினால் கல்லும் கரைந்து விடும், உயிரற்ற உடலும் மீண்டு வரும்.
உன்னிடம் பேச எந்த ஒரு வார்த்தையும் இல்லை என்று நீ சொல்கிறாய், உன்னிடம் பேச என்னிடம் பல கோடி வார்த்தைகள் உள்ளது என்று சொல்ல தவிக்கிறேன்,
இதுதான் என்னுள் வந்த காதல். உன்னை விட்டு ஒருபோதும் போ என்று சொல்லாதே, அது என் வாழ்வில் வந்த இறுதி ஊர்வலத்திற்கு வந்த அழைப்பாக மாறிவிடும்.. உன் மேல் எனக்கு கிறுக்கு அது ரொம்ப நாளா இருக்கு,
அடியே உனக்கு என் மேல் காதல் இருக்கு, உனக்கும் எனக்கும் ஒரு நாள் இருக்கு அதுதான் நம் வாழ்வில் வந்த காதல் கணக்கு, விழி பார்த்து வந்த நம் உறவு இரு விரல்கள் கோர்த்து புதிதாக மாறும் வசந்தம்…
Read Also: தமிழ் காதல் கவிதைகள்