சேரர்கள் வாழ்க்கை வரலாறு

Chera king’s History in Tamil – சேரர்கள் வாழ்க்கை வரலாறு pdf

Chera king’s History in Tamil – சேரர்கள் வாழ்க்கை வரலாறு

சேரர்கள் வாழ்க்கை வரலாறு

Chera king’s History in Tamil – சேரர்கள் வாழ்க்கை வரலாறு: பண்டைய தமிழகம் சேர, சோழ, பாண்டியர் என முப்பெரும் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. முடி உடைய மூவேந்தர்களில் சேரர்களே மிகவும் பழமையானவர்கள்.

” போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவம் “

என சேரர்களின் பெருமைகளை முன்வைக்கிறது தொல்காப்பியம். பண்டைய சேர நாடு என்பது இன்றைய கேரள பகுதிகளும், தமிழ்நாட்டின் சேலம், கோவை இணைந்த பகுதிகளாக விளங்குகிறது. சேரர்களின் நாடு “குடநாடு” என அழைக்கப்பட்டது. சேலம் மற்றும் கோவை பகுதிகள் “கொங்குநாடு” என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதிகளை சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்தனர்.

சேரர்களின் நகரங்கள் || சேர நாடு மாவட்டங்கள்

• சேரர்களின் நகரம் மேற்கு மலைத்தொடரில் தோன்றிய அரபிக் கடலில் கலக்கும் பேரி ஆற்றங்கரையில் “கருவூர்” என்று அழைப்பார்கள்.

• சேரர்களின் தலைநகரம் – வஞ்சி மற்றும் கரூர்.

• சேர நாட்டின் முக்கிய துறைமுகங்கள் – தொண்டி, முசிறி, காந்தளூர்.

• பண்டைய தமிழகத்தில் சேரர்களால் ஆட்சி செய்யப்பட்ட கொங்கு நாடுகள் என்பது, தற்போது உள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களில் சில பகுதிகளையும் உள்ளடக்கியது ஆகும்.

சேரர்களின் முக்கிய தொழில்கள் || சேர நாட்டின் சிறப்பு

• கடல் வணிகத்தில் சேர நாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இதற்கு காரணம் சேர நாட்டின் இயற்கை வளமே காரணம்.

• காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருனை என்று அழைக்கப்படும் அமராவதி போன்ற ஆறுகள் கொங்கு நாட்டு பகுதியில் பாய்ந்து மிகவும் செழிப்படைய வைத்தது.

• சேர்களின் கப்பல் படை மிகுந்த வலிமை உடைய கப்பல் படையாக இருந்தது. சேரன் செங்குட்டுவன் கடற் போர் வெற்றியால் “கடல் பிறக்கோட்டிய” செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.

• கடம்பர் எனும் கடற்கொள்ளையர்களை சேர மன்னர்கள் அடக்கினர். முசிறி துறைமுகம் சேரர்களின் மிகவும் முக்கியமான சிறந்த துறைமுகமாக விளங்கியது.

• முசிறி துறைமுகத்தில் இருந்து தான் பிற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை தந்தங்கள், பட்டு, மணி, போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

• பொன், மென்மை மிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடைமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

• உப்பும், நெல்லும் ஒரே மதிப்புடையதாக இருந்தது. “நெல்லும் உப்பும் நேரே ஊரீர்” என்று கூறுகிறது அகநானூறு.

Read Also:- பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

சேர மன்னர்கள்:

சேர நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் சேரர்கள் எனப்பட்டனர். சேரர்களின் ஆட்சி காலமும் அவர்களின் பெருமையும் சங்கால நூல்கள் பலவற்றில் குறிப்புகள் உள்ளது. மிக பழமையான சங்க நூல்களில் ஒன்றான “பதிற்றுப்பத்து” பத்து சேர மன்னர்களை பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னர்களை பற்றியும் பத்து பாடல்கள் அடங்கியுள்ளது.

சேர மன்னர்கள் || சேரர் காலம்

1. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – 58 ஆண்டு காலம்.

2. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – 25 ஆண்டு காலம்.

3. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – 25 ஆண்டு காலம்.

4. செங்குட்டுவன் – 55 ஆண்டு காலம்.

5. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் – 38 ஆண்டு காலம்.

6. செல்வக்கடுங்கோ வாழியாதன் – 25 ஆண்டு காலம்.

7. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – 17 ஆண்டு காலம்.

8. இளஞ்சேரல் இரும்பொறை – 16 ஆண்டு காலம்.

9. சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் – கி.மு. 1200.

10. உதியஞ்சேரலாதன் – கி.பி.45-70.

11. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி.71-129.

12. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – கி.பி. 80-105.

13. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி.106-130.

14. சேரன் செங்குட்டுவன் – கி.பி.129-184.

15. அந்துவஞ்சேரல் இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை – கி.பி.123-148.

12. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 148-165.

13. இளஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 165-180.

14. குட்டுவன் கோதை – கி.பி.184-194.

சேர மன்னர்களின் பட்டியல்:

முற்கால சேரர்கள் – சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் – கி.மு.1200

இடைக்கால சேரர்கள்:

1 . கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை – காலம் கிடைக்கப்பெறவில்லை.

2. உதியஞ்சேரலாதன் – கி.பி.45-70 ஆண்டு காலம்.

3. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி.71-129 ஆண்டு காலம்.

4. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – கி.பி.80-105 ஆண்டு காலம்.

5. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி.106-130 ஆண்டு காலம்.

6. செங்குட்டுவன் – கி.பி.129-184 ஆண்டு காலம்.

7. அந்துவஞ்சேரல் இரும்பொறை – காலம் கிடைக்கப்பெறவில்லை.

8. செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை – கி.பி.123-148 ஆண்டு காலம்.

9. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் – கி.பி.130-167 ஆண்டு காலம்.

10. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – கி.பி.148-165 ஆண்டு காலம்.

11. இளஞ்சேரல் இரும்பொறை – கி.பி.165-180 ஆண்டு காலம்.

12. குட்டுவன் கோதை – கி.பி.184-194 ஆண்டு காலம்.

14. மாரிவெண்கோ – காலம் கிடைக்கப்பெறவில்லை.

15. சேரமான் வஞ்சன் காலம் கிடைக்கப்பெறவில்லை.

16. மருதம் பாடிய இளங்கடுங்கோ – காலம் கிடைக்கப்பெறவில்லை.

17. சேரமான் கணைக்கால் இரும்பொறை – காலம் கிடைக்கப்பெறவில்லை.

18. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை – காலம் கிடைக்கப்பெறவில்லை.

பிற்கால சேரர்கள் – சேரமான் பெருமாள் கி.பி.8-ஆம் நூற்றாண்டு.

சேரர் கால குறிப்புகள்:

“மாக்கோதை” மற்றும் “குட்டுவன் கோதை” போன்ற சேர மன்னர்களின் காசுகள் தமிழகத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. இதன் மூலம் சங்க கால பாடல்களில் சேரர்களைப் பற்றிய செய்திகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது.

சேரர்களின் எல்லைகள் || சேர நாட்டின் தலைநகரம் எது?

சங்க கால சேர மன்னர்களின் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகள் ஆகும். ஆனால்,பிற்காலத்தில் உருவான கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருத மொழிக்கு கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால் அங்கு தமிழ் மொழி அழிந்து போனது. பக்தி கலாச்சாரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர்) ஆகிய இருவரும் ஆவார்கள். கரூரில் ஆட்சி செய்தனர். ஆனால், இவர்கள் ஆட்சி முடிவடைந்தவுடன் கேரள வர்மாக்கள் கிளர்ச்சியின் மூலம் கொல்லத்தை தலைமை இடமாக கொண்டு கேரளாவில் தனி ஆட்சியை உருவாக்கினர்.

அதன் பிறகு, கேரளா சோழ தேசத்திற்கு மேற்கிலும், அரபிக் கடலும், தென்கடலும் கூடும் இடத்தில் உள்ள கன்னியாகுமரி முதல் வடபக்கமாக நீண்டு, கர்நாடகா தேசத்திற்கு தெற்கிலும் ஒரு விரிந்த பரவிய தேசமாக இருந்தது.

பதிற்றுப்பத்து கூறும் சேரர்கள் பாடல்கள் தொகுப்பு:

1. ஆதன் – சேரல் (உதியஞ்சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்) எனக் கருதப்படுகிறது.

2 . ஆதன் – சேரல், குடக்கோ (குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்).

3 . குட்டுவன் – பல்யானைச் செல்கெழு குட்டுவன்.

4 . சேரல் – களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்.

5 . குட்டுவன் – கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், சேரன் செங்குட்டுவன் தலைவன்.

6 . ஆதன் – சேரல்(ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்).

7. ஆதன் – கடுங்கோ(செல்வக்கடுங்கோ வாழியாதன்.

8 . பொறை – சேரல் (குட்டுவன் பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை).

9 . பொறை – சேரல் இளஞ்சேரல் இரும்பொறை.

சேரர்கள் யார்?

சேர மன்னர்கள் என்பவர்கள் பண்டைய தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய மூன்று நாடுகளில் ஒன்றாக தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் சேர நாட்டை ஆண்ட அரசு வழியினை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சேரர்களின் கொடி வில் கொடி ஆகும். வில் அம்பு எய்வதில் சேரர்கள் சிறந்து விளங்கினர்.

சேர நாட்டின் அரசன் யார்?

சங்ககால சேர அரசர்கள் ஆட்சி காலத்தில் வரலாற்றில் தெரியும்படி வாழ்ந்த முதல் சேர அரசன் “உதியன் சேரலாதன்” ஆவான். இவனுடைய வேறு பெயர்கள் – பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல்.

சேரர்கள் ஆண்ட தமிழகத்தின் தற்போதைய மாவட்டங்கள் எது?

சேரர்கள் கேரள பகுதி தவிர தமிழகத்தின் மேற்கு பகுதிகளையும் ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும், பாண்டியர்கள் மதுரை பகுதிகளையும் ஆட்சி செய்தனர்.

சேரன் செங்குட்டுவன் யார்?

சேரன் செங்குட்டுவன் பண்டைய தமிழகத்தின் முதன்மையான மூன்று அரசு மரபுகளில் ஒன்றான சேர மரபை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற மன்னன் ஆவார். இவர் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேர நாட்டை ஆண்டதாக அறியப்படுகிறது. சேரலாதன் என்னும் மன்னனுக்கும், அவன் பட்டத்து அரசியான சோழ நாட்டு இளவரசி மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன்.

மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல் எது?

இளங்கோவடிகள் மூவேந்தர் பற்றிய குறிப்புகளை “சிலப்பதிகாரம்” நூலில் “மூவேந்தர் காப்பியம்” என்னும் தலைப்பில் கூறியுள்ளார்.

புகார் காண்டம் – சோழர்களை பற்றி கூறும் நூல்.

மதுரை காண்டம் – பாண்டியர்கள் பற்றி கூறும் நூல்.

வஞ்சி காண்டம் – சேரர்கள் பற்றி கூறும் நூல்.

சேரர் துறைமுகம் எது:

சேர நாட்டு துறைமுகங்களில் மிகவும் முக்கியமானது “தொண்டி” துறைமுகம் ஆகும். “முசிறி, பந்தர், கொடுமணம்” போன்றவை சேர நாட்டின் பிற துறைமுகங்கள் ஆகும்.

சேரர்களின் தலைநகரம் எது? || வஞ்சி எந்த மாவட்டம்?

சங்ககாலத்தில் தோன்றிய சேர மன்னர்களின் தலைநகரமாக கரூர் இருந்ததாக கல்வெட்டுகள், நாணயங்கள், தொல்பொருள் மற்றும் இலக்கிய சான்றுகளால் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது “கரூர் அல்லது வஞ்சி” என்று அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *