தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு

Thanjavur temple history in tamil – தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு

Thanjavur temple history in tamil – தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு

தஞ்சாவூர் கோவில் வரலாறு சுருக்கம் ||Biography of Thanjavur temple in tamil

பெயர் – தஞ்சை பெருவுடையார் கோவில்.

ஊர் – தஞ்சாவூர்(தஞ்சாவூர் மாவட்டம்).

மாநிலம் – தமிழ்நாடு.

மூலவர் – பெருவுடையார், பிரகதீஸ்வரர்.

உற்சவர் – தியாகராசர்.

தாயார் – பெரியநாயகி, பிரகன் நாயகி.

உற்சவர் தாயார் – கமலாம்பிகை.

தல விருட்சம் – வன்னி மரம்.

தீர்த்தம் – சிவகங்கை தீர்த்தம்.

திருவிழாக்கள் – மகாசிவராத்திரி சித்திரை திருவிழா.

பழமை – 1000-ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

கட்டப்பட்ட நாட்கள் – 7-ஆண்டு காலம்.

கோவிலை கட்டியவர் – முதலாம் ராஜராஜ சோழன்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் உயரம் – 216-அடி.

தஞ்சை பெரிய கோயில் நந்தியின் நீளம் மற்றும் உயரம் – 16-அடி நீளமும்(4.9மீட்டர்),13 அடி( 4.0 மீட்டர்)உயரமும் கொண்டது.

 • தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு:- தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் எடை – 80-டன் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது.
 • இந்தியாவில் உள்ள தமிழகத்தின் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் கற்களால் கட்டப்பட்ட ஒரே கோயில் இந்த தஞ்சை பெரிய கோவில் அத்தைய கோவிலின் சிறப்பையும் அதன் பெருமையும் இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

தஞ்சை பெருவுடையார் கோவில் வரலாறு || History of Thanjavur temple in tamil

 • தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு:- தமிழ்நாட்டின் “நெற்களஞ்சியம்” என அழைக்கப்படும் தஞ்சாவூரின் பெருமைமிக்க சுற்றுலா தளம் எதுவென்றால், அது இந்த தஞ்சை பெருவுடையார் கோவில் என்று நாம் கூறலாம்.
 • இந்த கோயிலானது 10-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற “முதலாம் ராஜ ராஜ சோழனால்” பொ.ஊ. 1003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1010-ஆம் ஆண்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 • தஞ்சை பெரிய கோவில் ஆனது தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தஞ்சாவூர் அரண்மனை தேவதானத்திற்கு உட்பட்ட 88-கோவில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.
 • இந்த கோயில் கட்டப்பட்டு 2010-ஆம் ஆண்டோடு 1000-ஆண்டுகள் நிறைவுற்றது. இந்த 1000-ஆண்டு காலம் எந்த ஒரு புயலாலும், வெள்ளத்தாலும், மழையாலும் ஒரு சிறு துரும்பு கூட அந்த கோவிலில் இருந்து சேதம் அடையவில்லை என்பதுதான் இன்றளவும் ஆய்வாளர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு சிவன் கோயிலாகும்.
 • திராவிட கட்டிடக் கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கல சிலை உருவாக்கும் போன்றவை சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த சான்றாக விளங்குகிறது.

தஞ்சை பெருவுடையார் கோவிலின் சிறப்புகள் :

• தமிழகத்தில் உள்ள தஞ்சை பெருவுடையார் கோவில் 33,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப் பெரிய கோயில் ஆகும்.

• இந்த கோயில் ஆனது முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு பெருமை மிக்க கோவில் ஆகும். இக்கோவிலின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் கோவில் கட்ட பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் தஞ்சை சுற்றியுள்ள 60-கிலோ மீட்டர் தொலைவில் எங்கும் கிடையாது என்பதே.

• இந்த கோவிலின் மூன்றாவது நுழைவாயில் 13-விமானங்கள் உள்ளடக்கிய 216-அடி உயரம் கொண்ட மிகப்பெரிய கற்பகிரக விமானம் ஒன்று உள்ளது. அதற்கு எதிராக மிகப்பெரிய நந்தி சிலை கொண்ட ஒரு மண்டபமும் உள்ளது.

• இவை அனைத்தையும்,விட மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால் இந்த கோவிலின் “நிழல்” தரை மீது அது என்பதை மிகப் பெரிய அதிசயம். அதுமட்டுமின்றி கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் “81-டன்” எடை உள்ளது.

• இந்தக் கோவிலின் கருவறையில் உள்ள சிவலிங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமாகும். 6-அடி உயரமும், 54-அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23-அடி உயரம் கொண்ட லிங்கம் என தனித்தனியான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

• 1010-ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010-ஆம் வருடம் 1000-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டியவர் யார் || History of Raja Raja Chola in Tamil :

 • தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு:- இந்த தஞ்சை பெருவுடையார் கோயிலை கிபி 19-ஆம் ஆண்டில் தஞ்சையை ஆட்சி செய்த சோழனின் பெருமைமிக்க அரசரான “முதலாம் ராஜராஜ சோழனால்” கட்டப்பட்டது.
 • சோழர் வம்சத்தின் மாபெரும் பேரரசராக அழைக்கப்படும் “முதலாம் ராஜராஜ சோழன்”அரண்மொழிவர்மன் ஒரு முறை இலங்கைக்கு சென்றிருந்த பொழுது அங்கு இது போன்று ஒரு கோயிலைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார்.
 • அதன் பின்னரே, தான் ஆட்சி செய்த தஞ்சாவூரில் அது போன்று ஒரு கோயிலை கட்ட கிபி 1002-ஆம் ஆண்டு முதல் முதலில் அடிக்கல் நாட்டினார்.
 • இந்த தஞ்சை பெருவுடையார் கோவில் முதலாம் ராஜ ராஜனின் 19-வயதில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.இவருடைய 25-வது வயதில் கிட்டத்தட்ட 2555-நாட்களில் இக்கோவிலானது கட்டப்பட்டுள்ளது.
 • இதில்,இராஜராஜனின் திறமை என்னவென்றால் வெறும் ஏழு ஆண்டுகளில் 1000-ஆண்டுகள் கடந்தும் அசைக்க முடியாத கம்பீரமாக நிற்கும் இத்தகைய கோவிலை கட்டியதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

தஞ்சை பெருவுடையார் கோவிலின் வேறு பெயர்கள் :

1.ராஜராஜேஸ்வரம்.

2.தஞ்சை பெருவுடையார் கோவில்.

3.பிரகதீஸ்வரர் கோவில்.

4. கற்றளி.

தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டிடக் கலை :

 1. தமிழகத்தில் உள்ள தஞ்சை பெருவுடையார் கோவில் 33,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப் பெரிய கோயில் ஆகும்.
 2. இந்த கோயில் ஆனது முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு பெருமை மிக்க கோவில் ஆகும். இக்கோவிலின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் கோவில் கட்ட பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் தஞ்சை சுற்றியுள்ள 60-கிலோ மீட்டர் தொலைவில் எங்கும் கிடையாது என்பதே.
 3. முதன்மை கடவுளான சிவலிங்கம் 3.7 மீட்டர் உயரமாகவும் வெளிப்பிரகாரம் 240-மீ×125-மீ அளவில் அளவு 108 பரதநாட்டிய முத்திரைகளை காட்டும் நடனம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 4. இந்த கோவிலின் மூன்றாவது நுழைவாயில் 13-விமானங்கள் உள்ளடக்கிய 216-அடி உயரம் கொண்ட மிகப்பெரிய கற்பகிரக விமானம் ஒன்று உள்ளது. அதற்கு எதிராக மிகப்பெரிய நந்தி சிலை கொண்ட ஒரு மண்டபமும் உள்ளது.
 5. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி 20-டன் எடையுடன்,2-மீட்டர் உயரமும், 6-மீட்டர் நீளமும், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியாகவும் உள்ளது.

தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டுகள் :

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு:- சோழர் பேரரசர் அரண்மொழி வர்மன் கட்டிய இந்த கோயிலில் பல இடங்களில் இருக்கும் கல்வெட்டுக்கள் கோயில் கட்ட அயராது உழைத்த அரசு குடும்பத்தினரும், அரச அலுவலரும்,பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் எல்லோருடைய பங்களிப்பும் இருந்ததற்கான சான்றுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் முதல் கல்வெட்டாக, “நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அழுக…”

கோவிலில் 50-ஓதுவார்களும், 400நடன மாதர்களும் இருந்ததாக கல்வெட்டு சான்றுகள் குறிப்பிடுகின்றன.

தஞ்சை பெரிய கோயில் திறக்கப்படும் நேரம் :

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு:- வருடத்தின் 365 நாட்களும் இக்கோயில் திறக்கப்பட்டிருக்கும்.

• காலை 6-மணி முதல் 12-மணி வரை திறக்கப்பட்டு இருக்கும்.

• மாலை 4-மணி முதல் இரவு 9-மணி வரை திறக்கப்பட்டு இருக்கும்.

தஞ்சை பெருவுடையார் கோவிலின் சிறப்பு திருவிழாக்கள் –  :

1. பிரம்மோற்சவம்.
2. இராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா.
3. அன்னாபிசேகம்.
4. திருவாதிரை.
5. ஆடிப்புரம்.
6. கார்த்திகை.
7. பிரதோஷம்.
8. சிவராத்திரி.
9. தேரோட்டம்.

கோவிலின் திருமேனிகள் :

1. நம்பியாரூரார்.
2. நங்கை பரவையார்.
3. திருநாவுக்கரசர்.
4. திருஞானசம்பந்தர்.
5. பெரிய பெருமாள் (ராஜராஜர் சோலை).
6. பெரிய பெருமாள் நம்பிராட்டியார்( ராஜராஜன் மனைவி ஒலோகமாதேவி சிலை ).
7. சந்திரசேகர தேவர்.
8. ஷேத்ரபாலர்.
9. ஆடுகின்ற பைரவ மூர்த்தி.
10. சிறுதொண்ட நம்பி.
11. திருவெண்காட்டு நங்கை.
12. சீராள தேவர்.
13. ஆடவல்லான்.
14. ஆடவல்லான் நம்பிரட்டியார் உமா பரமேஸ்வரி.
15. மிலாடுடையார்.
16. ரிஷபவாகன தேவர்.
17. ரிஷபவாகன தேவர் நம்பிரட்டியார்.
18. ரிஷபம்.
19. கணபதி.
20. இலிங்க புராண தேவர்.
21. சிவபெருமானின் கல்யாண சுந்தரர் திருமேனி.
22. தஞ்சை அழகர்.
23. தஞ்சை அழகர் நம்பிரட்டியார்.
24. கணபதி (நின்ற நிலை).
25. பதஞ்சலி தேவர்.
26. ஆடவல்லார் நம்பிரட்டியார் உமா பரமேஸ்வரி.
27. தட்சிணைமேருவிடங்கர் நம்பிரட்டியார் உமா பரமேஸ்வரி.
28. தஞ்சைவிடங்கர் நம்பிரட்டியார் உமா பரமேஸ்வரி.
29. பொன்மாளிகை துஞ்சிய தேவர் (சுந்தர சோழர் சிலை).
30. வானவன் மாதேவி சிலை (குந்தவை அம்மையாக எழுந்தருளித்த திருமேனி).
31. பிச்ச தேவர் திருமேனி.
32. சண்டேச பிரதாச தேவர்.
33. பஞ்சதேக மூர்த்தி.
34. தட்சிணாமூர்த்தி.
35. சண்டேசர்.
36. பிருங்கீசர்.
37. சூரிய தேவர்.
38. கிராதார்ச்சுன தேவர் சிலை.
39. காளபிடாரி திருமேனி.
40. உமாஸகிதர்.
41. உமா பரமேஸ்வரி.
42. கணபதி.
43. சுப்பிரமணியர்.
44. வில்லானைக்கு குருக்களாக எழுந்தருள்வித்த திருமேனி.
45. துர்கா பரமேஸ்வரி.

தஞ்சை பெரிய கோவில் அரசாங்கத்தின் பங்கு :

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வரலாறு:- இந்த தஞ்சை பெருவுடையார் கோயிலை கிபி 19-ஆம் ஆண்டில் தஞ்சையை ஆட்சி செய்த சோழனின் பெருமைமிக்க அரசரான “முதலாம் ராஜராஜ சோழனால்” கட்டப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மத்திய அரசு சார்பில் 1954-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ₹ 1000 நோட்டை வெளியிட்டது. அதில்,தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தோற்றம் அச்சிடப்பட்டது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. 1995-ஆம் ஆண்டு மத்திய அரசு சோழர்களின் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2-ரூபாய் நோட்டை வெளியிட்டது.

Read Also:- ராமேஸ்வரம் கோவில் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *