Maruthuvan

பாட்டி வைத்தியம் – இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

பாட்டி வைத்தியம் – இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

 

பாட்டி வைத்தியம்

100+ பாட்டி வைத்தியம் – Paatti Vaithiyam: உணவே மருந்து. இயற்கை வைத்தியம்.இயற்கை காய்கறிகள் உட்கொள்வதன் மூலம் அனைத்து வகையான நோய்களிலும் இருந்து நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும்

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் – பாட்டி வைத்தியம்:

 

1) ஒரு கரண்டி இஞ்சி சாறை வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வர சளி வெளியேறி நுரையீரல் வலி குணமாகும்.

2) புதினாவை அரைத்து துணியில் தடவி அந்த துணியை நெற்றியில் போட தலைவலி குறையும்.

3) கோரைக்கிழங்கு சூரணம் ஒரு கிராம் காலை மாலை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் புத்தி கூர்மை உண்டாகும்.

4) செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தணிந்து ரத்தம் விருத்தியாகும்.

5) வாதமடக்கி இலையை வாழக்கட்டையில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வர சுளுக்கு குணமாகும்.

6) இலந்தைய தினமும் ஐந்து முதல் பத்து பழம் காலை வேளையில் சாப்பிட பித்த மயக்கம் வாந்தி குமட்டல் குணமாகும்.

7) ஆலமரத்துப்பட்டையை பட்டுப்போல் அரைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து பருக நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

8) வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று பால் குடித்து வர திக்கி பேசுதல் குணமாகும்.

9) வில்வ இலைச்சூரணம் அரை தேக்கரண்டி தேனில் குழைத்து இருவேளை சாப்பிட்டு வர தொண்டைக்கட்டி நீங்கும்.

10) மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும்.

இருமல் குணமாக வீட்டு வைத்தியம்:

 

11) திப்பிலிதூள் நெல்லிக்காய் தூள் தேன் கலந்து நாக்கில் தடவி வர வாய்ப்புண் ஆறும்.

12) மகிழம்மரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கினால் பல்வலி குணமாகும்.

13) ஆடாதோடா தலையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் கழுத்து வலி நீங்கும்.

14) திருநீற்றுப்பச்சை இலையை கசக்கி சாறு பிழிந்து மூக்கில் நுகர மூலைக்காய்ச்சல் குணமாகும்.

15) கலை பூண்டு இலைகளை வெப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்டிவர மூட்டு வலி குணமாகும்.

16) வேலி பருத்தி சாறு சுண்ணாம்பு கலந்து கால் வீக்கத்திற்கு தடவி வர குணமாகும்.

17) கண்டங்கத்திரி இலையை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட கால் வீக்கம் குணமாகும்.

18) ஒரு கைப்பிடி மருதொன்றி இலையை பசும்பாலில் ஊறவைத்து ஆறு நாள் சாப்பிட்டு வர பித்தவெடிப்பு நீங்கும்.

19) பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.

20) புளிய இலையை அவிழ்த்து சூட்டுடன் சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து கட்டி சுளுக்கு நீங்கும்.

சிறுநீர் தொற்று வீட்டு வைத்தியம்:

21) வெப்பம் புகை உலர்த்தி நூலாக வெந்நீரில் உட்கொள்வதனால் வாய்வுத் தொல்லை நீங்கும்.

22) முற்றிய மாவிலையை பொடியாக்கி தனலில் போட்டு சுவாசிக்க விக்கல் குணமாகும்.

23) அரச இலை கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடிக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

24) கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணெயில் காய்ச்சி பூசி வர பித்த வெடிப்பு குணமாகும்.

25) வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு எடுத்து காதுகளில் ஊற்றினால் காக்கா வலிப்பு குணமாகும்.

26) எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

27) சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும்.

28) ஐந்து கிராம் கொத்தமல்லி விதையைச் சிறிதளவு காடியில் அரைத்து கொடுக்க சாராயவெறி தனியும்.

29) தலைச்சுற்றல் குணமடைய; கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வர தலைசுற்றல் நிற்கும்.

30) மழை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

31) தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் இருதயம் பலம்பெறும்.

32) அரச இலை கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடிக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

33) கசகசாவை வறுத்து தூள்செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட சீதபேதி குணமாகும்.

34) வெற்றிலையும் மிளகும் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் உட்கொள்ள விஷங்களும் முறியும்.

35) மிளகை பாலில் அரைத்து கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட வயிற்று புழுக்கள் வெளியேறும்.

36) சுக்குக் கஷாயத்தில் செந்துளசிச் சாற்றைக் கலந்து சாப்பிட வாயு தொல்லை தீரும்.

37) சுரைக்காய் வாரம் இரண்டு தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.

38) பூண்டு குப்பைமேனி அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று பூச்சி ஒளியும்.

39) நெல்லிக்கனி சாறு சிறிது பசு கோமியம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் குணமாகும்.

40) நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

41) பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள் புழுக்கள் ஒளியும்.

42) வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி தீரும்.

43) நாய்துளசி இலை கதிர்களை வசம்புடன் அரைத்து உடலில் பூசி குளிக்க சீலைபேன் ஒளியும்.

44) வாழைத்தண்டு பொரியல் வைத்து சாப்பிட உடலில் சிக்கி இருக்கும் முடி நஞ்சு ஆகியவற்றை வெளியேற்றும்.

45) 10 மிளகாப்பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பெண்கள் அகலும்.

46) அரைக்கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும்.

47) வில்வ மரத்து பூவுடன் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட குடல் வலிமை பெறும்.

48) தினசரி வாழைப்பழம் சாப்பிட குடல் புண் சரும நோய் தடுக்கலாம்.

49) ஆடுதின்னாபாலை இலைகளை கசாயம் செய்து குடிக்க வயிற்றில் உள்ள குழுக்களை அளிக்கிறது.

50) மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

51) சுக்கான் கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட வயிற்றில் உள்ள வாய்வை கட்டுப்படுத்தும்.

52) வாழைக்காய் வாரம் ஒரு நாள் கூட்டாக செய்து சாப்பிட வயிற்றுப்புண் வராது.

53) சிறியாநங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விஷக்கடி விஷம் உடம்பில் ஏறாது.

54) கடுகு அரைத்து நெற்றிலும் கால் பாதத்தின் கீழ் பகுதியிலும் பூச தலைவலி குறையும்.

55) கொழுந்து வெற்றிலையை சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்ட நகசுற்றி குணமாகும்.

56) காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வரமுடி வளரும்.

57) கொய்யா வேரை நசுக்கி இரவில் நீரில் ஊற வைத்து கழுவி வர வெளிமூலம் தீரும்.

58) மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.

59) கையாந்தரை, தும்பை அம்மான் பச்சரிசி, மிளகு சேர்த்து உண்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

60) வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு பட்ட இடத்தில் தடவிவர சுளுக்கு குணமாகும்.

61) நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட செரிக்கும் திறன் அதிகரிக்கும்.

62) வேப்ப மரத்தின் பிசினை தண்ணீருடன் கலந்து குடித்து வர குஷ்டநோய் குணமாகும்.

63) வேப்பங்கொழுந்தை மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ புண் குணமாகும்.

64) கோவை இலை சாறில், தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவ சொரி சிரங்கு குணமாகும்.

65) அரச இலை குழந்தை பசும்பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்க காய்ச்சல் குணமாகும்.

66) மாயிலையை சாம்பலாக்கி பொடி சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து புண் மீது தடவி வந்தால் குணமாகும்.

67) கீழாநெல்லி இலையை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு நீங்கிவிடும்.

68) எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து 100 மில்லி சாப்பிட்டு வந்தால் மலேரியா குணமாகும்.

69) நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து துணியில் வைத்து கட்ட புண் ஆறிவிடும்.

70) வன்னி மர இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட உடல் அரிப்பு நீங்கும்.

71) அருகம்புல் வேர் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட இரத்தமூலம் அகலம்.

72) தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

73) துளசி மற்றும் வெற்றிலை சாற்றினை கலந்து சருமத்தில் தடவி வர எச்சில் தழும்பு குணமாகும்.

74) வாழைப்பூ சற்றுடன் கடுக்காய் சேர்த்து சாப்பிட மூலநோய் ஆசனகடுப்பு நீங்கும்.

75) வாழைத்தண்டை சுட்டு சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவ தீ புண் குணமாகும்.

76) புங்கன் இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி வீக்கத்தின் மீது கட்ட வீக்கம் குணமாகும்.

77) அகத்திக் கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

78) அமுக்கிரா கிழங்கை மைபோல் அரைத்து வீக்கம் மீது போட வீக்கம் குறையும்.

79) பிரண்டை சாறு உப்பு புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை அடிபட்ட இடத்தில் தடவ குணமாகும்.

80) நெல்லி பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்த கொதிப்பு நீங்கும்.

81) மஞ்சளை நெருப்பில் காட்டி கரியாக்கி அதை குடியாக்கி காய்ச்சலுக்கு கொடுக்க குணமாகும்.

82) வசம்புத்தூளை வெட்டு காயத்தின் மீது தூவ விட்டு காயம் குணமாகும்.

83) சோம்பு கொத்தமல்லி சுக்கு பனைவெல்லம் சேர்த்து கஷாயம் சாப்பிட மார்பு எரிச்சல் குணமாகும்.

84) குப்பைமேனி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் ஜீரம் குணமாகும்.

85) வேப்பம் கொழுந்து உடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மீது தடவி வர காயம் ஆறிவிடும்.

86) இலந்தைப்பழம் சாப்பிட்டு வர நெஞ்சு வலி உள்ளவர்கள் குணம் பெறலாம்.

87) கோரை இலங்கை கழுவி சுத்தம் செய்து நீர் விட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

88) மருதாணி இலை அரைத்து நீரில் கலக்கி கழுவ சீருகாயம் அடி சிரைய்ப்பு தீரும்.

89) சாம்பல் பூசணியை மூன்று மாதம் தொடர்ந்து சமைத்து உண்டு வர இளைத்த உடல் பெறும்.

90) வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து அரைத்து தோலில் செய்து குளிக்க தேமல் குணமாகும்.

91) வில்வ இலையை நீர் விட்டு காய்ச்சி அந்த நீரை குடித்தால் வாதகாய்ச்சல் நீங்கும்.

92) வில்வ பழம் சதை கவிதையை சர்க்கரை சேர்த்து சாப்பிட குடலை சுத்தப்படுத்தும்.

93) சீதாப்பழ விதைகளை காய வைத்து கொடியாக்கி சீகக்காய் கலந்து குளித்தால் ஈறு பேன் ஒழியும்.

94) வெந்தயத்தை வேகவைத்து தேன் விட்டு கடைந்து உட்கொள்ள மார்புவலி குணமாகும்.

95) நாய்துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க சீலைப்பேன் ஒளியும்.

96) முட்டைகோஸ் சாரை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும் வறண்ட சருமம் மென்மையாகும்.

97) தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீக்கப்படும்.

98) வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் காலை மாலை நாலு நாள் கொடுக்க ஜீரம் தீரும்.

99) திருநீற்று பச்சிலைசாறு தும்பை இலை சாறு கற்பூரம் சிறிது சேர்த்து மூக்கில் உறிஞ்ச மூலை காய்ச்சல் குணமாகும்.

100) தினசரி ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வர இதய படபடப்பு சரியாகும்.

Read Also: 10 திருக்குறள் | 10 Easy Thirukkural in Tamil

TAMILQUOTES

TAMILQUOTES.IN is a Portal of New Tamil Poem and Quotes of all type. Here the reader can get all type of Tamil Poem like love, sad, comedy, pain, Heart touching etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot bonanza bonanza138 bonanza138 pakar69 pakar69 deposit pulsa tanpa potongan slot deposit dana 5000 slot bonanza logn bonanza138 rtp slot bonanza138 rtp slot pakar69 bonanza138 situs slot gacor situs slot online bonanza 138 gates of aztec bonanza138 link alternatif pakar69 judi bola sbobet slot demo Bonus Slot Online