பாரதியார் கவிதைகள் தமிழ்

பாரதியார் கவிதைகள் தமிழ் || Bharathiar Quotes In Tamil

பாரதியார் கவிதைகள் தமிழ் || Bharathiar Quotes In Tamil

பாரதியார் கவிதைகள் தமிழ்

பாரதியார் கவிதைகள் – Bharathiar Quotes In Tamil பாரதியார் ஒரு மனிதன் எவ்வாறு அச்சமின்றி ஆண்மையுடன் நடந்து கொள்வது. ஒரு மனிதனை எவ்வாறு மதிப்பது போன்ற பல்வேறு வகையான கவிதைகளை எழுதியுள்ளார். அந்த வகையில் பாரதியாரின் எழுச்சிமிகு கவிதைகள் எங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பாரதியார் கவிதைகள் தமிழ்

 • ஊண்மிக விரும்பு,
  எண்ணுவது உயர்வு,
  ஏறுபோல் நட,
  ஐம்பொறி ஆட்சிகொள்.
  ஒற்றுமை வலிமையாம்.
 • ஓய்தல் ஒழி,
  ஒளடதம் குறை,
  கற்றது ஒழுகு,
  காலம் அழியேல்.
 • கிளைபல தாங்கேல்,
  கீழோர்க்கு அஞ்சேல்,
  குன்றென நிமிர்ந்து நில்,
  கூடித் தொழில்செய்.
  கெடுப்பது சோர்வு,
  கேட்டிலும், துணிந்துநில்.
 • கைத்தொழில் போற்று, கொடுமையை எதிர்த்துநில்,கோல்கைக் கொண்டுவாழ். கல்வியதை விடேல்,சரித்திரத் தேர்ச்சிகொள்.

பாரதியார் கவிதைகள் கல்வி

 • சாவதற்கு அஞ்சேல்,
  சிதையா நெஞ்சு கொள்
  சீறுவோர்ச் சீறு,
  சமையினுக்கு இளைத்தி டேல், சூரரைப் போற்று.
 • நெற்றி
  சுருக்கிடேல்.நேர்படப் பேசு,
  நையப் புடை,
  நொந்தது சாகும், நோற்பது கைவிடேல், பணத்தினைப் பெருக்கு.
 • பாட்டினில் அன்பு செய். பிணத்தினைப் போற்றேல். பீழைக்கு இடங்கொடேல்,
  புதியன விரும்பு,
  பூமி இழந்திடேல்.
 • செய்வது துணிந்து செய்.சேர்க்கை அழியேல்.சைகையில் பொருளுணர். சொல்வது தெளிந்து சொல். சோதிடந் தனையிகழ்.
 • சௌரியம் தவறேல் ஞமலிபோல் வாழேல்,ஞாயிறு போற்று. ஞமிரென இன்புறு. ஞெகிழ்வது அருளின்.
 • பெரிதினும் பெரிதுகேள். பேய்களுக்கு அஞ்சேல்.பொய்ம்மை இகழ். போர்த்தொழில் பழகு. மந்திரம் வலிமை.
 • மானம் போற்று.மிடிமையில் அழிந்திடேல். மீளுமாறு உணர்ந்துகொள். முனையிலே முகத்து நில்.மூப்பினுக்கு இடங்கொடேல்.

பாரதியார் கவிதைகள் – Bharathiar Quotes In Tamil

 • ஞேயம் காத்தல் செய்.தன்மை இழவேல். தாழ்ந்து நடவேல்.திருவினை வென்றுவாழ்.
  தீயோர்க்கு அஞ்சேல்.
 • துன்பம் மறந்திடு. தூற்றுதல் ஒழி.
  தெய்வம் நீ என்றுணர். தேசத்தைக் காத்தல் செய். தையலை உயர்வு
  செய்.
 • மெல்லத் தெரிந்து சொல்.
  மேழி போற்று. கொல்.
  மொய்ம்புறத் தவஞ் செய்.
  மோனம் போற்று. மௌட்டியந்தனைக்
  கொல்.
 • தொன்மைக்கு அஞ்சேல்.தோல்வியில் கலங்கேல். தவத்தினை நிதம் புரி.
  நன்று கருது.நாளெலாம் வினை செய்.நினைப்பது முடியும்.நீதிநூல் பயில்.
  நுனியளவு செல். நூலினைப் பகுத்துணர்.
 • யவனர் போல்முயற்சிகொள். யாரையும் மதித்து வாழ்.யௌவனம் காத்தல் செய். ரஸத்திலே தேர்ச்சி கொள். ராஜஸம் பயில்.

kavithai பாரதியார் கவிதைகள்

 • ரீதி தவறேல்.
  ருசிபல வென்றுணர்.
  ரூபம் செம்மை செய்.
  ரேகையில் கனி கொள்.
  ரோதனம் தவிர்.
 • ரௌத்திரம் பழகு.
  லவம் பல வெள்ளமாம்.
  லாகவம் பயிற்சி செய்.
  லீலைஇவ் வுலகு.
  (உ)லுத்தரை
  இகழ்.
 • (உ)லோகநூல் கற்றுணர்.
  லௌகிகம் ஆற்று.
  வருவதை மகிழ்ந்துண்.
  வானநூற் பயிற்சிகொள்.
  விதையினைத் தெரிந்திடு.
 • வீரியம் பெருக்கு.
  வெடிப்புறப் பேசு.
  வேதம் புதுமைசெய்.
  வையத் தலைமைகொள்.
  வௌவுதல் நீக்கு.

வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்கஎன்று கொட்டு முரசே!

பாரதியார் கவிதைகள் முரசு

1. ஊருக்கு நல்லது சொல்வேன் எனக் குண்மை தெரிந்தது சொல்வேன்; சீருக் கெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும்.

2. வேத மறிந்தவன் பார்ப்பான்,பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான். நீதி நிலைதவ றாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

3. பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி.தொண்டரென் றோர்வகுப் பில்லை.—தொழில் சோம்பலைப் போல்இழி வில்லை.

4.நாலு வகுப்பும்இங் கொன்றே; இந்த நான்கினில் ஒன்று குறைந்தால், வேலை தவறிச் சிதைந்தே —செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி.

5. ஒற்றைக் குடும்பந் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;

6. ஏவல்கள் செய்பவர் மக்கள்; இவர் யாவரும் ஓர்குலம் அன்றோ? மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம்.

7. சாதிப் பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.நீதிப் பிரிவுகள் செய்வார். அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.

8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்; அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்: தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பாரதியார் கவிதைகள் தமிழ் – quotes பாரதியார் கவிதைகள்

9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக் குள்ளே சிலமூடர் -நல்ல மாத ரறிவைக் கெடுத்தார்.

10.கண்கள் இரண்டினில் ஒன்றைக்
காட்சி கெடுத்திட லாமோ? குத்திக் பெண்க ளறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடுங் காணீர்.

11. தெய்வம் பலபல சொல்லிப் பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வ தனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொரு ளானது தெய்வம்.

12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார், நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்.
கோயிற் சிலுவையின் முன்னே நின்று
கும்பிடும் யேசு மதத்தார்;

13.யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; -இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்.

14. வெள்ளை நிறத்தொரு பூனை -எங்கள் வீட்டில் வளருது கண்டீர்; பிள்ளைகள் பெற்றதப் பூனை; -அவை
பேருக் கொருநிற மாகும்.

15. சாம்பல் நிறமொரு குட்டி:-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி, பாம்பு நிறமொரு குட்டி, வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி.

Bharathiar Quotes In Tamil

16. எந்த நிறமிருந் தாலும் -அவை யாவும் ஒரேதர மன்றோ?இந்த நிறம்சிறி தென்றும் இஃது ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

18. நிகரென்று கொட்டு முரசே! இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்; தகரென்று கொட்டு முரசே! பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

19. அன்பென்று கொட்டு முரசே! -அதில் ஆக்கமுண் டாமென்று கொட்டு; துன்பங்கள் யாவுமே போகும் – வெறுஞ் சூதப் பிரிவுகள் போனால்.

20. அன்பென்று கொட்டு முரசே! -மக்கள் அத்தனை பேரும் நிகராம்; இன்பங்கள் யாவும் பெருகும் -இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்

21. உடன்பிறந் தார்களைப் போல -இவ்
வுலகில் மனிதரெல் லாரும்; இடம்பெரி துண்டுவை யத்தில்- இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

22. மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்தே ஓங்கிடச் செய்வான்; சிரத்தை யுடையது தெய்வம், -இங்கு சேர்ந்த உணவெல்லை யில்லை.

23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! – இங்கு வாழும் மனிதரெல் லோர்க்கும்; பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! -பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்.

24. உடன்பிறந் தவர்களைப் போலே -இவ் வுலகினில் மனிதரெல் லோரும்; திடங்கொண் டவர்மெலிந் தோரை -இங்கு தின்று பிழைத்திட லாமோ?

25. வலிமை யுடையது தெய்வம், -நம்மை வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;மெலிவுகண் டாலும் குழந்தை தன்னை வீழ்த்தி மிதித்திட லாமோ?

பாரதியார் கவிதைகள் தமிழ்

26. தம்பி சற்றே மெலிவானால் -அண்ணன் தானடிமை கொள்ள லாமோ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடி மைப்பட லாமோ?

27. அன்பென்று கொட்டு முரசே! -அதில்
யார்க்கும் விடுதலை உண்டு; பின்பு மனிதர்க ளெல்லாம் -கல்வி பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

28. அறிவை வளர்த்திட வேண்டும் -மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்; சிறியாரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

29. பாருக் குள்ளே சமத்தன்மை தொடர் பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்கும் தீமைசெய் யாது புவி யெங்கும் விடுதலை செய்யும்.

30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

31. ஒன்றென்று கொட்டு முரசே! – அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! -இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Read Also: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *