பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள் – birthday wishes lines in Tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள் – birthday wishes lines in Tamil
பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Birth Day Wishes:
நம்முடைய உறவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் அன்பானவர்களுக்கு வருகின்ற பிறந்தநாள்களை நாம் நம்முடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு கூறி மகிழ்வோம்.
உங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை ஒரு வித்தியாசமான முறையில் அவர்களுக்கு தெரிவிக்க இங்கே பல பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
100+ பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள birthday wishes lines Tamil உங்களுடைய அன்பானவர்களுக்கு அனுப்பி அவர்களுக்கு பிறந்தநாளை கூறி மகிழுங்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்:
1. நீண்ட ஆயுளுடனும், நிறைந்து செல்வத்துடனும், கடவுளின் துணையோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும், என்றும் இன்பமாய் நூற்றாண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
2. இறைவன் அருளால் பல்லாண்டு காலம் நலமாக ஆரோக்கியமாக வாழ எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
3. முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது..! எங்கிருந்து வந்து இணைந்த உறவே..! இன்று பிறந்தநாள் காணும் என் இனிய நட்பிற்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!
4. இந்த பிறந்தநாளில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் வாழ்க்கை முழுவதும் தொடர வாழ்த்துக்கள்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
5. நீண்ட ஆயுளோடும் நல்ல சுவற்றோடும் தாய் தந்தை ஆசையோடு பல்லாண்டு வாழ வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
6. எப்போதும் துணை இருக்கும் நண்பர்களுக்கு, எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு, மரம் நடுகின்ற கரங்களுக்கு, தொடர்ந்து கொண்டே இருக்கும் கடவுளுக்கு, நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு, செயல்படத் தூண்டும் சவால்களுக்கு, என அனைத்திலும் வெற்றி பெற உன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
7. அன்பு மனைவிக்கு நான் கண்ட மிகச்சிறந்த பாசமான அன்பானவளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
8. எனக்கு கிடைத்த ஒரு சொந்தம் நீ..
இணை இல்லாத ஒரு பந்தம் நீ..
மெய்சிலிர்க்க வைக்கும் உன்னுடைய பாசம்..
பிறப்புக்கு இன்னொரு வாய்ப்பு இருந்தால் அது உன்னோடு தான் பிறக்க வேண்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
9. அனைத்து துன்பங்களும் உன்னை விட்டு விலகி, அனைத்து இன்பங்களும் உன்னிடம் வந்து சேர, இன்று போல் என்றும் உன் வாழ்க்கை இனிமையாக அமைந்திட என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
10. எங்கள் இல்லத்தில் பிறந்த மன்னனே, பாசத்தை அள்ளித் தரும் கண்ணனே, என் உயிருக்கும் மேலான அண்ணனே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்:
1. உன் கனவுகள், ஆசையில் எல்லாம் உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல் இனிவரும் அனைத்து ஆண்டுகளும் நிறைவேறிட வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
2. என்றுமே குறைவில்லாத நீண்ட ஆயுள் மன நிறைவுடன் கூடிய அமைதியான வாழ்க்கை எந்த காலமும் வற்றாத செல்வங்கள் என அனைத்தும் உன் பிறந்த தினம் இன்று முதல் உன்னை வந்து அடையட்டும்..
3. ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் அமைய வேண்டி இந்த பிறந்தநாளில் நீ சந்தோஷமாக இருக்க என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
4. அகவை என்றும் உனை கடக்க ஆனந்தமாய் பிறந்தநாள் பிறக்க ஆசி வழங்கிட யார் யாரோ நிற்க ஆண்டவன் அருள் புரிந்திட இன்று உன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
5. நீ என்னை விட்டு தொலைவில் இருந்தாலும் சரி என் அருகில் இருந்தாலும் சரி என்றும் உன்னுடைய பிறந்தநாள் அன்று என் வாழ்த்துக்கள் தென்றலாய் உன் வாசல் தேடி வரும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
6. இன்றைய பிறந்தநாளில் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமைந்திட என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
7. என்றுமே உன் துணையாக உன் கண்ணிமை போல் நீங்காமல் இந்த வானத்து பட்டாம்பூச்சி போல் உன்னையே சுற்றி சுற்றி வருவேன் என்றும் நலம் பெற வாழ்த்தும் உன் அன்பு அண்ணன்..
8. உனக்கு வாழ்த்து சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா உன்னை வாழ்த்த புதிதாய் யோசித்து யோசித்து நானே புதிதாய் மாறிப்போனேன் பிறக்கவில்லை கவிதை புதிதாய் இன்று நீ பிறந்த கவிதை தானே எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
9. கடவுள் கருணையினால் இன்று போல் என்றும் உன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க நேசமான நண்பர்களுடன் பிரியமான உறவுகளுடன் என்றும் நீ புது காலத்துடன் உன் புன்முறுவலோடு நீரோடி வாழ இறைவனிடம் உனக்காக பிரார்த்திக்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
10. இனிமையும் புதுமையும் உனக்கு வரம் ஆகட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா..
நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்:
11. உனது திறமைக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவும். உன் எதிர்காலம் மிகவும் சிறப்பானதாக அமையவும். வெற்றி என்னும் கதவு உன் நேர்கோட்டில் தடையில்லாமல் பயணிக்கவும் உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
12. என் அன்பு அண்ணனே நீ காட்டும் அன்பினை ஈடு செய்ய இந்த உலகில் வேறு எதுவும் உறவு இல்லை.. என் அன்பான அண்ணனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
13. உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்கள் பொறாமை படுகின்றன. பிறந்து இருந்தால் உன் பிறந்த நாளாக தான் பிறந்து இருக்க வேண்டும் என்று.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
14. பூக்களின் எதிரி அலைவினிலே நிலவுக்கு சொந்தக்காரி நிறத்திலே குறும்புக்கார சிறுமி குணத்திலே வாய் ஜால கில்லாடி பேச்சிலே பாசமிகு தேவதை எங்கள் இதயத்திலே.. என் அன்பு மகளுக்கு இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
15. உனக்காக எத்தனை கவிதை எழுதினாலும் இந்த கவிதை மட்டும் நாளைக்கு அடிக்கடி சொல்ல தோன்றுகிறது அன்பே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
16. பனித்துளியின் பிறந்தநாள் பூக்களால் கொண்டாடப்படுகிறது என்னோடு நீ இருந்த என் முதல் பிறந்தநாள்..
17. பூக்களின் எதிரி எங்கள் வீட்டின் சொந்தமான மாண்புமிகு இளவரசிக்கு இந்த பிறந்தநாள் மிக சிறப்பானதாக அமைய என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
18. இன்றைய தினத்தில் பூவாய் பூத்த உனக்கு கை கொடுக்க இயலவில்லை கவிதை எழுதுகிறேன் என் தோழியை படைத்த பிரம்மனுக்கு நன்றி அவளை சுமந்த என் அன்னைக்கும் நன்றி என் தோழியான பூ பூத்த தினம் பூத்துக் குலுங்கட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
19. ஒவ்வொரு வருடமும் ஒரு புது உறவுகள் புதுப்புது கனவுகளுடன் உடன் உன்னை நேசிப்பவர் எல்லாம் சுற்றி வந்து நின்று வாழ்த்தும் இந்த இனிய பிறந்தநாள்.. நீயும் பிறந்துள்ளாய், கனவுகள், விருப்பங்கள், ஆசைகள், லட்சியங்கள், முன்னேற்றங்கள், கடமைகள், பொறுப்புகள் இவை அனைத்தும் இந்த வருடம் மட்டும் இல்லாமல் இனி வரக்கூடிய அனைத்து வருடங்களிலும் உன் வாழ்க்கையில் வந்து நிரம்பிட என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
20. எனக்குத் தெரியும் நீ என்னை வெறுப்பது போல் நடிக்கிறாய் என்று இருந்தாலும் உன்னை நான் நேசிக்கிறேன் உன்னை விரும்புகிறேன் என் அன்பான காதலிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்:
• என்றுமே உன் வாழ்க்கையின் நலன் விரும்பியாக இருக்கும் என் நேசமிகு நண்பனுக்கு என் உணர்வுபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• என்னுடைய வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாக இருக்கும் என் நண்பனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• வாழ்க்கையில் இறைவனால் படைக்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதி நீதான். எனவே நீ ஜனனித்த இந்த அழகான பொன்னான நாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டி உன்னை மனமாற வாழ்த்துகிறேன் நண்பா..
• குறிஞ்சி மலர் ஒரு முறை பூக்க 12 வருடம் ஆகும் ஆனால் வருடம் ஒரு முறை குறிஞ்சி மலராய் நீயே போகிறாயே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• அனைவருக்கும் கிடைத்த வரம் சொந்தங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உன் நட்பு. என் நட்பு கனவல்ல காரணம் இல்லாமல் கலைந்து போக, என் நட்பு காதல் அல்ல காரணம் கூறிப் பிரிந்து போக என் நட்பு உன்னதமானது, உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான உறவு ஜோதி என இருளை நீங்கி ஒளிந்து இன்று போல் என்றும் நீ சந்தோஷமாய் வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
• இந்த புத்தம்புதிய நாளில் மீண்டும் நீ ஒரு முறை இந்த பூமியில் பிறந்தாய் என நினைத்துக்கொள். கவலைகளை அனைத்தையும் மறந்து உற்சாகமான இந்த பிறந்த நாளை கொண்டாட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
• நீண்ட ஆயுளோடும் நிறைவான சோகத்தோடும் குறைவில்லாத மன சந்தோஷத்தோடும் இன்று போல் என்றும் இன்பமாய் நீ இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• உண்மையான அன்பு வார்த்தைகளில் சொல்ல முடியாது உணர்ச்சிகளாலும் கட்டுப்படுத்த முடியாது எண்ணங்களால் மட்டுமே சொல்ல முடியும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• நீ இன்னும் எனக்கு சின்ன பிள்ளையாகவே தெரிகிறாய்..
உன்னை மீண்டும் தூக்கிக் கொஞ்சம் எனக்கு ஆசைதான் பருவ வயது வந்தாலும் நம் அப்பா மகள் உறவு கொள் ஏனோ ஒரு எல்லைக்கோடு தெரிகிறது இருந்தாலும் என்றுமே நீ எனக்கு கொஞ்சம் குழந்தையாகவே இருக்கிறாய் பாசமிகு என் மகளுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• என் உயிர் நண்பனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• இன்றைய தினத்தில் பூவாய் பூத்த உனக்கு கை கொடுக்க இயலவில்லை அதனால் கவிதை எழுதுகிறேன் என் நண்பனே படைத்த பிரம்மனுக்கு நன்றி அவனை சுமந்த அம்மாவுக்கு நன்றி என் தோழனை பூ பூத்த தினம் இன்று மகிழ்ச்சியாய் இருக்க அனைவரும் வாழ்த்துக்கள்..
• பனை ஓலையில் கருவேலம் முள் குத்தி காத்தாடி செய்து விளையாடியது.. கவலைகள் மறந்து ஆர்ப்பாட்டம் செய்த அந்த நாட்கள் எல்லாம் எங்கே தோழனே.. உனக்கு முதலில் வாழ்த்து சொல்ல முடியாமல் அழுது கொண்டே தேய்ந்து போகும் நிலாவாய் நான், இங்கே இருக்கிறேன்.. இன்று போல் என்றும் இன்பமாய் வாழ என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
• வருடங்கள் எத்தனையோ கடந்து போனாலும் நான் சந்தித்துக் கொண்ட போது நீ சொன்ன உன்னை எனக்குத் தெரியவில்லை என்று ஆம் என் முகம் உன் நினைவில் இல்லை ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு என்றும் நீங்காது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
• நம்முடைய லட்சிய வலிகளில் குறுக்கே வரும் முட்டுக்கட்டைகளை கண்டு பதறாமல், இன்றைய நாள் உனக்கானது என்று நீ எண்ணி உன்னுடைய இந்த பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• உன்னுடைய பாதையை ஒழுங்குபடுத்தவும் உன்னுடைய பயணத்தை உறுதியாக்கவும், மாற்றிட இன்று தொடங்கியது உன்னுடைய பிறந்த தினம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
• இன்று பிறந்தநாள் காணும் என்னுடைய தங்கை பெற்றெடுத்த தங்கம் எங்கள் எண்ணங்கள் ஈடேற எண்ணம் போல் வாழ்க்கை உள்ளத்தில் மகிழ்ச்சி என்று நிலைத்து நிற்க என்னுடைய அன்பு அக்கா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• பிறப்புக்கும், இறப்புக்குமான தூரத்தை சோதனையாக எண்ணுபவன் வலிகளை உணருகிறான். சாதனையாக முயல்பவன் வலிகளை உண்டாக்குகிறான் அதே போல் என்றும் நீ எண்ணற்ற சாதனைகளை செய்திட என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
• நேற்று என்பது முள்வேலி அதன் வலிகளை மறந்திடு, இன்று என்பது வயல்வெளி உன் சாதனைகளை பயிரிடு நாளை என்பது விண்வெளி அதுவும் உன் சாதனையை தொடும் உயரும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
• இதயம் இருக்கும் வரை..
என் இதயமாக நீ..
என் இதயத்தில் இருப்பாய்..!
• புயலை விட வேகமாக தாக்குகின்றது..
உன் பார்வை கொஞ்சம்
தாழ்த்திக் கொள்
நான் நிலையாக நிற்க..!
• நீ காதலை தந்த போது
வாழ்வின் அர்த்தம் புரிந்தது..
நீ பிரிந்து சென்ற போது
வலியின் அர்த்தம் புரிந்தது..!
அண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்:
1. வெகு நீண்ட ஆயுள் காலத்தோடும், நல்லதொரு சுகத்தோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் சந்தோஷமாய் இருக்க என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
2. பூவினம் சேராத பூ ஒன்று பூமியில் வந்த நாள் இன்று.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
3. பூக்களின் விதைகள் நீ புன்னகையின் சொத்துக்களுக்கு சொந்தக்காரி நீ உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
4. இன்றைய தினம் பூத்துக் குலுங்கிய எண்ணற்ற பூக்களின் அழகின் சார்பாக உன்னுடைய பிறந்தநாளை வாழ்த்துகிறேன் தோழி..
5. வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதிர்ந்த நாள் இன்று, என்றுமே நிறைந்த நம்பிக்கையுடன் உன் வாழ்வினை வெல்ல என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
6. முதன்முதலாக பார்த்த அந்த தருணத்தில் நன்னாளில் இன்று என் அன்பு தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
7. உன் முகம் பாராமல், உன்னுடைய வார்த்தை என் செவி சேராமல் இத்தனை நாள் உன்னை விட்டு பிரிந்த நான் என்றும் உன் மனதை விட்டு பிரிய மாட்டேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
8. பிரம்மனின் கற்பனைக்கு எடுத்துக்காட்டு மட்டுமல்ல மலைமேகம் கொண்டு வந்த அந்த வானவில்லும் நீயே தான் தோழியே..
9. ஒருமுறை வெற்றி பெறுவதை விட பல ஆயிரம் தோல்விகளை கண்டு ஆக்கத்தை பெருக்கி அனுபவங்களை அறிந்து பல சாதனைகள் படைத்திட வையகமும் காத்திருக்கிறது.. என் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
10. அனைத்து துன்பங்களும் உன்னை விட்டு விலகி அனைத்து சந்தோஷங்களும் உன்னை அழைப்பதற்கு எடுத்து வருகிறது போல் இனி உன் வாழ்வில் வந்தடைய மனமார வாழ்த்துகிறேன் என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
11. அளவுக்கு மீறிய அன்பு
அதிக சந்தோசம் தருகிறது
இல்லையெனில் அதிக
வலிகளைத் தருகிறது..!
12. மனிதனாக பிறந்ததால் தான்
உன்னை நான் காதலித்தேன்..
காற்றாக நான் இருந்தால்
உந்தன் சுவாசமாக
நான் இருந்திருப்பேன்..!
13. நீ அழும் போது முதலில்
ஆறுதல் சொல்வது..
நீ நேசித்தவராக இருக்கமாட்டார்
உன்னை நேசித்தவராக
தான் இருப்பார்..!
14. சிறு கவிதைகளில் ஆழமான அர்த்தங்களை என்றுமே மறைக்க முடியாது.. மேலும் அத்தகைய நோக்கமும் எனக்கு இல்லை இந்த ரைமிங் வெளிப்பாடுகளில் வேடிக்கையை தொடருவோம் அனைவரும் கூடி இருந்த சந்தர்ப்பத்தை உங்களுக்கு நினைவூட்டும் உதவுகிறேன்.. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
15. வெற்றியும் அதிர்ஷ்டமும் உன் வாழ்வில் எப்பொழுதும் இருக்கட்டும், நான் எப்பொழுதும் உன் உடனையே இருக்கிறேன், என்றும் மகிழ்ச்சி உன் வாழ்வில் பொங்கிட என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
16. நல்ல அதிர்ஷ்டமும், மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், இன்று போல் என்றும் உனக்கு கிடைத்திட என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
17. தங்க கதிர்கள் சூரியனை தழுவட்டும், அழகிய சந்திரனின் முகம் உன் வாழ்வில் பதியட்டும், இருள் பொருந்திய கார்காலமானது உன்னை விட்டு நீங்கட்டும், தினமும் பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களைப் போல் உன் வாழ்வு இனியதாக அமையட்டும், என்றும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.