பொங்கல் பண்டிகை வரலாறு

Pongal History in Tamil – பொங்கல் பண்டிகை வரலாறு

பொங்கல் பண்டிகை வரலாறு || Pongal History in tamil

பொங்கல் பண்டிகை வரலாறு

பொங்கல் பண்டிகை வரலாறு:- பொங்கல் என்பது தமிழர்களால் திருவிழா போன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை தமிழர்கள் வாழும் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, குவைத் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை ஆனாது தமிழகத்தில் 4-நாட்கள் கொண்டாடப்படும்.

தைப்பொங்கல் வரலாறு || Biography of pongal celebration

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழிக்கு ஏற்ப ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் விழாவாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்ற வள்ளுவரின் வார்த்தை கேற்ப உழவர்களும், அதில் உழைத்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் விதமாகவும் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழரின் ஒவ்வொரு நம்பிக்கையும் கொண்டாடும் விதமாகவும், இயற்கையால் மக்கள் பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை :

பொங்கல் பண்டிகை வரலாறு:-  இந்த போகிப் பண்டியானது பொங்கலுக்கு முதல் நாள் அதாவது மாசி மாதம் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பழைய ஆடைகள், தேவை படாத பொருள்கள் என பயன்படுத்தாத அனைத்து பழைய பொருட்களையும் நெருப்பில் எரித்து விடுவார்கள்.

அதுமட்டுமின்றி,வீட்டை சுற்றி தூய்மைப்படுத்துதல் வீட்டிற்கு வெள்ளை அடித்தல், அழுக்குகளை அகற்றுதல், வீட்டை கழுவி தூய்மைப்படுத்தல் போன்ற வேலைகளை செய்து தை முதல் நாள் வரும் பொங்கலை பொலிவுடன் கொண்டாடுவார்கள்.

தை பொங்கல் :

  • பொங்கல் பண்டியானது தை 1-ம் தேதி தமிழக மக்களால் ஒரு திருவிழா போன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் நோக்கம் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்கள் தை மாதத்தில் அறுவடை செய்யப்படும்.
  • இதனால், அந்தப் பயிர்கள் விளைச்சலுக்கு காரணமாக இருந்த சூரிய பகவான் மற்றும் உழவர், கால்நடைகள் இவை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த பண்டிகையில் அந்த வருடத்தில் விளைந்த புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பழங்கள், காய்கறிகள், சக்கரை வள்ளி கிழங்கு சூரிய பகவானுக்கு படைத்து மகிழ்வர்.

தைப்பொங்கல் கொண்டாடும் முறை :

பொங்கல் பண்டிகை வரலாறு:- பொங்கல் பண்டிகை கொண்டாவதற்கு முன் வீட்டிற்கு வெள்ளையடித்து வீட்டை தூய்மைப்படுத்தி பொலிவுடன் வைத்துவிட்டு தான் பொங்கல் பண்டிகையே கொண்டாடுவார்கள்.

தை முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை என்பது அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டின் முன் சாணி தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தில் பூக்களை இட்டு பெண்கள் மகிழ்வார்கள்.

அதன் பின் காலை 7-மணி அளவில் மா இலைகள், ஆவாரம் பூக்கள், பூளைக்கண்ணி பூக்கள் போன்றவற்றை வீட்டில் நிலையில் தோரணமாக கட்டி, வீட்டின் மேற்குரையில் சொருக்கி வீட்டின் திருஷ்டியை போக்குவார்கள். இதனை “காப்பு கட்டுதல்” என்றும் அழைப்பார்கள்.

அதன் பிறகு வீட்டின் தூண்கள் மற்றும் நிலைகளில் கரும்புகளை கட்டி அழகு படுத்துவார்கள். அதன் பின்னர் புத்தாடைகளை உடுத்தி இந்த வருடத்தில் விளைந்த புது அரிசி, சர்க்கரை முதலியவற்றை சேர்த்து பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைப்பார்கள். பிறகு, படைத்த பொங்கலை உறவினர்களுக்கு கொடுத்து தாமும் உண்டு மகிழ்வார்கள்.

மாட்டு பொங்கல் :

தை இரண்டாம் நாள் இந்த பயிர்களின் உற்பத்திக்கு அயராது உழைத்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாடுகள் கட்டிருக்கு தொழுவங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, மாடுகள்,ஆடுகள் கால்நடைகளை குளிப்பாட்டி குறிப்பாக, ஆடு,மாடுகளுக்கு அதனுடைய கொம்புகள் சீவப்பட்டு, வண்ணம் பூசி, அந்த கொம்பில் புது சலங்கை கட்டி விடுவார்கள். மேலும்,திருநீர் பூசி, கலர் வண்ணங்களால் பொட்டு வைத்து புதிய மூக்கணாங் கயிர், தாம்பு கயிறு போன்றவற்றை கற்றி அழகு படுத்துவார்கள்.

அதுமட்டுமின்றி, உழவு கருவிகளை நன்றாக தூய்மைப்படுத்தி சந்தனம் குங்குமம் வைத்து சாமி கும்பிடுவார்கள். மாட்டுத் தொழுவம் முன்னால் வயல்களில் விழுந்த பயிர்களை வைத்து தேங்காய், பூ பழம், புது அரிசி, சர்க்கரை என எல்லாம் தொழுவதிலேயே வைத்து சாமி கும்பிட்டு பொங்கல் வைத்து அந்த பொங்கலை மாடுகளுக்கும், பசுக்களுக்கும், எருமைகளுக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.

பொங்கலிட்ட பிறகு பொங்கலோ பொங்கல்… மாட்டுப் பொங்கல், “பட்டி பெருக” பால் பானை பொங்க நோயும் பிணியும் தெருவோடு போக என்று கோசம் இட்டு மகிழ்வார்கள்.

காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் :

பொங்கல் பண்டிகை வரலாறு:- காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாளாகும். இந்தப் பொங்கலின் நோக்கம் உற்றார் உறவினர் வீடுகளுக்கு அல்லது தங்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று உறவினர்களுடன் பேசி அவர்களுடன் நேரத்தை செலவழித்து மகிழ்வார்கள்.

தென்னிந்தியாவில் குறிப்பாக மதுரை மாவட்டங்களில் இன்றைய தினத்தில் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு நடைபெறும். அந்த விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வீரர்களால் அடக்கப்பட்டு அதற்கு பரிசு வழங்கப்படும் ஒரு பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

மேலும், கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் வைத்து சிறுவர்கள்,பெண்கள் ஆகியோர்களுக்கு வைத்து அதற்கு மக்களால் பரிசு வழங்கி மகிழ்வார்கள்.

கிராமப்புறங்களில் நடத்தப்படும் போட்டிகள் :

  • சிறுவர்களுக்கு ஓட்டப்போட்டி, சோடா பாட்டில்களில் தண்ணீர் நிரப்புதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் தரப்படும்.
  • பெண்களுக்கு கோலப்போட்டி மியூசிக் சேர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் தரப்படும்.
  • ஆண்களுக்கு கண்ணை கட்டிக்கொண்டு பானை உடைத்தல் மற்றும் கயிறு இழுத்தல் போன்ற போட்டியில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
  • மேலும்,இத்திருநாளை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பற்றிய சில வரிகள் :

• பொங்கல் திருநாள் தை முதல் நாள் தமிழர்களால் தமிழக முழுவதும் கொண்டாடப்படுகிறது.

• அதுமட்டுமின்றி, மற்ற நாடுகளில் இருக்கும் தமிழர்களால் தமிழ் கலாச்சார முறைப்படி அந்த நாடுகளிலும் அவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.

• இந்த பொங்கலின் நோக்கம் ஆடி மாதம் விதைத்த பயிர்களை தை மாதம் அறுவடை செய்து அந்த பயிர்கள் விளைவிற்கு அயராது உழைத்து பாடுபட்ட உழவர்கள், கால்நடைகள், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப உழவர்களின் பெருமையை கொண்டாடி நன்றி தெரிவிக்கும் திருநாளை இந்த பொங்கல் திருநாள்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்”, “ஆடிப்பட்டம் தேடி விதை” என எல்லா பழமொழிகளையும் கொண்டாடும் திருநாளாகவும் இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

• இந்த பொங்கலானது 4-நாட்கள் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை, தைத்திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

• இந்த பொங்கல் பண்டிகையை வட இந்தியாவில் “மகர சங்கராந்தி” என கொண்டாடி மகிழ்வார்கள்.

• பொங்கல் திருநாளை தமிழர் திருநாள் என்றும் அழைப்பார்கள். காரணம் இப்பண்டியை அதிகமாக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

• நன்றியுடமை, உறவினர்களை உபசரித்தல், உழவுத் தொழிலுக்கு பெருமை சேர்த்தல் போன்ற நற்குணங்களின் அடையாளமாக இந்த பொங்கல் திருநாள் தமிழர்கள் வாழ்க்கையில் கொண்டாடப்படுகிறது.

• இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்களை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவழித்து அளவில்லா இன்பத்தை பெற்று மகிழ்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *