மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

Mahatma Gandhi History in tamil – மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

Mahatma Gandhi History in tamil – மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை :

பிறப்பு – 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் காந்தியடிகள் பிறந்தார்.

பெற்றோர்கள் – தந்தை : கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. தாயார் : புத்தி பாய் அம்மையார்.

மனைவியின் பெயர் – கஸ்தூரிபாய்.

உடன் பிறந்தவர்கள் – இரண்டு சகோதரர்களும்,ஒரு சகோதரியும் இருந்தனர்‌.

மகன்கள் – ஹரிலால்(1888),தேவதாஸ்(1890),
மணிலால்(1892),ராம்தாஸ்(1897).

இறப்பு – 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி.

இறப்பிற்கான காரணம் – படுகொலை செய்யப்பட்டார்.

சிறப்பு பெயர்கள் – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் தேசிய தந்தை.

கல்வி – லண்டன் பல்கலைக்கழக கல்லூரி.

சமயம் – இந்து( இந்தியா ).

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- அன்பு மனிதநேயம் அகிம்சை தியாகம் வாய்மை பேசல் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் மகாத்மா காந்தியடிகள் அவர்கள், இந்தியா மட்டுமல்லாமல் உலகமே வியந்து போற்றும் தலைவராக விளங்கிய காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மகாத்மா காந்தி பிறப்பும் இளமை காலமும் :

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- காந்தியடிகள் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 – ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள போர் பந்தர் என்னும் ஊரில் பிறந்தார். இவரின்,தந்தை பெயர் கரம்சந்த் காந்தி ,தாய் பெயர் புத்திலிபாய் அம்மையார்.

மகாத்மா காந்தி அவரது வீட்டில் இறுதி குழந்தை ஆவர். அவருக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருந்தனர். காந்தியடிகள் சிறுவயதிலேயே தாயிடமிருந்து இறை நம்பிக்கையும் அன்பு செலுத்துவதையும் கற்றுக் கொண்டார். ராஜ்கோட் மேல்நிலைப்பள்ளி படிக்கும் பொழுது மகாத்மா காந்தி அவர்கள் தனது 12-வயதில் கஸ்தூரிபாய் அம்மையாரை திருமணம் செய்தார்.

மகாத்மா காந்தியின் 16-வது வயதில் அதன் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணம் அடைந்தார்.

இளமை கால படிப்பும் திருமண வாழ்க்கையும் :

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- காந்தியடிகள் மேல்நிலைப் பள்ளி படிக்கும் போது தனது 12 – ஆம் வயதில் கஸ்தூரிபாய் அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 19-ஆம் வயதில் மனைவியைப் பிரிந்து வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்.

காந்தி தனது 20-வயதில் முதன் முதலாக பகவத் கீதை புத்தகத்தை படித்தார். பகவத் கீதை புத்தகம் தான் காந்தியின் மனதை முதன்முதலாக ஈர்த்த புத்தகம். இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு “பாரிஸ்டர்” பட்டம் பெற்றார்.பின்னர்,இந்தியா திரும்பிய அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

பிறகு,1893-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சென்று1914-ஆண்டு வரை அங்கு பணியாற்றினார். மகாத்மா காந்தி தன் இளமை காலத்தை முழுவதும் தென்னாபிரிக்காவிலேயே கழித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் சமூக பணி :

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- காந்தியடிகள் தென்னாபிரிக்கா சென்ற நேரம் அங்கேயும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் தொடர்ந்தது. அப்போது இந்தியர்களுக்கு எதிராக கருப்பு மற்றும் வெள்ளை நிறவேறி கொள்கை கடும் கொள்கையாக அங்கு நிலவி வந்தது.

தென்னாபிரிக்காவில் உச்ச நீதிமன்றத்தில் முதல் இந்திய வழக்கறிஞராக காந்தி இருந்தார். அதன் பிறகு தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தொடர்ந்து தனது ஆதரவினை கொடுத்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பொருளாதார மற்றும் வாழ்விடங்கள் வளர்ச்சிக்காக சட்டம் மறுப்பு இயக்கத்தை தொடங்கினார். இதனால் தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் காந்தியர்கள் தங்களது தலைவராக ஏற்றுக் கொண்டனர்.

காந்தியடிகள் மீண்டும் 1902 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பினார். இந்தியாவில் கல்கத்தா நகரில் கோகலேவுடன் தங்கினார். பிறகு மீண்டும் பம்பா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணிகளை தொடங்கினார். இருப்பினும் தென்னாபிரிக்காவில் அவர் தொடங்கிய பணி அவரை மீண்டும் அழைத்தது.

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- அப்போது,தென்னாபிரிக்காவில் இருந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதியான ட்ரான்ஸ்வால் பகுதியில் இந்தியர்கள் தங்க வேண்டுமானால் கைரேகை பதிவு செய்த அடையாள அட்டை பெற்றால் மட்டுமே வாழ முடியும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. அதனையும், கண்டித்து டர்பன் எனும் நகரில் காந்தி போராட்டம் நடத்தினார்.

தென்னாபிரிக்காவின் இன்னொரு பகுதியான ஜோஹன்னஸ்பெர்க் நகரில் பிளேக் எனும் நோய் பரவியது. அப்போது காந்தியடிகள் “ஆரோக்கியத்திற்கான வழிகாட்டி” என்ற தலைப்பில் தனது உணவு பழக்க முறைகள் குறித்து ஒரு புத்தகம் எழுதினார்.

காந்தியும் காங்கிரஸ் கட்சியும் :

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- 1894-ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கிய காந்தியடிகள் அந்த கட்சிக்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் மாகாணத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்தனர்.

1906-ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன் முறையாக காந்தியடிகள் சத்தியாகிரகம் எனப்படும் அறவழி போராட்டத்தை பயன்படுத்தினார்.

இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடிய பொதுமக்களும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கிலேயர்களுக்கு இவர்களை எளிதாக அடக்க முடியும் என்று எண்ணினர் ஆனால் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்து கொண்டு இவர்களை கோரிக்கையை ஏற்று நிறைவேற்றியது.

இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலமாக தென்னாபிரிக்காவில் வாழும் இந்திய மக்களுக்கு சமூக நிலை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்ற காந்தியடிகள் மீண்டும் தாயகம் திரும்பினார்.

மும்பை துறைமுகத்தில் காந்தி :

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- ஜனவரி 9-ஆம் தேதி 1915-ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் இறங்கிய காந்தி தனது தோற்றத்தில் முழுமையாக உருமாறி இருந்தார். கச்சமிட்டு கட்டிய மில் வேட்டி, தொலைதள ஜிப்பா ன, அங்கஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு என ஒரு விவசாயி உடையில் காட்சி அளித்தார் காந்தியடிகள்.

அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி – கஸ்தூரிபாய் தம்பதியினருக்கு அப்போது அரசியல் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ண கோகலே ஒரு கோலாகல வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தியாவுக்கு வந்த மூன்று நாள் கழித்து 1915-ஜனவரி 12-ஆம் தேதி அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏன் காந்தி கதர் உடையை மட்டும் அணிகிறார் :

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- தென்னாபிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய காந்தி இந்தியாவிலும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கண்டு பெரும் கடும் உழைச்சலுக்கு ஆளானார். காந்தியடிகள் தாயகம் திரும்பிய நேரம் ஜாலியன் வாலா படுகொலை நடந்த நேரம் அந்த நிகழ்வினை அவரால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் அவர் இந்தியாவிலும் ஒத்துழையாமை இயக்கத்த ஏற்படுத்தினார்.

இந்த இயக்கத்தின் நோக்கமானது ஆங்கிலேயர்களுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் நீதிமன்றத்திற்கு வழக்கறிகள் செல்லாமல் இருப்பதுதான் மற்றும் அந்நிய நாட்டு பொருட்கள்,உடை என்று அனைத்தையும் தவிர்ப்பது போன்றவை இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையாக இருந்தது. இந்த இயக்கமானது சிறிது காலம் மட்டுமே இருந்தது அப்போது இருந்தே காந்தி கதர் ஆடையை மட்டுமே உடுத்தினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு :

1914-ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய காந்தியடிகள் தன்னை முழுவதுமாக இந்திய சுதந்திரத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டார்.பால கங்காதர திலகரின் மறைவுக்கு பின்னர் இந்திய சுதந்திர வீரர்களின் வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.ஆனாலும்,திலகரை போன்ற தீவிரவாத முறையில் கையாளாமல் அகிம்சை வழியை பின்பற்றினார் காந்தியடிகள்.

கோபாலகிருஷ்ண கோகலே,ரவீந்திரநாத் தாகூர் போன்றுடன் நட்பு ஏற்பட்டது. காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் கடுமையாக ஈடுபட்டார்.

1924 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தி பொறுப்பேற்றார். தலைமை ஏற்றவுடன் காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்களை காந்தி அறிமுகப்படுத்தி அறப்போராட்ட வழிமுறைகளையும் “சுதேசி” போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவில் மாபெரும் விடுதலை இயக்கம் ஆக்கினார்.

சுதேசி இயக்கத்தை ஆதரிக்கும் பொருட்டு கதர் ஆடைகளையே உடுத்தி கிராம முன்னேற்றத்தை பொதுமக்களிடம் அறிவுறுத்தி அவர்களுக்கு தனது பேச்சின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

காந்தியின் சத்தியாகிரக இயக்கம் :

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பல போராட்டங்களில் காந்தியடிகள் ஈடுபட்டார் அதில் முக்கியமானவை சத்தியாகிரக போராட்டம்.

1930-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் ஆங்கில அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார் காந்தியடிகள். அதே ஆண்டில் ஆங்கில அரசு இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்க கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. ஏப்ரல் 6-ஆம் தேதி உப்பின் மீதான வரியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார்.

1930-ஆம் ஆண்டு மார்ச்-2 ஆம் தேதி அன்று 78-சத்யாகிரகிகளுடன் அகமதாபாத்தில் இருந்து குஜராத் கடலோரத்தில் இருக்கும் வண்டி நோக்கி கிட்டத்தட்ட 240 மயில் நடை பயணத்தை தொடங்கினார். 23 நாட்கள் நடை பயணத்தை நிறைவு செய்த காந்தி அங்கிருந்த கடல் நீரை காட்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பொதுமக்களுக்கு உப்பை விநியோகித்தார். அதுமட்டுமின்றி இந்தியாவில் கடலோரப் பகுதியில் உள்ள அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்த சொன்னார். இதனால்,காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கு விடுதலை வழங்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்று சுதந்திர வீரர்கள் நாடெங்கும் முழங்கினர். இந்த அகிம்சை போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் மகாத்மா காந்தியடி அவர்களே.

இல்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் உப்பின் மீதான வரியை நீக்கியது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் :

சுதந்திர போராட்டத்தின் உச்சம்தான் இந்த ஆகஸ்ட் புரட்சி அதாவது “வெள்ளையனே வெளியேறு இயக்கம்” 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்த இயக்கம் காந்தியடிகளால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது அகிம்சை போராட்டத்தினை காந்தி முன்னென்று தலைமை தாங்கி நடத்தினார்.

காந்தியின் இந்த அறவழிப் போராட்டத்தால் நினைத்ததை விட மிக சிறப்பாக தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கூட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஆங்கிலேயர்கள் இதற்கு மேல் இங்கு ஒன்றும் பண்ண இயலாது என்று எண்ணும் அளவிற்கு நாடு முழுவதும் மக்கள் கூட்டங்கள் திரண்டனர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த தருணம் :

இது,போன்ற பல போராட்டங்களின் முடிவில் “1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா முழுமையான சுதந்திர நாடாக மலர்ந்தது”. ஆனால் காந்தியால் முழுமையாக இந்திய சுதந்திரத்தை கொண்டாட முடியவில்லை. ஏனெனில், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

காந்தியடிகளும் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பும் :

1. சம்பரன் சத்தியாகிரகம்(1917).
2. கேடா சத்தியாகிரகம் (1918).
3. ஒத்துழையாமை இயக்கம் (1930).
4. வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942).
5. உப்பு சத்தியாகிரகம் போராட்டம் (1930).

காந்தியடிகளின் இறப்பு :

அகிம்சை வழியில் தனது அனைத்து போராட்டங்களையும் நடத்தி பல வெற்றிகளை கண்ட மகாத்மா காந்தியடிகளின் இறப்பு ஆயுதம் மூலம் நடந்தது. சுதந்திரம் அடைந்த அடுத்த வருடம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி மாலை ( 5:37-மணியளவில் ) புதுடெல்லியில் “நாதுராம் கட்சே” எனும் கொடியவனால் துப்பாக்கியின் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார் காந்தியடிகள்.

இருப்பினும் சாகும் தருவாயில் கூட காந்தியடிகள் தன்னை சுட்ட கொன்ற சிறுவனை எதுவும் செய்ய வேண்டாம் என்று அகிம்சை முறையிலேயே இறந்து போனார்.

காந்தியடிகளின் மறைவு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காந்தியடிகளின் நினைவாக அவர் பிறந்த நாளான அக்டோபர் 2-தேதி “காந்தி ஜெயந்தி” தினமாக அனுசரிக்கப்பட்டு அரசு விடுமுறை விடப்படுகிறது. மேலும்,அவர் இறந்த ஜனவரி 30-ஆம் தேதி “தியாகிகள்” ழதினமாக அனுசரிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியடிகளின் நினைவுச் சின்னங்கள் :

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம் – மகாத்மா காந்தி அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக மத்திய அரசு இந்திய ரூபாய் நோட்டுகளில் அவரின் புகைப்படத்தை அச்சிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.

காந்தி மணி மண்டபம் – சென்னையில் கிண்டியில் மகாத்மா காந்திக்காக தமிழக அரசு ஒரு மணி மண்டபத்தில் அமைத்து அதனை இன்றளவும் பராமரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் தினம்தோறும் அங்கு சென்று சுற்றி பார்க்கின்றனர்.

காந்தி அருங்காட்சியகம் – மதுரையில் மகாத்மா காந்தியின் நினைவாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

காந்தி சிலை – முக்கடல் கூடும் கன்னியாகுமரியில் காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் காந்தியின் நினைவாக பல சாலைகள் மற்றும் இடங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும்,இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்கு உள்ளது.

காந்தி நினைவிடம் – டெல்லியில் பிர்லா மாளிகை எனும் இடத்தில் உள்ளது.

காந்தியடிகளின் சிறப்பு பெயர்கள் :

தேசத்தந்தை – மக்களால் வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி – ரவீந்திரநாத் தாகூர் வழங்கப்பட்டது.

சுய சரிதை :

காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய “சுயசரிதை” என்னும் நூல் தமிழில் “சத்திய சோதனை” என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. An Autography : The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் :

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு:- இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய சர்க்காவும்,அவரது கடைசி உயிலும் 2013-ஆம் ஆண்டு லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது. அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் ( இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் ). அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் ( சுமார் 18 லட்ச ரூபாய் ) ஏலம் போனது. இந்த ஏலம் பட்டி இந்திய அரசு எந்த தடையும் ஏற்படுத்தாததால் இவை, இரண்டும் தனிநபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலையானது.

மகாத்மா காந்தி பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு வருடமும் அவர் சந்தித்த நிகழ்வுகள் :

• 1869-ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகள் பிறந்தார்.

• 1882-ஆம் ஆண்டு கஸ்தூரிபாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

• 1885-ஆம் ஆண்டு அவருடைய தந்தையை இழந்தார்.

• 1888-ஆம் ஆண்டு ஹரிலால் முதல் குழந்தை பிறந்தது.

• 1890-ஆம் ஆண்டு தேவதாஸ் எனும் இரண்டாம் குழந்தை பிறந்தது.

• 1892-ஆம் ஆண்டு மணிலால் என்னும் மூன்றாம் குழந்தை பிறந்தது.

• 1897-ஆம் ஆண்டு ராமதாஸ் எனும் நான்காம் குழந்தை பிறந்தது.

• 1893-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லா கம்பெனியனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தென் ஆப்பிரிக்காவிற்கு வழக்கறிஞர் வேலைக்கு சென்றார் காந்தியடிகள்.

• 1894-ஆம் ஆண்டு தென்னாபிரிக்க நாட்டில் முதன் முறையாக இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார்.

• 1906-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோக்கர்னெஸ் பேக் எனும் நகரில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனும் அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்தார் காந்தியடிகள்.

• 1915-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 -ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு வந்தார்.

• 1919-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு கொண்டு வந்த ரவுலட் சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் அகிம்சை போராட்டத்தை தொடங்கினார் காந்தியடிகள்.

• அதுமட்டும்,இன்றி 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிராத போராட்டத்தை கடைபிடித்தார் காந்தியடிகள்.

• 1921-ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

• 1922-ஆம் ஆண்டு ஒத்துழையாமை என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார் காந்தியடிகள்.

• 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி போராட்டத்தை தொடங்கி 21-நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் காந்தியடிகள்.

• 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் தேதி சுமார் 240-மைல் தூரம் அகமதாபாத்தில் இருந்து தண்டி வரை உப்பு சத்தியாகிரத்திற்காக வரியை தள்ளுபடி செய்ய கோரி பயணத்தை ஆரம்பித்தார் காந்தியடிகள்.

• ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி ஆங்கிலேயருக்கு எதிராக “வெள்ளையனே வெளியேறு” எனும் மாபெரும் இயக்கத்தை தொடங்கி அதற்கு தலைமை தாங்கினார் காந்தியடிகள்.

• காந்தியடிகளின் அகிம்சை மற்றும் அமைதியான முறையை கண்டு வியந்து போன ஆங்கிலேயர்கள் கடைசியாக 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தார்கள்.

• 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி காந்தியடிகள் “நாதுரம் கோச்கசே” எனும் சிறுவனால் மாலை 5.37 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Read Also:- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *