ராமேஸ்வரம் கோவில் வரலாறு

Rameshwaram temple history in tamil – ராமேஸ்வரம் கோவில் வரலாறு

Rameshwaram temple history in tamil – ராமேஸ்வரம் கோவில் வரலாறு

ராமேஸ்வரம் கோவில் வரலாறு

ராமேஸ்வரம் கோவில் வரலாறு:-

மூலவர் – ராமநாதசுவாமி.

தாயார் – பர்வத வர்த்தினி.

உற்சவர் – அதிகார நந்தி.

தளர்த்திருத்தம் – 22 தீர்த்தங்கள் மற்றும் அக்னி தீர்த்தம்.

தலவிருட்சம் – பலா,ஆலமரம்,வில்வம்.

புராணப்பெயர் – கந்தமாதன பர்வதம்,திருவிராமேச்சுரம்.

பழமை – 2000 வருடங்களுக்கு மேல் பழமையானது.

அமைத்தவர் – முற்கால பாண்டியர்களின் மூதாதையர்கள்.

நடை திறக்கும் நேரம் – காலை 4 மணி முதல் நற்பகல் ஒரு மணி வரை. மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

அமைவிடம் – ராமேஸ்வரம்.

மாவட்டம் – ராமநாதபுரம்.

மாநிலம் – தமிழ்நாடு.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் வரலாறு :

ராமேஸ்வரம் கோவில் வரலாறு:- இந்த ராமேஸ்வரம் கோயில் ஆனது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் இடம்பெற்ற தலம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரை பக்கத்தில் இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் என்னும் இடத்தில் உள்ளது. இந்துக்களின் புனிதமான தலங்களில் இது முக்கியமான தளமாக கருதப்படுகிறது மேலும் பல்வேறு சிறப்புகளை தளம் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள “12 ஜோதிலிங்க” தலங்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே தலம் இது.அதுமட்டுமின்றி 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும் இந்த கோயில் அமைந்துள்ளது.இக்கோவிலின் இன்னொரு சிறப்பாக “22 தீர்த்தங்கள்” இங்கு அமைந்துள்ளது அதிலும் அக்னி தீர்த்தம் மிகவும் விசேஷமானது இந்தியாவில் உள்ள புனித தலங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது நான்கு தலங்கள் அவை,

1. வடக்கே பத்ரிநாதம்.
2. கிழக்கே ஜகந்நாதம்.
3. மேற்கே துவாரகநாதம்.
4. தெற்கே ராமநாதம்.

இவற்றில் முதல் மூன்று தலங்கள் வைணவ தலங்களாக அமைந்துள்ளது.நான்காவது தளம் மட்டுமே சிவ தலமாக இருக்கிறது. இந்த சிவ தலம் பதஞ்சலி முனிவர் முக்தி பெற்ற தலமாகவும் கருதப்படுகிறது.

இராமேஸ்வரம் கோயில் அமைவிடம் :

திண்டுக்கல்லில் இருந்து கிழக்கே சரியாக எடுத்து ஒரு 220-கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரை பக்கத்தில் இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் என்னும் இடத்தில் கோயில் ஆனது அமைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோவில் தல வரலாறு :

ராமேஸ்வரம் கோவில் வரலாறு:- புராண கதையான இராமாயணத்தில் சீதையை இலங்கைக்கு தூக்கிச் சென்ற ராவணனுடன் போரிட்டு அதில் வெற்றி பெற்று சீதாதேவி அன்னையை ராமபிரான் காப்பாத்துவார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தீவிர சிவ பக்தனான இராவணனை கொன்றதன் மூலமாக ராம பிராணாக்கு “பிரம்மஹத்தி தோஷம்” ஏற்பட்டு விடும். இதை நீக்குவதற்கு என்ன வழி என்று அகத்திய முனிவரிடம் ராமபிரான் யோசனை கேட்டார்.

அவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என கூறினார். அதன்படியே தனது தீவிர பக்தன் அனுமனிடம் கைலாச மலைக்கு சென்று சிவலிங்கத்தை கொண்டு வரும்படி ராமபிரான் ஆணையிட்டார். ஆனால் சரியான நேரத்திற்குள் அனுமன் சிவலிங்கத்தை கொண்டு வர தாமதமானதால் அன்னை சீதாதேவி அவர்கள் கடற்கரையில் உள்ள மணலில் ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்து கொடுத்தார்.

ராமனும் வேறு வழியில்லாமல் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் ராமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அன்று ராமபிரான் பிரதிஷ்டை செய்து தனது தோசத்தை நீக்கிய சிவலிங்கமே இன்று ராமநாதசாமி கோவிலில் அருள் பாலிக்கும் சிவபெருமான் ஆவார்.

அனுமனும்,சிவலிங்கமும் :

ராமேஸ்வரம் கோவில் வரலாறு:- ராமனின் ஆணையைக் கேட்டு அனுமான் கைலாச மலைக்கு விரைந்து சென்று அங்கு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.ஆனால்,ராமேஸ்வரம் கடற்கரையில் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு பெரும் கோபமுற்றார். அதனால் தனது பலமிக்க வாளால் அந்த சிவலிங்கத்தை அடித்து உடைக்க முற்பட்டார். இன்றளவும் அந்த சிவலிங்கத்தின் திருமேனியில் இந்த வாலின் தடம் பதிந்து இருப்பதை காணலாம்.

இதனை பார்த்து ராமன் அனுமனையில் சமாதானப்படுத்தும் வகையிலும் தனது பக்தனுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்தை மறுமுறை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த சிவலிங்கமே இன்று விஸ்வநாத ராமநாதசுவாமி கோவிலில் காட்சியளிக்கிறார். அதுமட்டுமின்றி ராமபிரான் முதலில் இந்த சிவலிங்கத்திற்கு தான் பூஜை நடைபெற வேண்டும் என்று ஆணையிட்டார். அதன்படியே இன்றளவும் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பிறகே இராமநாத சுவாமிகளுக்கு பூஜைகள் நடைபெறும்.

ராமநாத சுவாமிகள் கோவிலின் சிறப்புகள் :

ராமநாதபுரம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ராமேஸ்வரம் ராமநாத சுவாமிகள் கோயில் தான். அதன் கொள்ளளவு பற்றி இதில் விரிவாக பார்க்கலாம். ராமேஸ்வரத்தில் கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த ராமநாத சுவாமிகள் கோயில். வழக்கமாக தமிழகத்தில் உள்ள கோயில்கள் போலவே இந்த கோயிலிலும் நான்கு பெரிய மதில்களால் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் 1212-தூண்கள் உள்ளன. அது மட்டுமின்றி கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி 865-அடி நீளமும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 657-அடி நீளமும், கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இரண்டு பெரிய கோபுரங்களை கொண்டது. கிழக்கு கோபுரத்தை 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி செய்த “சேதுபதி மன்னரின் முதலமைச்சர் முத்திருளப் பிள்ளையால்”அமைக்கப்பட்டது.

உலகின் மிக நீளமான பிரகாரங்களைக் கொண்டுள்ள இக் கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கு வெளி பிரகாரங்களின் நீளம் தனித்தனியே நான் ஒரு அடிகள் வடக்கு மற்றும் தெற்கு பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640-அடிகள் ஆகும். கிழக்கு மற்றும் தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் 224-அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் 352-அடிகள் ஆகும். கோவிலின் மொத்த பிரகாரங்களின் நீளம் 3850-அடி ஆகும்.

ராமேஸ்வரர் கோவிலை கட்டியவர் :

இக்கோவிலானது கிட்டத்தட்ட 2100-2600 ஆண்டுகளுக்கு முன் முற்கால பாண்டியர்களின் மூதாதையர்களால் கட்டப்பட்டது.

ராமநாத சுவாமிகள் கோவிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் மேல் கட்டப்பட்டிருக்கும் ரயில் மற்றும் வானங்கள் செல்லும் மிக நீளமான பாலத்தின் வழியாக மட்டுமே செல்ல முடியும்.

பாவங்களைப் போக்கும் காசி-ராமேஸ்வரம் யாத்திரைமுறை :

ராமேஸ்வரம் கோவில் வரலாறு:- காசி மற்றும் ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று கங்கே ஆற்றில் மணலை போட்டுவிட்டு அக்னி தீர்த்தத்தை காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து காசியில் இருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தான் மக்கள் தாங்கள் வாழ்வில் செய்த குற்றச் செயல்களும்,பாவங்களும் நீங்கும் என்று ஒரு ஐதீகம். இப்படி செய்தால் தான் பாவம் மற்றும் குற்றம் செய்தவர்களுக்கு மன நிறைவாகவும்,நிம்மதியாகவும் கடவுள் தாங்கள் செய்த பாவங்களை மன்னித்து விட்டார் என்று எண்ணி மகிழ்வர்.

இராமேஸ்வரம் பெயர் வரக் காரணம் மற்றும் அக்னி தீர்த்தத்தின் பயன்கள் :

  • ராமநாத சுவாமிகள் கோவிலில் வழிபாடு செய்ய விரும்புவர்கள் முதலில் “அக்னி திருத்தம்” எனப்படும் சமுத்திரத்தில் குளித்துவிட்டு தான் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது முறைப்படி செய்ய வேண்டிய ஐதீகம்.
  • இந்த தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என பெயர் வர காரணம் இராவணிடமிருந்து போரிட்டு மீட்கப்பட்ட சீதாதேவி அம்மையாரின் கற்பை சந்தேகப்பட்ட ராமன் சீதையை அக்னி பிரவேசம் செய்ய வைத்தார்.
  • அதன் காரணமாக சீதாதேவி அம்மையாரின் கருப்பு திறன் அக்கினியை சுட்டதாகவும் அதை பொறுத்துக் கொள்ள முடியாத அக்கினி பகவான் கடலில் மூழ்கி தன் வெப்பத்தை தணித்து கொண்டதாகவும் புராண வரலாறு நூல்கள் கூறுகிறது. இதனால் தான் அந்த தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என பெயர் வந்தது.
  • இந்த அக்னி தீர்த்த சமுத்திரத்தில் ஆடி அமாவாசை,மகாளயஅமாவாசை,தை அமாவாசை ஆகிய முக்கிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரம் கோடி மக்கள் ராமேஸ்வரத்தில் கூடுவது உண்டு.

ராமேஸ்வரம் கோவிலில் 22-தீர்த்தங்களும் அதன் பலன்களும் :

1. மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் பெறலாம்.
2. சாவித்திரி தீர்த்தம் – பேச்சாற்றலை பெறலாம்.
3. காயத்ரி தீர்த்தம் – உலக நன்மைகள் உண்டாகும்.
4. சரஸ்வதி தீர்த்தம் – கல்வியில் சிறந்து விளங்கலாம்.
5. சங்கு தீர்த்தம் – வசதிகள் நிறைந்த வாழ்க்கை ஏற்படுத்தலாம்.
6. சக்கர தீர்த்தம் – மனோதிடம் பெறலாம்.
7. சேது மாதவ தீர்த்தம் – காரிய தடைகளை கடந்து வெற்றி பெறலாம்.
8. நளத் தீர்த்தம் – அனைத்து தடைகளும் நீங்கும்.
9. நீலத் தீர்த்தம் – எதிரிகள் தொல்லை அகலும்.
10. கவய தீர்த்தம் – பகை மறையும்.
11. கவாட்ச தீர்த்தம் – கவலைகள் நீங்கும்.
12. கந்தமாதன தீர்த்தம் – எந்தத் துறையிலும் வல்லுனர் ஆகாலம்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் – பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
14. கங்கா தீர்த்தம் – பாவங்கள் அனைத்தும் தீரும்.
15. யமுனை தீர்த்தம் – உயர் பதவிகள் வந்து சேரும்.
16. கயா தீர்த்தம் – முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
17. சர்வ தீர்த்தம் – எந்த பிறவியிலும் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
18. சிவ தீர்த்தம் – எல்லா விதமான பிணிகளும் நீங்கும்.
19. சத்யாமிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தி பெறலாம்.
20. சத்திர தீர்த்தம் – கலைகளில் ஆர்வம் உண்டாகும்.
21. சூரிய தீர்த்தம் – எதிலும் முதன்மை ஸ்தானத்தை அடையாளம்.
22. கோடி தீர்த்தம் – முக்தியை பெறலாம்.

யார் இந்த பாதாள பைரவர் :

ராமேஸ்வரம் கோவில் வரலாறு:- சீதாதேவி அம்மையார் உருவாக்கிய சிவலிங்க சிலையை வைத்து பூஜை செய்த ராமனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அந்த தோஷம் வேற யாரிடம் செல்வது என்று தெரியாமல் திணறிய போது சிவபெருமானின் பல வடிவங்களில் ஒன்றான பைரவரை அனுப்பி அந்த பிரம்மஹத்தி தோஷத்தை தன்னுடைய பாதத்தில் அழுத்தி பாதாளத்திற்கு தள்ளி அதை முக்தி பெற வைத்தார். எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த பைரவர் ராமநாதசாமி ஆலயத்திலேயே தங்கி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் பாவத்தை போக்கி அதை பாதாளத்திற்குள் தள்ளி அருள் வழங்குகிறார் என்பது ஐதீகம்.

இதனால்,தான் இவருக்கு பாதாள பைரவர் என பெயர் வந்தது என கூறப்படுகிறது. இவருடைய சன்னதியின் அருகில் தான் முக்தி தரக்கூடிய “கோடி தீர்த்தம்” உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பர்வத வர்த்தினி அம்பாள் சன்னதி :

இந்தக் கோயிலில் மூலவருக்கு அடுத்து வணங்கப்படும் முக்கிய தெய்வமாக பர்வத வர்த்தினி அம்மன் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழேதான் ஆதிசங்கரர் நிறுவிய “ஸ்ரீ சக்கரம்” உள்ளது.சக்தி பீடங்களில் 51-இல் இத்தலம் “சேதுபிடமாகும்”. பர்வதனி அம்பிகைக்கு தமிழ் வருட பிறப்பான சித்திரை 1-ஆம் தேதி சந்தன காப்பு சாற்றி அலங்காரம் செய்வது வழக்கம்.

அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீரணன் அமைத்த ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். அம்பாள் சன்னதியில் அதிர்ஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கி சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். கோவிலின் முதல் பிரகாரத்தில் சீதா தேவி அமைத்த மணல் சிவலிங்கம் ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

இராமநாத சுவாமி சன்னதி :

பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் கோர்த்து பிண்ணப்பட்ட பந்தலில் நடராசர் காட்சியளிக்கிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாக வடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

அது மட்டும் இன்றி இங்கே அமைந்துள்ள இரண்டு லிங்கங்களுக்கு மத்தியில் சங்கரநாராயணர்,சரஸ்வதி,
அர்த்தநாரீஸ்வர ஏகாதச ருத்ரலிங்க சன்னதியில் இருக்கின்றன.

படிக லிங்கத்திற்கு நடைபெறும் பூஜை :

கர்ப்பகிரகத்தில் வைக்கப்பட்டுள்ள படிக லிங்க பிரதிஷ்டை ஆதிசங்கரால் செய்யப்பட்டது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பாலபிஷேகம் நடைபெறுகிறது.

பிரசித்தி மற்றும் பெருமை பெற்ற மூன்றாம் பிரகாரம் :

ராமேஸ்வரம் கோவிலின் அடையாளமாக கோவிலின் மூன்றாம் பிரகாரம் பார்க்கப்படுகிறது இந்த பிரகாரத்தில் 1212-தூண்களால, 690-அடி நீளம், 435-அடி அகலம் என பார்க்க பிரம்மாண்டமாக காட்சி தரக்கூடிய வகையில் இத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் கோவில் சிறப்புகள் :

பாவ,புண்ணியங்களுக்கு நிம்மதி தரக்கூடிய ஆலயங்களாக விளங்குவது மட்டும் அல்லாமல் பித்துருக்களின் ஆசி பெறக்கூடிய ஆடி அமாவாசை,மகாளய அமாவாசை,தை அமாவாசை தினங்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தத்திலும்,கோவிலிலும் கூடுவது வழக்கம்.

அதுமட்டுமின்றி,

• மகாசிவராத்திரி.
• மார்கழி திருவாதிரை.
• பங்குனி உத்திரம்.
• திருக்கார்த்திகை.
• ஆடி அமாவாசை.
• தை அமாவாசை.
• மகாலய அமாவாசை.

ஆகிய,தினங்களில் பூஜைகள் கோலவாலமாக கொண்டாடப்படுகிறது.

கோவிலின் கும்பாபிஷேக நன்னீராட்டு விழா :

ராமேஸ்வரம் கோவிலின் முதல் திருக்குட நன்னீராட்டு விழா 1948 இல் நடைபெற்றது.

இரண்டாவது திருக்குட நன்னீராட்டு விழா நீண்ட நாட்களுக்குப் பிறகு 1975-யிலும் மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழா 2001-யிலும் நடைபெற்றது.

14-ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவது திருகுடக் நன்னீராட்டு விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களுக்கான கும்பாபிஷேகம்20.1.2016-ஆம் ஆண்டு நடைபெற்றது.

ராமேஸ்வரத்திற்கு விவேகானந்தரின் வருகை :

1897-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் நாள் விவேகானந்தர் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து ராமநாதசுவாமி கண்டு வணங்கி ஆற்றிய சொற்பொழிவில் அன்பு தான் சமயம். உடல்,உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. எனவே உடல் மற்றும் மனம் சுத்தத்தோடு தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு மட்டுமே சிவன் செவிசாய்கிறார் என்றார் விவேகானந்தர்.

கடலுக்குள் நவகிரகங்கள் அமைப்பு :

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கடல் அலைகள் இல்லாதது,ஆர்வம் இல்லாதது.
ராமன் தனது கையால் 9 படி மணலை கொண்டு பிரதிஷ்டை செய்து நவகிரக‌ தலம் இது. பக்தர்கள் இங்குள்ள நவகிரகங்களை தொட்டு அபிஷேகம் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.புராண காலம் முதல் கடல் நடுவே 9-கல் சிலைகளாக நவகிரகங்கள் அமைந்துள்ள அற்புதமான காட்சி மக்கள் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ராமேஸ்வரம் கோவில் வழிபடும் முறை :

ராமேஸ்வரம் கோவில் வரலாறு:- சகல பாவங்களையும்,குற்றங்களையும் போக்குகின்ற தலம் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் தலம். இருப்பினும் இங்குள்ள அம்பாள் சன்னதி முன் அமைந்துள்ள இரட்டை விநாயகரை வணங்கி குழந்தை பாக்கியமும்,செல்வ செழிப்பையும் பக்தர்கள் பெறுகின்றனர்.

காசி,ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக் கொண்டு காசி செல்ல வேண்டும். அதற்குப்பின், காசி சென்று அங்குள்ள கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு,அக்னி தீர்த்தத்தால் காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அங்கிருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு, ராமேஸ்வரத்தில் தொடர்ந்த புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் தான் முடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

ராமேஸ்வரம் கோவில் நடை திறக்கும் நேரம் :

1. காலை நாலு மணி முதல் மதியம் ஒரு மணி வரை.
2. பிற்பகல் 3மணி முதல் இரவு 8.30மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…🙏

Read Also:- கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி மற்றும் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *