வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு

Velu Nachiyar History in Tamil – வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு

வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு || Velu Nachiyar History in Tamil

வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு

வேலுநாச்சியார் கதை சுருக்கம் :

பெயர் – வேலு நாச்சியார்.

பெற்றோர்கள் – செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மற்றும் தாயார் முத்தாத்தால் நாச்சியார்.

பிறந்த ஊர் – ராமநாதபுரம்.

பிறந்த வருடம் – 03/01/1730.

வேலு நாச்சியார் கணவர் – பெயர் முத்து வடுகநாதர்.

வேலுநாச்சியார் மகள் பெயர் – வெள்ளச்சி நாச்சியார்.

வேலு நாச்சியார் இறந்த வருடம் –25/12/1796.

ஆட்சி செய்த ஆண்டு – கி.பி. 1780 முதல் கி.பி. 1783-வரை.

முடிசூட்டு விழா – கி.பி.1780-ஆம் ஆண்டு.

ராணி வேலு நாச்சியார் அம்மையார் 18-நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை ஆட்சி செய்த வீரமங்கை ஆவார். மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் இந்திய பெண் வீராங்கனை ஆவார். அதுமட்டுமின்றி, இந்தியாவின் விடுதலைக்காக போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆகவும் வேலுநாச்சியார் திகழ்ந்தார்.

வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு || Biography of Velu Nachiyar :

வேலு நாச்சியார் ராமநாதபுரத்தில் பிறந்தார். சிவகங்கை மாவட்டத்தை ஆட்சி செய்த செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மற்றும் முத்தாத்தாள் ஆகியோருக்கு 1730-ஆம் ஆண்டு மகாளாய் பிறந்தார் வேலு நாச்சியார். அரசர் குடும்பம் என்றாலே ஆண் வாரிசை தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், வேலு நாச்சியாரின் தந்தை அதைப்பற்றி பெரிதும் கவலை கொள்ளவில்லை. வேலு நாச்சியாரை ஒரு ஆண் போன்றே வளர்க்க ஆரம்பித்தார்.

வேலு நாச்சியார் கற்ற மொழிகள் :

வேலு நாச்சியார் சிறுவயதிலேயே தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என 6-மொழிகளையும் நன்கு கற்றறிந்தார். அதுமட்டுமின்றி, ஆயுதப் பயிற்சியிலும் தன்னுடைய திறமையை சிறுவயதிலேயே வளர்த்துக் கொண்டார் வேலுநாச்சியார்.

வேலு நாச்சியாரின் திருமண வாழ்க்கை :

18-நூற்றாண்டு காலகட்டங்களில் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து தரப்படும் வழக்கம் இருந்தது.

இதனால்,வேலு நாச்சியாரின் 16-வது வயதில், 1746-ஆம் ஆண்டு சிவகங்கை சீமையின் மன்னர் “முத்து வடுகநாத தேவருக்கு” வேலுநாச்சியார் அம்மையாரை திருமணம் செய்து வைத்தனர்.

வேலு நாச்சியாரின் போர் திறமைகள் :

வேலுநாச்சியார் சிறுவயதிலேயே தனது தந்தையின் மூலம் சிலம்பம்,வளரி, வாழ்வீச்சு மற்றும் குதிரையின் மேல் ஏறி சண்டை போடுதல் போன்ற பயிற்சிகளை தீவிரமாக தன் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டார்.

முத்து வடுகநாதரின் இறப்பு :

ஆயிரக்கணக்கான முறை போர் செய்தும் ஆங்கிலர்களால் சிவகங்கை மாவட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. இதனால், முத்து வடுகநாதரை கொலை செய்யும் முயற்சியில் ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினர்.

அதே சமயம் ஆங்கிலர்கள் எதிர்பார்த்தது போல் ஒரு முறை சிவகங்கை மாவட்டத்திலுள்ள காளீஸ்வரி கோவிலுக்கு முத்து வடுகநாதரும் அவருடைய இளைய மனைவி கௌரி நாச்சியாருடன் கோவிலுக்கு சென்று இருந்தார். இதனை,தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் கோயிலை பெரும் படை வீரர்களைக் கொண்டு சுற்றி வளைத்தனர்.

இதனை, அறிந்து கொண்ட முத்து வடுகநாதர் அவர்களுடன் போரில் ஈடுபட்டார். ஆனால்,ஆங்கிலேயர்கள் கொண்டு வந்ததோ பீரங்கிப்படை அதற்கு முன்னால் முத்து வடுகநாதனின் வாழ் வீச்சு சண்டை எடுபடவில்ல. இதனால் அந்தப் போரில் முத்து வடுகநாதரும் அவருடைய இளைய மனைவி கௌரியும் வீரமரணம் அடைந்தனர்.

வேலு நாச்சியாரின் சுதந்திர போராட்ட பங்களிப்பு :

1772-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலு நாச்சியார் மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். இதன் காரணமாக ஆங்கிலேயர்களை எதிர்க்க காத்திருந்த வேலுநாச்சியார் ஹைதர் அலியை சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர்களை எப்படி எதிர்க்க வேண்டும் என்று பேசி அவரின் உதவியை நாடினார்.

ஹைதர் அலியோ என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்றும் அதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும் என்றும் கூறினார். இதனால், வேலுநாச்சியார் அம்மையார் கிட்டதட்ட 8-ஆண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாச்சி கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என மாறி மாறி முகாம் போட்டு அங்கங்கு வாழ்ந்தார்.

மருது சகோதர்களின் கடுமையான முயற்சியினால் சிவகங்கை மன்னர்களில் ஒன்று திரட்டி எதிர்ப்பு படை ஒன்று வேலுநாச்சியார் அம்மையாரால் உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்களை தலைமை தாங்கினார்.

சிவகங்கையை மீட்டெடுத்தல் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிதல் :

  • 1780-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 8-ஆண்டுகளுக்குப் பிறகு ஹைதர் அலியின் உதவியின் பெயரால் திண்டுக்கலில் இருந்து சிவகங்கை நோக்கி வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை புறப்பட்டது.
  • இந்த போரிற்கு ஹைதர் அலி 5000-குதிரைப்படைகளையும், 5000-போர் வீரர்களையும், பீரங்கி படை ஒன்றையும் வேலுநாச்சியார் உடன் உதவிக்கு அனுப்பி வைத்தார்.
  • இந்த போரில் படை சோழவந்தனையும், சிலைமானையும் அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்ற பிறகு கடைசி யுத்தமாக மானாமதுரை அதில் போர் செய்து எந்த ஒரு போர் பயிற்சி பெறாத மக்களின் துணை கொண்டு அந்நியர்களை விரட்டி அடித்து வெற்றி கொண்டனர்.
  • மேலும் அதே ஆண்டு சிவகங்கை சீமை மீட்டெடுத்து நமது மண்ணில் வெற்றி பெற்று காலடியை பதித்தார்கள் வேலு நாச்சியார்.

மீண்டும்,சிவகங்கை சீமைக்கு அரசியானார் வேலுநாச்சியார். வேலு நாச்சியாருக்கு உதவியாக இருந்த மருது சகோதரர்கள் மந்திரியாக நியமிக்கப்பட்டார்கள்.

வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி அரசியாதல் :

வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு:-  தன்னுடைய 50-வது வயது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சிவகங்கை சீமை ஆட்சி செய்த வேலுநாச்சியார் அம்மையார் தனது மகளை அரசியாக்க முடிவு செய்தார்.மருது சகோதரர்களும் அதற்கு ஆதரவினை கொடுத்தார்கள். வேலு நாச்சியார் ஆட்சி காலத்தில் மக்களுக்காக தனது முழு வாழ்க்கையும் அர்ப்பணித்த ஒரு வீர பெண்மணி ஆவார்.

இவர்,ஆட்சி செய்த காலத்தில் பல ஊர்களுக்கு புதிதாக சாலை அமைத்து தரப்பட்டது. நாட்டில் விவசாயம் பெருகியது. பழைய கோயில்களின் கோபுரங்களை அழகாக உயர்த்தி கட்டினார். அதற்கான தேறினை மரத்திலேயே காணிக்கையாக செலுத்தியவர் வேலுநாச்சியார் அம்மையார்.

வேலு நாச்சியாரின் மறைவு :

வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு:- பல போராட்டங்களையும், பல வெற்றிகளையும் சிறிதும் துளி கூட பயமின்றி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு தன் கணவர் ஆண்ட நாட்டை மீண்டும் மீட்டெடுத்து ஆட்சி புரிந்து இராணியாக வாழ்ந்த வேலு நாச்சியார் அம்மையார் அவர்கள் 1796-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் நாள் விருப்பாச்சியில் உள்ள அரண்மனையில் இறந்தார்.

வேலு நாச்சியாரின் நினைவுச் சின்னங்கள் :

• இப்படி ஆங்கிலேயர்களுக்கு அஞ்சாமல் இந்திய விடுதலைக்காக போராடிய முதல் இந்திய மற்றும் தமிழ் பெண் வீராங்கனை என்ற பெருமை வேலுநாச்சியார் அம்மையாரையே சேரும்.

• இதனால்,இவரின் பெருமையை கௌரவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் 65-லட்சம் செலவில் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு நினைவு “மணி மண்டபம்” கட்டப்பட்டது. இது அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களால் 2014-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி காணொளி மூலமாக திறந்து வைக்கப்பட்டது.

• வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி,வாழ், எஃகு முதலிய பல பொருட்கள் சிவகங்கையில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

• 2008-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வேலு நாச்சியாரின் “நினைவுத்தபாலை” இந்திய அரசாங்கம் வெளியிட்டது.

Read Also:- மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *