வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

V.O.Chidambaram pillai History in Tamil – வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு || Biography of V.O.Chidambaram pillai

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை சுருக்கம் :

பெயர் : வ.உ.சிதம்பரம் பிள்ளை.

பெற்றோர்கள் – உலகநாத பிள்ளை,பரமாயி அம்மாள்.

பிறப்பு – 1872 – ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி.

பிறந்த ஊர் – ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம்).

சிறப்பு பெயர்கள் – வ.உ.சி, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்.

மனைவி பெயர் – வள்ளி அம்மையார், மீனாட்சி அம்மையார்.

பிள்ளைகள் பெயர் : ஆறுமுகம், சுப்பிரமணியன், உலகநாதன், வாலேஸ்வரன், ஞானம்பிகை, வேதவல்லி, ஆனந்தவல்லி, மரகதவல்லி.

தொழில் – வழக்கறிஞர், அரசியல்வாதி.

இறப்பு – 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி (64-வயது).

வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறப்பு :

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:- வ.உ.சிதம்பரனார் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை மற்றும் பரமாயி அம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்தார்.

இவர், குடும்பம் ஒரு சைவ வெள்ளாளர் மரபினை சார்ந்த குடும்பம் ஆகும். இவருடைய முழு பெயர் “வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை”

Read Also;- சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

வ.உ.சிதம்பரனார் ஆரம்ப காலமும் பள்ளி பருவமும் :

  • வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தந்தை உலகநாதன் நாட்டின் முக்கிய வழக்கறிஞர்கள் ஒருவர் ஆவார்.
  • இதனால் தன்னைப் போலவே தனது மகனையும் திறமையான வழக்கறிஞராக படிக்க வைக்க விரும்பினார்.
  • இதனால், வ‌.உ.சிதம்பரம் பிள்ளை 6-வயதில் வீர பெருமாள் அண்ணாவி என்ற தமிழ் ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார்.
  • கிருஷ்ணன் என்னும் அரசாங்க அதிகாரி வ.உ.சிக்கு ஆங்கிலம் கற்பித்தார். திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றார்.
  • வ.உ.சி.சிறுவயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார்.

வழக்கறிஞராக வ.உ.சிதம்பரம் பிள்ளை :

  1. வ.உ.சி.யின் தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். அங்கு கணபதி ஐயர் மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் உதவியால் சட்டம் நன்கு கற்றறிந்தார்.
  2. 1894-ஆம் ஆண்டு முதல் சட்ட தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார் வ.உ.சி. 1895-ஆம் ஆண்டு ஓட்டபிடாரத்தில் தனது வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார்.
  3. இவர்,உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வழக்கு பிரிவுகளில் வாதாடும் வழக்கறிஞராக திகழ்ந்தார்.
  4. இருப்பினும், குற்றவியல் வழக்குகளை சிறப்பாக வாதாடுவதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் வசதியற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வாதாடி பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
  5. இவருடைய தகுதி,நேர்மை மற்றும் வாதாடும் திறமை போன்றவற்றுக்கு நீதிபதிகளிடம் நல்ல வரவேற்பினையும், மதிப்பினையும் பெற்றிருந்தார்.

திருமண வாழ்க்கை :

வ.உ.சிதம்பரம் பிள்ளை 1895-ஆம் ஆண்டு வள்ளி அம்மையாரை திருமணம் செய்தார். 1900-ஆம் ஆண்டு தலை பிரசவத்தில் வல்லியம்மை இறந்து விட்டார். வ.உ.சிதம்பரம் பிள்ளை மீனாட்சி அம்மையாரை, 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்றது.

வ.உ.சியும், பாரதியாரின் நட்பும் :

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:-  வ.உ.சி சென்னை செல்லும் போதெல்லாம் பாரதியாரை சந்தித்து அவரிடம் உரையாடி விட்டு தான் மீண்டும் ஊருக்கு திரும்புவார். ஏனெனில், பாரதியாரின் தந்தையும் வ.உ.சி யின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அது மட்டும் இன்றி இருவரும் பக்கத்து பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள்.

இருவரும் சந்தித்து பேசும் பொழுது இருவரின் எண்ணமும் எப்பொழுதும் நாட்டைப் பற்றியே அதிகம் சிந்தித்து பேசுவார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களை தட்டி எழுப்பினார். எனவே, பாரதியாரும் வ.உ.சியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

அரசியல் வாழ்க்கை :

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:-  1905-ஆம் ஆண்டு வ.உ.சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். அந்த நேரத்தில் இந்தியாவில் சுதேசி இயக்கம் தலை தூக்கிய தருணம். இதனால், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பால கங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வருத்தகத்தின் பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தனர்.

இதனால், அரபிந்தோ கோஸ், சுப்பிரமணிய சிவா மற்றும் சுப்பிரமணிய பாரதி ஆகியோர் சென்னையில் பல பகுதிகளில் உறுப்பினர்களுடன் இணைந்து போராடினார்கள். இந்தப் போராட்டமே வ.உ.சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னையில் உறுப்பினர்களுடன் இணைந்து போராட்டவும் தூண்டியது.

வ.உ.சியினால் தொடங்கப்பட்ட தேசிய நிறுவனங்கள் :

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:-  வ.உ.சி.சிதம்பரனார் தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் அதிக அளவு மக்கள் செல்வாக்கினை பெற்ற தலைவராக விளங்கினார். அவர், உருவாக்கிய தேசிய நிறுவனங்கள் சில,

1. சுதேசி பிரச்சார சபை.

2. தர்மசங்க நெசவு சாலை.

3. தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்.

4. சுதேசிய பண்டக சாலை.

5. வேளாண் சங்கம்.

சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கிய தருணம் :

இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்திய ஆட்சியை கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வ வளங்களை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர். இதனை சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாத வ.உ.சி. அவர்கள் ஆங்கிலேயர்களின் வணிகத்தை முதலில் எதிர்த்தார்.

அன்றைய காலகட்டத்தில் “பிரிட்டிஷ் இந்திய சுடீம் நேவிகேஷன் கம்பெனி” இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கி வாணிகத்தை மேற்கொண்டு இருந்தார்கள். அதனால் ,ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனத்தை ஆரம்பிக்க எண்ணினார் வ.உ.சி. அவர்கள்.

1906-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார் வ.உ.சி. இந்த கப்பல் போக்குவரத்தை தொடங்க இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ்.லாவோவையும்” மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஸ், மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் இந்த இரு கப்பல்களையும் வாங்கினார்.

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:-  வ.உ.சி.இந்த நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் ஆங்கில அரசாங்கம் மற்றும் ஆங்கிலே வியாபாரிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத வ.உ.சி.அவர்கள் தூத்துக்குடி முதல் கொழும்பு இடையே வழக்கமான வணிக சேவைகளை தொடங்க ஆரம்பித்தார்.

அது மட்டும் இல்லாமல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாக வ.உ.சி.அவர்கள் அமைத்த போக்குவரத்து இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் வியாபார சரக்குகளை சுதேசி நிறுவனம் ஆரம்பித்த கப்பலில் கொண்டு ஆரம்பித்தனர் இதனால் ஆங்கிலேயர் கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியது.

இதன் சேவையின் நிறுத்த என்னை ஆங்கிலேயர்கள் ஒரு பொய்யான வழக்கினை தொடுத்து சுதேசி கப்பல் இயக்கம் தற்காலிகமாக செயல்படாமல் இருக்க காரணமாக இருந்தனர். ஆனால், அந்த வழக்கிலும் தனது பேச்சுத் திறமையால் வாதாடி தனது கப்பலை மீட்டெடுத்த வ.உ.சி.

தூத்துக்குடி நூற்பாலை போராட்டம் :

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:-  தூத்துக்குடியில் ஆங்கிலே வணிகர்களால் உருவாக்கப்பட்ட நூற்பாலை தொழிற்சாலையில் தமிழக மக்கள் மிகவும் குறைந்த கூலிகளை பார்த்தனர் இதனை கண்டு வருத்தம் அடைந்த வ.உ.சி. அவர்கள் அந்த தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

அனைவரையும் ஒன்று திரட்டி உங்களுக்கான சரியான ஊதியம் ஊதியம் கேளுங்கள், அதுமட்டுமின்றி வாரம் ஒரு நாள் விடுமுறை கேளுங்கள் என்று ஒரு போராட்டத்தை ஆங்கிலே வணிகர்களுக்கு எதிராக ஆரம்பித்தார்.

இதனை, பெரிதும் கண்டு கொள்ளாத ஆங்கிலேயர்கள், நாளுக்கு நாள் போராட்டமும் தீவிரமடைய தொடங்கியது. இதனால், அந்த தொழிற்சாலை நிறுவனம் மக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியது.

கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற வ.உ.சி :

1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர் ஆங்கிலேயர் அரசுக்கு எதிராக மக்களுக்கு விடுதலை உணர்வினை தனது சொற்பொழிவுனால் புகுத்தினர்.

இந்த காரணத்திற்காக 20-ஆண்டுகள் சிறை தண்டனையும் சுப்பிரமணிய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 20-ஆண்டுகள் சிறை தண்டனையும் மொத்தம் 40-ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் மக்களுடைய பெரும் அதிர்ச்சனை ஏற்படுத்தியது நாடு முழுவதும் வ.உ.சி. அவர்களுக்கு மக்கள் தங்களால் முடிந்த ஆதாரமே கொடுத்தனர்.

செக்கிழுத்த செம்மல் :

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:- சிறையில் அடைக்கப்பட்ட இவர், அங்கு கடுமையாக உழைத்தார். கல் உடைத்தார். மாடு இழுக்கும் செக்கினை இழுத்தார். அத்தகைய புகழ்பெற்ற வழக்கறிஞர் சிறையில் ஒரு மாடு போல் உழைத்தார். இதனால் அவரது எடை மிகவும் குறைந்தது மருத்துவர்கள் சிறை அதிகாரியிடம் எச்சரித்தனர். உடனே அவருக்கு அரிசி உணவு வழங்கப்பட்டது.

வ.உ.சி.சிறையில் இருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கி போனது. அவரில்லாமல், அத்தகைய பெரிய கப்பல் நிறுவனத்தை மற்றவர்களால் நடத்த முடியவில்லை. இதனால், அவரது கப்பலை “எஸ்.எஸ்.காலியோ” என்ற ஆங்கில நிறுவனத்திடம் விற்றுவிட்டார்கள். இதனால், மிகவும் மனம் உடைந்து போனார் வ.உ.சி.

1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வ உ சி அவர்கள் விடுதலை அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ்நிலை முற்றிலுமாக மாறி இருந்தது.

வ.உ.சிதம்பரனார் இறப்பு :

வ. உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:-  வ.உ.சி.விடுதலைக்கு பின்,சென்னை கோயம்புத்தூர் கோவில்பட்டி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்தார். இப்படி, ஆங்கிலேயர்கள் எதிராக இந்திய சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டு போராடிய வ.உ.சிதம்பரம் பிள்ளை கடைசி வரை வறுமையிலே வாழ்ந்து வந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் காலமானார்.

வ.உ.சியின் நினைவு சின்னங்கள் :

• வ.உ.சி.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு “கப்பலோட்டிய தமிழன்” என்றும் ” தமிழ் ஹெல்ம்ஸ் மேன்” என்றும் “கப்பல் செலுத்துகிற திசை காட்டுபவர்” என்றும் பல பட்டங்களை பெற்றுள்ளார்.

“செக்கிழுத்த செம்மல்” என்ற பெருமை வ.உ.சிதம்பரம் பிள்ளையை சேரும்.

• மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரியில் வ.உ.சி. முழுதிரு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

• தூத்துக்குடி துறைமுகம் “வ.உ.சி.போர்டு” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

• தூத்துக்குடியில் அவர் பெயரில் ஒரு கல்லூரி உள்ளது. 1972-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி அவரது நூற்றாண்டு விழாவில் நினைவு கூறும் வகையில் இந்திய தபால் மற்றும் தந்தித் தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால் தலையை அவரின் பெயரில் வெளியிட்டுள்ளது.

• கோயம்புத்தூரில் வ.உ.சி.பூங்கா மற்றும் வ.உ.சி. மைதானம் மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்பு கூடமாகவும் இன்றளவும் இருந்து வருகிறது.

• கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

• திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு வ.உ.சி. பாலம் என பெயரிடப்பட்டுள்ளது.

• கோயம்புத்தூர் மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கு இன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

• ஓட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த வீட்டினை அவரது நினைவு இல்லமாகவும் அதில் நூலகம் மற்றும் அவரைப் பற்றிய புகைப்படங்கள் குறிப்புகள் என அனைத்தும் அங்கே உள்ளது.

• தமிழகத்தில் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக முழுவதும் வ.உ.சி. என்ற பெயரில் பல தெருக்கள், குடியிருப்புகள், சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

• மேலும், வ.உ.சி. வாழ்க்கை வரலாற்றை பற்றி “கப்பலோட்டிய தமிழன்” என்ற தமிழ் திரைப்படம் ஒன்று வெளியானது. அதில் நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்” அவர்கள் வ.உ.சி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *