12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு

12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு தமிழ்

12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு தமிழ்

12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு

12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு: ஆழ்வார்கள் என்பவர்கள் தங்களுடைய பாசுரங்களால் வைணவ சமயத்தின் முதல் கடவுள் ஆகிய “திருமாலை” போற்றி தமிழ் செய்யுள் பாடல்கள் பாடியவர்கள் தான் இந்த ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்: ஆழ்வார்கள் மொத்தம் 12-பேர்‌.

12-ஆழ்வார்க்களின் பெயர்கள் || 12 ஆழ்வார்களின் பெயர்கள் in english || பன்னிரு ஆழ்வார்களின் பெயர் என்ன?

1. பொய்கையாழ்வார்.

2. பூதாத்தாழ்வார்.

3. பேயாழ்வார்.

4. திருமழிசையாழ்வார்.

5. நம்மாழ்வார்.

6. மதுரகவி ஆழ்வார்.

7. குலசேகர ஆழ்வார்.

8. பெரியாழ்வார்.

9. ஆண்டாள்.

10. தொண்டரடிப்பொடியாழ்வார்.

11. திருப்பாணாழ்வார்.

12. திருமங்கை ஆழ்வார்.

முதல் மூன்று ஆழ்வார்கள் யார்? || 12 ஆழ்வார்களின் பெயர்கள் மற்றும் குறிப்புகள்

முதலாழ்வார்கள் யார் குறிப்பு?

12-ஆழ்வார்களில் முதன்மையான ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பன்னிரு ஆழ்வார்கள் குறிப்பு || ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

1. பொய்கை ஆழ்வார் – 12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு:

• பன்னிரு ஆழ்வார்களில் பொய்கை ஆழ்வார் தான் முதன்மை ஆழ்வார் என்ற சிறப்பினை பெறுகிறார். மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான “பாஞ்சஜன்யம்” எனப்படும் புனித திருசங்கியின் அம்சமாக திகழ்கிறார்.

• இவர், காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்ற பகுதியில் விஷ்ணு காஞ்சி என்று அழைக்கப்படும் திருத்தலத்தில் ‘யாத்தகாரி’ என்ற பெருமாள் கோவிலில் உள்ள பொய்கையில், ஒரு பொற் தாமரையில் பிறந்ததால் இவருக்கு “பொய்கையாழ்வார்” என்று பெயர் வந்தது.

• இவர், கி.பி.7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஐப்பசி மாதம் 1-ஆம் நாள் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தார். பன்னிரு ஆழ்வார்கள் முதன்மையான ஆழ்வராக இவர் கருதப்படுகிறார். இவர் பாடிய நூறு பாடல்கள் என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை முதன் முதலில் பாடியவர் என்ற பெருமைக்குரியவர்.

• மங்களாசாசனம் செய்த திருகோவில்கள்: திருவரங்கம், திருவெக்கா, திருப்பரமபதம், திருப்பதி, திருக்கோவிலூர், திருப்பாற்கடல் என மொத்தம் 6-கோயில்களை பற்றி மங்களாசனம் செய்துள்ளார். மங்களாசனம் என்பது இறைவனைப் போற்றி பாடும் பாடல் ஆகும்.

2. பூதத்தாழ்வார்:

• முதன்மை ஆழ்வார்கள் மூவர்களில் இரண்டாவது ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆவார். இவர் திருமாலின் கையில் உள்ள “கௌமோதகி” என்ற கதையின் அம்சமாக திகழ்கிறார். திருமால் மேல் அளவு கடந்த பக்தி உடையவராக திகழ்ந்தார்.

• இவர் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் சென்னையில் மாமல்லபுரத்தில் உள்ள “தலசயனப் பெருமாள்” கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே ஒரு “நீலோற்பல மலரில்” தோன்றியவர். இவரும் கிபி.7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொய்கையாழ்வார் காலத்தில் வாழ்ந்தவர். இவர், வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர். இந்த பாடலின் தொகுப்புகள் நூறு வெண்பாக்களை கொண்டது.

• மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள் : திருப்பதி, திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், திருக்கச்சி, திருக்கோஷ்டியூர், திருப்பாடகம், திருக்கோவிலூர், திருக்குடதை, திருத்தஞ்சை மாமணிக் கோயில், திருநீர்மலை, திருக்கடல்மல்லை திருத்தங்கல் 12 கோவில்களைப் பற்றி மங்களாசனம் செய்துள்ளார்.

3. பேயாழ்வார் || பேயாழ்வார் யார்? – 12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு

• இவர், 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் போன்ற ஆழ்வார்கள் உடன் சமகாலத்தவர். முதன்மை ஆழ்வார்களில் மூன்றாம் ஆழ்வார் என போற்றப்படுகிறார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவில்லையே மெய்மறந்து கனிய பாடியவர்கள். இவர் ஐப்பசி மாதம் “சதய நட்சத்திரத்தில்” பிறந்தவர்‌.

• இவர், மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவர் பெருமாள் கோவிலில் குளத்தில் ஒரு “செவ்வல்லி மலரில்” தோன்றினார் என புராணங்கள் கூறுகின்றது. இவர் திருமாலின் “நந்தகம்” எனப்படும் வாளின் அம்சமாக உதயமானவர். இறைவனை வழிபடுவதில் தன்னை மறந்து ‘பித்தர் போலும், பெயர் போலும்” இருந்த காரணத்தினால் இவர் பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டார்.

• மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள் : திருப்பதி, திருவேளுக்கை, திருப்பாற்கடல், திருவரங்கம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில், உப்பிலியப்பன் கோவில், திருபரமபதம், திருக்கோஷ்டியூர், கள்ளழகர் கோவில், காஞ்சி வரதராஜ பெருமாள், திருப்பாடகம், திருவல்லிக்கேணி, சோளிங்கர், ஆதிகேசவப் பெருமாள் போன்ற கோவில்களில் மங்களாசனம் செய்துள்ளார்.

4. திருமழிசை ஆழ்வார்:

• 12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு : இவர் திருமழிசை என்னும் இடத்தில் பார்க்கவ முனிவர், கனகாங்கி ஆகியோருக்கு மானாக பிறந்தார். தை மாதம் மக நட்சத்திரத்தில் பிறந்தார். திருமாலின் “சுதர்சன சக்கரத்தின்” அம்சமாக திகழ்கிறார்.

• வயது முதிர்ந்த பெண்ணிற்கு இளமையை திருப்பி குழந்தை வரம் அளித்த பெருமையை கொண்டவர் இந்த திருமழிசை ஆழ்வார். அந்தப் பெண்ணிற்கு பிறந்த குழந்தை கணிக்கண் என்பவரை தனது சீடராக கொண்டு பல இடங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்துள்ளார்.

• திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவாதி என்னும் 100-பாடல்களையும், திருசந்தவிருத்தம் என்னும் 12-விருத்தங்களையும் கொண்ட பாடல்களை பாடியுள்ளார்.

• அவருடைய காலத்தில் வாழ்ந்த மற்ற ஆழ்வாருடன் சேர்ந்து 11-கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார். இவர், பக்திசாரர், திருமழிசையார், திருமழிசைப்பிரான் என அழைக்கப்படுகிறார்.

5. நம்மாழ்வார் – 12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு:

• நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ‘திருக்குருவூர்’ எனப்படும் ஆழ்வார் திருநகரில் காரியார், உடைய நங்கை என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திருமாலின் படைத்தலைவரான “விஷ்வக்சேனர்” என்பவரின் அவதாரமாக போற்றப்படுகிறார்.

• இவர், வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தோன்றினார். இவருடைய காலம் கிபி.9-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் பிறந்து சிறிது காலம் கண்களை திறக்காமல் இருந்தார். ஆனாலும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால் இவர், “சடகோபன்” என்று அழைக்கப்பட்டார்.

• நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று புகழப்பட்டார். கம்பர் இயற்றிய “சடகோபர் அந்தாதி” எனும் நூலின் தலைவனும் இவரே ஆவார்.

• நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரிய திருவாய்மொழி போன்ற பல பாடல்களை இயற்றியுள்ளார். இதில் “திருவாய்மொழி’ என்னும் பாடல் வைணவ மதத்தின் பொக்கிஷம் என அழைக்கப்படுகிறது. திருவாய் மொழியில் “1102-பாசுரங்கள்” உள்ளடங்கியுள்ளது.

6. மதுரகவி ஆழ்வார் – 12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு:

• 12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு : வைணவ நெறியை பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இவரும் ஒருவர். பாண்டிய நாட்டில் உள்ள திருக்கோளூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் இவர் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.பி 798-க்கு சற்றுமுன் பிறந்தவர். நம்மாழ்வார் காலத்திலும் அவருக்கு பிறகும் வாழ்ந்தார்.

• இவர் வடமொழி திருமால் சேத்திரங்களை தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது தென்திசையில் ஏற்பட்ட ஒரு ஒளியை கண்டு அந்த திசையை நோக்கி பயணம் செல்லும் போது நம்மால் வரை தரிசித்தார்.

• அப்போது நம்மாழ்வரிடம் சில கேள்விகளை கேட்ட மதுர கவி ஆழ்வாருக்கு நீண்ட காலம் பேசாமல் இருந்த நம்மாழ்வார் அவரின் கேள்விகளுக்கு பதில் கூறினார். இதை கேட்டு மெய் மறந்து நம்மாழ்வரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.

• இவர், பெருமானை தன் பாசுரங்களால் பாட ஆர்வம் இல்லாமல் தன் ஆசிரியரான நம்மாழ்வாரையை சிறந்த தெய்வமாக கருதி அவரை போற்றி 11-பாசுரங்களை பாடினார். இவர் இளங்கவியார், ஆழ்வார்க்கு அடியான் என்ற சிறப்பு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.

7. குலசேகர ஆழ்வார்:

• இவர், கி.பி 8-ஆம் நூற்றாண்டில் கரூர் திருவஞ்சிக்கலம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது நட்சத்திரம் ஜென்ம புனர்பூசம் ஆகும். இவர், ஒரு சிறந்த ராம பக்தர் ஆவர். திருமாலின் மார்பில் இருக்கும் “கௌஸ்துப மணி” அம்சம் பெற்றவர்.

• இவர் நேரடியாக இறைவன் காட்சி பெற்றதால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் எனக்கு வேண்டாம் என்று துறவி வாழ்க்கையை மேற்கொண்டார். பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு கொண்டதால் இவருக்கு “குலசேகர பெருமாள்” என்ற பெயர் வழங்கப்பட்டது.

• குலசேகர ஆழ்வார் பாடல்கள் ‘பெருமாள் திருமொழி’ என்று அழைக்கப்படுகிறது. 105-பாசுரங்கள் திருவரங்கப் பெருமானை பற்றி பாடப்பட்டுள்ளது. திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.

• இவர், போர்க்கலைகளில் வில் வித்தைகளில் சிறந்து விளங்கினார். வடமொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றார். கொல்லி காவலன், கூடல் நாயகன், வில்லவர் கோன் போன்றவை இவரின் சிறப்பு பெயர்கள் ஆகும்.

• குலசேகர ஆழ்வாரால் தான் “பவித்ரோற்சவ மண்டபம்”கட்டப்பட்டது. இவர், தனியாக ஒரு கோவிலை அமைத்தும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7-கோவில்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார்.

8. பெரியாழ்வார் || விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?

• இவர் திருவில்லிபுத்தூரில் ஆனி மாதம் ‘சுவாதி’ நட்சத்திரத்தில் 6-நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். திருமாலின் வாகனமான “கருடாழ்வாரின்” அம்சமாக அவதரித்தார்.

• இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் என்று கூறினர். இதனால் இவருக்கு “பெரியாழ்வார்” என பெயர் வந்தது. “விஷ்ணு சித்தர்” என்பது இவரின் இயற்பெயர் ஆகும்.

• திருவல்லிபுத்தூரில் உள்ள வடபத்திரசாயி பெருமாளின் மீது கொண்ட அளவற்ற பக்தின் காரணமாக அவருக்கு தினமும் மலர்களை பறித்து பூ மாலை சாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

• ஆண்டாள் நாச்சியாரின் வளர்ப்பு தந்தை இவரே ஆவார். ஆண்டாளை அரக்கனுக்கு மணம் முடித்து கொடுத்ததினால் பெருமாளின் மாமனார் என்று சிறப்பையும் பெற்றார்.

• திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி போன்றவை இவரின் இயற்றிய பாடல்களாகும். இவர் தனியாக 2-கோவில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17-கோவில்களையும் சேர்த்து மொத்தம் 19-திவ்ய தேசக் கோவில்களுக்கு மங்களாசனம் செய்துள்ளார்.

9. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்:

• ஆண்டாள் நாச்சியார் 7-நூற்றாண்டில் மதுரைக்கு அருகில் உள்ள ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்னும் ஊரில் வாழ்ந்த விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) என்பவரால் ஒரு துளசிச் செடியின் கீழ் இருந்து ஆண்டாள் தோன்றினார். வைணவம் போற்றும் 12-ஆழ்வார்களில் இவர் மட்டுமே “பெண் ஆழ்வார்” ஆவார்.

• இவர் திருமாலின் மனைவியான திருமகளின் அம்சமாக தோன்றினார். சிறு வயது முதலே திருமாலின் மீது தீவிரமான பக்தி கொண்டார். அதன் பிறகு அந்த பக்தியே திருமாலின் மீது காதலாக மாறியது. இதனால், திருமணம் செய்தால் திருமலை மட்டுமே திருமணம் செய்வேன் என முடிவு செய்தார்.

• சூடிக்கொடுத்த சுடர் கொடியாள், கோதை நாச்சியார், கோதை பிராட்டி என ஆண்டாள் அம்மையார் அழைக்கப்படுகிறார். அதுமட்டுமின்றி, ஆண்டாள் “பூமி பிராட்டியின்” அவதாரமாய் போற்றப்படுகிறார்.

• நாச்சியார் திருமொழி, திருப்பாவை போன்றவை இவர் இயற்றிய பாடல்களாகும். இவர், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10-கோவில்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் ஆண்டாளின் வரலாறு திருமாலின் மீது கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாற்றைக் கூறுகிறது.

10. தொண்டரடிப்பொடியாழ்வார்:

• தொண்டரடிப்பொடியாழ்வார் சோழநாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் ‘கேட்டை’ நட்சத்திரத்தில் பிறந்தார். திருமாலின் வை ஜெயந்தி மணமாலையில் அம்சமாக அவதரித்தார். ஆழ்வார் வரிசையில் பத்தாவது ஆக வரும் இவருக்கு “விப்ர நாராயணர்” என்ற இயற்பெயர் வழங்கப்படுகிறது.

• திருமாலின் தொண்டர்களின் பாதம்பட்ட மண் துகளை தன் தலை மேல் வைத்து கொண்டதால் “தொண்டரடிப்பொடியாழ்வார்” என பெயர் பெற்றார்.

• திருவரங்கத்தில் வாழ்ந்திருந்து இறைவனாகிய ‘அரங்கநாதனுக்கு’ பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் வேலை தினசரி வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.

• திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருமாலை ஆகிய பாடல்களை இயற்றியுள்ளார். இவர் மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 2-கோவில்களுக்கு மங்களாசனம் செய்துள்ளார்.

11. திருப்பாணாழ்வார்:

• திருப்பாணாழ்வார் உறையூரில் கி.பி 8-நூற்றாண்டில் கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர். திருமாலின் மார்பில் உள்ள வருவான ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாக பாணர் குலத்தில் அவதரித்தவர்.

“இறைவன் முன் எல்லோரும் ஒன்றே” என்ற ‘இராமானுஜரின்’ கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வார் வரலாறை மிகுந்த ஊக்கமாகவும், பலமாகவும், சிறந்த சான்றாகவும் இருந்தது என கூறலாம்.

• பாணர், முனிவாகனர், யோகிவாகனர் போன்றவை இவரின் சிறப்பு பெயர்களாகும். இவர் மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 3-கோவில்களுக்கு மங்களாசனம் செய்துள்ளார்.

• மனிதர்கள் எப்படி பக்தி மார்க்கத்தில் வாழ வேண்டும் என்ற முறைகளையும், பெருமானிடம் எவ்வாறு சரணாகதி அடைவதன் அவசியத்தையும் அழகாக தனது பாசுரங்களில் பாடியுள்ளார்.

12. திருமங்கை ஆழ்வார்:

• பன்னிரு ஆழ்வார்கள் இளையவர் மற்றும் கடைசியானவர் தான் இந்த திருமங்கை ஆழ்வார். சோழ நாட்டில் உள்ள “திருக்குரையலூரில்” 8-ஆம் நூற்றாண்டில், கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

• ஆதிகாலத்தில் சோழ மன்னருக்கு இவர் படைத்தலைவராக இருந்தார். இவருடைய இயற்பெயர் “கலியன்” என்பது ஆகும். பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் “நீலன்” என்பதாகும். பெருமானின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான “சார்ங்கம்” என்கிற வில்லின் அம்சமாக கருதப்படுகிறார்.K

• இவருடைய வீரத்தின் திறமையை கண்டு வியந்த அரசன் இவருக்கு சோழ தேசத்தின் “திருமங்கை” என்ற பட்டத்தை வழங்கி குறுநில மன்னன் ஆக்கினார். அன்றிலிருந்து இவர் “திருமங்கை மன்னன்” என்னும் பெயரால் அழைக்கப்பட்டார்.

• பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திரு நெருந்தாண்டகம், திருவெழுக்க கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று 6-பிரபந்தங்களில், 1137 பாசுரங்களை இயற்றி உள்ளார்.

இவ்வாறு,“திருமாலின் சிறப்புகளை உலகிற்கு உணர்த்திய ஆழ்வார்களை சிறப்பித்து போற்றுவோம்…!!!”

Read Also:- பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *