Abdul Kalam History in Tamil

Dr. A.P. J. Abdul Kalam History in Tamil – டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு || Dr. A.P. J. Abdul Kalam History in Tamil

Abdul Kalam History in Tamil

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு சுருக்கம் :

பெயர் – ஏபி.ஜே.அப்துல் கலாம்.

பெற்றோர்கள் – ஜெயினுலாபுதீன்,ஆஷியம்மாள்.

பிறந்த வருடம் – 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி.

பிறந்த இடம் – ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்).

இறப்பு : 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி.

பெற்ற விருதுகள் – பத்மபூஷன்(1981), பத்ம விபூசன் (1990), பாரத ரத்னா 1997, ஹுவர் பதக்கம் (2009), என்‌.எஸ்.எஸ்.வான் புரான் பதக்கம்.

எழுதிய நூல்கள் – அக்கினி சிறகுகள், இந்தியா 2020, பற்றவைக்கப்பட்ட மனங்கள், பொருத்தமற்ற ஆவி.

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு || Biography of Dr.A.P.J Abdul Kalam

அப்துல் கலாமின் ஆரம்ப கால வாழ்க்கை :

 • Abdul Kalam History in Tamil:- அப்துல் கலாம் அவர்கள் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஜெயின் அலாவுதீன் மரைக்காயர்- ஆசியம்மாள் என்ற தம்பதியினருக்கு ஏழாவது மகனாய் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
 • கலாமின் குடும்பம் மிகவும் பெரிய குடும்பம் கலாமின் தந்தை கடலுக்குக் சென்று உழைப்பவர். அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் தனது குடும்பத்தை பார்த்து வந்தார்.
 • அப்துல் கலாம் தந்தை பிறப்பால் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும், அவர் பழகி வந்தவர்கள் இந்த மதத்தையும், கிறிஸ்தவ மதத்தையும் சார்ந்தவர்கள்.
 • ஏனெனில், கடவுள் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை அப்போது கலாமின் மனதில் விதைத்தவர் அவரது தந்தை ஆவார்.
 • சாதி,மத வேறுபாடு இன்றி அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் கலாமின் மனதில் ஆழமாக பதித்தார்.

கலாமின் இளமை காலமும் பள்ளி பருவமும் :

 • Abdul Kalam History in Tamil:- கலாம் அவர்கள் தனது ஆறு வயதில் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்தார்.
 • தனது தந்தை கஷ்டப்பட்டு தங்களை வளர்ப்பதை அறிந்த கலாம் தனது படிப்புத் திறனை வளர்ப்பதற்காக படிக்கும் ஆர்வத்தையும், புத்தி கூர்மையும் சிறுவயதிலேயே அதிகரித்துக் கொண்டார்
 • தனது தொடக்கப்பள்ளி கல்வி முடித்த கலாம் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் உள்ள “செயின்ட் ஜோசப்” கல்லூரியில் சேர்ந்து 1954-ஆம் ஆண்டு இயற்பியல் பட்டம் பெற்றார்.
 • கலாமிற்கு இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கிடையாது. அதனால் 1952-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள “எம்.ஐ.டி”விண்வெளி பொறியியல் படித்தார். பின்பு அதே கல்லூரியில் அவர் முதுகலை பட்டம் பெற்றார்.

விண்வெளி விஞ்ஞானியாக ஏபிஜே அப்துல் கலாம் – அப்துல் கலாம் சாதனைகள் :

 1. அப்துல் கலாம் அவர்கள், 1960-ஆம் ஆண்டு முதன்முதலில் வானூர்தி அபிவிருத்தி தயாரித்தல் துறையில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்.
 2. இதன் முதல் கட்டமாக இந்திய ணராணுவத்திற்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை தயாரித்தார். அதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) தனது ஆராய்ச்சி பணிகளை துணைக் கோள் ஏவுகணை குழுவில்(SLV)செயற்கைக்கோள் தயாரிப்பதில் முக்கிய பங்காற்றினார்.
 3. 1980-ஆம் ஆண்டு SLV-||| என்ற ராக்கெட்டின் உதவியால் ரோகினி-| என்ற துணை கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவினார்.
 4. இந்த நிகழ்வு அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத காரணமாக இருந்தது. அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு பெரிய சாதனையாக இருந்தது.
 5. இந்த சாதனையை பாராட்டி மத்திய அரசு 1981-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பத்மபூஷன்” விருது வழங்கி அப்துல் கலாம் அவர்களை கௌரவப்படுத்தியது.
 6. 1963-ஆம் ஆண்டு முதல் 1983-ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிகளை சிறப்பாக செய்து வந்த அப்துல் கலாம் அவர்கள், 1999-ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பணியை தொடங்கினார்.
 7. அன்று முதல் “ஏவுகணையின் தந்தை” என ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் அழைக்கப்பட்டார்.
 8. அப்துல் கலாம் அவர்கள் இதுவரை 5-ஏவுகணை திட்டங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியாவை “அணு ஆயுத வல்லரசாக” மாற்றிய பெருமை ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை சாரும்.
 9. அதன் பிறகு 1990-ஆம் ஆண்டு “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது.
 10. 1997-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு, கவுரவப்படுத்தப்பட்டது.

குடியரசு தலைவராக ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் :

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – Abdul Kalam History in Tamil:- இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரத ஜனதா கட்சியுடன் ஒட்டுமொத்த ஆதரவுடன் 2002-ஆம் ஆண்டு லட்சுமி சாகலை தோற்கடித்து இந்திய குடியரசுத் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்‌.

ஜூலை 25-ஆம் தேதி இந்தியாவின் 11-ஆவது குடியரசு பொறுப்பேற்றார். அதுமட்டுமின்றி, “பாரத ரத்னா” விருது வாங்கிய மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையும் அப்துல் கலாமையே சேரும்.

மக்களின் ஜனாதிபதியாக அப்துல் கலாம் :

Abdul Kalam History in Tamil:- 2002-முதல் 2007-வரை 5-ஆண்டு காலம் குடியரசு தலைவராக பணியாற்றிய அப்துல் கலாம் அவர்கள், “மக்களின் ஜனாதிபதி” என்று அழைக்கப்பட்டார். மீண்டும் 2007-ஆம் ஆண்டு குடியரசு தேர்தலில் போட்டியிட நினைத்த கலாம் பல்வேறு காரணங்களால் போட்டியிட வேணாம் என்று முடிவு செய்தார்.

அப்துல் கலாம் பெற்ற விருதுகள் – கலாம் பற்றிய 10-வரிகள்

1. 1981 – ஆம் ஆண்டு “பத்ம பூஷன்” விருது பெற்றார்.

2. 1990 – ஆம் ஆண்டு “பத்மா விபூசன்” விருது பெற்றார்.

3. 1997 – ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான “பாரத ரத்னா” விருது பெற்றார்.

4. 1997 – ஆம் ஆண்டு தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது பெற்றார்.

5. 1998 – ஆம் ஆண்டு வீர் சவர்கார் விருது பெற்றார்.

6. 2000 – ஆவது ஆண்டு ராமானுஜன் விருது பெற்றார்.

7. 2007 – ஆம் ஆண்டு அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

8. 2007 -ஆம் ஆண்டு கிங் சார்லஸ்-2 பட்டம் பெற்றார்.

9. 2008பொறியியல் டாக்டர் பட்டம் பெற்றார்.

10. 2009 – ஆம் ஆண்டு சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது பெற்றார்.

11. 2009 – ஆம் ஆண்டு ஹூவர் மெடல் பெற்றார்.

12. 2010 – ஆம் ஆண்டு பொறியியல் டாக்டர் பட்டம் பெற்றார்.

13. 2011 – ஆம் ஆண்டு IEEE கௌரவ உறுப்பினர் ஆனார்.

14. 2012 – ஆம் ஆண்டு சட்டங்களின் டாக்டர் பட்டம் பெற்றார்.

15. 2012 – ஆம் ஆண்டு சவரா சம்ஸ்கிருதி புரஸ்கார் விருது பெற்றார்.

16. 2014 – ஆம் ஆண்டு அறிவியலில் டாக்டர் விருது பெற்றார்.

17. 2012-ஆம் ஆண்டு சவரா சம்ஸ்கிருதி புரஸ்கார் விருது பெற்றார்.

18. 2015 – ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி காலமானார்.

இது மட்டுமின்றி, அப்துல் கலாம் அவர்கள் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

டாக்டர்‌.ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள் :

• அக்னி சிறகுகள்.

• இந்தியா 2020.

• எழுச்சி தீபங்கள்.

• குழந்தை.

இது போன்று வாழ்க்கையில் மக்களுக்கு தேவைப்படும் நெறிமுறைகளை போன் ற நூல்களை அப்துல் கலாம் அவர்கள் எழுதியுள்ளார்.

இளைஞர்களுக்கான கலாமின் பொன்மொழிகள் :

• கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். பிறகு, அவற்றை சிந்தனைகளாக மாற்றுங்கள். பின்னர், அந்த சிந்தனைகளை செயலாக்குங்கள்.

• மிகப்பெரிய சாதனைகளை சாதிப்பதில் ஈடுபாடு காட்டுங்கள். உடனே கிடைக்கும் சந்தோஷத்திற்காக அலையாதீர்கள்.

• பெரிதாக சிந்தியுங்கள் நாம் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தேசத்துக்கு சொந்தக்காரர்கள்.

• அழகை பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும். கடமை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

• ஒருங்கிணைந்து உழைப்போம் ஒருங்கிணைந்து ஜெயிப்போம்.

• நல்ல புத்தகங்கள் நல்ல ஆசிரியர்கள் நல்ல மனிதர்கள் துணையோடு எவ்வளவு அறிவை பெற முடியுமா அவ்வளவு அறிவை சேகரியுங்கள்.

• சொந்த வளர்ச்சிக்கும், தேசத்தின் வளர்ச்சிக்கும் உதவக்கூடிய லட்சியத்துடன் கனவு காணுங்கள்.

• பலம் தான் பலத்தை மதிக்கும்.

• வரலாறு ஒரு நாள் மாறும் அது உன்னால் மட்டும் முடியும்.

• கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே !!!அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்.

• நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை.

• நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் இருக்கிறது.

• கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே உன்னுடைய லட்சிய கனவு.

• நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

இதுபோன்று, இளைஞர்களுக்கு பயனுள்ள பல பொன்மொழிகளை அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளார்.

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவு :

இப்படி, இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும், இந்திய நாடு வல்லரசாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பல கனவுகளை கண்டு, பல இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்த கலாம் அவர்கள்,

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு:- 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி ஷில்லாங்கில் உள்ள ” இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் “
மாணவர்கள் முன்னிலையில் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மயங்கி விழுந்து இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அப்துல் கலாம் ஐயா அவர்கள் இறக்கும் பொழுது அவரின் வயது-83 என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் ஐயா அவர்களின் உடல் ராமேஸ்வரத்தில் இந்திய முழு ராணுவ மரியாதை உடன் 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி தமிழக மக்களின் இறுதிக் கண்ணீர் அஞ்சலி உடன் “பேய் கரும்பு” என்னும் இடத்தில் உடல் தியானம் செய்யப்பட்டது.

Abdul Kalam History in Tamil:- அப்துல் கலாம் ஐயா அவர்கள் கிட்டத்தட்ட காமராஜர் போன்று ஆடம்பர வாழ்க்கையே விரும்பாமல் வாழ்ந்த மாமனிதர். இறுதிவரை திருமணமே செய்யாமல் பிரம்மச்சாரியாகவே இந்திய முன்னேற்றத்திற்காக வாழ்ந்து மறைந்த ஒரு மகத்தான மாமனிதர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *