Ambedkar history in tamil

Ambedkar history in tamil | டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

Ambedkar history in tamil – டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

Ambedkar history in tamil

பெயர் – அண்ணல் அம்பேத்கர்

இயற்பெயர் – பீமாராவ் ராம்ஜி.

பிறப்பு – 1891 – வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி.

பெற்றோர் – ராம்ஜி மனலோஜி சக்பால், பீமா பாய்.

பிறந்த ஊர் – மாவு (மத்திய பிரதேசம் மாநிலம்).

மனைவி பெயர் – ராமாபாய்.

விருது – இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது.

இறப்பு – 1956 – ஆம் வருடம் டிசம்பர்-6.

Ambedkar history in tamil:- இந்திய விடுதலைக்கு பிறகு நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என தனி கழகம் ஒன்றை ஏற்படுத்திய பெருமை அண்ணல் அம்பேத்கரை மட்டுமே சேரும்.அவரைப் பற்றி இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஆரம்பகால வாழ்க்கை :

Ambedkar history in tamil – அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவு என்னும் ஊரில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று பிறந்தார். அவருடையதந்தை பெயர் ராம்ஜி மலோஜி சக்பால் தாயார் பெயர் பீமா பாய் ஆவர். இவருடைய இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி ஆகும். இவர் ராம்ஜி மனலோஜி சக்பால், பீமா பாய் அவர்களுக்கு 14வது குழந்தையாக பிறந்தார்.இவர் ஒரு மராத்திய குடும்பத்தை சார்ந்தவர்.

அம்பேத்கரின் இளமை காலம் மற்றும் கல்வி வாழ்க்கை :

அம்பேத்கர் சிறுவயதிலேயே பள்ளியில் படிக்கும் போது பல இன்னல்களை சந்தித்தார். ஏனென்றால் இவர் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர் என்பதால் இவரை அனைவரும் தனி மனிதராகவே பார்த்தனர். பள்ளியில் இவர் மற்ற மாணவர்களுடன் பேசவோ,பழகவோ,விளையாடவோ கூடாது. அதுமட்டுமில்லாமல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் கூட அவர்களுக்கென்று தனியாக வைத்திருக்கும் பானையில் தான் குடிக்க வேண்டும்.

இவ்வாறு, பல துன்பங்களையும்,துயரங்களையும், அவமானங்களையும் கடந்துதான் தனது ஆரம்ப கல்வி காலத்தை கடத்தினார். பின்னர் தந்தையின் பணி மாற்றம் காரணமாக இவரது குடும்பம் மும்பைக்கு குடி பெயர நேரிட்டது. அதனால் அம்பேத்கர் அவர்கள் மும்பையில் தான் அவர் உயர்கல்வினை தொடர்ந்தார்.

அம்பேத்கர் என பெயர் வரக் காரணம் :

பீமாராவ் ராம்ஜி அவர்கள் பள்ளியில் பல இன்னல்கள், அவமானங்களையும் சந்தித்தபோது மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவரின் மீது மிகுந்த அன்பு காட்டினார். அந்த அன்பின் ஞாபகார்த்தமாக தனது குருவுக்கு அளிக்கும் மரியாதையாக பீமாராவ் ராம்ஜி என்ற பெயருக்கு பின்னால் தனது குருவின் பெயரை சேர்த்துக் கொண்டார். அன்று முதல் அவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று அழைக்கப்பட்டார் பின்னர் நாளடைவில் எல்லோரும் அவரின் முழு பெயரை கூறாமல் அம்பேத்கர் என அழைக்க ஆரம்பித்தனர்.

பரோடா மன்னரும்,இளங்கலை பட்டமும் :

வருடா மன்னருடன் இணைந்து மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பைத் தொடர்ந்து 1912-இல் அறிவியல், அரசியல், பொருளாதாரம், வரலாறு , தத்துவம், சட்டம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார்.

அதுமட்டுமின்றி ஆசிரியராகவும், இதழாளராகவும் எழுத்தாளராகவும் சமூக நீதி புரட்சியாளராகவும் திகழ்ந்து விளங்கியவர் டாக்டர் அம்பேத்கர்.

படைத்தலைவராக பணியாற்றிய அம்பேத்கர் :

இளங்கலை படைப்பை முடித்த பிறகு பரோடா மன்னர் அம்பேத்கரை அழைத்து தனது அரண்மனையில் படைத்தலைவராக பணியாற்ற கூறினார். அங்கு வேலை பார்க்கும் சக படை வீரர்கள் அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர் என்று அவமானப்படுத்தியதால் அவர் தனது வேலையினை கைவிட்டு மீண்டும் மும்பைக்கு வந்தார்.

அம்பேத்கரின் கல்வித் திறமையை கண்டு வியந்து போன பரோடா மன்னர் மென்மேலும் வளர வைக்க வேண்டும் என்று எண்ணி கொலம்பியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் அவர்களை முதுகலை பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார்.

முதுகலை படிப்பும் டாக்டர் பட்டமும் :

1913-ஆம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி உயர்பட்ட படிப்பிற்காக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய முடிவு செய்தார்.

உயர்கல்வி பயில அமெரிக்க சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அண்ணல் அம்பேத்கர் பெற்றார்.1915-ஆம் ஆண்டு பண்டைய இந்தியாவின் வாணியும் என்ற ஆய்வுக்கு முதுகலை பட்டம் பெற்றார்.

1921-ஆம் ஆண்டு அறிவியல் பட்டமும் 1923-ஆம் ஆண்டு டி.எஸ்.சி பட்டமும் பெற்றார். ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருந்து உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் அண்ணல் அம்பேத்கர் பெற்றார்.கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவபடுத்தியது.

சமூகப் பணியில் அம்பேத்கரின் பங்கு :

தனது முதுகலை படிப்பை முடித்த பிறகு நாடு திரும்பிய அம்பேத்கர் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய அமைப்பையும், பொருளாதாரத்தை,மேம்படுத்துவதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டார்.

இந்தப் போராட்டத்தில் முக்கிய கருத்தாக தீண்டாமை ஜாதி வன்கொடுமை போன்றவற்றை ஒழிப்பதற்காக விழிப்புணர்வை தனது பேச்சு திறமையால் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

ஜூலை,1924-இல் ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பகிஸ் கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவியவர்.அதன் மூலம் கொடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக தொடர்ந்து போராடினார்.

இரண்டாவது வட்ட வட்ட மேசை மாநாடு :

Ambedkar history in tamil – 1930-ஆம் ஆண்டு இரண்டாம் உலக வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள லண்டன் சென்ற அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக “இரட்டை வாக்குரிமை”என்ற சட்டத்தினை கேட்டு பெற்றார்.

இதன் காரணமாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளர் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்களிக்கும் இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

1931-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி காந்திஜிக்கு அம்பேத்கும் இடையே போன ஒப்பந்தம் ஏற்பட்டு தாழ்த்தப்பட்டோர் கணவாய் பெருமை என்ற பொதுவா கருத்தில் தனித் தொகுதி என முடிவு செய்யப்பட்டது.பிறகு,காலப்போக்கில் காந்தியடிகளின் போராட்டத்தினால் இரட்டை வாக்குரிமை சட்டம் கைவிடப்பட்டு தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி என்ற ஒப்பந்தத்தையும் கொண்டு வந்தார்.

இவர் கொண்டு வந்த பல சட்ட திருத்தங்கள் சமூக ஆவணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் மக்களால் போற்றப்பட்டன ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வருவதில் நேருடன் ஏற்பட்ட சமூகம் முரண்பாடு காரணமாக 1951-ஆம் ஆண்டு தனது அரசியல் பதவியை விட்டு விலகினார்.

Read Also:- காமராஜர் வாழ்க்கை வரலாறு

அரசியல் சாசனத்தில் டாக்டர்.அம்பேத்கர் :

“இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் டாக்டர் அம்பேத்கர்”. 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க திட்டமிட்டது. அதற்கு நன்கு சட்டம் அறிந்த மேதையை இந்தியா தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த நேரு அம்பேத்கரை நியமித்தார். 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டக் குழு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பதவி பெற்ற பிறகு இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் வேளையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதற்கான வேலைகளையும் அம்பேத்கர் அவர்கள் செய்ய ஆரம்பித்தார்.

இவர் அந்த சட்ட அமைப்பின் மூலம் பல்வேறு சட்டங்களை உருவாக்கி தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகவும் அவர்கள் முன்னேறுவதற்காகவும் உத்தரவாதம் வழங்கினார்.

அதே நேரத்தில் அவர் சொன்ன வார்த்தைகள் இன்றளவு மக்கள் மனதில் மறக்க முடியாதவை “உரிமைகள் என்பதை சட்டத்தினால் காப்பாற்றப்படுவதில்லை.
சமூகத்தின் சமூக உணர்வு மற்றும் நெறி உணர்வு போன்றவற்றால் தான் பாதுகாக்கப்படுகின்றன” என்பது. நவம்பர் 26-ஆம் நாள் இந்திய மக்களின் பெயரால் இந்த அரசியல் சட்டம் மக்களால் ஏற்கப்பட்டது.

பௌத்துவ மதம் மீது ஈர்ப்பு :

தன்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வரும் இன்னல்கள் அவமானங்களையும், பொறுத்துக் கொள்ள முடியாத அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தில் இருந்து சிறிது சிறிதாக புத்த மதத்தின் மீது ஈடுபாடு காண்பித்து புத்த மதத்திற்கு மாறவும் முடிவு எடுத்தார். ஆனால், அவர் புத்த மதமாறும் முன்னரே அவரின் உயிர் அவரை விட்டு பிரிந்தது.

டாக்டர் அம்பேத்கரின் இறப்பு :

Ambedkar history in tamil – தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் அயராது போராடி பாடுபட்ட டாக்டர்.அம்பேத்கர் 1948-இல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்வையே அர்ப்பணித்த டாக்டர். அம்பேத்கர் அவர்கள் தனது 65-ஆவது வயதில் டிசம்பர்-6, 1956-ஆம் வருடம் டில்லியில் உள்ள அவருடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் உயிர் உடலை விட்டு பிரிந்தது.

புத்த மதத்தில் அதை ஈடுபாடு கொண்ட அம்பேத்கர் சமய முறைப்படி அவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் தானம் செய்யப்பட்டது. இவரின் மறைவிற்குப் பின்னால் 1990-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் வழங்கி கௌரவப்படுத்தியது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இந்தியாவின் விடுதலைக்காக அரசியலமைப்பில் பல சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து இன்று இந்திய அரசியலில் ஒரு முக்கியமான முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அம்பேத்கர் புரட்சி வரிகள்

• சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்…!!!
• அறிவைத் தேடி ஓடுங்கள்…!!! நாளை வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடிவரும்.
• கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது…!!!
• ஒரு லட்சியத்தை அடைவதற்கு விடாமுயற்சியுடன் போராடுங்கள் முன்னேறலாம்.
• வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் கடமையை செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டாமல் விட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமை, நேர்மை வெளியாகும் பொழுது கடவுள் நம்மை மதிக்க தொடங்குவார்.
• கோவிலின் முன்பாக ஆடுகளைத் தான் வெட்டுகிறார்கள் சிங்கங்களை அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களை போன்று வீரமாக இருங்கள்.
• நாம் வணங்கும் தெய்வங்கள் மூன்று முதல் தெய்வம் அறிவு இரண்டாவது தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *