Arignar Anna History in Tamil

Arignar Anna History in Tamil – அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு

Arignar Anna History in Tamil – அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு

Arignar Anna History in Tamil

Arignar Anna History in Tamil:- தமிழக மக்களால் “பேரறிஞர்” என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் கா.ந.அண்ணாதுரை அவர்கள், இவர் ஒரு இந்திய அரசியல்வாதியாக தமிழகத்தின் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தின் முதல் முதலமைச்சராக பதவி ஏற்ற பெருமை அறிஞர் அண்ணாவை சேரும்.

அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு || Arignar Anna History in Tamil

பெயர் – காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை.

பெற்றோர்கள் – நடராஜன் முதலியார், பங்காரு அம்மாள்.

பிறந்த வருடம் – 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி.

பிறந்த இடம் – காஞ்சிபுரம் (தமிழ்நாடு).

மனைவி பெயர் – இராணி அண்ணாதுரை.

பணி – பள்ளி ஆசிரியர், பத்திரிக்கையாளர், அரசியல்வாதி.

இறப்பு – 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி.(வயது-59).

அறிஞர் அண்ணா பிறப்பு || அறிஞர் அண்ணா பிறந்த தினம்:

Arignar Anna History in Tamil:- பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற நகரமான தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் மற்றும் பங்காரு அம்மாள் என்ற தம்பதிக்கு 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அறிஞர் அண்ணா மகனாய் பிறந்தார்.

அண்ணாவின் சிறுவயதிலேயே தாயார் பங்காரு அம்மாள் மறைந்தார். எனவே அண்ணாவின் தந்தை ராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இதனால் அண்ணாவை ராசா மணி அம்மாள்தான் வளர்த்து வந்தார்.

இளமைப் பருவமும் கல்வி காலமும்:

  • தன்னுடைய இளமை காலத்தில் பச்சையப்பன் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை பயின்றார் அண்ணாதுரை. பிறகு உயர்நிலை பள்ளி பிடிப்பதற்காக பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
  • அண்ணாதுரை அவர்கள் சிறு வயதிலேயே மிகுந்த ஞாபக சக்தி கொண்டவராகவும், பாடங்களை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்.
  • அண்ணா அவர்கள் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் சேர நினைத்தபோது குடும்ப வறுமையின் காரணமாக சேர முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
  • இதனால் நாகராட்சிஅலுவலகத்தில் எழுத்தாளராக பணி புரிந்தார். அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது ஓய்வு நேரங்களில் அறிவு நூல்களை விரும்பி கற்றுக் கொண்டார். அப்பொழுதுதான் எதிர்பாராத விதமாக ஒரு இனிய செய்தி அண்ணாவிற்கு வந்தது “பிற்பட்ட உறுப்பினர்களுக்கு கல்வி சலுகை ஒன்று அதை பயன்படுத்திக் கொண்டு கல்லூரியில் கல்வி பயிலலாம் என்னும் நற்செய்தி வந்தது.
  • இதனால், தன்னுடைய எழுத்தாளர் பணியை விட்டு சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தன்னுடைய கல்வி வாழ்க்கையை ஆர்வத்தோடு ஆரம்பித்தார் அண்ணா.
  • ஆனால், “கல்லூரி பாடங்கள் மட்டும் போதிய அறிவு வளர்ச்சியை அழித்துவிட முடியாது” என்பதை நன்கு தெரிந்து கொண்ட அண்ணா அவர்கள் நூல் நிலையங்களுக்கு சென்று அறிவை நன்கு வழங்கும் பல நூல்களை ஆர்வத்துடன் படித்தார்.

அண்ணாவின் திருமண வாழ்க்கை:

  • அண்ணா அவர்கள் கல்வி படிக்கும்போதே அவருடைய சிற்றனையான ராசாமணி அம்மையார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இந்த நாள் சேர்த்து 1930-ஆம் ஆண்டு ராணி அம்மாள் என்பவரை திருமணம் செய்தார்.
  • திருமணத்திற்கு பிறகு 1934-ஆம் ஆண்டு பி.ஏ பட்டமும், எம்.ஏ முதுகலை பட்டமும் பெற்றார். கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அட்சயப் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.
  • பிறகு ஆசிரியர் வேலையை முழுமையாக விட்டுவிட்டு பத்திரிக்கை மட்டும் அரசியல் துறையில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை முழுமையாக ஆரம்பித்தார்.

அண்ணாவின் அரசியல் வாழ்க்கை பயணம்:

Arignar Anna History in Tamil:- அண்ணாவிற்கு அரசியல் மீதான இருந்த ஆர்வம் நாளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியது. அப்போது சென்னை நகரில் காங்கிரஸ் கட்சியும், நிதி கட்சியும் எதிர் எதிர் துருவங்களாக இருந்தது. அண்ணாவிற்கு காங்கிரஸ் கட்சியை விட நிதி கட்சியின் மீதே அதிகம் ஆர்வம் ஏற்பட்டது.

நிதிகட்சியில் உள்ள பல தலைவர்களுடன் அண்ணாதுரைக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நிதி கட்சியின் பேச்சாளராக பல மேடைகளில் அண்ணா பேசத் தொடங்கினார். நிதிக்கட்சியின் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் பலவற்றை எழுத தொடங்கினார் அண்ணா. அண்ணாவின் பேச்சுத் திறமையால் அவரின் பேச்சை கேட்டு மெய் மறந்த மக்கள் மெதுமெதுவாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிய தொடங்கினர்.

தி.மு.க கட்சி உருவாக்கம்:

Arignar Anna History in Tamil:- பெரியாரின் நிதி கட்சியில் சேர்ந்து பல தொழில்களை செய்த அண்ணா அவர்கள், பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எதிர்க்கட்சியில் இருந்து விலகினார்.

இதனால், 1949-ஆம் ஆண்டு “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை உருவாக்கினார் அண்ணா. இந்த கட்சி குறுகிய காலத்தில் அண்ணாவின் முயற்சியினால் பெரும் செல்வாக்கையும், ஆதரவை மக்களிடையே பெற்றது.

தமிழ் நாட்டின் முதல்வராக அண்ணா:

  1. 1967-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதற்கு 9-மாநிலங்களில் திமுக வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்த மாபெரும் வெற்றியின் மூலம் 1967-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை மாநில முதலமைச்சர் ஆக பதவியேற்றார் அண்ணா.
  2. பதவி ஏற்ற உடனே மதராஸ் மாநிலம் என்று இருந்த சென்னை மாநகரின் பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.
  3. 1968-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி “இரண்டாம் உலக மாநாடு” அண்ணாவின் தலைமையில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 1968-ஆம் ஆண்டு மே மாதம் “யோல்” என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவற்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.
  4. பின்னர், அதே வருடம் அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவ படுத்தியது.

அண்ணாவின் தமிழ் இலக்கிய பங்களிப்பு:

அண்ணாவின் முக்கிய குறிக்கோளாக அரசியல் மட்டும் இல்லாமல் நாடகங்களும், திரைப்படங்களும், திரைக்கதைகளும், இதழ்கள் எழுதுவதிலும் சிறந்த வல்லமை பெற்றிருந்தார்.

அண்ணா அவர்கள் பல நாவல்கள், சிறுகதைகள், அரசியல் சார்ந்த மேடை நாடகங்கள் போன்றவை எழுதியுள்ளார். நாடகங்களை எழுதுவது மட்டும் இல்லாமல் அவரே அந்த சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். 1948-ஆம் ஆண்டு இவர் எழுதிய “இலட்சிய வரலாறு”, மற்றும் “வாழ்க்கை புயல்”, “ரங்கோன் ராதா”, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் “பாதையின் பயணம்” ஆகியவை முக்கிய படைப்புகள் ஆகும்.

திரைப்படத்துறையில் அண்ணா:

1948-ஆம் ஆண்டு அண்ணா அவர்கள், “நல்லதம்பி” என்ற திரைப்படத்தை முதன் முதலில் எழுதி இயற்றினார்.

அதுமட்டுமின்றி, இவரின் மிகப் பிரபலமான நாவலான “வேலைக்காரி (1949) மற்றும் ஓர் இரவு” போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு சிவாஜிகணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு மிகவும் பெருகியது.

அண்ணாவின் இறப்பு || அறிஞர் அண்ணா இறந்த நாள்:

கிட்டத்தட்ட 2-ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக அயராது பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இறுதியாக 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி, தன்னுடைய 59-வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரின் இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட “15-மில்லியன்” மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு என்ன “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” நீங்கா இடம்பெற்றுள்ளது.

இவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு, அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் இந்த இடம் “அண்ணா சதுக்கம்” என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணாவின் நினைவுச் சின்னங்கள்:

• 1972-ஆம் ஆண்டு நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்”(ஆ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்டது.

• சென்னையில் அண்ணாவின் நினைவை கூறும் வகையில் ஒரு குடியிருப்பு பகுதிக்கு “அண்ணா நகர்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

• தமிழ்நாட்டின் முதன்மை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு “அண்ணா பல்கலைக்கழகம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

• சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோட்டுக்கு “அண்ணா சாலை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

• மேலும், இங்கு அண்ணாவின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

• தற்போதைய திமுக தலைமை செயலாக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

• 2010-ஆம் ஆண்டு அண்ணா என்னும் உயர்ந்த மனிதருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை || அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு Pdf

அண்ணாவின் இதழ்கள், மற்றும் நாடகங்கள்:

• 1939 – கோமளத்தின் கோபம்.

• 1942 – களிங்கரணி.

• 1943 – பார்வதி B.A.

• 1943 – சந்ரோதயம்.

• 1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்.

• 1946 – வேலைக்காரி.

• 1946 – குமரிகோட்டம்.

• 1948 – நல்ல தம்பி.

• 1948 – ஓர் இரவு.

• 1953 – சொர்க வாசல்.

• 1955 – சூர்யாகுமாரி.

• 1965 – தழும்புகள்.

• 1970 – இன்பஒளி.

அண்ணாவின் திரைபடங்கள் :

• 1946 – வேலைக்காரி.

• 1946 – குமரி கோட்டம்.

• 1948 – நல்லதம்பி.

• 1948 – ஓர் இரவு.

• 1956 – ரங்கூன் ராதா.

• 1963 – பணத்தோட்டம்.

• 1967 – வாலிப விருந்து.

• 1973 – ராஜபாட் ரங்கதுரை.

• 1982 – நீதிதேவன் மயக்கம்.

அறிஞர் அண்ணா தத்துவம்:

1. மின்சார விளக்குகள் தேவையில்லை, பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும்.

2. விமானம் பறக்கக்கூடாது, கருடன்தான்(கழுகு) பறக்க வேண்டும்.

3. இரயில் வண்டி கூடாது, கட்டை வண்டிதான் சிறந்தது.

4. தீப்பெட்டி தேவையில்லை, சிக்கிமுக்கி கல்தான் தேவை.

5. துப்பாக்கியா வேண்டாம், வேலும், வில்லும் போதும்.

6. மாளிகைகள் தேவையில்லை, பர்ணகசாலைதான் வேண்டும்.

அறிஞர் அண்ணா பிறந்த ஊர் நாள் எது ?

Arignar Anna History in Tamil:- அறிஞர் அண்ணா அவர்கள், 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்.

அண்ணா தொடங்கி வார இதழ் எது ?

அண்ணாதுரை அவர்கள் “காஞ்சி” என்ற பெயரில் ஒரு வார இதழை ஆரம்பித்தார்.

அறிஞர் அண்ணா பற்றிய சில வரிகள்:

• 1909 -ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்.

• 1930 – ஆம் ஆண்டு இராணி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

• 1934 – ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

• 1938 – ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் இந்தி மொழி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.

• 1948 – ஆம் ஆண்டு அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி” திரைப்படம் வெளியானது.

• 1949 – ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) தனி கட்சியாக அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

• 1967 – ஆம் ஆண்டு தமிழகத்தில் சென்னை மாநகரின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

• 1968 -ஆம் ஆண்டு “யேல்” பல்கலைக்கழகம் “சுபப் பெல்லோஷிப்” பட்டம் வழங்கப்பட்டது.

• 1969 – ஆம் ஆண்டு மதராசு என்னும் சென்னை “தமிழ்நாடு” என பெயர் மாற்றப்பட்டது.

• 1969 -ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி தன்னுடைய 59-வது வயதில் காலமானார்.

• 2010 – ஆம் ஆண்டு “அண்ணா நூற்றாண்டு நூலகம்” சென்னையில் நிறுவப்பட்டது.

Read Also:- மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *