Bharathidasan History in Tamil

Bharathidasan History in Tamil – பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

Bharathidasan History in Tamil – பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

Bharathidasan History in Tamil

Bharathidasan History in Tamil: பாரதிதாசன் புதுவையில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்தார். இவர், தமிழர் ஆசிரியராகவும், கவிஞராகவும் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட காதல் காரணமாக தன் பெயரை “பாரதிதாசன்” மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன் பிறந்த ஊர் || Bharathidasan parents name in tamil

பெயர் – சுப்புரதினம்.

இயற்பெயர் – பாரதிதாசன், பாவேந்தர், புரட்சி கவிஞர்.

பெற்றோர்கள் – கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்.

பிறந்த வருடம் – 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி.

பிறந்த இடம் – புதுச்சேரி.

மனைவி பெயர் – பழனி அம்மையார்.

பிள்ளைகள் – மன்னர் மன்னர், சரஸ்வதி, வசந்தா, இரமணி.

தொழில் – தமிழ் ஆசிரியர், கவிஞர், அரசியல்வாதி.

இறப்பு – 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி (வயது-72)

பாரதிதாசனின் பிறப்பு:

Bharathidasan History in Tamil:- புரட்சி கவிஞர் பாரதிதாசன் 1891-ஆம் வருடம் ஏப்ரல் 29-ஆம் தேதி புதுவையில் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரப்பில், கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.கவிஞரின் இயற்பெயர் சுப்ரதினம் ஆகும். பின்னர், தன்னுடைய தந்தை பெயரை சேர்த்து கனக சுப்புரத்தினம் என மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசனின் கல்வி வாழ்க்கை:

Bharathidasan History in Tamil:- பாரதிதாசன் அவர்களின் தந்தை புதுவையில் ஒரு மிகுந்த செல்வராக இருந்தார். அதனால் பாரதிதாசன் தனது ஆரம்பகால பள்ளி படிப்பை பிரெஞ்சு பள்ளியில் தொடங்கினார். இருந்தாலும் பாரதிதாசனுக்கு தமிழ் மொழியின் மீது இருந்த மிகுந்த அன்பின் காரணமாக தமிழ் மொழியையும் முறையாக கற்றுக் கொண்டார்.

தனது பள்ளி படிப்பை முடித்த பாரதிதாசன் அவர்கள், கல்லூரி படிப்பில் தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்து இளங்கலை தமிழ் பயின்று பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

பாரதிதாசன் திருமண வாழ்க்கை:

பாரதிதாசன் 1920-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி பழனி அம்மையாரை மணம் முடித்தார். இவர்களுக்கு, மன்னர் மன்னர் என்ற மகனும் சரஸ்வதி, வசந்தா, இரமணி போன்ற பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.

பாரதியாரின் சந்திப்பு || பாரதிதாசன் என பெயர் வர காரணம் ?

Bharathidasan History in Tamil:- பாரதிதாசனின் இயற்பெயர் சுப்ரதினம் ஆகும். பின்னர், தன்னுடைய தந்தை பெயரை சேர்த்து கனக சுப்புரத்தினம் என மாற்றிக்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பாரதியாரின் பாடல்கள் மற்றும் கவிதையால் ஈர்க்கப்பட்ட இவர் பாரதி மீது கொண்ட தீராத பற்றால் தம் பெயரை “பாரதிதாசன்” என மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசனின் பணிகள்:

  1. பாரதிதாசன் அவர்கள் தமிழ் மீது அயராது பற்று கொண்டதாக இருந்தார். தனது மானசீக குருவாக சுப்பிரமணிய பாரதியாரை ஏற்றுக்கொண்டார்.
  2. பாரதிதாசன் அவர்கள் தன்னுடைய 16 வது வயதில் புதுகை அரசு கல்லூரியில் பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.
  3. ஒருமுறை பாரதிதாசனின் நண்பனின் திருமணத்தில் பாரதியார் பாடலை பாடினார் பாரதிதாசன். அந்த திருமணத்தில் பாரதியாரை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு, பாரதியாரிடம் இருந்து பாராட்டுகளையும், ஆசீர்வாதத்தையும் பெற்றார்.
  4. பிறகு, சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பி அவர் அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

பாரதிதாசனின் படைப்புகள்:

பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசை பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆயிற்றின் மூலம் வெளியிட்டார்.

அவற்றில் சில,

• அம்மைச்சி நாடகம்.

• கழைக்கூத்தியின் காதல் நாடகம்.

• கலை மன்றம்.

• கற்புக் காவியம், குயில்.

• சத்தி முத்தப் புலவர் நாடகம்.

• நீலவண்ணன் புறப்பாடு.

• பிசிராந்தையார் நாடகம்.

• பெண்கள் விடுதலை.

• விடுதலை வேட்கை.

• ரஸ்புடீன் நாடகம்.

• இதைத் தவிர திருக்குறளின் பெருமையை விளக்கி “செப்பலோசையில்” அமையப்பெற்று 5-கட்டளை “கலித்துறைப்” பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிதாசனும் காமராஜரும்:

பாரதிதாசனின் அளவு கடந்த அரசியல் ஈடுபடும் மற்றும் மக்களுக்கு செய்யும் தொண்டுகளை கண்டு வியந்து போன அப்போதைய தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் பாரதிதாசனுக்கு “புரட்சிக்கவி” என்ற பெயரை வழங்கினார். 25-ஆயிரம் ரூபாய் சன்மானமும் கொடுத்து பாரதிதாசனை கௌரவ படுத்தினார்.

பாரதிதாசன் இறப்பு :

இவ்வாறு, பல தமிழ் இலக்கிய நூல்கள், நாடகங்கள், சிறுகதைகள் என அனைத்திலும் சிறந்து விளங்கிய பாரதிதாசன் அவர்கள் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

பாரதிதாசன் கட்டுரை || பாரதிதாசன் பற்றிய 10 வரிகள்:

• 1891-ஆம் ஆண்டு புதுச்சேரியில் ஏப்ரல் 29-ஆம் தேதி கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

• 1919-ஆம் ஆண்டு தன்னுடைய 16-வது வயதில் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் தமிழர் ஆசிரியராக பணிபுரிந்தார்.

• 1920-ஆம் ஆண்டு பழனி அம்மையாரை என்பவரை திருமணம் செய்தார்.

• 1946-ஆம் ஆண்டு “அமைதி ஊமை” என்ற நாடகத்திற்கு அவருக்கு “தங்க கிளி” பரிசு வழங்கப்பட்டது.

• 1954-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• 1960-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.

• 1964 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

• 1969-ஆம் ஆண்டு பாரதிதாசனின் மறைவிற்குப் பின் 5-ஆண்டுகள் கழித்து அவரது “பிசிராந்தையார்” நாடகத்திற்கு “சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.

• 1990-ஆம் ஆண்டு பாரதிதாசனின் படைப்புகள் தமிழ்நாடு அரசினால் உடமையாக்கப்பட்டது.

• 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை தபால் துறையில் ஒரு நினைவு அஞ்சல் தலை அவர்து பெயரில் வெளியிடப்பட்டது.

பாரதிதாசன் இயற்றிய நூல்கள் எத்தனை? || பாரதிதாசனின் கவிதைகள்

1. இசையமுது.
2. பாரதிதாசன் கவிதைகள்.
3. தமிழ் இயக்கம்.
4. விடுதலை வேங்கை.
5. இருண்ட வீடு.
6. பாண்டியன் பரிசு.
7. அழகின் சிரிப்பு.
8. குறிஞ்சி திட்டு.
9. பாரதிதாசன் ஆத்திச்சூடி.
10. தமிழச்சியின் கத்தி.
11. இந்தி மொழி எதிர்ப்பு பாடல்கள்.
12. இலக்கிய கோலங்கள்.
13. உலகம் உன் உயிர்.
14. எதிர்பாராத முத்தம்.
15. ஏற்றப்பாட்டு.
16. கடற்மேற் குழிகள்.
17. கற்கண்டு.
18. காதல் நினைவுகள்.
19. காதல் பாடல்கள்.
20. குடும்ப விளக்கு.
21. குமரகுருபரர்.
22. குயில் பாடல்கள்.
23. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்.
24. தமிழுக்கும் அமுதென்று பெயர்.
25. தாயின் மேல் ஆணை.
26. தேனருவி.
27. நல்ல தீர்ப்பு.
28. படித்த பெண்கள்.
29. பாரதிதாசனின் கடிதங்கள்.
30. பிசிராந்தையார்.
31. புரட்சிக்கவி.
32. புகழ் மலர்கள்.
33. முல்லைக்காடு.
34. தாழ்த்தப்பட்டோர் சமத்துவ பாட்டு.
35. கதர் இராட்டினபாட்டு.

பாரதிதாசன் சிறப்பு பெயர்கள்:

• புரட்சிக்கவி.

• பாவேந்தர்.

• பாரதிதாசன்.

• தமிழ் கவி.

• தமிழின் மறுமலர்ச்சிக்காக தோன்றிய கவி.

• தமிழரின் கவி.

திரைப்படத் துறையில் பாரதிதாசன்:

திராவிட இயக்கத் தலைவர்கள் முதல் முதலாக திரைப்படத் துறைக்குள் நுழைந்த பெருமை பாரதிதாசனையை சேரும். 1937-ஆம் ஆண்டு திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதி காலகட்டம் வரை திறைதுறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், வசனம், பட தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்கை வழங்கி திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தார்.

பாரதிதாசன் திரைப்படத்திற்கு தானே பாடல்களை இயற்றினார் அவற்றில் சில திரைப்படங்கள்,

• ஸ்ரீ ராமானுஜர்.

• காளமேகம்.

• ஓர் இரவு.

• கல்யாணி.

• பராசக்தி.

• பணம்.

• அந்தமான் கைதி.

• வளையாபதி.

• பூங்கோதை.

• ரத்தக்கண்ணீர்.

• என் மகள்.

• கோமதியின் காதலன்.

• நானே ராஜா.

• குலதெய்வம்.

• பஞ்சவர்ணக்கிளி.

• கலங்கரை விளக்கம்.

• மணிமகுடம்.

• நம்ம வீட்டு தெய்வம்.

• பல்லாண்டு வாழ்க.

• நிஜங்கள்.

• சிவப்பதிகாரம்.

• கண்ணன் ஒரு கைக்குழந்தை.

• நான் ஏன் பிறந்தேன்.

• சந்திரோதயம்.

• அச்சம் என்பது மடமையடா.

பாரதிதாசனுக்கு தமிழக அரசு வழங்கிய சிறப்புகள்:

1. 1946-ஆம் ஆண்டு பாரதிதாசன் எழுதிய “அமைதி ஊமை” என்ற நாடகத்திற்கு “தங்க கிளி” என்ற பரிசு வழங்கப்பட்டது.

2. அறிஞர் அண்ணா அவர்கள் பாரதிதாசன் அவர்களுக்கு “புரட்சிக் கல்வி” என்ற பட்டம் வழங்கினார்.

3. தந்தை பெரியார் பாரதிதாசனுக்கு “புரட்சி கவிஞர்” என்ற பட்டம் வழங்கினார்.

4. 1970-ஆம் ஆண்டு பாரதிதாசனின் மறைவிற்குப் பின்னால் அவரது “பிசிராந்தையார்” நாடகத்திற்கு “சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.

5. 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை தபால் துறையில் தமிழக அரசு ஒரு நினைவு அஞ்சல் தலை அவரது பெயரில் வெளியிட்டது.

6. திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

7. பாரதிதாசனின் அளவு கடந்த அரசியல் ஈடுபடும் மற்றும் மக்களுக்கு செய்யும் தொண்டுகளை கண்டு வியந்து போன அப்போதைய தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் பாரதிதாசனுக்கு “புரட்சிக்கவி” என்ற பெயரை வழங்கினார்.

பாரதிதாசன் குறிப்பு || bharathidasan kurippu

பாரதிதாசன் எந்த ஊர் ?

பாரதிதாசன் “பாண்டிச்சேரியில்(புதுவையில்)”, பிறந்து தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய பெறும் புகழ் மிக்க பாவலர் ஆவார்.

பாரதிதாசன் எங்கு எப்போது பிறந்தார்?

புரட்சி கவிஞர் பாரதிதாசன் 1891-ஆம் வருடம் ஏப்ரல் 29-ஆம் தேதி புதுவையில் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரப்பில், கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.கவிஞரின் இயற்பெயர் சுப்ரதினம் ஆகும்.

எதிர்பாராத முத்தம் இது யாருடைய நூல் ?

பாவேந்தர் பாரதிதாசனின் “எதிர்பாராத முத்தம்” கவிதை நூலாகும்.

பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது ?

1969-ஆம் ஆண்டு பாரதிதாசனின் மறைவிற்குப் பின்னால் அவர் இயற்றிய “பிசிராந்தரையார்” என்னும் நூலுக்கு “சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.

பாவேந்தர் என்று அழைத்தவர் யார் ?

Bharathidasan History in Tamil:- புதுவை கவிஞர், புதுமை கவிஞர், புரட்சிக் கவிஞர், கனக சுப்ரத்தினம் எனும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன் அவர்கள் ன, அவருடைய பாடல்கள் புதுமையான புரட்சிகரமான கருத்துக்களை கொண்டிருந்த காரணத்தாலும், அன்றைய கவிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டதாலும் பாவேந்தர் என்று அழைக்கப்பட்டார்.

பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது ?

பாரதிதாசன் இயற்றிய நாடக நூல்கள் – சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்தி முற்றப் புலவர், அமைதி ஊமை, இரணியன் அல்லது இணையற்ற வீரன், படித்த பெண்கள், இன்பக்கடல், நல்ல தீர்ப்பு, அம்மைச்சி, ரஸ்பிடின், அமைதி.

புரட்சிக் கலைஞர் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்? || பாரதிதாசனுக்கு வழங்கப்பட்ட பட்டம் எது?

Bharathidasan History in Tamil:- பாண்டியன் பரிசு, குறிஞ்சி திட்டு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழ் இயக்கம், குயில், பெண்கள் விடுதலை போன்ற படைப்புகளை கொடுத்ததற்காக “புரட்சிக்கவிஞர்” என்ற பட்டத்தை பெரியார் வழங்கினார். “புரட்சிக்கவி” என்ற பட்டத்தை அறிஞர் அண்ணா பாரதிதாசனுக்கு வழங்கினார்.

Read Also:- அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *