கிறிஸ்துமஸ் பண்டிகை வரலாறு

Christmas History in tamil – கிறிஸ்துமஸ் பண்டிகை வரலாறு

Christmas History in tamil – கிறிஸ்துமஸ் பண்டிகை வரலாறு

Christmas History in tamil

Christmas History in tamil : இந்தியாவில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் என ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த அனைத்து பண்டிகைகளும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவதில்லை. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு முறைப்படி கொண்டாடப்படுகிறது. அது மட்டும் இல்லை அந்தந்த நாட்டில் வாழும் மக்கள் அவர்கள் சார்ந்த மதத்தின் பண்டிகை மட்டுமே மிக பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர். இதில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை தான் கிறிஸ்துமஸ்.

கிறிஸ்துமஸ் பண்டிகை வரலாறு || கிறிஸ்துமஸ் என்றால் என்ன?

கிறிஸ்மஸ் பண்டிகை என்பது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் விழாவாகும். கிறிஸ்துமஸ் என்கின்ற சொல் ஒரு ஆங்கில வார்த்தையாகும் “கிறிஸ்துவின் மாஸ்” என்பது காலப்போக்கில் கிறிஸ்துமஸ் என பெயர் பெற்றது. இயேசுவின் பிறந்த தேதி ஆய்வாளர்களால் இன்று வரை சரியாக கூறப்படவில்லை. இயேசுவின் பிறந்த தேதி குறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வந்தது. 4-நூற்றாண்டில் தேவாலயம் டிசம்பர் 25-ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உறுதி செய்தது. இது மார்ச் 25-தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இது வசந்த உத்தரையத்தின் தேதி ஆகும்.

பெரும்பாலான கிறிஸ்துவ மக்கள் ‘கரிக்கோரியன்’ நாள்காட்டியில் டிசம்பர் 25-ஆம் தேதி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உச்ச குளிர்காலத்தில் நம்மை உறைய வைக்கும் பனிங்காலமான டிசம்பர் மாதத்தில் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களிடையே மதம் மற்றும் கலாச்சார விழாவாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ரோம், ஐரோப்பா, ஸ்காண்டினேவியா மக்களிடையே புத்தாடை உடுத்தி, மிகப்பெரிய ஆடம்பர விருந்துகளும், பரிசுகள் பரிமாறியும், பாடல்கள் பாடியும், சொந்தக்காரர்கள் ஒன்று கூடி பேசி மகிழ்வர்.

இயேசு கிறிஸ்து பிறப்பு || Christmas history in tamil pdf

இயேசு யார் என்று நம்மில் பல பேருக்கு கேள்விகள் மனதில் உண்டாகலாம். இயேசு என்பவர் மனிதர்களுடைய பாவங்களில் இருந்து அவர்களை மீட்டு மனிதனாக வாழ வைக்க கடவுள் போல் இந்த பூமியில் அவதரித்தவர் தான் இந்த இயேசு கிறிஸ்து. இயேசு கிறிஸ்து ஏழ்மையான ஒரு மாட்டு தொழுவத்தில் தான் பிறந்தார். மத்தேயு நற்செய்திபடி, “ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்”. அவரின் பிறந்த நாள் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மரம் வரலாறு – christmas tree || Christmas drawing and merry christmas images

கி.பி 10-நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த ‘போனி போஸ்’ என்ற பாதிரியார் ஒருமுறை ஜெப கூடத்தில் இருந்து வரும் போது சில பலங்குடி மக்கள் இயேசுவை வணங்காமல் “ஓக்” என்னும் மரத்தை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இதை கண்டதும் பெரும் கோபமடைந்த “போனிபோஸ்” அந்த மரத்தை பிடுங்கி எறிந்தார். அன்று புடுங்கி எரியப்பட்ட மரம் அதே இடத்தில் மீண்டும் வளர ஆரம்பித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உயிர்த்தெழுத்த இறைமகன் இயேசுவின் அற்புத செயலால் இந்த மரம் வளர்ந்துள்ளது என கருதி அதை கிறிஸ்மஸ் மரம் என்று வழிபட தொடங்கினர்.

அப்போது இருந்தேன் கிறிஸ்துமஸ் விழாவில் மரம், குடில் போடும் வழக்கம் தொடங்கியது. இது அடுத்த தலைமுறைக்கு கிறிஸ்து எப்படி பிறந்தார் என்று காண்பிக்க அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள் தேவாலய உலகத்தில் இருக்கும் “ஓக்” மற்றும் “ஃபீர்” மரத்தை தொங்கும் மெழுகுவர்த்தி விளக்குகளால் அலங்கரித்து மகிழ்வர்.

16-ஆம் நூற்றாண்டில் உலகில் பல நாடுகளுக்கு இந்த வழக்கம் பரவ தொடங்கியது. இந்த மரத்தை கிறிஸ்துமஸ் தினத்தன்று அழகு படுத்துவதற்காக பிற நாடுகளில் இயற்கையாக மக்கள் வளர்க்க தொடங்கினார்கள். மேலும் இதை வளர்க்க முடியாதவர்கள் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களை பயன்படுத்தி மகிழ்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் முறை || merry christmas wishes

• இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

• இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்களின் வீடுகளில் உள்ள “ஓக்” மற்றும் “ஃபீர்” மரங்களை சுற்றி தொங்கும் மெழுகுவர்த்திக் விளக்குகளை கொண்டு அலங்கரித்து மகிழ்வர்.

• மேலும், இயேசு கிறிஸ்து பிறந்த நிகழ்வை தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் ஓவியங்கள் அழகாக வரையப்பட்டு மற்றும் ஒரு மாட்டு தொழுவம் போல் பொம்மைகளை வைத்து அலங்கரித்து இயேசு பிறந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் மக்களின் பார்வைக்காக அழகாக வைத்திருப்பார்கள்.

• இந்த கிறிஸ்துமஸ் பண்டியானது டிசம்பர் மாதம் 25-ஆம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 6-தேதி வரை 12-நாட்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மக்கள் இனிப்புகள் வழங்கியும், ஆடலும், பாடலும் உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரையும் சந்தித்து பரிசுகள் வழங்கி உலகம் எங்கும் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

• 1800-ஆம் ஆண்டு வரையில் பரிசு பொருட்களை ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்ந்த பழக்கம் இருந்தது. அதன் பிறகு “சாண்டா கிளாஸ்” என்ற கிறிஸ்மஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான் கிறிஸ்துமஸ் நாளில் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு பிரபலமடைந்தது.

• இந்த கிறிஸ்துமஸ் விழாவில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, பரிசுகளை பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகுபடுத்தல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி ஆடல், பாடல் சிறப்பு விருந்து போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

• இந்த கிறிஸ்துமஸ் தின பண்டிகை அன்று உலகம் முழுவதும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

• கிறிஸ்த்மஸ்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் – மீட்விண்டர், கிறிஸ்ட் மாஸ்.

கிறிஸ்துமஸ் சர்ச்சைகள் || Christmas history in tamil for students

என்னதான் கிறிஸ்துமஸ் பண்டிகை அனைத்து மக்களால் கொண்டாடப்பட்டாலும் சில சமயங்களில் கிறிஸ்துவ மற்றும் கிறிஸ்துவர் அல்லாத பல்வேறு ஆதாரங்களில் இருந்து சர்ச்சை மற்றும் தாக்குதல்கள் ஏற்படுகிறது. சீன குடியரசு அரசாங்கம் அரசு ஏற்படுத்தும் நாகரீகத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டது மற்றும் அதன் நோக்கத்திற்காக பல மத பிரச்சனைகளையும் நடத்தியது.

டிசம்பர் 2018-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு ஒரு சில நேரங்களுக்கு முன் கிறிஸ்தவ தேவாலயங்களில் சோதனை நடத்தினர். மேலும் அந்த தேவாலயங்களை மூடும்படி கட்டாயப்படுத்தினர். கிறிஸ்மஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்மஸ் தாத்தாக்களும் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். இவ்வாறு, எவ்வளவு சர்ச்சைகளும், பிரச்சனைகளும் ஏற்பட்டாலும் கிறிஸ்துமஸ் தினம் நாடு முழுவதும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பற்றிய கட்டுரை || Christmas history in tamil essay

கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?

இறைவனின் குழந்தை இயேசு பிறந்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி உலகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நத்தார் பண்டிகை என்றால் என்ன?

“நத்தர் கிறிஸ்து பிறப்பு விழா” அல்லது கிறிஸ்துமஸ் என்பது ஒவ்வொரு வருடமும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறிஸ்துவ திருவழிப்பாட்டு ஆண்டில் திருவருகை காலத்தினை முடிவு பெற செய்து 12-நாட்கள் கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

கிறிஸ்து பிறப்பு எப்போது ?

கி.பி 240-ல் மார்ச் 28-ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் நிகழ்ந்ததாக அக்கால ஆய்வாளர்களும் கிறிஸ்துவ நாள்காட்டியும் குறிப்பிடுகிறது. டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்மஸ் உலகம் எங்கும் கொண்டாடும் வழக்கமாக கி.பி 336-ஆம் ஆண்டு “ரோம்” நகரில் உருவாகியது.

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை எந்த இணைப்பு வார்த்தையில் உருவானது:

இயேசு கிறிஸ்து பிறந்த தினம் நாள் கிறிஸ்துமஸ் தினம் என்று மக்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பும் மூலம் உருவானது.

இயேசு எந்த நாட்டில் பிறந்தார் ?

மத்தேயு நற்செய்திபடி, “ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்”.

கர்த்தர் என்றால் என்ன ?

கர்த்தர் என்பது “தேவனை(தந்தையை)” குறிக்கும் பொருளாகும்.

இயேசு பிறந்த இடம் எது ?

பெத்தலஹேம் கிறிஸ்தவர்கள் மட்டுமில்லாமல் யூதர்களுக்கும் ஒரு முக்கியமான இடமாகும். பெத்தலஹேமின் நுழைவாயிலில் உள்ள “ராகேல் கல்லறை” இயேசு பிறந்த இடமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுகிறது.

Read Also:- சேரர்கள் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *