Jawaharlal Nehru History in Tamil

Jawaharlal Nehru History in Tamil – ஜவகர்லால் நேரு வாழ்க்கை வரலாறு

Jawaharlal Nehru History in Tamil – ஜவகர்லால் நேரு வாழ்க்கை வரலாறு

Jawaharlal Nehru History in Tamil

Jawaharlal nehru history in tamil: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு நம் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். அதுபோல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர்தான் இந்த ஜவகர்லால் நேரு. அதுமட்டுமின்றி, சுதந்திரம் பெற்ற பிறகு நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்று இந்தியாவை வழி நடத்தினார். இந்திய மக்களால் “நவீன இந்தியாவின் சிற்பி” என்ற பெயரால் அன்போடு அழைக்கப்படுகிறார். இந்த ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட சாதனைகளை பற்றி இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நேரு வாழ்க்கை வரலாறு சுருக்கம் || ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை

பெயர் – ஜவகர்லால் நேரு.

பெற்றோர் – மோதிலால் நேரு மற்றும் சுவரூப ராணி அம்மையார்.

பிறந்த வருடம் – 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி.

பிறந்த இடம் – உத்தரபிரதேசம் மாநிலம் (இந்தியா), அலகாபாத்.

மனைவி பெயர் – கமலா நேரு.

பிள்ளைகள் – இந்திரா பிரியதர்ஷினி (எ) இந்திரா காந்தி.

இறப்பு – 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி (வயது-74)

ஜவஹர்லால் நேரு பிறப்பு || நேரு குடும்பம்

Jawaharlal Nehru History in Tamil:- ஜவகர்லால் நேரு 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் என்ற மாவட்டத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் மிகுந்த செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு மற்றும் சுவரூப ராணி அம்மையார் என்ற தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார்.

இளமை காலமும் கல்வி வாழ்க்கையும்:

ஜவகர்லால் நேரு சிறு வயதிலேயே சமஸ்கிருதம், இந்தி மற்றும் இந்திய கலைகளை நன்கு கற்றுக் கொண்டார். ஜவஹர்லால் நேரு ஒரு இந்திய குடியுரிமை பணியாளராக இருக்க வேண்டும் என்று நினைத்த நேருவின் தந்தை அவரை இங்கிலாந்தில் ஹார்ரோவிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், நேரு அவர்கள் ஹார்ரோவின் பள்ளி வாழ்க்கையை முற்றிலும் வெறுத்தார். அங்கு பள்ளி பாடத்திட்டங்கள் மிகவும் கடுமையானதாகவும், தங்கும் இடம் வீட்டில் இருந்து வெகு தொலைவு உள்ளது என்பதை நன்கு அறிந்தார். இருந்தாலும், தனது ஆரம்ப பள்ளியை மிகவும் கஷ்டப்பட்டு முடித்தார்.

கல்லூரி வாழ்க்கை:

Jawaharlal Nehru History in Tamil:-  தனது ஆரம்ப கால பள்ளி படிப்பை முடித்த நேரு அவர்கள் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதி 1907-ஆம் ஆண்டு ‘ட்ரினிட்டி’ கல்லூரியில் இயற்கை அறிவியல் பாடம் பயின்றார்.

1910-ஆம் ஆண்டு “திரை போசில்” இரண்டாவது மாணவராக பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் தனது அறிவியல் படிப்பை முடித்த நேரு அவர்கள், தனது தந்தையின் அழுத்தத்தின் காரணமாக 1912-ஆம் ஆண்டு “இன்னர் டெம்பிலில்” கல்லூரியில் சட்டம் கற்றுக்கொள்ள பதிவு செய்தார்.

1912-ஆம் ஆண்டு தனது வழக்கறிஞர் படிப்பை வெற்றிகரமாக முடித்து இந்தியாவில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.

திருமண வாழ்க்கை:

Jawaharlal Nehru History in Tamil :-  1916-ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு தன்னுடைய 17-வது வயதில் கமலா கவுல் என்ற பிராமண பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது கமலா காவுலுக்கு வயது 16 வயது ஆகும். திருமணத்துக்குப் பிறகு கமலா நேருவும் சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

திருமணம் முடிந்தால் ஒரே வருடத்தில் இந்திரா பிரதேசினி என்ற மகள் பிறந்தநாள். (பிற்காலத்தில் பெரோசு காந்தியை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் இந்திரா பிரிய தர்ஷினி என்கிற பெயர் இந்திரா காந்தி என்று அழைக்கப்பட்டது). 20-ஆண்டுகாலம் தனது திருமண வாழ்க்கையை நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1936-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். அதன் பிறகு தனியாகவே கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜவகர்லால் நேரு.

நேருவின் அரசியல் வாழ்க்கை:

  1. நேரு தன்னை அரசியலில் முழுமையாக ஏற்படுத்திக் கொண்ட காரணம் தான் 1919-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற “ஜாலியன் வாலாபாக் படுகொலை” சம்பவம் நேருவை சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வழிவகுத்தது‌.
  2. இந்தியாவில் ‘அம்ரித்சர்’ நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் எதுவும் இல்லாமல் கூட்டத்தில் பேச்சை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரையும் ஈவு இரக்கம் இல்லாமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டயர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் எந்த ஒரு தீங்கும் செய்யாத அப்பாவி மக்களை சுட்டுக் கொன்று குவித்தார்கள்.
  3. இந்த தாக்குதலின் ஆங்கிலேய ஆட்சியின் மீது நேருவிற்கு கடுமையான வெறுப்பு உணர்வு ஏற்பட்டது. அதுதான் நேருவை காங்கிரஸ் கட்சியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள காரணமாக இருந்தது.
  4. 1924-ஆம் ஆண்டு காந்தியின் அறிவுரைப்படி அலகாபாத் நகராட்சியின் தலைவராக நேரு அவர்கள் நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாக தனது கடமைகளை சிறப்பாக செய்த நேரு 1926-ஆம் ஆண்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
  5. 1926-ஆம் ஆண்டு முதல் 1928-ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக நேரு அவர்கள் நியமிக்கப்பட்டார்.
  6. 1929-ஆம் ஆண்டு காந்தியின் வழிகாட்டுதலின் பெயரில் முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை லாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தாங்கி நடத்தினார்.
  7. 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி லாகூரில் நேருவால் ஏற்றப்பட்டது.
  8. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்டார் நேரு. பிறகு புதுடில்லியில் சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கொடியை ஏற்றும் தனி சிறப்பு வழங்கப்பட்டது.

நேருவின் சிறை வாழ்க்கை:

• 1920-ஆம் ஆண்டு காந்தி தலைமையில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்ட காரணத்தினால் நேரு அவர்கள், 1921-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

• 1922-ஆம் ஆண்டு அந்தப் போராட்டம் முடிவு பெற்றதால் நேரு விடுதலை செய்யப்பட்டார். என்னதான் அவருடைய போராட்டம் சத்தியாகிரகம் முறையில் மேற்கொண்டாலும் கிட்டத்தட்ட 16-வருடங்கள் சிறையிலேயே தனது வாழ்நாளை கழித்தார்.

• 1945-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக நேரு கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார்.

பிரதம மந்திரியாக நேருவின் பணிகள் || நேருவின் கொள்கைகள் கட்டுரை

“நவீன இந்தியாவின் சிற்பி” என்று அழைக்கப்படும் நேரு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி வரை தனது இறுதி காலம் வரை பிரதமராக வாழ்ந்து மறைந்தார்.

• நேருவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பல வகையான திட்டங்களை வகுத்து இந்தியாவை ஒரு நல்ல முன்னேற்ற நாடாக மாற்றினார்.

• 1951-ஆம் ஆண்டு “இந்திய திட்டக் குழு” என்ற ஒரு குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டு திட்டத்தை எடுத்துரைத்தார்.

• 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நேருவின் தலைமையில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றது.

• ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கமாக தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை குறிப்பிட்டது.

• விவசாயத்தை மேம்படுத்துதல், தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்பு பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம் ஏற்படுத்துதல், மின்சாரம் மற்றும் கனரக இயந்திர தொழிற்சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த முடிவு செய்தது.

• விவசாயத்தை மேம்படுத்த அணை கட்டுதல், விவசாய கிணறுகளை உருவாக்குதல், விவசாய உற்பத்தியை பெருக்க அதிக அளவில் உரங்கள் உபயோகிக்கும் திட்டங்கள் போன்றவை மட்டுமில்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்க மாபெரும் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

• இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வியை அதிகரிப்பதால் மட்டும்தான் சாத்தியமாகும் என்பதை தெரிந்து கொண்ட நேரு கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை ஏற்படுத்தினார்.

• அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய வேளாண்மை கழகம், தேசிய தொழில்நுட்பக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற அரசால் பராமரிக்கப்படும் உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கி அதனை தானே கவனித்து வந்தார்.

• ஏழை, எளிய மக்களுக்கு இலவச கல்வி கட்டாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இலவச கட்டாய கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளை இந்தியாவில் உருவாக்கினார்.

• கிராமப்புறங்களில் சிறந்த திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டங்களை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

• தாழ்த்தப்பட்டவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பணிகள் மட்டும் கல்வி நிறுவனங்களில் அதிக அளவு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.

நேருவின் வெளிநாட்டு கொள்கைகள்:

• நேரு அவர்கள் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை தன்னுடைய திறமையால் சமாளித்து இந்தியாவை வழி நடத்துவதால் அவர் “சமாதானப்படுத்துவதில் மன்னர்” என்று ஐக்கிய நாடுகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

• அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய நாடுகளுடன் நடுநிலையை உருவாக்க கூட்டுசேராக் கொள்கைகள் மற்றும் “அணிசேராக் இயக்கங்களை” உருவாக்கினார்.

• அணு ஆயுதங்கள் பயங்கரமான விளைவுகளை உருவாக்கும் என்று அறிந்த நேரு அவர்கள் அணு ஆயுதக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

• 1954-ஆம் ஆண்டு நடைபெற்ற திபெத்தின் மீதான இந்தியா-சீனா உடன்படிக்கை பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது இருப்பினும், சில காரணங்களால் இந்தியா சீனா உறவு இன்று வரை ஒரு விரிசல் விட்டு தான் காணப்படுகிறது.

நேருவின் படைப்புகள் || நேரு எழுதிய நூல்கள் எது?

தனது வாழ்நாள் பயணத்தில் பனிரெண்டு ஆண்டுகள் சிறையில் கழித்த நேரு அவர்கள் சிறையில் இருக்கும் பொழுது ஒரு சில நூல்களை எழுதினார்.

1. “உலக வரலாற்றின் காட்சிகள்(1934)”

2. “சுயசரிதை(1936)”

3. “இந்தியாவின் கண்டுபிடிப்பு”

Jawaharlal Nehru History in Tamil :-  இதுபோன்ற, நூல்களை சிறையில் இருக்கும் பொழுதே நேரு எழுதினார். நேருவிற்கு ஒரு எழுத்தாளராக பெருமை சேர்த்தது மட்டும் இல்லாமல் நற்பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

நேருவின் நினைவுச் சின்னங்கள்:

• நேருவின் நினைவாக இந்திய நாடு முழுவதும் பல தெருக்கள், சாலைகள், பொது நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்றவற்றிற்கு நேருவின் பெயர் வைக்கப்பட்டு அவரின் நினைவை போற்றும் வகையில் உள்ளது.

• மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு “நேரு துறைமுகம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

• நேரு இந்திய பிரதமராக வாழ்ந்தபோது அவர் வசித்த இருப்பிடமான “தீன் மூர்த்தி பவன்” தற்போது நேருவின் நினைவு அருங்காட்சியமாக மாற்றப்பட்டு இன்றளவும் மத்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

• 1989-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் நேருவி ன் “தபால் தலை” வெளியிடப்பட்டது.

• லண்டனில் உள்ள “ஆல்ட்விச்சில்” நேருவின் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

• தன்னுடைய வாழ்நாள் பயணத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன் மற்றும் கல்வி போன்றவற்றில் அக்கறையுடன் பாடுபட்ட நேருவை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் “குழந்தைகள் தினமாக” கொண்டாடப்படுகிறது.

நேருவின் இறப்பு || நேருவின் சமாதி எவ்வாறு அழைக்கப்படுகிறது

Jawaharlal Nehru History in Tamil:- இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இளைஞர்களின் கல்வி நலனுக்காகவும், இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜவஹர்லால் நேரு அவர்கள், ஒரு முறை சீனாவுடன் ஏற்பட்ட எல்லை பிரச்சினையை சரி செய்ய காஷ்மீர் சென்ற நேரு காஷ்மீரில் இருந்து திரும்பிய போது அவர் பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக, 1964-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இவரின், உடல் யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் இந்து சடங்குகள் முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

நேரு பற்றிய பேச்சு போட்டி தமிழ் || நேரு மாமா

• 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேசம் மாநிலம் (இந்தியா), அலகாபாத் என்ற இடத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தார்.

• நேருவின் பெற்றோர் மோதிலால் நேரு மற்றும் சுவரூப ராணி அம்மையார் ஆவார்கள்.

• 1907-ஆம் ஆண்டு ‘ட்ரினிட்டி’ கல்லூரியில் இயற்கை அறிவியல் பாடம் பயின்றார்.

• 1910-ஆம் ஆண்டு “திரை போசில்” இரண்டாவது மாணவராக பட்டம் பெற்றார்.

• 1912-ஆம் ஆண்டில் இந்தியாவில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

• 1916-ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு தன்னுடைய 17-வது வயதில் ‘கமலா கவுல்’ என்ற பிராமண பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

• 1917-ஆம் ஆண்டு நேருவிற்கு இந்திரா பிரியதர்ஷினி (எ) இந்திரா காந்தி பிறந்தார்.

• 1919-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற “ஜாலியன் வாலாபாக் படுகொலை” சம்பவம் நேருவை சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வழிவகுத்தது‌.

• 1920-ஆம் ஆண்டு காந்தி தலைமையில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்ட காரணத்தினால் நேரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

• 1924-ஆம் ஆண்டு காந்தியின் அறிவுரைப்படி அலகாபாத் நகராட்சியின் தலைவராக நேரு நியமிக்கப்பட்டார்.

• 1934-ஆம் ஆண்டு “உலக வரலாற்றின் காட்சிகள்” என்ற நூலை எழுதினார்.

• 1936-ஆம் ஆண்டு “சுயசரிதை” என்னும் நூலை எழுதினார்.

• 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

• குழந்தைகளால் “நேரு மாமா” என்று அன்பான பெயரால் அழைக்கப்படுகிறார்.

• நேருவின் மறைவிற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி “குழந்தைகள் தினமாக” இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

“நவீன இந்தியாவின் சிற்பி” என்ற பெயரில் இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

• 1945-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

• 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி வரை தனது இறுதி காலம் வரை பிரதமராக வாழ்ந்து மறைந்தார்.

• 1964-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

• 1989-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் நேருவின் “தபால் தலை” வெளியிடப்பட்டது.

ஜவஹர்லால் நேரு ஜவகர்லால் நேரு பற்றிய குறிப்பு:

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?

Jawaharlal Nehru History in Tamil :- 1989-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி ஜவகர்லால் நேரு உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். அவருடைய, இறப்பிற்கு பிறகு அவரின் பிறந்த நாளை போற்றும் விதமாக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி “குழந்தைகள் தினமாக” கொண்டாடப்படுகிறது.

நேருவின் தாயார் பெயர் என்ன?

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான நேரில் தாயார் பெயர் சுவரூப ராணி ஆகும். இவர், மோதிலால் நேருவின் மனைவி ஆவார்.

நேரு எந்த மதத்தை சார்ந்தவர்?

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நேரு ஒரு “பிராமண மதத்தை” சார்ந்தவர் ஆவார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

Jawaharlal Nehru History in Tamil:- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் “ஜவஹர்லால் நேரு” ஆவார். இவர், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி வரை தனது இறுதி காலம் வரை பிரதமராக வாழ்ந்து மறைந்தார். கிட்டத்தட்ட 17-ஆண்டுகள், 286-நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.

அதன் பிறகு, நேருவின் மகள் “இந்திரா காந்தி” 15-ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமராக ஆட்சி செய்துள்ளார்.

Read Also:- மே தினம் உருவான வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *