Kamarajar life history in tamil

Kamarajar life history in tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு

Kamarajar life history in tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு

Kamarajar life history in tamil

பெயர் : காமராஜர்
பிறந்தநாள் – ஜூலை மாதம் 15 தேதி 1903
காமராஜர் பிறந்த ஊர் – விருதுநகர்மாவட்டம்
காமராஜரின்பெற்றோர் – குமாரசாமிசிவகா மி
காமராஜரின் படிப்பு – இளம் வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியவில்லை
காமராஜரின் இறப்பு – அக்டோபர் 2 1975

காமராஜர் பிறப்பு:

குமாரசாமி நாடார் மட்டும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி காமராஜர் மைந்தன் ஆக பிறந்தார். இளம் வயதிலேயே அவர் தன் தந்தையின் இறப்பால் அவரால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

காமராஜரின் ஆரம்ப கால வாழ்க்கை:

காமராஜரின் தாயாரான சிவகாமி அம்மையாருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் அவர்களில் ஒருவரான கருப்பையா நாடார் என்பவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். காமராஜர் இளம் வயதிலேயே தம்முடைய தந்தையை பிரிந்ததால் பள்ளி படிப்பை தொடர முடியாததால் வேலைக்கு செல்லும் அவள நிலை ஏற்பட்டது. அதுவும் அவருடைய மாமாவின் துணிக்கடையிலேயே வேலைக்கு காமராஜர் சேர்ந்தார்.

காமராஜர் மறைவு:

எளிமையான தோற்றத்தையும், வாழ்க்கையையும் வாழ்ந்த தியாக செம்மல் கர்மவீரர் காமராஜர் அவர்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி 1975-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். இவருடைய உடல் இப்பூமியை விட்டு மறைந்தாலும் இவருடைய புகழ் இந்த உலகை விட்டு மறையாது.

காமராசர், விருதுநகரில் குமாரசாமி-சிவகாமி இணையர்க்கு மகனாய் 1903-ம் ஆண்டு, ஜூலை 15-ல் பிறந்தார்.

அரசியல் ஈடுபாடு:

நாள்தோறும் செய்தித்தாள்களைப் படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், தம் அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார். மெய்கண்டான் புத்தகசாலைக்குச் சென்று லெனின், கரிபால், நெப்போலியன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துத் திறமையாக வாதம் செய்யக் கற்றுக்கொண்டார்.

கட்சிக் கூட்டங்களை நடத்தினார், ஊர்வலங்களில் கலந்து கொண்டார், கொடி பிடித்தார். சைமன் குழு எதிர்ப்பு, உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் பங்கு கொண்டு 11 ஆண்டுகள் சிறையில் கழித்தார். சத்தியமூர்த்தியை தம் அரசியல் குருவாக ஏற்றக்கொண்டார். 1937-ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர்களை உருவாக்குபவர்:

1939-ல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

1945-ல், பிரகாசம், 1947-ல், ஓமந்தூர் இராமசாமி, 1949-ல், குமாரசாமி ஆகியோர் முதலமைச்சராகப் பதவியேற்க காமராசர் காரணமாக இருந்தார்.

1964-ல், இந்தியப் பிரதமராக இருந்த நேரு மறைந்த பின்பு, லால்பகதூர் சாஸ்திரியைப் போட்டியின்றி பிரதமராகத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்தார்.

1967-ல், லால் பகதூர் சாஸ்திரி மறைந்த பின்பு இந்திரா காந்தியை பிரதமராக்கினார்.

முதலமைச்சர் காமராசர்:

1954 முதல் 1963 வரை காமராசர் முதலமைச்சராக இருந்தார். இவரது அமைச்சரவையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் தொழில் அமைச்சராகவும், சி. சுப்பிரமணியம் கல்வி அமைச்சராகவும் இருந்தனர்.

காமராசர் ஆட்சியில் தொழில் முன்னேற்றம்:

ண்டிஅம்பத்தூர், இராணிப்பேட்டைமுதலிய இடங்களில்பெரியதொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன. வேளாண்மைக்கு என பாசன வசதிகள் செய்யப்பட்டன, அணைகள் கட்டப்பட்டன. தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லாத சிற்றூர்களே இல்லை என்னும் நிலை உருவானது. நெசவுத் தொழில் வளர்ச்சிக்காக பல திட்டங்களைத் தீட்டினார்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சோடா உப்புத் தொழிற்சாலை, ஆவடி இரயில்வே வாகனத் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது ஆட்சியில் தொடங்கப் பெற்றன.

காமராசரின் கல்வித் தொண்டுகள்:

  • காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளி வேலை நாள்களை 180-லிருந்து 200-ஆக உயர்த்தினார்.
  • தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • மூடப்பட்டிருந்த 6000 தொடக்கப் பள்ளிகளைத் திறக்க ஆணையிட்டதுடன், இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார்.
  • பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டு, பள்ளிகளுக்கான அடிப்படைப் பொருள்களும், கருவிகளும் வாங்கப்பட்டன.
  • உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது.
  • உடற்பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
  • மருத்துவக் கல்லூரி முதலான தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லாத கடனளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது.
  • மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்,
  • கிளை நூலகங்கள் பலவற்றைத் தொடங்கினார்.
  • இவரை “கல்விக்கண் திறந்தவர்” என தந்தை பெரியார் பாராட்டினார்.

சமூகத் தொண்டுகள்:

தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு 60 சதவீத பங்கு கிடைக்கச் செய்தார். நில உச்ச வரம்பு 30 ஏக்கர் எனக குறைக்கப்பட்டது. நில முதலாளிகளிடமிருந்து உபரி நிலங்கள் பெறப்பட்டு நிலமில்லாதோருக்கு பிரித்தளிக்கப்பட்டன.

மேலும் மீனவர், கருப்புக்கட்டி காய்ச்சுபவர், கைத்தறியாளர், குயவர் முதலிய சிறு தொழிலாளர் நலத் திட்டங்கள் மேற்காள்ளப்பட்டன. நகர்ப்புற வீடு கட்டும் திட்டம், இலவச மருத்துவ வசதி முதலியனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

காமராசர் திட்டம் (K-Plan):

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டுமென 1962-ல் காமராசர் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அது ‘காமராசர் திட்டம்’ என வழங்கப்பட்டது.

காமராசருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள்:

  • மதுரை-காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டியது.
  • சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலையமைந்தது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லமும், விருதுநகர் இல்லமும் நினைவு இல்லமாக” ஆக்கப்பட்டது.
  • காமராசரின் பிறந்த நாள் “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவிக்கப்பட்டது.
  • சென்னை தேனாம்பேட்டையில் “காமராசர் அரங்கம்” நிறுவப்பட்டது.
  • சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு 02.10.2000-ம் ஆண்டு மணி மண்டபம் அமைக்கப்பட்டது.
  • காமராசருக்கு நடுவணரசு செய்த சிறப்புகள்
  • காமராசருக்கு நடுவணரசு செய்த சிறப்புகள்.
  • 1976-ல் “பாரத ரத்னா” விருது அளித்தது.
  • நாடாளுமன்றத்தில் ஆள் உயர வெண்கலச் சிலை நிறுவியது.

சிறப்புப் பெயர்கள்:

பெருந்தலைவர், கறுப்புக் காந்தி, படிக்காத மேதை, ஏழைப் பங்காளன், கர்ம வீரர். தலைவர்களை உருவாக்குபவர்.

காமராசர் மறைவு:

காந்தியடிகள் மீது அளவற்ற அன்பு கொண்ட காமராசர் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *