Kanakkanpatti Siddhar Jeeva Samathi

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி மற்றும் வாழ்க்கை வரலாறு – Kanakkanpatti Siddhar Jeeva Samathi

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி மற்றும் வாழ்க்கை வரலாறு – Kanakkanpatti Siddhar Jeeva Samathi and Life History in Tamil

Kanakkanpatti Siddhar Jeeva Samathi

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி – Kanakkanpatti Siddhar Jeeva Samathi : கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி – தற்போது தமிழக முழுவதும் மிகவும் ஏராளமான பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன. அதில் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயமாக இருப்பது தான் இந்த கணக்கம்பட்டி சித்தரின் ஜீவசமாதி. ஜீவ சமாதி பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் ஒட்டன்சத்திரம் ரோட்டில் கணக்கன்பட்டி என்ற இடத்தில் உள்ளது.

பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில் தான். ஆனால் இப்பொழுது அது மட்டுமல்லாமல் கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதியை பார்க்க ஏராளமான மக்கள் தினந்தோறும் அங்கு படை எடுத்து வருகின்றனர். யார் அந்த கணக்கன்பட்டி சித்தர் அப்படி என்ன அந்த கோவில் சிறப்பு வாருங்கள் அவரைப் பற்றியும் அவர் வாழ்க்கை வரலாறு பற்றியும் முழுமையாக பார்க்கலாம்.

கணக்கன்பட்டி சித்தர் வாழ்க்கை வரலாறு || History of Kanakkanpatti Siddhar

கணக்கன்பட்டி சித்தரின் இயற்பெயர் – காளிமுத்து என்கிற பழனிச்சாமி

கணக்கன்பட்டி சித்தர் பிறந்த ஊர் – பழனி( திண்டுக்கல் மாவட்டம் ).

Kanakkanpatti Siddhar Jeeva Samathi:- இந்த, கணக்கன்பட்டி பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் உள்ளது. இப்போது இருந்து சுமார் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு இங்கு பச்சை நிற உடை அணிந்து அழுக்கு மூட்டை ஒற்றை வைத்து கொண்டு ஏராளமான அதிசயங்களையும்,அற்புதங்களையும் நிகழ்த்தி வாழ்ந்து வந்தவர் தான் இந்த பழனிச்சாமி சித்தர்.

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி : பொதுவாழ்விலும்,ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்ட இவர், முருகப்பெருமான் மற்றும் அவருடைய பெருமைகளை கூறும் கதையிலேயே அனைவரிடமும் கூறியும்,அனுதினமும் கடவுளுக்கு பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டு வந்தார். பச்சை நிறம் கொண்ட உடைகளை மட்டுமே விரும்பி அணியும் பழக்கம் உடையவர். மேலும் அவருடைய கையில் ஒரு அழுக்கு மூட்டையை எப்போதும் வைத்துக் கொண்டே இருப்பார். இதனால்,இவரை பலர் பைத்தியம் என்றும் ஏராளமானவர் கல் எடுத்து அடித்து துரத்திய சம்பவமும் கணக்கன்பட்டியில் நிகழ்ந்தது.

கணக்கன்பட்டி அழுக்கு மூட்டை சுவாமிகள் வாழ்க்கை வரலாறு :

  • கணக்கன்பட்டி செல்லும் வழி:- திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் ஒட்டசத்திரம் ரோட்டில் கணக்கன்பட்டி என்னும் ஊர் அமைந்துள்ளது.
  • கணக்கன்பட்டிக்கு தெற்கு இருந்து சரியாக 2 அல்லது 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சித்தரின் ஜீவசமாதி.
  • சித்தரை காண ஒரு சில பக்தர்கள் மட்டுமே அங்கு வந்து கொண்டிருந்தனர்.அவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறின.
  • அவரின் புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி தற்போது ஒரு நாளைக்கு தினசரி கிட்டத்தட்ட 50,000 முதல் 60,000 கூட்டம் வருகின்றனர். அவ்வளவு,மக்கள் கூட்டம் கூடும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்த சித்தரின் ஆலயமாக இந்த கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது.
  • தற்பொழுது சித்தர் ஆலயத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • அன்று, அனைவராலும் பைத்தியக்காரன் என்று கூறப்பட்ட அழுக்கு மூட்டை சித்தர்.இன்று தமிழகத்தில் ஏராளமான வீட்டில் அவர் புகைப்படம் போட்ட காலண்டர்களும், சாவிக்கொத்துக்களும் ஏராளம் உள்ளன.

கணக்கன்பட்டி சித்தர் தோற்றம் – Kanakkanpatti Siddhar Jeeva Samathi :

  1. எந்நேரமும் அழுக்கு நிறைந்த ஒரு பச்சை கலர் சட்டை, பரட்டை தலை, தலையில் ஒரு உருமா கட்டிய துண்டு மற்றும் குளிக்காத உருவத்தைக் கொண்டவர் இந்த பழனிச்சாமி சித்தர்.
  2. நிற அழுக்கு சட்டை மற்றும் அழுக்கு நிறைந்த ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு பழனி முதல் கணக்கன்பட்டி வரை சுற்றித்திரிவார்.
  3. அவர் வாழ்ந்த காலத்தில் பல்வேறு நபர்கள் இவரை பைத்தியம் என்றும் மேலும் சிலர் இவர் சித்தரின் அவதாரம் வேண்டுதலை நிறைவேற்றும் கடவுள் என்றும் அவரை வணங்கி வழிபட்டு வந்தனர்.
  4. அவரை நம்பி வந்தவர்களுக்கு அவர் கூறும் வாக்கு உண்மையாகவும் அந்த வாக்குகள் நிறைவேறியதாலும் மக்கள் அவரை காண வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

அழுக்கு மூட்டை சித்தர் என பெயர் வர காரணம் :

Kanakkanpatti Siddhar Jeeva Samathi:- பழனி மற்றும் கணக்கன்பட்டியின் பல இடங்களில் இவர் அழுக்கு நிறைந்த மூட்டை கையில் தூக்கிக்கொண்டு சுற்றியதால் இவர் அழுக்கு மூட்டை சித்தர் என அந்த ஊர் மக்களால் அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் இவரை பலரும் பைத்தியம் என்று கூறி துரத்தினார்கள். ஆனால்,அவர் யார் சொல்வதையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இந்த அழுக்கு மூட்டை சித்தர் பழனியில் உள்ள இடும்பன் மலையில் தினந்தோறும் அமர்ந்து தவம் செய்வார். ஆனால் அன்று அவர் செய்த தவத்திற்கு இன்று பெரும் பலன் கிடைத்துள்ளது. அன்று,பைத்தியக்காரன் என்று கூறிய மக்களின் வீட்டில் இன்று அவரின் புகைப்படம் தெய்வமாக வழிபடப்படுகிறது.

கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி location:

கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி location
கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி location

கணக்கன்பட்டி சித்தர் ஜீவ சமாதியின் அற்புதங்களும், அதிசயங்களும்:

1. ஆரம்ப காலகட்டத்தில் சித்தரின் வாக்குகள் அனைத்தும் பலிக்கவே அவருக்கு பலரும் புதிய உடைகள், உண்ண உணவு வாங்கி கொடுத்தனர். ஆடம்பர வாழ்க்கையை விரும்பாத சித்தர் அவை அனைத்தையும் தவிர்த்து விட்டார்.

2. சித்தரின் ஆலயத்திற்கு சென்றாலே எல்லா கவலைகளையும் மறந்து ஒரு விதமான மன நிம்மதி கிடைக்கும்.அந்த உணர்வை உங்களால் கண்டிப்பாக ஆலயத்திற்கு சென்றால் உணர முடியும்.

3. ஒருமுறை ஒரு நபர் தன் மனதில் ஏதோ ஒன்று நினைத்துக் கொண்டு சித்தர் இருக்கும் பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தர் அந்த நபரிடம் மேற்கு போய் தெற்கு போ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், சித்தரின் வார்த்தையை அந்த நபர் பெரிதும் கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். அடுத்த நாள் எதார்த்தமாக அவர் சித்தர் சொன்ன பாதையில் போக அப்போது,அவர் மனதில் நினைத்துக் கொண்டு சென்ற செயல் நிறைவேறியது. பின்னர், அவர் சித்தரிடம் வந்து மன்னிப்பு கேட்டு ஆசிர்வாதம் பெற்று சென்றார்.

4. இதையெல்லாம் விட சித்தர் ஒரு மிகப்பெரிய அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார்.அது என்னவென்றால், ஒரு வெளிநாட்டு தம்பதியர் அடைந்த பயன் தான் அது.

வாய் பேசாத சிறுவனை பேச வைத்து அசத்திய சித்தர் :

Kanakkanpatti Siddhar Jeeva Samathi:-  அது என்ன பயன் என்றால் வெளிநாட்டை சேர்ந்த ஒரு தம்பதி தன்னுடைய மகனுக்கு பெயர் வராமல் இருந்ததால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அங்கிருந்து தமிழ்த்திற்கு வந்தனர் ஆனால் சிகிச்சையில் எந்த பயனும்,முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் அவர்கள் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகி வருத்தத்துடன் பழனி முருகப் பெருமானே தரிசிப்பதற்காக சென்றுள்ளனர்.

அவர்கள் திண்டுக்கல்லில் இருந்து பழனியை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது திடீரென கணக்கன்பட்டியில் அவர்களது வாகனம் தானாக நின்று விட்டது.அவர்கள் வாகனத்தை சரி செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது சித்தர் அந்தப் பெண்மணியை அழைக்கவே அந்தப் பெண்மணி ஒரு வித பயத்துடனும்,தயக்கத்துடனும் போய் சித்தரிடம் பேசி உள்ளார்.

அந்தப் பெண்மணி இடம் சித்தர் எதிரில் உள்ள கடைக்கு சென்று ஒரு பிரியாணி பொட்டணம் வாங்கி வர சொல்லி இருக்கிறார். அந்தப் பெண்மணியும் தயக்கத்தோடு அருகில் உள்ள கடைக்கு சென்று பிரியாணி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். இதில் கசப்பான விஷயம் என்னவென்றால் அந்த வெளிநாட்டு குடும்பத்தார்கள் சைவம் மட்டும் உண்ணக்கூடியவர்கள்.இருப்பினும் அந்தப் பெண்மணி ஒரு தயக்கத்துடன் அந்த பிரியாணியை சித்தரிடம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.

Kanakkanpatti Siddhar Jeeva Samathi:- சித்தர் பிரியாணியை வாங்காமல் அந்த பெண்மணி இடம் இந்த பிரியாணியை உங்களுடைய மகனுக்கு கொடுங்கள் என்றார். தாயக்குத்துடன் அந்தப் பெண்மணி பிரியாணி பிரித்துப் பார்க்கும் பொழுது மிகப்பெரிய ஆச்சரியம். அது என்னவென்றால் பிரியாணி வாங்கி வந்த அந்த பொட்டணத்தில் இருந்தது சாம்பார் சாதம். அப்போது அந்த பெண்மணியை நோக்கி ஒரு வாகனம் வேகமாக வந்து கொண்டிருந்தது.அப்பொழுது,அந்த வாய் பேச முடியாத சிறுவன் அம்மா வண்டி வருகிறது என்று கத்த தொடங்கினான். பெற்றோர்கள் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போய் பார்த்தனர்.

அப்போதுதான்,அவர்களுக்கு புரிந்தது இவை அனைத்தும் சித்தரின் சித்து விளையாட்டுக்கள் என்று, அந்த தம்பதிகள் மற்றும் அந்த பையன் ஆகியோர் சித்தரின் காலில் விழுந்து, கையெடுத்து கும்பிட்டு அவரிடம் ஆசீர்வாதம் பெற்று வண்டியில் ஏறி பழனிக்கு புறப்பட்டனர்.

சித்தருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகள் :

1. தற்போது சித்தரின் ஆலயத்திற்கு ஏராளமான மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வாறு சித்தரின் புகழ் தமிழ்நாடு எங்கும் அதிவேகமாக பரவி வருகிறது.

2. வருடம் முழுவதும் மாசத்தில் ஏழு நாட்களும் சித்தரின் ஆலயம் இப்பொழுதெல்லாம் திறக்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சித்தரின் ஆலயம் திறக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடைபெறுகின்றது.

3. அதுமட்டுமின்றி சித்தரின் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் மக்களுக்கு ஆலயம் திறக்கப்படும் நேரம் 9 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதனால் மக்கள் மேலும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

4. இது மட்டும் இன்றி மாசத்தில் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி அன்று கூடுதலாக சித்தருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அன்று மக்கள் கூட்டம் என்றும் இல்லாமல் அதிக அளவு ஆலயத்தில் காணப்படுவார்கள்.

சித்தரின் மறைவு :

இவ்வாறு பல்வேறு அதிசயங்களையும்,ஆச்சரியங்களையும், மக்களின் கவலைகளையும் தீர்த்து வைத்து அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த பழனிச்சாமி என்னும் அழுக்கு மூட்டை சித்தர் சாமிகள் 2012 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

 

tamilquotes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *