Mahakavi Bharathiyar History in Tamil

Mahakavi Bharathiyar History in Tamil – மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

Mahakavi Bharathiyar History in Tamil – மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

Mahakavi Bharathiyar History in Tamil

Mahakavi Bharathiyar History in Tamil:- தமிழ் மொழிக்கு பணியாற்றிய பல சுதந்திரப் போராட்ட வீரர்களில் பாரதியார் தனக்கென ஒரு தனி இடத்தையும் தமிழ் மக்களின் உள்ளங்களில் மறக்க முடியாத ஒரு வீரராகவும் இன்றளவு திகழ்ந்து வருகிறார். இவர், சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் பெண் விடுதலைக்காக போராடியவர் என இவரின் பணிகள் தமிழகத்தில் ஏராளம்.

பாரதியார் வாழ்க்கை சுருக்கம் || Bharathiyar History in Tamil

பெயர் – சுப்பிரமணியம் என்ற சுப்பையா.

பெற்றோர்கள் – சின்னச்சாமி ஐயர் , இலக்குமி அம்மாள் (அ) இலச்சுமி அம்மாள்.

பாரதியார் பிறந்த ஊர் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம்.

பாரதியார் பிறந்த வருடம் – 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி.

பாரதியார் மனைவி பெயர் – செல்லம்மாள்.

பாரதியார் மகள்கள் – தங்கம்மாள், சகுந்தலா.

பாரதியாரின் சிறப்பு பெயர்கள் – காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, பாரதியார், மகாகவி.

பாரதியாரின் பணிகள் – பத்திரிக்கையாளர், எழுத்தாளர், இதழ் ஆசிரியர், பெண் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், சமூக சீர்திருத்தவாதி.

பாரதியார் இயற்றிய நூல்கள் – கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.

பாரதியாரின் இறப்பு – 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ( வயது-38).

பாரதியாரின் பிறப்பு || Biography of Maha kavi Bharathiyar

“மகாகவி” என்று அழைக்கப்படும் பாரதியார் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னசாமி ஐயர் மற்றும் இலட்சுமி அம்மையார் ஆகிய தம்பதிக்கு மகனாய் பிறந்தார்.

இவருக்கு, பெற்றோர்கள் இட்ட பெயர் சுப்பிரமணியம் என்ற சுப்பையா ஆகும். எட்டயபுர சமஸ்தானத்தில் இவருக்கு “பாரதி” என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதனால், பிற்காலத்தில் அனைவரும் இவரை பாரதியார் என்று அழைத்தனர்.

பாரதியாரின் இளமை காலமும், கல்வியும்:

Mahakavi Bharathiyar History in Tamil – பாரதியாருக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது 1887 ஆம் ஆண்டு தனது தாயார் லட்சுமி அம்மாள் மறைந்தார். ஆனால் பாரதியார் அவரின் பாட்டி ஆன ‘பாகீரதி’ அம்மாவிடம் வளர்ந்தார்.

ஏழு வயது இருக்கும் பொழுது கவிதையால் ஈர்க்கப்பட்டு அப்போதே கவிதை எழுதத் தொடங்கினார் பாரதியார். தனது 11-வது வயதில் கவி பாடும் ஆற்றலை பாராட்டிய எட்டயபுரம் மன்னர் அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அதிலிருந்து, அவர் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப்பட்டார்.

திருநெல்வேலியில் உள்ள ‘இந்து’ கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார் பாரதியார்.

பாரதியாரின் திருமண வாழ்க்கை:

1897-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி பாரதியாரின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனை நாளாக மாறியது. தன்னுடைய 14-வது வயதில் 7-வயது சிறுமியான செல்லம்மாள் என்று வரை திருமணம் செய்தார் மகாகவி பாரதியார்.

பாரதியார் கற்றுக் கொண்ட மொழிகள்:

பாரதியார் தனது தந்தையிடம் இருந்து தமிழ் ஆங்கிலம் கணிதம் போன்ற மொழிகளை நன்கு கற்றுக் கொண்டார்.

தன்னுடைய 16-வது வயதில் பாரதியாரின் தந்தை காலமானார். பின்னர், காசிக்கு சென்ற பாரதியார் அங்கு அலகாபாத் பல்கலை கழகத்தில் சமஸ்கிருத மொழியையும், ஹிந்தி மொழியையும் நன்கு கற்றுக் கொண்டார். அது மட்டுமில்லாமல் வடமொழி, பிரெஞ்சு ஆகிய எண்ணற்ற மொழிகளை கற்றறிந்தார்.

பாரதியார் கிட்டத்தட்ட 14-மொழிகளுக்கு மேல் நன்கு கற்றறிந்தார்.

இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான்,

“யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல், இனிதாவது எங்கும் காணோம்”

என்று தெளிவாக பாடியுள்ளார் மகாகவி பாரதியார்.

பாரதியாரின் பணிகள்:

Mahakavi Bharathiyar History in Tamil – கிட்டத்தட்ட 4-ஆண்டுகளுக்குப் பிறகு காசியில் இருந்து தமிழக திரும்பிய பாரதியார் எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று சிறிது காலம் அரசவைக் கவிஞராக பணியாற்றினார்.

அதன் பிறகு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தார்.

பாரதியாரின் பத்திரிக்கைகள்:

மகாகவி பாரதியார் முதல் முதலில் எழுதிய பாடல் 1904-ஆம் ஆண்டு “தனிமை இரக்கம்” என்னும் தலைப்பில் மதுரையில் இருந்த ‘விவேகபானு’ என்னும் இதழில் வெளிவந்தது.

“சுதேசமித்திரன்” என்ற பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதியார் பணியாற்றிய இதழ்கள்:

• 1905-ஆம் ஆண்டு “சக்கரவர்த்தினி” என்னும் தலைப்பில் பெண்களுக்கான வார இதழ் ஒன்றை நடத்தினார்.

• 1905-ஆம் ஆண்டு முதல் 1906-ஆம் ஆண்டு வரை “இந்தியா” என்ற தலைப்பில் வார பத்திரிக்கை இதழை ஒன்று நடத்தினார்.

• 1908-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான “பாலபாரதம்” என்னும் ஆங்கில இதழ் ஒன்றை நடத்தினார்.

• 1909-ஆம் ஆண்டு “விஜயா கர்மயோகி” என்னும் இதழையும், 1910-ஆம் ஆண்டு “சூரிய உதயம்” என்னும் தலைப்பில் ஒரு இதழையும் நடத்தினார்.

பாரதியார் இயற்றிய பாடல்கள்:

1. “செந்தமிழ் நாடெனும் போதினிலே..!!!இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”.

2. “தனி ஒருவனுக்கு உணவில்லை இல்லையென்றால் இந்த உலகத்தினை அழைத்திடுவோம்”.

3. “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”.

4. ‘காக்கை குருவி எங்கள் ஜாதி
நீர், கடலும், மலையும் எங்கள் கூட்டம்’.

5. “சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதைத் தொழுது படித்தறி பாப்பா”.

6. “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பேச வேண்டும்”.

7. ‘எல்லோரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்’.

8. ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’.

9. “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை இல்லை எனில் அனைவருக்கும் தாழ்வு”.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு:

இந்த விடுதலைப் போராட்டத்தில் போராடும் வீரர்களுக்கு பாரதியார் தன் பாடல்கள் மூலம் அவர்களுக்கு தைரியத்தை ஊக்குவித்தார்.

“கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் ஒன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும்
சேருவீர்”

இப்படி தனது பாடலின் மூலம் விடுதலை வீரர்களின் வேட்டையை தூண்டும் வகையில் “விடுதலை ! விடுதலை !விடுதலை !” என்றும் “தனியும் இந்த சுதந்திர தாகம்” என்ற பாடல்களையும் பாடினார்.

1921-ஆம் ஆண்டு “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று பாரதியார் முழக்கமிட்டார்.

“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்று இந்தியாவின் பெருமையை பெருமிதத்தோடு பாடியவர் மகாகவி பாரதியார்.

பாரதியார் இயற்றிய கவிதை நூல்கள்:

• 1908-ஆம் ஆண்டு பாரதியார் நடத்திய இந்தியா என்ற வார பத்திரிக்கைக்கு பிரிட்டிஷ் அரசு படிக்க தடைவிதித்தது.

1. கண்ணன் பாட்டு.

2. குயில் பாட்டு.

3. பாஞ்சாலி சபதம்.

4. பாப்பா பாட்டு.

5. விநாயகர் நான்மணிமாலை.

6. முரசு.

7. முருகன் பாட்டு.

8. அக்னி குஞ்சு.

9. சீட்டுக்கவி.

10. புதிய ஆத்திச்சூடி.

11. செந்தமிழ் நாடு.

12. இவர் பாரத நாடு.

13. சுதேச கீதங்கள்.

• இவற்றில், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை மக்களால் அதிகம் கவரப்பட்ட முப்பெரும் காவியங்களாகும்.

• 1912-ஆம் ஆண்டு “பகவத் கீதையை” தமிழ் மொழியில் மொழி பெயர்த்து பாரதியார் வெளியிட்டார்.

பாரதியார் எழுதிய சிறுகதைகள்:

பாரதியார் கதைகள் எழுதுவதிலும் சிறந்த வல்லமை பெற்றிருந்தார்.

• சின்ன சங்கரன் கதை.

• ஸ்வர்ணகுமாரி கதை.

• ஆற்றில் ஒரு பங்கு.

• கதை கொத்து.

• நவ தந்திர கதைகள்.

• திண்டிம சாஸ்திரி.

• பூலோக ரம்பை.

பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்:

• தராசு.

• சந்திரிகையின் கதை.

• ஞானரதம் – தமிழ் மொழியில் தோன்றிய முதல் உரைநடை காவியம்.

பாரதியார் எழுதிய நாடகம் :

• ஜெகசித்திரம்.

பாரதியார் கைது செய்யப்பட்ட தருணம்:

Mahakavi Bharathiyar History in Tamil – 1918-ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட பாரதியார் பிரிட்டிஷ் எல்லையில் நுழைந்தவுடன் கைது செய்யப்பட்டு 34-நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு விடுதலையான மகாகவி பாரதியார் தன் மனைவியின் சொந்த ஊரான “கடையம்” என்னும் ஊரில் இரண்டு ஆண்டுகள் வசித்து வந்தார்.

காந்தி மற்றும் பாரதியார் சந்திப்பு:

தனது மனைவி ஊரில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த மாககவி பாரதியார் 1919-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜி வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் ராஜாஜி, மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் ஆகிய மூவரும் சந்தித்த நிகழ்வு அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

பாரதியார் சிறப்பு பெயர்கள்:

1.செல்லிதாசன்.

2. காளிதாசன்.

3. சக்திதாசன்.

4. ஓர் உத்தம தேசாபிமானி.

5. சித்தனாய் வந்த நித்திய சூரியன்.

6. நித்தியதீரர்.

7. உலககவி.

8. மகாகவி.

9. அமரக்கவி.

10. தேசியக்கவி.

11. சீட்டுக்கவி.

12. மக்கள் கவி.

13. முண்டாசுக் கவிஞர்.

14. ஞானரதம்.

15. விடுதலைக்கவி.

16. முன்னறி புலவன்.

17. தமிழ் புதுக்கவிதையின் தந்தை.

18. பாட்டுக்கொரு புலவன் பாரதி.

19. தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி.

20. புதுக்கவிதையின் முன்னோடி.

பாரதியாரின் இறப்பு:

Mahakavi Bharathiyar History in Tamil – 1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரதியார் திருவல்லிக்கேணியில் உள்ள “பார்த்தசாரதி” கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த கோவில் யானை பாரதியாரை தூக்கி எறிந்தது. இதனால் அவருக்கு தலையிலும் கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

சிறிது காலம் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட பாரதியார் ‘வயிற்றுக் கடுப்பு’ நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டார். இதை குணப்படுத்த அதற்கான மருந்துகளை சாப்பிட மறுத்த பாரதியார் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி இவ்வுலக விட்டு மறைந்தார்.

பாரதியாருக்கு தமிழ்நாடு வழங்கிய சிறப்புகள்:

1. பாரதியார் வாழ்ந்த வீடுகளான எட்டயபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள இடங்களை நினைவு இல்லங்களாக மாற்றி பொதுமக்களின் பார்வைக்காக வைத்து தமிழக அரசின் இன்று வரை அதை பராமரித்து வருகிறது.

2. அவர் பிறந்த எட்டயபுரத்தில் அவருடைய நினைவாக மணிமண்டபமும் மற்றும் அவருடைய திரு உருவச் சிலையும் வைத்து பாரதியாரை கௌரவப்படுத்தி உள்ளது.

3. பாரதியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் மற்றும் அவர் வாழ்ந்த நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் அந்த மணி மண்டபத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாரதியார் வாழ்க்கை வரலாறு கட்டுரை || Bharathiyar History in Tamil pdf

எந்த வயதில் பாரதியாருக்கு பாரதி என்னும் பட்டம் வழங்கப்பட்டது ?

பாரதியார் அவரது 7-வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். அவருக்கு 11-வயதாக இருக்கும் போது கவி பாடும் ஆற்றலையும், புலமையும் வியந்து பாராட்டிய எட்டயபுர சமஸ்தான மன்னர் அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து, அவர் பெயர் சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டது.

பாரதியார் எந்த வயதில் கவிதை எழுதினார் ?

ஐந்து வயதில் 1887-ஆம் ஆண்டு தன்னுடைய தாயார் லட்சுமி அம்மாள் மறைந்தார். பின்னர், தனது பாட்டியானா பாகீரதி அம்மாவிடம் வளர்ந்தார் பாரதியார்.

தன்னுடைய 7-வயதில் கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார் மகாகவி. அதன் பிறகு பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவி புனையும் ஆற்றலையும், திறமையும் வெளிப்படுத்தினார்.

பாரதியார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் ?

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்து 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி தன்னுடைய 39-வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். இதனால், பாரதியார் மிகவும் குறுகிய காலமே இந்த உலகில் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியாரின் பெற்றோர் யார் || Bharathiyar parents name in tamil

மகாகவி பாரதியார் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னச்சாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாள் என்ற தம்பதியினருக்கும் மகனாய் பிறந்தார். பாரதியாருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் சுப்பிரமணி என்னும் சுப்பையா ஆகும்.

பாரதி என்ற சிறப்பு பெயர் யார் சூட்டியது ?

Mahakavi Bharathiyar History in Tamil – பாரதியாருக்கு 11-வயதாக இருக்கும் போது கவி பாடும் ஆற்றலையும், புலமையும் வியந்து பாராட்டிய எட்டயபுர சமஸ்தான மன்னர் அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து, அவர் பெயர் சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டது.

பாரதியாரின் வேறு பெயர்கள் :

காளிதாசன், சக்திதாசன், முண்டாசுக் கவிஞர், ஞானரதம், முன்னறி புலவன், “ஷெல்லிதாசன்”, தமிழ் புதுக்கவிதையின் தந்தை, பாட்டுக்கொரு புலவன், மகாகவி, பாரதி, தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி.

பாரதியின் இயற்பெயர் என்ன ?

பெற்றோர்கள் சின்னச்சாமி ஐய்யர் , இலக்குமி அம்மாள் (அ) இலச்சுமி அம்மாள் பாரதியாருக்கு வைத்த பெயர் இயற்பெயர் ‘சுப்பிரமணியன்’ என்னும் சுப்பையா ஆகும்.

பாரதியார் எழுதிய முதல் கவிதை நூல் எது ?

மகாகவி பாரதியார் முதல் முதலில் எழுதிய கவிதை நூல் 1904-ஆம் ஆண்டு “தனிமை இரக்கம்” என்னும் தலைப்பில் மதுரையில் இருந்த ‘விவேகபானு’ என்னும் இதழில் வெளிவந்தது.

பாட்டுக்கொரு புலவன் என்று யார் கூறியது ?

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்று ‘கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை’ மகாகவி பாரதியாரை போற்றி அவருக்கு பொருத்தமாக ஓர் பாடலில் கூறியுள்ளார். மகாகவி பாரதியார் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழ் ஆசிரியர், கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் என எல்லாவற்றிலும் கொடி கட்டி பறந்தவர்.

பாரதியார் பெற்ற பட்டங்கள் :

Mahakavi Bharathiyar History in Tamil – பாரதியார் அவரது 7-வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். அவருக்கு 11-வயதாக இருக்கும் போது கவி பாடும் ஆற்றலையும், புலமையும் வியந்து பாராட்டிய எட்டயபுர சமஸ்தான மன்னர் அவருக்கு கலைமகள் என பொருள் படும் “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து, அவர் பெயர் சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டது.

பாரதியாரின் நூல்கள் தமிழக அரசினால் 1949-ஆம் ஆண்டு முதன் முதலாக நாட்டுடைமை இலக்கிய நூல்களாக மாற்றப்பட்டது.

பாரதியார் இறந்த வருடம் :

Mahakavi Bharathiyar History in Tamil:- 1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரதியார் திருவல்லிக்கேணியில் உள்ள “பார்த்தசாரதி” கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த கோவில் யானை பாரதியாரை தூக்கி எறிந்தது. இதனால் அவருக்கு தலையிலும் கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

சிறிது காலம் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட பாரதியார் ‘வயிற்றுக் கடுப்பு’ நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டார். இதை குணப்படுத்த அதற்கான மருந்துகளை சாப்பிட மறுத்த பாரதியார் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி இவ்வுலக விட்டு மறைந்தார்.

பாரதியாரின் புகழ் உரைகள் :

“நீடு துயில் நீங்க பாடி வந்த நிலா; காடு மனம் கவரும் புறச் சொற்கோ” என பாரதியாரை புகழ்ந்து பாடியுள்ளார் பாரதிதாசன்.

• “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்று ‘கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை’ மகாகவி பாரதியாரை போற்றி பாடியுள்ளார்.

Read Also:- பாரதியார் கவிதைகள் தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *