மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு

Manikkavasagar History in Tamil – மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு

Manikkavasagar History in Tamil – மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு

Manikkavasagar History in Tamil

Manikkavasagar history in tamil: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் ஆவார். இவர், கி.பி 9-நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவர் என வரலாற்று குறிப்புகள் மூலம் நாம் அறியலாம். அதுமட்டுமின்றி, அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவரைப் பற்றி இத்தொகுப்பில் விரிவாக நாம் காணலாம்.

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு:

பெயர் – மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசர் இயற்பெயர் – திருவாதவூர் அடிகள்.

பெற்றோர்கள் பெயர் – சம்பாத சரிதர், சிவஞானவதியார்.

மாணிக்கவாசகர் பிறந்த ஊர் – திருவாதவூர், பாண்டியநாடு.

இயற்றிய நூல்கள் – திருவாசகம், திருக்கோவையார், போற்றித் திருவகவல்.

காலம் – கி.பி 9-நூற்றாண்டு.

மாணிக்கவாசகர் சிறப்பு பெயர்கள் – தென்னவன் பிரம்மராயன், அருள் வாசகர், மாணிக்கவாசகர், பெருந்துறைப் பிள்ளை திருவாதவூர் அடிகள்.

மாணிக்கவாசகர் இளமைப் பருவம்:

Manikkavasagar history in tamil: மாணிக்கவாசகர் பாண்டியர் நாட்டில் உள்ள திருவாதவூரில் அமைந்த வைகை ஆற்றங்கரையில், அந்தணர் குளத்தில் சம்பாத சரிதர், சிவஞானவதியார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவருக்கு, பெற்றோர்கள் வைத்த பெயர் “வாதவூரார்” என்பது ஆகும். இறைவனின் திருவருளால் பிறந்ததால் 16-வயதுக்கு முன்னரே அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினார். இவரின், திறமையை நன்கு அறிந்த அப்போதைய பாண்டிய குல அரசன் ‘அரிமர்த்தன பாண்டியன்’ தன் அமைச்சரவையில் இவருக்கு முதலமைச்சர் பதவி அளித்து சிறப்பித்தார்.

தனது பதவியை நல்ல முறையில் செய்து வந்த மாணிக்கவாசகருக்கு தென்னவன் பிரம்மராயன் என்னும் பட்டத்தை வழங்கினார். அதன் பிறகு உலகத்தில் உள்ள இன்பங்களும், துன்பங்களும் எப்போதும் நிலையற்றது என்று கருதிய மாணிக்கவாசகர் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

சிவபெருமான் மீது கொண்ட பக்தி :

சோழ நாட்டில் திறமை மிக்க குதிரைகள் கிடைக்கிறது என்று அறிந்த பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை அழைத்து இந்த விபரங்களை எல்லாம் கூறி குதிரைகளை வாங்கி வருமாறு கட்டளையிட்டார்.

அரசரின் கட்டளைப்படி பாண்டிய நாட்டில் இருந்து பொருள்களை எடுத்து குதிரை வாங்குவதற்காக கீழக்கடற்கரைக்கு சில காவலர்களுடன் சென்றார். மாணிக்கவாசகர் செல்லும் வழியில் சிவ முழக்கத்தால் ஈர்க்கப்பட்டு அந்த சிந்தனையிலேயே சென்று கொண்டிருந்தார். தற்போது, ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்படும் திருபெருந்துறையின் மரத்தடியில் அமர்ந்தார்.

அப்போது, சிவபெருமான் ‘ஞான குருவாய்’ அவதரித்து 999-மாணவர்கள் புடைய சூழ அமர்ந்திருந்தார். தனது குருவான சிவ பெருமானை கண்டதும் அவரது, பாதங்களில் விழுந்து வணங்கினார். பிறகு தன் நிலை மறந்து அந்த மாணவர் குழுவுடன் இணைந்து சிவபெருமானின் உபதேசங்களை பெற்றார். சிவபெருமானும் ஐந்து எழுத்து மந்திரம் “நமச்சிவாயா” என்னும் நற்றமிழ் மறையினை கூறி அருள் புரிந்தார். இதுவே,சிவபெருமானின் திருப்பெயர் ஆகும்.

கடவுள் கூறிய முதல் மந்திரம் “நமச்சிவாயா” என்னும் மந்திரமாகும். சிவபெருமானின் ஆசியை முழுவதும் பெற்ற மாணிக்கவாசகர் இறைப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

மாணிக்கவாசகர் என பெயர் வர காரணம்:

Manikkavasagar history in tamil: ஐந்தெழுத்தின் உண்மையை இறைவனின் அருளால் அறிந்த பிறகு தனித்தமிழ் மந்திரம் எனப்படும் திருவாசகப் பாடலை “நமச்சிவாய வாழ்க” என்று பாடத் தொடங்கினார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் “மாணிக்கம் போல்” ஜொலிக்கிறது என்று கூறி இன்று முதல் நீ “மாணிக்கவாசகர்” எனும் திருப்பெயரால் அழைக்கப்படுவாய் என்று ஆசீர்வதித்து அவ்விடத்தில் இருந்து மறைந்தார்.

அதன் பிறகு, மாணிக்கவாசகர் இறைவனின் ஆணைப்படி இறைப்பணி செய்யும் தொண்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு குதிரை வாங்க கொண்டு வந்த பொருட்களை எல்லாம் “திருப்பெருந்துறையில்” சிவனுக்கு சிறந்த கோவில் ஒன்றை காட்டினார். மீதமுள்ள பொருட்களை சிவனடியார்களுக்கு செலவு செய்தார்.

நரியை குதிரைகளாக மாற்றிய சிவபெருமான்:

இதை கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் பெரும் கோவமுற்று மாணிக்கவாசகரை பாண்டி நாட்டுக்கு வரும்படி உத்தரவிட்டார். இதனால், மாணிக்கவாசகரும் பாண்டி நாட்டிற்கு வந்தார். அவரிடம், குதிரை எங்கே என்று அரிமர்த்தன பாண்டியன் கேட்டார். இதற்கு, மாணிக்கவாசகர் எந்த விதமான பதிலும் அளிக்காத காரணத்தினால் பணத்தை எல்லாம் திருப்பித் தரும்படி கேட்டார் பாண்டிய மன்னன்.

இதனால், தன்னை காப்பாற்றுபடி கடவுளிடம் வேண்டிக் கொண்டார் மாணிக்கவாசகர். இதனால், கடவுள் அவரிடம் ஆவணி மூலத்தில் (பரி) குதிரைகள் வந்து சேரும் என்றும் கூறு என்று சொன்னார். இதனையே, மாணிக்கவாசகரும் குதிரைகள் ஆவணி மூலத்தில் வரும் என்று பாண்டிய மன்னனிடம் கூறினார்.

Manikkavasagar history in tamil: குதிரைகளை ஒற்றர்கள் மூலம் வாங்காத செய்தி அறிந்த அரசன் அரண்மனை காவலர்களை கொண்டு மாணிக்கவாசகரை கடுமையாக தண்டித்தார். இதனால், சிவபெருமான் ஒரு ஆவணி மூலத்தன்று நரிகளை எல்லாம் குதிரைகளாக மாற்றி அரசனிடம் ஒப்படைத்து மாணிக்கவாசகரை காப்பாற்றினார் ஆனால், மறுநாள் குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறி பெரும் துன்பத்தினை ஏற்படுத்தியது. இதனால், தன்னை ஏமாற்றிய மாணிக்கவாசகர் மேல் மன்னனுக்கு பயங்கரமான கோபம் ஏற்பட்டது.

வைகையில் வெள்ளப்பெருக்கு:

மன்னன் கொடுத்த பொன்னை எல்லாம் திருப்பித்து தருமாறு மாணிக்கவாசரை வைகை ஆற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு அரண்மனை காவலர்களிடம் கூறினார் பாண்டிய மன்னர். தனது பக்தரின் துன்பத்தைக் கண்டு மனம் வருந்திய சிவபெருமான் வைகை ஆற்றில் பெரும் வெள்ள பெருக்கை ஏற்படுத்தினார். இதனால், அதிகளவு வெள்ளப்பெருக்கு கரையை உடைத்துக் கொண்டு அதிக அளவில் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது.

இதைக் கண்டு பாண்டிய மன்னன் தனது நாட்டு மக்களிடம் கட்டாயம் வீட்டிற்கு ஒரு ஆள் வந்து இந்த கரையை அடக்க வேண்டும் என கட்டளையிட்டார். அரசனின் ஆணைப்படி வீட்டிற்கு ஒரு ஆள் வந்து அணையை அடக்க முற்பட்டனர். அப்போது ‘பிட்டு’ விற்கும் தொழிலை செய்து வாழ்க்கையை நடத்திய “வந்தி” என்னும் பெயர் கொண்ட ஒரு மூதாட்டி தன்னுடைய கரையை அடைக்க ஆள் இல்லாமல் சிவபெருமானிடம் வேண்டினாள். வந்தியின் வேண்டுதலை நிறைவேற்ற நினைத்த சிவபெருமான் தானே ஒரு கூலி ஆளாக வேடம் அணிந்து வந்தார். வந்தியின் பிட்டை தனக்கு கூலியை தருமாறு பெற்ற சிவபெருமான் கரைய அடைக்க கிளம்பினார்.

மண் சுமந்த சிவபெருமான்:

Manikkavasagar history in tamil: அதன் பிறகு கரையை அடைக்க ஈசன் மண்ணை வெட்டி கூடையில் எடுத்து தனது தலை மீது சுமந்து கொண்டு கூத்தாடியும், இசை பாடியும் வேலையை செய்து கொண்டிருந்தார். இதனால், வந்தியின் கரை மட்டும் அடைபடாமல் நீர் ஓடிக்கொண்டிருந்தது. அதனால், கோபம் கொண்ட பாண்டிய மன்னன் தன் கையில் இருந்த பிரம்பினால் வந்தியின் கூலி ஆளாக வந்த சிவபெருமானுடைய முதுகில் ஓங்கி அடித்தார். இதனால், தனது தலையில் இருந்த கூடையை கரையின் உடைப்பில் தூக்கி எறிந்தார்.

சிவபெருமான் அப்போது, அந்த கரை மலை போல் திடீரென உயர்ந்தது. அதே நேரத்தில் சிவபெருமான் மீது விழுந்த அடி அங்கு இருந்த எல்லா உயிர்களின் மீதும் விழுந்தது அது மட்டும் இன்றி தான் அடித்த அடி மன்னரின் மீதும் விழுந்ததைக் கண்டு பாண்டிய மன்னன் மிகுந்த அதிர்ச்சியோடு அவன் செய்த குற்றத்தை மன்னித்து அருள் படி சிவபெருமானிடம் வேண்டினார்.

அதன்படி, சிவபெருமானும் “பாண்டியனே! நீ கொடுத்து அனுப்பிய பொருளை எல்லாம் நமக்காகவே செலவிட்டார் வாதவூரார். நீ பரிகளை தரும்படி மாணிக்கவாசகரை வருந்தியதால் தான் நாம் நரிகளை பரிகளாக்கி மீண்டும் அவற்றை நரிகள் ஆக்கினோம். வைகை ஆற்றிலும் வெள்ள பெருக்கைச் செய்தோம். இனியாவது மாணிக்கவாசரின் பெருமையை அறிந்து வாழ்வாயாக” என்று மொழிந்தார்.

சிவபெருமானின் மொழி உரையை கேட்ட பண்டிய மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து மாணிக்கவாசரின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அரசனை மன்னித்து விடை பெற்றார் மாணிக்கவாசகர்.

ஊமை பெண்ணை பேச வைத்த அற்புதங்கள்:

மாணிக்கவாசகர், தில்லை மூவாயிரவருடன் ஆனந்தக்கூத்தனை வணங்கி அருள் பெற்றார். அதன்பிறகு, புத்தக மண்டபத்தை அடைந்தனர். தீயவர்களை பார்ப்பது தீயது என்று எண்ணிய மாணிக்கவாசகர் அவர்களுக்கு எதிரே ஒரு திரையிட சொல்லி அதன் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும், மறையோர், புலவர்களும் அவையில் ஒன்று கூடி இருந்தனர்.

அதன்பிறகு, சோழ மன்னன் மாணிக்கவாசகரை பணிந்து “புத்தர்களை வாதில் வென்று, நம் சமயத்தை நிறைவேறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறை செய்வது என்கடமை” என்று கூறி வேண்டிக்கொண்டார். பின்னர் மாணிக்கவாசகர் வாதத்தை தொடங்கினார்.

வாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்போது மாணிக்கவாசகர் எவ்வளவு உண்மைகளை கூறினாலும் அதை அனைத்தும் புத்த குருவின் செவிகளில் ஏறவில்லை. மாணிக்கவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வகையில் அமைந்தது. அதனை, கண்ட மாணிக்கவாசகர் கலைமகளை வேண்டி சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ ! இவர்கள், நாவை விட்டு விலகு வாயாக இது இறைவன் மீது ஆணை என்று கூறினார். அவர் கூறியது போல் புத்தகுருவும் அவர்கள் கூட இருந்தவர்களும் ஊமைகள் ஆகினர்.

இதனைக் கண்டு வியப்புற்ற சோழ மன்னன் மாணிக்கவாசகரை வணங்கி அவரிடம், “என் பெண் பிறவி முதல் ஊமையாக இருக்கிறார் அவளை பேசும் படி செய்தால், நான் உங்களுக்கு அடிமையாக இருப்பேன்” என்று கூறினார். மாணிக்கவாசகம் அதனை கேட்டு அந்த பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி பெண்ணே புத்தன் கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறு என்று கூறினார். அந்த பெண்ணும் அனைவரும் வியந்து பார்க்கும் படித்த புத்த குருவின் வினாக்களை மாணிக்கவாசகரே அந்த பெண்ணிடம் கேட்க அந்தப் பெண் அதற்கு விடை அளித்து பேசினால்

இதனைக் கண்ட சோழ மன்னர் மகிழ்ந்து மாணிக்கவாசரின் திருவடியை போற்றினார். சோழ மன்னன் திருநீறும், கண்டிகையும் பூண்டு மாணிக்கவாசகரை பணிந்து புத்த குருவும், மற்றவர்கள் மீண்டும் பேசும்படி செய்யுங்கள் ! என்று வேண்டினார் மாணிக்கவாசகரும் அவர்கள், மீது திருவருட்பாவையை செலுத்தினார்.

இவ்வாறு அனைவரின் ஊமையை நீக்கி பேசும் திறமை அளித்த மாணிக்கவாசரை கண்டு அனைவரும் தங்கள் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக்கொண்டனர். புத்த குருவும் அவரை சூழ வந்த அனைவரும் சைபர்களாக மாறினார். அதன்பிறகு, மாணிக்கவாசகர் திருக்கோவிலுக்கு சென்று சபாநாயகரை வணங்கினார். தவசாலையில் தங்கி இருந்த வேளையில் மாணிக்கவாசகர் திருப்படையாச்சி, திருப்படை எழுச்சி, அச்சோப் பத்து, யாத்திரை பத்து போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

பெருமான் திருவாசகம் கேட்டு எழுதியது || மாணிக்கவாசகரின் சிறப்புகள்

Manikkavasagar history in tamil: மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சிவபெருமான் ஒரு அந்தணர் வேடத்தில் மாணிக்கவாசகரை காண வந்தார். அப்போது மாணிக்கவாசர் நீங்கள் யார் என்று கேட்க நான் பாண்டிய நாட்டை சேர்ந்தவன் என்று கூறினார் சிவபெருமான். மாணிக்கவாசகருக்காக சிவபிரான் செய்த அருட்செயல் உலகம் எங்கும் பரவி வியந்து கூறப்படுகிறது. மாணிக்கவாசகரை பல தலங்களிலும் நீங்கள் பாடிய பாடல்களை முறையாக சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். மாணிக்கவாசகரும் அந்தணரை அருகில் அமர்த்தி தான் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் பல நாட்களாக கூறினார்.

அவைகள் அனைத்தையும் தன்னுடைய திருக்கரங்களால் எழுதி முடித்துவிட்டு பாவை பாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக என்று விரும்பி கேட்டார். அந்த வேண்டுகோளுக்கு இணங்கிய மாணிக்கவாசகர் இறைவனது திருவடியை போற்றும் இனிய “கோவையார்” என்னும் நூலை பாடினார். இதனை கேட்ட அந்தணர் அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார்.

இவற்றையெல்லாம் எழுதி முடித்ததும் திருவாசகத்தையும், திருக்கோவையும் தம் கையால் எழுதிய இறைவன். இந்நூல்களை உலகிற்கு சென்று சேர வேண்டும் என்று மனதில் நினைத்த இறைவன் ஓலைச்சுவடியின் முடிவில் “மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்” என்று கையொப்பம் இடும்படி கேட்டுக் கொண்டார்.

திருவாசக உட்பொருள்:

Manikkavasagar history in tamil: இவ்வாறு மாணிக்கவாசகர் கையெழுத்திட்ட ஏடுகளை திருச்சாத்திட்டு தில்லை சிற்றம்பலத்தில் பஞ்சாக்கரப் படியில் வைத்தார் இறைவன். காலையில் கோவிலின் இறைவனைபூஜை செய்வதற்காக வந்த அர்ச்சகர்கள் பஞ்சாகரப்படியில் ஏடு ஒன்று இருப்பதை கண்டு வியந்து அதை எடுத்து பார்த்தனர்.

அந்த ஏடுகளின் முடிவில் “மாணிக்கவாசகர் சொற்படி திருச்சிற்றம்பலம் உடையான்” என்று கையெழுத்து இருப்பதை கண்டு உடல் சிலிர்த்து இறைவன் திருவருளை பெறுவதற்கான நூல்களில் இது தலையானது என்று புகழ்ந்து இந்நூலை பாடிய மாணிக்கவாசகரை சென்று வணங்கினர்.

திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்தது என்ற நிகழ்ச்சியை மாணிக்கவாசகரிடம் தெரிவித்தார்கள். அப்போதுதான், வாதவூராருக்கு புரிந்தது நம்மிடம் உரையாடியது இறைவன் என்று எண்ணி இறைவனை வணங்கினார்.

அதன் பிறகு இந்நூலின் பொருள்களை நீங்களே விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அந்தணர்கள்
அதற்கு, மாணிக்கவாசகம் இதன் பொருளை “தில்லை சிற்றம்பலத்தில்” வந்து கூறுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு தில்லை சிற்றம்பலத்திற்கு வருகை புரிந்த மாணிக்கவாசகர் “இந்நூல் பொருள் இச்சபையில் எழுந்தருளி உள்ள ஆனந்த கூத்த பெருமானே ஆவான்” என்று கூறி அச்சபையில் எல்லோரும் காணும்படி மறைந்தார். இந்த அற்புதமான நிகழ்ச்சியை கண்டு வியந்த அனைவரும் மகிழ்ந்து மாணிக்கவாசரை தொழுது போற்றினர்.

மாணிக்கவாசகர் இறப்பு:

மாணிக்கவாசரின் வாழ்நாள் காலம் இன்று வரை சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை ஒவ்வொருவரும், தங்களது கருத்துக்களை நிலைநாட்டுவதற்காக பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறுகின்றனர்.

இவருடைய, ஆராய்ச்சிகளில் சரியாக கூறும் ஒரே செய்தி மாணிக்கவாசர் கடைச்சங்க காலத்திற்கு பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என கூறுகின்றனர்.

ஆனால், இந்த ஆராய்ச்சிகளை தொகுத்து திறம்பட ஆராய்ந்து மாணிக்கவாசகரின் காலம் கி.பி 3-நூற்றாண்டு என முடிவு செய்து, தருமை ஆதீன திருவாசக நூல் வெளியீட்டு விழாவில் மகாவித்துவான் திரு.தண்டபாணி தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்கவாசகர் ஆசிரியர் குறிப்பு:

மாணிக்கவாசர் இயற்பெயர்: திருவாதவூர் அடிகள்.

பெயர்: மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசகர் பெற்றோர்கள் பெயர் – மாணிக்கவாசகர்  தாய் தந்தை பெயர்: சம்பாத சரிதர், சிவஞானவதி அம்மையார்.

மாணிக்கவாசகர் பிறந்த ஊர்: திருவாதவூர், பாண்டியநாடு.

மாணிக்கவாசகர் சிறப்பு பெயர்கள் ||மாணிக்கவாசகர் வேறு பெயர்கள்:

தென்னவன் பிரம்மராயன், அருள் வாசகர், மாணிக்கவாசகர், பெருந்துறைப் பிள்ளை திருவாதவூர் அடிகள்.

மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள்:

திருவாசகம், திருக்கோவையார், போற்றித் திருவகவல்.

மாணிக்கவாசகரின் காலம்:

கி.பி 9-நூற்றாண்டு.

மாணிக்கவாசகர் என்பவர் யார்?

Manikkavasagar history in tamil: மாணிக்கவாசகர் என்பவர் சைவ சமய குறவர்கள் நால்வரில் ஒருவர் ஆவார். இவருக்கு, முன்னர் இருக்கும் மூவரும் தேவாரம் பாடல்களைப் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் “திருவாசகமும், திருக்கோவையார்” போன்ற நூல்களை பாடியுள்ளார். இவர், கி.பி 9-நூற்றாண்டில் வாழ்ந்த வரகுண பாண்டியன் காலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணிக்கவாசகர் பாட இறைவன் எழுதிய நூல் எது?

திருவாசக நூல் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை, இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவர். பன்னிரு சைவ சமய திருமுறைகள் “திருவாசகம்” எட்டாம் திருமுறையாக உள்ளது.

மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டு?

மாணிக்கவாசகரின் காலம் கி.பி 9-நூற்றாண்டு என்று கூறுகின்றனர். இவர், வரகுண பாண்டியன் காலத்தை சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர்.

மாணிக்கவாசரின் வாழ்நாள் காலம் இன்று வரை சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை ஒவ்வொருவரும், தங்களது கருத்துக்களை நிலைநாட்டுவதற்காக பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறுகின்றனர்.

திருவாதவூர் அடிகள் என்று அழைக்கப்படுபவர் யார்? || திருவாதவூரார் என பெயர் வர காரணம் என்ன?

மதுரை மாநகரில் மாணிக்கவாசகர் திருவாத ஊரில் தோன்றினார். இதனால், மாணிக்கவாசகருக்கு அவரது பெற்றோர்கள் “திருவாதவூர் அடிகள்” என்று பெயரிட்டனர். இந்த திருவாதவூர் என்பது ஒரு சிற்றூர் ஆகும். இருப்பினும், செந்தமிழ் நலங்கொழித்த சிறப்பான ஊர். புலனழுக்கு அற்ற அந்தணாளர் கபிலர் பிறந்தது திருவாதவூர் ஆகும்.

ஜி.யு.போப் கருத்து:

Manikkavasagar history in tamil: திருவாசகத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ‘ஜி.யு.போப்’ ஆவார். “உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தை பொருத்தல், இடையறா நிலைத்த பக்தி போன்ற பண்புகளுடன் நம் மனதை கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை” என்று மாணிக்கவாசரை பற்றி கூறியுள்ளார்.

மாணிக்கவாசகர் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள்:

• பிறவிலேயே ஊமையாக பிறந்த பெண்ணை பேச வைத்தது.

• சிவபெருமானே நரிகளை குதிரையாக கொண்டு வரும்படி செய்தது.

• மாணிக்கவாசரின் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே வந்து கேட்டு எழுதி பெருமைப்படுத்தியது.

• வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை அடைக்க ‘வந்தி’ என்னும் மூதாட்டிக்காக பாண்டிய மன்னனிடம் அடி வாங்கி சிவபெருமான் மண் சுமந்து கரையை அடைத்தது.

• எல்லோரும் காணத்தக்காத திருச்சபையில் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

இவை, அனைத்தும் மாணிக்கவாசகர் வாழ்வில் நடந்த அற்புதங்கள் ஆகும்.

மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்:

• மாணிக்கவாசகர் மதுரை மாநகரில் “திருவாதவூர்” என்னும் சிற்றூரில் பிறந்தார்.

• “திருவாசகம், திருக்கோவையும்” இவர் எழுதிய நூல்களாகும்.

• அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்.

• அரிமாத்திரன் பாண்டிய மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார்.

• சிவபெருமானின் மீது இருந்த மிகுந்த ஈர்ப்பு காரணமாக தன்னை ஆன்மீகத்தில் முழுமையாக ஏற்படுத்திக் கொண்டார்.

• பிறவிலேயே ஊமையாக பிறந்த பெண்ணை பேச வைத்து அற்புதப்படுத்தினார்.

• சிவபெருமானின் மீது கொண்ட அன்பின் காரணமாக 20-பாடல்களின் “திருவெம்பாவை” பாடியுள்ளார்.

• இறைவனே இவரிடம், வந்து இவர் பாடிய பாடல்களை தம் திருக்கரங்களால் எழுதி பெருமைப்படுத்தினார்.

• தென்னவன் பிரம்மராயன், அருள் வாசகர், மாணிக்கவாசகர், பெருந்துறைப் பிள்ளை திருவாதவூர் அடிகள் என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்.

• இவருடைய காலம் 9-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

Read Also: 12-ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு தமிழ்

tamilquotes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *