May Thina History in Tamil

May Thina History in Tamil – மே தினம் உருவான வரலாறு

May Thina History in Tamil – மே தினம் உருவான வரலாறு

May Thina History in Tamil

May thina history in tamil: நம் இந்தியாவில் சுதந்திர தினம், மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், உலக சுகாதார தினம், ஏன் முட்டாள் தினம் என ஏராளமான தினம் கொண்டாடப்படுகிறது. அதில், ஒன்று தான் மே-1 சர்வதேச தொழிலாளர் தினம். இந்த மே தினத்திற்கு என்று சில சிறப்புகளும், பல வரலாற்று நிகழ்வுகளும் உள்ளது அவற்றைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

மே தினம் உருவான வரலாறு || மே தின வரலாறு புத்தகம்

ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் உணவிற்கும், உடைக்கும், இருப்பிடதிற்கும் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தாளன். அது இன்று தொடர்ச்சியாக வளர்ந்து இப்போது உழைப்பு என்ற மூலதனத்தை பயன்படுத்தி உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து வாழ்கிறான். இதற்கெல்லாம், முக்கிய காரணம் உழைப்பு என்ற மூல தனம் ஆகும். ஆனால், இந்த உழைப்பின் மூலம் பலன் அடைந்தார்களா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த உலகம் முழுதும் எது செய்தாலும் அது ஒரு வேலையாகவே பார்க்கப்பட்டு, அதற்கு ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த ஊதியத்தின் மூலம் தான் மக்கள் வாழ்வில் அனைத்து விதமான நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இது போன்று மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும், கம்பெனிகளும், தொழிற்சாலைகளும் அதிக அளவில் உலகம் முழுவது இயங்கி வருகிறது.

என்னதான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தாலும் ஒரு சில நிறுவனங்களில் வேலை என்பது அடிமைத்தனமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகுதான், மனிதனின் வேலை நேரம் 8 – மணி நேர தான் என்றும், அடிப்படை ஊதியம் கட்டாயம் வழங்க வேண்டும், பெண்களுக்கு பணியிடத்தில் சரியான முறையில் உரிமைகள் வழங்க வேண்டும், வேலை பார்க்கும் இடத்தில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளிக்கு ஏதேனும் ஆகும் தருணத்தில் நிதி காப்பீடு என ஏராளமான உரிமைகளுக்கு வழங்க காரணமாக இருந்தது இந்த மே தின போராட்டத்தால் தான் ஆகும்.

1800-காலகட்டத்தில் தொழில்துறையில் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கட்டாயம் 20-மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டும், உழைப்புக்கேற்ற சரியான ஊதியம் வழங்காமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல பல வகைகள் துன்பப்படுத்தப்பட்டார்கள். இந்தத் துன்பங்களை எல்லாம் எதிர்த்து பலமுறை போராட்டங்கள் நடைபெற்றது. 1806-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “பிலடெல்பியா” நகரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் இதனை எதிர்த்து போராடிய நேரத்தில் அவர்களின் கடினமான வேலை பார்க்கும் மனநிலை உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.

தொழிலாளர்களின் எழுச்சி || May thina history in tamil essay

“பிலடெல்பியா” நகரத்தின் இயந்திர தொழிலாளர்கள் “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்று உருவாக்கிய சங்கம் தான் உலகத்தில் உருவாக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் ஆகும். இந்த சங்கம் ஆரம்பித்த 2-வருடங்களுக்கு பிறகுதான், இங்கிலாந்தில் பல தொழிற்சங்கங்கள் உருவாக ஆரம்பித்தது.

தொழிலாளர்கள் அனைவரும் 10-மணி நேரம் தான் வேலை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த பெருமை இந்த சங்கத்தை சேரும். இது போன்ற தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பலனாக ‘வேன் பியுரன்’ தலைமையில் அமெரிக்கா அரசாங்கம் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 10-மணி நேரம் வேலை நேரமாக அறிவித்தது. இதனை, தொடர்ந்து தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அவர்களின் வேலை நேரமும் 10-மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராடினார்கள். பின்பு அதுவும் நிறைவேற்ற பட்டது. இதன்பிறகு, பல்வேறு நாடுகளில் வேலை குறைப்பு நேரத்திற்கான போராட்டங்கள் நடைபெற்றது.

Read Also:- மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

மே தினம் உருவாக நடைபெற்ற போராட்டங்கள் || may day speech in tamil

• 1858-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் கட்டிடத் தொழிலாளர்கள் “8-மணி நேரம் வேலை, 8-மணி நேரம் பொழுதுபோக்கு, 8-மணி நேரம் ஓய்வு” என்ற கோரிக்கையை நிறைவேற்ற போராடி அதிலும் வெற்றி கொண்டனர்.

• அமெரிக்காவில் 8-மணி நேர வேலை வலியுறுத்தி போராட்டங்கள் 1884-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது இதுவே மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

• 1884-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் கனடா மற்றும் அமெரிக்கா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அதன் பிறகு அந்த மாநாட்டில் 1886-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் வேலை நாள் 8-மணி நேரமாக மாற்றப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது.

• இதன் பிறகு 1885-இல் நடைபெற்ற மாநாட்டில் முந்தைய மாநாட்டில் பேசப்பட்ட உறுதிமொழி பற்றி அதிக அளவில் பேசப் தொடங்கினார்கள். அதுமட்டுமின்றி, தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிக அளவு வளர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்தது.

• 1886-ஆம் ஆண்டு மே 1-ஆம்தேதி சிகாகோ நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வேலை நாள் 8-மணி நேரமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து போராடினார்கள். இதனால், போராடியவர்களை எல்லாம் கைது செய்தும், அடக்கு முறையை கையாண்டும் போராட்டத்தை அரசு கலைக்க முற்பட்டது.

• இந்த அடக்குமுறைகளை எல்லாம் எதிர்த்து மே 4-ஆம் தேதி “வைக்கோல் சந்தை சதுக்கம்” என்று அழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நடைபெற்ற கலவரங்களில் 7 -போலீஸ்காரர்களும், 4 – தொழிலாளர்களும் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

• 1886-ஆம் ஆண்டு முழுவதும் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டபடி அரசு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது.

• 1889-ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் அனைத்து நாடுகளிலும், அனைத்து நகரங்களிலும் உள்ள கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திறந்து வேலை நாளை 8-மணி நேரமாக மாற்ற அதிகார பூர்வமாக கூறி போராட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட தொழிலாளர் யூனியன்:

1918-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி சென்னை மாநகரத்தில் தொடங்கப்பட்ட “மெட்ராஸ் லேபர் யூனியன்” தான் இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட “ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு” ஆகும். இதனை, டி‌.வீரராகவன் எழுதிய “மேக்கிங் ஆப் மெட்ராஸ் ஒர்கிங் கிளாஸ்” என்ற ஆய்வு நூல் கூறுகிறது.

இதனால், தொழிலாளர்களின் கஷ்டமும், அவர்கள் படும் வேதனையும், அவர்களின் போராட்டமும், நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இந்த பிரச்சனைக்கு எல்லாம் நிரந்தர தீர்வு அரசியல் ரீதியாக மட்டுமே கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிக அளவில் தொழிலாளர் அமைப்புகளில் பணி புரிந்த சுப்பிரமணிய ஐயருக்கு ஒரு சிந்தனை ஏற்பட்டது.

இதனால், 1922-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் இயங்கி வந்த அலுமினிய தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தார்கள். இந்த போராட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்தியவர் சிங்காரவேலர் என்னும் கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.

இந்த சிங்காரவேலன் என்பவர் இதற்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகே மெரினா கடற்கரையில் அடிக்கடி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி கூட்டத்தை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதன் விளைவாக 1922-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவான்மியூரில் உள்ள சிங்காரவேலரின் இல்லத்தில் பிரிட்டிஷ் இந்திய காவல்துறை சோதனையை மேற்கொண்டது.

இந்தியாவில் மே தின கொண்டாட்டம் || May thina history in tamil pdf free download

இந்தியாவில் முதன் முதலில் 1923-ஆம் ஆண்டு தான் மே தினம் கொண்டாட சிங்கார வேலர் என்னும் சமூக ஆர்வலர் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். ஆனால், அதற்கு முன் 1923-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் “உலக நாடுகள் முழுவதும் தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டும்” என்று வலியுறுத்தி கூறியிருந்தார்.

கயா காங்கிரஸ் மாநாட்டில் சந்தித்த கம்யூனிஸ்ட் சிந்தனையை கொண்டு பல தலைவர்களின் ஈர்ப்பால், தொழிலாளர்கள் நலன் மீது கொண்டிருந்த பாசத்தாலும் செங்கோடியை ஏற்றி மே தின விழாவை கொண்டாட வேண்டும் என்று நினைத்தார் சிங்காரவேலர். திட்டமிட்டபடி வட சென்னைக்கு இன்றைய சென்னை மெரினா கடற்கரையிலும், தென் சென்னைக்கு திருவான்மியூர் கடற்கரையிலும் தொழிலாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாகவே மே தினம் முதன் முதலில் இந்தியாவில் நம் தமிழகத்தில் தான் சிங்காரவேலர் என்பவரின் தலைமையில் மெரினா கடற்கரையில் 1923-ஆம் ஆண்டு “செங்கொடியை” ஏற்றி கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் பொதுவுடமை நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த சிங்கார வேலன் தான் இந்த மேதினக் கூட்டத்தில் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டார் என்பதை “சிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்ற ஆய்வு நூல் குறிப்பிடுகிறது.

1923-ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக சென்னை மெரினா கடற்கரையில் அளவு கடந்து தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். இந்த கூட்டத்திற்கு எல்லாம் தலைமை தாங்கியவர் “தென்னிந்தியாவின் பொதுவுடமைவாதி” என அனைவராலும் அழைக்கப்படும் சிங்கார வேலனே ஆவர்.

அந்தக் கூட்டத்தில் சிங்காரவேலன் “லேபர் கிசான்” என்ற புதிய ஒரு கட்சியை தொடங்கியதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன்மட்டுமின்றி அந்த கட்சியின் கொள்கையையும் விளக்க அறிகையும் மக்களிடையே கூறினார். மேலும், அவர் உருவாக்கிய “லேபர் கிசான்” கட்சி காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்பாக செயல்படும் என்றும் அவர் மக்களிடம் தெளிவாக கூறினார்.

அதே நேரத்தில் திருவான்மியூர் கூட்டத்தில் கூடியிருந்த மக்களுக்கு லேபர் கிசான் கட்சியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த எம்.பி.எஸ் வேலாயுதம் தலைமையில் சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்கள் மக்களிடம் உரையாற்றி இந்தியாவின் முதல் மே தினத்தை கொண்டாடினார்கள்.

இந்த செய்தியை “தி இந்து” என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. கிட்டத்தட்ட 110-ஆண்டுகளுக்கும் முன்பு நடந்த இந்த மே தின போராட்டம் தான் தமிழகத்தில் செங்கொடி ஏற்றி கொண்டாடப்பட்ட முதல் மே தின விழாவாகும்.

மே தினம் இந்தியாவில் வெற்றிகரமாக கொண்டாட்டப்பட்ட பிறகு அதைப்பற்றி கல்கத்தாவுக்கு செய்தி ஒன்று அனுப்பப்பட்டது. அந்த செய்தியில் சென்னையில் மே தினத்தில் ‘லேபர் கிசான்’ கட்சி ஒன்று தொடங்கப்பட்டு அதுக்கு சிங்காரவேலர் தலைமை தாங்கினார். அதுமட்டுமின்றி மே தினத்தை விடுமுறையாக தினமாக அறிவிக்கவும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொழிலாளர்களின் விடுதலைக்கு உலக தொழிலாளர்களின் ஒற்றுமை கட்டாயம் தேவை என வலியுறுத்தப்பட்டது என்ற தகவல் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக “தி இந்து” என்ற நாளிதழ் 1923-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி ஒரு செய்தியை வெளியிட்டது.

மே தினத்தின் சிறப்புகள்:

• 1890-ஆம் ஆண்டு தான் முதல் முதலில் மே தினம் ஐரோப்பிய நாடுகளில் தான் கொண்டாடப்பட்டது.

• இப்பொழுது 80-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மே தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். இந்தியாவில் முதல் முதலில் ம.சிங்காரவேலர் என்பவர் மெரினா கடற்கரையில் 1923-ஆம் ஆண்டு செங்கொடியை ஏற்றி கொண்டாடினார்.

• இந்த மே 1-ஆம் தேதி “தொழிலாளர்கள் தினம் அல்லது உழைப்பாளர் தினம்” என அழைக்கப்படுகிறது.

• மே தின நாளின் நினைவை போற்றும் விதமாக 1959-ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் “உழைப்பாளிகள் சிலை” ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

• 1990-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள நேப்பியர் பூங்காவிற்கு “மே தினப் பூங்கா” என பெயர் மாற்றம் செய்து பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

• இந்த உலகம் ஒரு பம்பரம் போல் சுழல்வதற்கு காரணம் இந்த தொழிலாளர்களின் கடுமையான உழைப்புதான். உலகத்தில் மிகவும் புனிதமானது அயராது உழைக்கும் உழைப்பாளியின் உடம்பில் உள்ள வேர்வைத் துளிகள் ஆகும்.

மே தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? || மே1 தொழிலாளர் தினம்

தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 20-மணி நேரம் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது இதனால், அமெரிக்க தொழிலாளர்கள் உருவாக்கப்பட்ட “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற தொழிலாளர்களின் சங்கம் வேலை நேரத்தை 8-மணி நேரமாக மாற்ற வேண்டுமென தொடரப்பட்ட போராட்டமும், சிகாகோ நகரின் தியாகிகளின் தியாகம் தான் இன்று நாம் உழைப்பவர்களின் தினமான “மே தினம்” கொண்டாடுகிறோம்.

இதனால், மே 1-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் “தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம்” கொண்டாடப்படுகிறது.

சிங்காரவேலர் என்ன பேசினார்?

மே 1 உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் புனிதமான நாளாக கொண்டாட வேண்டும். இதனால், இந்தியாவில் நாம் உழைப்பாளர்கள் தினத்தை கொண்டாடி உலகில் இருக்கும் மற்ற தொழிலாளருக்கு நம்மளுடைய ஆதரவை கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உலகில் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக நாம் இன்னும் சில வருடங்களில் பெரும் கூட்டமாக மாறும் அளவுக்கு உருவாக வேண்டும் என்பதை இன்றே நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

மெட்ராஸ் மெயில் பத்திரிகையில் சான்று அளிக்கப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமே இந்த மே தினத்தை கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், லேபர் கிசான் என்ற கட்சி கடைக் கோடியில் சாதாரணமாக உழைக்கும் தொழிலாளர்களுக்காகவும் உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டுள்ளது.

இதுமட்டுமின்றி, லேபர் கிசான் கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பற்றி மக்களுக்கு விரிவான விளக்கங்களை கூறினார். அதன் பிறகு, கட்சியின் திட்ட அறிக்கையை தொழிலாளர்களின் முன்னிலையில் வாசித்து இந்தியாவின் முதல் மே தினத்தை கொண்டாடினார்.

1923-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தான்
“இந்தியாவின் முதல் மே தினம், இந்தியாவின் முதல் முறையாக செங்கொடி பயன்படுத்திய நிகழ்ச்சி மற்றும் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு” போன்ற முக்கியமான மூன்று நிகழ்வுகள் நடைபெற்றது.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் || உழைப்பாளர் தினம் கட்டுரை

• பிறந்த குழந்தை முதல் பெரியவர்களை இன்று அனைவரும் பயன்படுத்தும் பொருள்கள் எல்லாம் ஏதோ ஒரு உழைப்பாளி உழைப்பினால் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

• காலையில் நாம் எழுந்து பல் துலக்கும் பற்பசை முதல் இரவு நாம் தூங்கும் பாய் வரை எல்லாம் உழைப்பாளியின் உழைப்பினால் வந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

• ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார வளர்ச்சி அதிகளவில் சிறந்து காணப்படுவதற்கு அந்த நாட்டில் உழைக்கும் மக்களின் முயற்சியால் வந்தது.

• உழைப்பாளிகளின் உயர்வைப் மதிக்கும் விதமாக “உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லை” எனறு தமிழ் மொழியில் ரஜினி படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

• ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தேவைக்காகவும் பிறர் தேவைக்காகவும் கடுமையாக உழைக்கிறான் இந்த உழைப்பானது அனைவருக்கும் சமமான ஒன்றாகும். கரை வெட்டி அணிந்து வேலை பார்த்தாலும் கதர் சட்டை அணிந்து வேலை பார்த்தாலும் வேலை வேலை தான்.

• ஒவ்வொரு நாட்டிலும் வேலைக்கு ஏற்ப ஊதியங்கள் வழங்கப்படுகிறது. நம் நாட்டில் மட்டும் தான் குறைவான ஊதியம் வாங்குபவர்களை மதிக்காமல், உயர்வான ஊதியம் வாங்குபவர்களை மதித்து பார்க்கும் ஒரு கேவலமான மனநிலை பரவி உள்ளது.

• திருட்டு தொழில், பொய் கூறுதல், சட்டத்திற்கு புறமான செயல்களை மேற்கொள்ளுதல் இது போன்று எதுவும் செய்யாமல் இதைத் தவிர எந்த ஒரு வேலையை ஒரு மனிதன் செய்தாலும் அதை இந்த சமுதாயதம் உயர்வான வேலை தான் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் நிச்சயம் நினைத்து பார்க்க வேண்டும்.

• வாழ்க்கை என்னும் பயணத்தில் பல சாதனைகளை புரிவதற்கு கட்டாயமாக கடின உழைப்பு தேவை. பூமி சுற்றுவது நின்று விட்டால் உலகம் இயங்குவதும் நின்றுவிடும் அது போன்று தான் மனிதன் உழைக்க தவறும் வேளையில் வாழ்வில் சாதனைகளை படைக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *