Tamil Motivational Quotes
தன்னம்பிக்கையூட்ட கூடிய 50+ தமிழ் கவிதைகள் | Motivational Quotes In Tamil

தன்னம்பிக்கையூட்ட கூடிய 50+ தமிழ் கவிதைகள் | Motivational Quotes In Tamil

Motivational Quotes In Tamil – தன்னம்பிக்கை கவிதை வாழ்வில் எத்தகைய சூழ்நிலையிலும் நாம் முயற்சி ஒன்றே செய்தோமானால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அத்தகைய முயற்சிகளை அல்லது தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய முத்தான கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எண் | Motivational Quotes In Tamil |
1 | ஏமாற்றும் போது நினைவில் கொள் நிச்சயம் ஒரு நாள் நீயும் ஏமாற்றப்படுவாய் என்று…!! |
2 | நீ நல்லவனாக இரு கெட்டவனாக இரு அது முக்கியமில்லை. ஆனால் நம்புறவங்களுக்கு உண்மையா இரு..!! |
3 | பொய்யை உண்மை போல் பேசி வாழ்பவர், ஒருநாள் அந்த பொய்யாலையே வாழ்க்கையை இழப்பார்..!! |
4 | எந்த மிருகமும் அன்பைப் பெற்றுக் கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை, மனிதனைத் தவிர..!! |
5 | யாரும் என்னை ஏமாற்றினால் நான் ஏமாந்து விட்டதாக அர்த்தமில்லை, நான் அவர்களை அதிகமாக நம்பினேன் என்று அர்த்தம்…!! |
6 | மனதில் பட்டதை சொல்லும் பொழுது சில இடங்களில் பிரச்சினை முடிவுக்கு வருகிறது. சில இடங்களில் பிரச்சினை ஆரம்பமாகிறது.. |
7 | ஏமாந்து இருக்கும் பொழுது தான் சிந்திக்கிறோம் எத்தனை நாள் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று..!! |
8 | யாரையும் உடலாலும் மனதாலும் காயப்படுத்த வேண்டாம். இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காலம் உங்களை விட பழம் மிக்கது.. |
9 | நீ அடைய நினைக்கும் இலக்கை கல் வந்தாலும் சொல் வந்தாலும், கலங்காமல் நீ முன்னேறு, அனைவருக்கும் பதில் சொல்லும் முன் வெற்றி..!! |
10 | அவரவர் தேவைக்கு நம்மை பயன்படுத்தி கொள்வதை நாம் தான் பாசம் என்று தவறாக புரிந்து கொள்கிறோம்.. |
11 | உயர்ந்து பறக்கும்போது உதவும் உறவை விட, கீழே விழும் பொழுது தாங்கி பிடிக்கும் உறவே சிறந்தது.. |
12 | கோபத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. கோபம் தீர்ந்துவிடும் ஆனால் வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும். பிறர் மனதில் ஆறாத வலியாய்… |
13 | யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்து விடாதே. நாளை அது பட்டமாக பறந்தால் நீயும் சற்று நிமிர்ந்து தான் அதை பார்க்க வேண்டும்… |
14 | நமக்கு அனைத்தையும் கற்றுத் தருவது நம்முடைய வாழ்க்கை அல்ல. நாம் அதிகமாக நேசித்த ஒரு பொய்யான உறவு தான்… |
15 | நாம் தினம் தினம் எவ்வளவுதான் உதவி செய்தாலும் நன்றி கெட்டவர்கள் மனதில் நமக்கு மதிப்பே இருக்காது… |
16 | கடிக்கும் மிருகங்களோடு வாழ்ந்து விடலாம் நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது.. |
17 | பலரின் உறக்கம் இல்லாத இரவுகளுக்கு சிலரின் இரக்கம் இல்லாத துரோகமே காரணம்.. |
18 | பொய்யை உண்மை போல் பேசி வாழ்பவர் ஒருநாள் அந்த பொய்யாலேயே, தங்கள் வாழ்க்கையை இழப்பார்… |
19 | புதுசு வந்த பிறகு பழசுக்கு மரியாதை இல்லை ஒரு பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி.. |
20 | உரிமை இல்லாத இடத்தில் எதையும் எதிர்பார்ப்பது தவறு.. |
21 | கடவுள் கைவிட்டு விட்டதாக கவலைப்படாதீர்கள் கடைசியில் துரோகிகளை காற்று கொடுப்பது கடவுள் மட்டும் தான்.. |
22 | தடுக்கி விழும்போதுதான் உணர்ந்தேன் நான் யார் என்பதையும் இருந்தவர் யார் என்பதையும்.. |
23 | நான் இருக்கிறேன் என்று கூறி யாரையும் ஏமாற்றி விடாதே அந்த வலி மிகவும் கொடியது.. |
24 | மனசாட்சியை மதிக்கத் தெரியாத முட்டாள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டான், அவனுக்கும் கூட.. |
25 | இழுத்துப் பிடித்து கஷ்டப்படுவதை விட, விட்டுட்டு போறதை எவ்வளவு மேல் சில உறவுகளையும் கூடத்தான்.. |
26 | உன்னை நேசித்த உள்ளங்களுக்கு மட்டும் மனதில் இடம் கொடு.. உன்னை வெறுத்த உள்ளங்களுக்கு உன் நிழலில் கூட இடம் கொடுக்காதே.. |
27 | நீ பிறருக்கு செய்யும் துரோகம், உனது பிள்ளைகளுக்கு நீ சேர்த்து வைக்கும் பாவமாக மாறும். |
28 | அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம் திருத்தும். வாழ்க்கை என்னவென்று வலிகளால் உணர்த்தும்.. |
29 | பணம் இன்று வரும் நாளை வந்த வழியே சென்று விடும்.. ஆனால் பாசம் என்றும் நிலையானது.. பணத்துக்காக பாசத்தை விட்டு விடாதீர்கள் மீண்டும் கிடைப்பது கடினம் தான்.. |
30 | புரியாத அன்பு தொடர்ந்தாலும் ஒன்றுதான் முறிந்தாலும் ஒன்றுதான்.. |
31 | காயப்படுத்தும் இதயம் கல்லாக தான் இருக்கும் ஆனால் காயம் தாங்கும் இதயம் எப்பொழுதும் அன்பாகத்தான் இருக்கும்.. |
32 | பிறருக்கு கொடுக்கும் நிலை என்னிடம் இல்லை என்றாலும் பிறரை கெடுக்கும் மனம் என்னிடம் இல்லை.. |
33 | நன்றி மறப்பது நன்றன்று.. நன்றிகெட்ட மனிதர்களை அன்றே மறப்பது நன்று.. |
34 | யார் மீதும் அதிகமாக பாசம் வைக்காதீங்க.. அவங்க தெளிவாத்தான் இருப்பாங்க நாம தான் அவங்க மேல பைத்தியமாய் இருப்போம்.. |
35 | சில பேர் நன்றாகவும் அன்பாகவும் அக்கறையாகவும் பேசினால்.. தமிழ் பாசம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறார்கள் என்று கடைசியாக தான் புரியும்.. |
36 | துரோகங்கள் வலியை விட ஆச்சரியமாகத்தான் தெரிகிறது.. எப்படி இவ்வளவு சிறப்பாக நடத்தி ஏமாற்றுகிறார்கள் என்று.. |
37 | எவ்வளவுதான் மனதை வேதனைப்படுத்தினாலும் ஒருவரை மறக்கவோ, வெறுக்கவும் முடியவில்லை என்றால் அதுதான் உண்மையான அன்பு . |
38 | அவமானப்படுத்தியவர்களுக்கு வார்த்தையில் பதில் சொல்லாதே, உன் வாழ்க்கையை பதிலாக சொல். உன் தலை நிமிர நிமிர அவர்கள் தலை குனிந்து செல்வார்கள்.. |
39 | எந்த சூழ்நிலையிலும் எவரையும் நம்பாதீர்கள். இப்போது உள்ள மனிதர்கள் எல்லாம், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் துரோகம் இழைக்க கற்றுக் கொண்டார்கள்.. |
40 | யாருக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் தருகிறோமோ.. அவர்களிடம் நமக்கு முக்கியத்துவமே இல்லாமல் போய்விடுகிறது.. |
41 | நாம் என்னதான் ஓடி ஓடி உதவி செய்தாலும், சில சுயநல உறவுகள் எம்மை பார்த்து கேட்கும் ஒற்றைக் கேள்வி, “நீ என்னத்த பெருசா செஞ்சுட்ட” |
42 | நமக்கு பிடித்தவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் ஜெயித்து விடுகிறோம். ஆனால் அதே உண்மை அவர்களிடம் எதிர்பார்க்கும் போது தோற்று விடுகிறோம்.. |
43 | நிம்மதி இல்லை என்று வருத்தப்படாதே நல்லவர்களுக்கு என்றுமே அது கிடையாது.. |
44 | சிலர் உயரத்திற்கு ஏறி சென்றவுடன் ஏறி வந்த வலியை மறந்து விடுகிறார்கள்.. |
45 | யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இறுதியில் நம்மை குற்றவாளி ஆக்கி விட்டு அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். |
46 | நம்மை ஒதுக்க வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களிடமிருந்து நாமாகவே ஒதுங்கி விட வேண்டும். அதுவே நமக்கு மரியாதை. |
47 | நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல, அது துரோகம்.. |
48 | என்னதான் சிலருக்கு நாம் நெருங்கிய உறவாக இருந்தாலும், அவர்களுக்கு நெருங்கிய உறவு வரும் பொழுது நாம் யாரோ தான்.. |
49 | உங்களை உதாசீனம் செய்கிறார்கள் என்றால் நீங்கள் ஒதுங்கி விடுங்கள்.. அவர்களுக்கு வேறு புதிய உறவுகள் வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. |
50 | ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.. |
மேலும் படிக்க: Life Quotes In Tamil | வாழ்க்கை பற்றிய கவிதைகள்