Tamil Motivational Quotes
தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil 2023

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil
தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil 2023 | கவிதைகள் | Tamil motivational quotes | Motivational Tamil quotes | Best motivational quotes | தமிழ் கவிதைகள் | தன்னம்பிக்கை தமிழ் கவிதைகள் | நம்பிக்கை கவிதைகள் | உறவுகள் பற்றிய கவிதைகள்
- “நான் சிறந்தவன் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு, உங்களை நீங்கள் முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்”
- “உங்கள் செயல்களை செய்து அதில் வெற்றி பெறுவதற்கு முன்பு, ஒருபோதும் அதை வெளியில் தெரிவிக்க வேண்டாம்”
- “உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. அதை மற்றவர்கள் கையில் கொடுத்து விடாதீர்கள்”
- “வெளியில் நடப்பதை என்னால் எப்பொழுதும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எனக்குள்ளே என்ன செய்வது என்பதை, என்னால் எப்போதும் கட்டுப்படுத்த முடியும்”
- “வாழ்க்கையில் மிகச்சிறந்த விஷயங்கள் எல்லாம் பொறுமை மற்றும் கடின உழைப்பால் தான் வருகிறது”
- “எந்த ஒரு சூழ்நிலையிலும் நல்லதை மட்டுமே பார்ப்பதற்கு, உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்”
- “மற்றவர்கள் தங்களுடைய அறியாமையினால் செய்யும் தவறுக்காக, பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள், வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள், அறிவாளிகள் புறக்கணிக்கிறார்கள்”
Motivational Quotes In Tamil
- “பொறுமையாய் இருங்கள் சில நேரங்களில் நீங்கள் சிறந்ததை செய்வதற்கு முன்பு, சில மோசமானவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்”
- “வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, துக்கம், கடினமான நேரம், மற்றும் நல்ல நேரம் ஆகியவற்றின் வட்டமாகும். நீங்கள் கடினமான காலங்களை சந்திக்கிறீர்கள் என்றால், அடுத்தது நல்ல நேரம் வரும் என்று நம்புங்கள்”
- “எதையும் ஆராய்ந்து தீர்ப்பு சொல்ல வேண்டாம், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் எல்லாவற்றையும் மன்னியுங்கள், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் எல்லாவற்றையும் நேசியுங்கள், நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்”
- “எந்த ஒன்றாக இருந்தாலும் அதை நீங்கள் செய்வதற்கு தகுந்ததாக இருந்தால், அதை முழு மனதுடன் செய்யுங்கள்”
- “அவர்களை மன்னியுங்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ, சில கெடுதல்கள் செய்துவிட்டு அந்த செயலுக்காக உங்களிடம், வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்றாலும் அவர்களை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் ஆத்திரம், கோபத்தை பிடித்துக் கொண்டிருப்பது உங்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும்”
- “தவறான விஷயங்கள் தவறுதான்! அதை எத்தனை பேர் செய்தாலும்,
சரியான விஷயங்கள் சரிதான்!
அதை யாரும் செய்யாவிட்டாலும்”
- “உங்களை ஊக்குவிப்பவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்களை தொந்தரவு செய்பவர்கள் மீது அல்ல”
- “புன்னகை! அது உங்களை நன்றாக உணர வைக்கும். பிரார்த்தனை; உங்களை வலுவாக வைத்திருக்கும். அன்பு; அது வாழ்க்கையை ரசிக்க வைக்கும்”
- “எந்த ஒரு மிகப்பெரிய சாதனையும்! அது முடியும் வரை அது சாத்தியம் இல்லை என்று தான் தோன்றும்”
- “ஒரு நல்ல மனம் மற்றும் கனிவான இதயம்… உங்களுக்கு தேவைப்படுகிறது”
- “உங்கள் இதயத்தில் அமைதி இருக்கும்போது, எந்த ஒன்றும் உங்களை தொந்தரவு செய்யாது”
- “உங்களை நேசிப்பவர்களை பாராட்டுங்கள். உங்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள். உங்களை புண்படுத்தியவர்களை மன்னியுங்கள். உங்களை விட்டுப் பிரிந்தவர்களை மறந்து விடுங்கள்”
- உனக்கு தீமை செய்பவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு, அதிர்ஷ்டம் இருந்தால் உன் கண் முன்னே நடக்கும்.
- உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும். நேர்மை இருக்கும் இடத்தில் நடத்தை இருக்கும். அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்.
- வழியில் பெரிய வழி எது தெரியுமா.. நம் கூடவே இருந்து சிரித்து பேசி, பின் முதுகில் குத்தியது மட்டுமல்லாமல், ஒன்றும் செய்யாததை போல் நடித்துக் கொண்டிருக்கும் போலி உறவின் நெருக்கமே..
- பணம் இருந்தால் நீ கடவுள்,
குணம் இருந்தால் நீ குப்பை,
நடித்தால் நீ நல்லவன்,
உண்மை பேசினால் பைத்தியக்காரன், அன்பு காட்டினால் ஏமாளி,
எடுத்துச் சொன்னால் கோமாளி..
- வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும், சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல பக்குவ பட்டவன்..
- வாழ்க்கையில் அதிக பாடங்களை கற்றுக் கொள்ளலாம்..
புத்தகத்தில் இல்லை எம்முடன் பயணிக்கும் மனிதர்களிடம்..
- எத்தனை முறை நீ ஏமாற்றப்பட்டாலும், ஒருபோதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக் கொள்ளாதே, அவரவர் பலன் அனுபவிப்பார். நேர்மைக்கு என்றுமே மரணம் இல்லை. கவலையை விட்டு தள்ளு..
- திரும்பிப் பார் கஷ்டப்படுத்திய நாட்கள் எல்லாம், கற்றுக் கொடுத்த நாட்கள் என்று தெரியும்..
- நேர்மையாக இருப்பவர்களையும், உண்மையாக இருப்பவர்களையும் தான், வாழ்க்கை அதிகமாக ஏமாற்றி விடுகிறது..
- யாரோ ஒருவரின் சொல் கேட்டு, நம்மிடம் முகம் சுளிக்கும், எந்த ஒரு உறவும் நிச்சயம் நமக்கானவராய் இருக்க முடியாது..
- வசதி ஏழையாக இருந்தாலும், வைராக்கியத்தில் கோடிஸ்வரனாக இரு…
- கெட்டதுக்கே ஒரு காலம் வரும்போது, நல்லதுக்கு ஒரு காலம் வராமலா போய்விடும், காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்..
- முதுகில் குத்தி விட்டு கண்களை, துடைப்பவனுக்கு பெயர்தான் சொந்தக்காரன்..
- பலரின் உறக்கம் இல்லாத இரவுக்கு, சிலரின் இரக்கமில்லா துரோகமே காரணம்…
- இறக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை. ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் கடைசிவரை சாதிக்கப் போவதில்லை..
- நம் வாழ்க்கையில் காணாமல், போனவர்களை தேடலாம். ஆனால் கண்டுக்காமல் போனவர்களை, தேடவே கூடாது..
- உன் உண்மையான அன்பை பற்றி தெரியாதவர்களிடம், உன் கோபத்தை காட்டாதே. ஏனென்றால், அவர்களுக்கு தெரியாது. உன் கோபமும் ஒரு அன்பு தான் என்று..
- பலருக்கு வெகு தூரம் வந்த பிறகு தெரிகிறது. வாழ்வில் வந்த வழி தவறென்று..
- கோபத்தில் எடுத்தெரிந்து பேசும் சிலருக்கு ஒரு அரிய குணம் உண்டு. என்னவென்றால், அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள். பிறர் முதுகில் புத்தகம் மாட்டார்கள்.
- மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றுபவர்களை. ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதீர்கள், மறுபடியும் அவர்களை..
- பயந்தவன் தினம் தினம் கவலையோடு போராடுவான்..
துணிந்தவன் நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையோடு போராடுவான்..
- கோபப்படுபவர்களுக்கு பாசமும் அதிகம், ரோஷமும் அதிகம்
ஆனால் வேஷம் கிடையவே கிடையாது..
- சிலருக்காக சிலரை பிடிப்பது போல நடிப்பதும். சிலருக்காக சிலரை பிடிக்காதது போல் நடிப்பது தான் இன்றைய உறவுகள்..
- இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்க்கு கொடுங்கள்.. உங்களிடம் யாசகம் பெரும் அளவிற்கு கடவுள் ஏழை இல்லை..
- போலியான உபசரிப்புகளை விட உண்மையான திமிர் அழகானது..
- பெருந்தன்மையாக நடிப்பதை விட இயல்பான அகம்பாவம் மேலானது..
- நீ நீயாக இரு, பிடித்தவர்கள் நேசிக்கட்டும்.. பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்..
- நீ யாருக்கு அதிகம் உதவினாரோ, அவர்களிடம் கவனமாக இரு அவர்கள் தான் முதலில் உன் எதிரியாவார்கள்..
- பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள வேண்டாம். உங்களைப் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம். இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..