Nethaji Subhash Chandra Bose History in Tamil

Nethaji Subhash Chandra Bose History in Tamil – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு

Nethaji Subhash Chandra Bose History in Tamil – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு

Nethaji Subhash Chandra Bose History in Tamil

Nethaji Subhash Chandra Bose History in Tamil:- இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பெயரை கேட்டால் நம் நினைவுக்கு வருவது காந்தியடிகள் மட்டும் தான். ஆனால், மற்றொரு சுதந்திர போராட்ட வீரனாக மக்களால் அன்போடு அழைக்கப்படும் “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” பற்றி நாம் யாரும் அதிக அளவில் பேசுவதில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாபெரும் சுதந்திர போராட்ட தலைவராவார். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்று போர் நடத்தி அதற்காக இந்திய ராணுவத்தை தனிப்பட்ட முறையில் உருவாக்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர் தான் இந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

நேதாஜி வாழ்க்கை சுருக்கம் :

பெயர் சுபாஷ் – சந்திர போஸ்.

இயற்பெயர் – நேதாஜி.

பெற்றோர்கள் – ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி.

பிறப்பு – 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி,கட்டக் என்னும் இடத்தில் பிறந்தார்(ஒரிசா மாநிலம்).

மனைவி பெயர் – எமிலி ஷென்கல்.

மகள் பெயர் – அனிதா போஸ்.

இறப்பு – 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறப்பு || Biography of Nethaji Subhash Chandra Bose

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய முக்கிய தலைவர்கள் ஒருவர் இந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஜானகி நாத் போஸ்க்கும், பிரபாவதி தேவி தம்பதியினருக்கும் ஒன்பதாவது மகனாக பிறந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் எந்த மாநிலம் :

Nethaji Subhash Chandra Bose History in Tamil:-  இந்தியாவின் ஒரிசா(இன்றைய ஒடிசா) மாநிலத்தில் உள்ள கட்டாக் என்னும் இடத்தில் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவருடைய குடும்பம் ஒரு வங்காள இந்து பிரிவினை சார்ந்த குடும்பத்தில் ஆகும். சுபாஷ் சந்திர போஸிற்கு 8-சகோதரர்களும் 6-சகோதரிகளும் இருந்தார்கள். இவரது தந்தையின் குடும்பம் வங்காள மன்னர்களின் படைத்தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சராகவும் 27-தலைமுறைகள் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுகளே உடையதாகும்.

சுபாஷ் சந்திர போஸ் இளமைப் பருவமும் கல்வி காலமும் :

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தனது ஐந்து வயதில் கட்டாக்கில் உள்ள “பாப்டிஸ்ட் மிஷன்” என்ற ஆரம்ப பள்ளியில் 7-ஆண்டுகள் தனது ஆரம்ப கல்வியை பயின்றார். சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் பள்ளிகளில் முதல் மாணவனாகவே திகழ்ந்தார்.

தனது உயர்கல்வி படிப்பை கொல்கத்தாவில் உள்ள “ரேவன்ஷா” பல்கலைக்கழக கல்லூரியில் தொடங்கிய சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்,1913-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இரண்டாவது மாணவராக ‌ திகழ்ந்தார்.

Nethaji Subhash Chandra Bose History in Tamil:- அதன் பிறகு சுபாஷ் சந்திரபோஸ் “ஸ்காட்டிக்ஷ் சர்ச்” கல்லூரியில் சேர்ந்தார். 1918-ஆம் ஆண்டு பி.ஏ. தத்துவியில் பட்டம் பெற்றார். 1919-ஆம் ஆண்டு “கேம்பிரிட்ஜ் ஃபிட்ஸ் வில்லியம்” கல்லூரியில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.

இவரது, தாயார் அதிக தெய்வ பக்தி மிக்கவர். அதனால், சுபாஷ் சந்திர போஸின் சிறுவயதில் இருந்தே விவேகானந்தர் போன்ற ஆன்மீகவாதிகளால் அதையும் கவரப்பட்டு தாமும் ஒரு துறவியாக வாழ வேண்டுமென்று எண்ணினார். தனது 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேற சுபாஷ் சந்திரபோஸ் தனது ஆன்மீக வாழ்க்கைக்கான ஆசானை இரண்டு மாதங்கள் தேடி அலைந்தார்.

சுபாஷ் சந்திர போஸின் திருமண வாழ்க்கை :

Nethaji Subhash Chandra Bose History in Tamil:- இந்திய நாட்டின் விடுதலைக்காக வியன்னா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஐரோப்பா போன்ற பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சுபாஷ் சந்திர போஸ். இப்படி பயணம் செய்யும்போது கால்நடை மருத்துவரின் மகளான எமிலி ஷென்கல் என்பவரின் அறிமுகம் போஸிற்கு கிடைத்தது.

இவர்களுடைய சந்திப்பு சிறிது நாட்களிலேயே காதலாக மாறியது. 1937-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர், 1942-ஆம் ஆண்டு இவர்களுக்கு ‘அனிதா போஸ்’ என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட நேதாஜி :

இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையை சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாத நேதாஜி அவர்கள், தன்னுடைய நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

‘சி.ஆர்.தாஸ்’ என்பவரை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்ட சுபாஷ் சந்திரபோஸ், இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். பிரிட்டன் அரசு “வேல்ஸ்” என்னும் இளவரசனை 1922-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.

வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால் நேதாஜி “கொல்கத்தா தொண்டர்” படையின் தலைவராக பொறுப்பேற்று தன்னுடைய எதிர்ப்பினையும், கோபத்தையும் வெளிப்படுத்திய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களை ஆங்கில அரசு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1928-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தியின் முடிவை ‘தவறு’ என எதிர்த்து கூறினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இதனால், காந்திக்கும், சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளாத போஸ் இந்திய விடுதலைக்காக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் நேதாஜி.

1938-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அதில், தன்னுடைய கொள்கையை கூறிய போஸ் “நான் தீவிரவாதி ! தான் எல்லாம் கிடைக்க வேண்டும் அல்லது ஒன்றும் தேவையில்லை” என்பதுதான் என்னுடைய கொள்கை என தனது கொள்கையை வெளிப்படுத்தினார்.

பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆன நேதாஜி ரவீந்திரநாத் தாகூர் அழைத்து “நேதாஜி” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

நேதாஜி என்பதன் பொருள் : (மரியாதைக்குரிய தலைவர் என்று பொருள்)

1940-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டாம் உலகப்போர் மாபெரும் அளவில் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அந்த தருணம் தன்னுடைய இந்திய தாய் நாட்டை கொடுமைப்படுத்தி ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்த்துப் போரிட இதுதான் தகுந்த நேரம் என்று எண்ணிய நேதாஜி அவர்கள், 1941-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி மாறுவேடம் அணிந்து சிறையில் இருந்து தப்பினார்.

சிறையில் இருந்து தப்பியதும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக ஹிட்லரிடமிருந்து நேதாஜிக்கு அழைப்பு வந்தது. இதனை, சிறிதும் எதிர்பாராத நேதாஜி அவர்கள் அவருடைய அழைப்பை ஏற்று ஜெர்மனியில் உள்ள மாஸ்கோவே அடைந்தார்.

இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் எடுத்துக் கூறி அவருடைய உதவியை நாடினார் சுபாஷ் சந்திரபோஸ்.

நேதாஜி வீர வசனம் :

சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது ஹிட்லரின் புத்தகத்தில் ‘இந்தியர்கள் காட்டுமிராண்டிகள்’ என்று எழுதப்பட்டிருப்பதை கண்டு மிகவும் கோவமுற்றார். அதனை கவனித்த ஹிட்லர் இந்தியா சுதந்திரம் அடைவது மிகவும் கடினம் என்று மேலும் சுபாஷ் சந்திர போஸை கோபமடைய செய்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் தனது பொறுமையை இழந்த சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லரிடம் எனக்கு “எவனும் அறிவுரை கூறத் தேவையில்லை, அரசியல் சொல்லித் தரவும் தேவையில்லை” என்று கோபமாக ஹிட்லரிடம் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு உடனடியாக புறப்பட்டார். உலகிலேயே முதல்முறையாக தன்னிடம் ஒருவர் எதிர்த்துப் பேசியதை கண்டு ஹிட்லர் மிகவும் வியந்து போனார்.

இந்திய ராணுவத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு :

ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ஐரோப்பா போன்ற நாடுகளில் உதவியுடன் சுபாஷ் சந்திரபோஸ் பர்மாவில் இருந்தபடியே இந்திய தேசிய ராணுவ படை ஒன்றை உருவாக்கி 1944-ஆம் ஆண்டு ஆங்கிலேயன் எதிர்த்து போராடினார்.

ஆனால், இந்திய ராணுவ தேசிய படை ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை. தோல்வியை மட்டுமே சந்தித்தனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரிகள் ||Subhash Chandra Bose speech in Tamil

Nethaji Subhash Chandra Bose History in Tamil:-  இதனால், 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேதாஜி அவர்கள் வானொலி மூலம் இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இந்த “தற்கால தோல்வியால் மனதில் சோர்வினை அடையாதீர்கள்” என்று நம்பிக்கையே அவர்கள் மனதில் விதைத்தார். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் கட்டி வைக்கும் திறமை இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை “ஜெய்ஹிந்த்” என வானொலி மூலம் அறிவுறுத்தினார்.

அன்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறியபடியே சரியாக இரண்டு வருடங்களுக்கு பிறகு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீர மரணம் :

  • எனக்கு ரத்தம் கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என்று கூறிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி பயணம் மேற்கொண்ட விமானம் பர்மோசா தீவிற்கு அருகில் மாபெரும் விபத்தாகி சுபாஷ் சந்திர போஸ் இறந்து விட்டதாக ஜப்பானிய வானொலி நிறுவனம் அறிவித்தது.
  • ஆனால், இந்த செய்தியை இந்திய மக்களால் நம்ப முடியவில்லை. கடைசி வரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் ஒரு மர்மமாகவே புதைக்கப்பட்டது.
  • மத்திய அரசு 1992-ஆம் ஆண்டு இறந்தவர்களுக்காக கொடுக்கப்படும் “போஸ்துமஸ்” முறையில் இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • ஆனால், விருது வழங்கும் குழுவால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இறப்பை முழுமையான ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்க முடியவில்லை. எனவே, ‘உச்சநீதிமன்ற’தீர்ப்பின்படி இவ்விருது திரும்பி வாங்கப்பட்டது.
  • இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இன்றும் ஒவ்வொரு இந்தியன் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

நேதாஜி எழுதிய நூல்கள் :

• 1986 “பெரும் இந்திய புதினம்” என்ற புதினத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது.

• கே.எஸ்.சிறிவஸ்டா சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய நூலாகும்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய திரைப்படங்கள் :

1. 1950-ஆம் ஆண்டு “சமாடி” என்னும் இந்தி மொழி திரைப்படம் வெளியானது.

2. 1966-ஆம் ஆண்டு “சுபாஷ் சந்திரா” எனும் வங்காள மொழி திரைப்படம் வெளியானது.

3. 2002-ஆம் ஆண்டு “பகத் சிங்கின் கதை” இதில் போஸ் பற்றிய காட்சிகள் இந்தி மொழியில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

4. 2005-ஆம் ஆண்டு “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைக்கப்பட்ட கதாநாயகன்” எனும் இந்தி மொழி திரைப்படம் வெளியானது.

5. 2008-ஆம் ஆண்டு “சுபாஷ் சந்திர போஸ்” எனும் தெலுங்கு மொழி திரைப்படம் வெளியானது.

6. 2010-ஆம் ஆண்டு “சுப்பர்” எனும் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படம் வெளியானது.

Read Also:- காமராஜர் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *