18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு

Siddhar varalu in tamil – 18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு

Siddhar varalu in tamil – 18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு

18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு
Siddhar varalu in tamil

Siddhar varalu in tamil – 18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு:- 18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு: சித்தர்கள் என்பவர் நமது முன்னோர்கள் என சிலர் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் பழங்காலத்தில் பல வகையான இயற்கை மூலிகை மருந்துகளை கண்டுபிடித்து தீராத பல நோய்களையும் குணப்படுத்தி உள்ளனர். இது மட்டுமின்றி அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல நாட்கள் நோயின்றி வாழ்வதற்கான மூலிகை வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். அதில் முக்கியமாக 18 சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றில் பல வகையான அதிசயங்கள் நடந்துள்ளது அவற்றைப் பற்றி தெளிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் என்ற சொல்லின் பொருள் “சித்தி பெற்றவர்” என்பது ஆகும். சிந்தனை தெளிந்த தெளிவாக இருப்பவன் சித்தன் என்று சிலர் கூறுகின்றனர். கடவுளை காண துடிப்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த காலம் நிகழ் காலம் வரும் காலம் என முக்காலத்தையும் பழங்காலத்திலேயே உணர்ந்த அறிஞர்கள் தான் இந்த சித்தர்கள்.

இந்தப் பிரபஞ்ச ரகசியம் முழுவதும் அறிந்த பிரம்ம ஞானிகள் அதிலும் ஆசை, பாசம், மோகம், பந்தம் என உலகப்பற்றை முழுமையாக துறந்து பல சித்திகளை குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள் தான் இந்த சித்தர்கள்.

பதினெண் சித்தர்கள் யார்? || 18 சித்தர்கள் பெயர்கள்

1. அகத்தியர்.

2. போகர்.

3. திருமூலர்.

4. வான்மீகர்.

5. தன்வந்த்திரி.

6. இடைக்காடர்.

7. கமல முனி.

8. போத குரு.

9. கொங்கணர்.

10. கோரக்கர்.

11. குதம்பை சித்தர்.

12. மச்சமுனி.

13. பாம்பாட்டி சித்தர்.

14. பதஞ்சலி முனிவர்.

15. இராமத்தேவ சித்தர்.

16. சட்டைமுனி.

17. நந்தி தேவர்.

18. சுந்தரானந்தர்.

18 சித்தர்களின் ஜீவ சமாதிகள் || 18 சித்தர்களின் நட்சத்திரம்

1. அகத்தியர்:

பிறப்பு – 18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு: இந்தப் பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர் மற்றும் மூத்த சித்தர் அகத்தியர் என கருதப்படுகிறார். மார்கழி மாதம் “ஆயில்யம்” நட்சத்திரத்தில் பிறந்தவர். அகத்தியரின் குரு சிவபெருமான் ஆவார். தமிழ் சித்த மூலிகைகளை கண்டுபிடித்து மருத்துவ முறைகளை இந்த உலகிற்கு தெரியப்படுத்திய மகத்தான ஒரு மகான்.

தன்னுடைய கடுமையான தவத்தின் மூலம் பல சித்திகளை பெற்று திகழ்ந்தார். தமிழ் இலக்கிய விதிமுறைக்கு சான்றாக விளங்கும் “அகத்தியம்” என்னும் நூலை எழுதினார். இவருடைய ஆயுட்காலம் 4-யுகம், 48-நாட்கள் ஆகும்.

இறப்பு : முற்காலத்தில் “அனந்த சயன” திருத்தலத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக வரலாற்று சான்றுகள் கூறப்படுகின்றன. தற்போதுள்ள திருவனந்தபும்.

2. போகர்:

18-சித்தர்களின் இரண்டாவதாக கருதப்படுபவர் இந்த போகர். போகர் என்றாலே நம் நினைவுக்கு வருவது பழனி மலை முருகன் தான். ஏனென்றால், பழனி முருகப்பெருமானின் திரு உருவ சிலையை “நவபாஷாணங்களை” கொண்டு செய்தவர் இந்த போகரே ஆவார். இவர் வைகாசி மாதம் “பரணி” நட்சத்திரத்தில் தோன்றினார்.

இவரது குரு அகத்தியர் ஆவார். வைத்தியம் மற்றும் வேதியலில் சிறந்து காணப்பட்டார் போகர். போகர்-7000, போகர்-12000, சப்த காண்டம்-7000 போன்ற நூல்களை இயற்றி இந்த உலகிற்கு அறிவை அளித்தவர்.

இறப்பு: போகர் தனது கடைசி கால வாழ்க்கையை பழனி மலையில் முருகன் கோவிலுக்கு கிழக்கு புறம் ஜீவசமாதி அடைந்தார். போகரின் ஆயுள் காலம் 300-ஆண்டுகள், 18-நாட்கள் என்பதாகும்.

3. திருமூலர்:

திருமூலரின் குரு நந்திதேவர் ஆவார். நாயன்மார்கள் 63-பேர்களில் ஒருவராக புகழ் பெற்றவர் தான் இந்த திருமூலர். இவர் ‘மூலன்’ என்ற இடையனின் உடலுக்குள் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வீதத்தில் 3000-பாடல்களை பாடி ‘திருமந்திரம்’ எனும் நூலை இயற்றியுள்ளார். புரட்டாசி மாதம் “அவிட்டம்” நட்சத்திரத்தில் பிறந்தார்.

இறப்பு: சிதம்பரம் நடராஜ பெருமாள் கோவிலில் சமாதியானார் என்பது வரலாற்றுச் சான்றுகள் கூறப்படுகிறது. இவரது, ஆயுட்காலம் 3000-ஆண்டுகள், 13-நாட்கள் ஆகும்.

4. வான்மீகர்:

18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு:- வால்மீகர் நாரத முனிவரின் சீடராக கருதப்படுகிறார் “இராமாயண இதிகாசம்” என்னும் பெரும் நூலை இந்த உலகிற்காக அளித்தவர். புரட்டாசி மாதம் “அனுஷம்” நட்சத்திரத்தில் பிறந்தார்.

இறப்பு: வால்மீகி திருவையாறு எட்டுக்குடி என்று அழைக்கக்கூடிய ஊரில் சமாதியானார். இவரின், ஆயுள் காலம்-700 ஆண்டுகள், 32-நாட்கள் ஆகும்.

5. தன்வந்த்ரி:

தன்வந்திரி உயிர்களைக் காக்கும் கடவுள் திருமாலின் அம்சமாக கருதப்படுகிறார். ஆயுர்வேத சித்த மருத்துவ முறை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். ஐப்பசி மாதம் “புனர்பூசம்” நட்சத்திரத்தில் பிறந்தார்.

இறப்பு: தன்வந்திரி வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்தார். இவரது, ஆயுட்காலம் 800-ஆண்டுகள், 32-நாட்கள் ஆகும்.

6. இடைக்காடர்:

18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு:- இடைக்காடர் குருவாக “போகர் மற்றும் கருவூரார்” போன்றவர்களை ஏற்றுக்கொண்டார். புரட்டாசி மாதம் “திருவாதிரை” நட்சத்திரத்தில் பிறந்தார். இவர், இடைக்காடு என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். உலக இயல்புகளை, நிலையாமையை உணர்ந்து இறைவனை எப்படி அடைய வேண்டும் என்பதை பற்றி தெளிவாக இவரது பாடல்களில் பாடியுள்ளார்.

தாண்டவகோனே, கோனாரே, பசுவே, குயிலே போன்ற பாடல்கள் நாட்டு பாடல் மரப்பினை எடுத்துக்காட்டுகிறது.

இறப்பு: இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்தார். இவரது, ஆயுள் காலம் 600-ஆண்டுகள், 18-நாட்கள் ஆகும்.

7. கமலமுனி:

18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு:- கமலமுனி போகரின் சீடராக கருதப்படுகிறார். இவர், போகரிடம் இருந்து இருந்து பல சித்த முறைகளை கற்றுக்கொண்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். போகர் மற்றும் கருவூரார் ஆகியோரை தனது குருக்களாக ஏற்றுக் கொண்டார். வைகாசி மாதம் “பூசம்” நட்சத்திரத்தில் பிறந்தார்.

“முந்நூறு” என்ற மருத்துவ நூலையும், ‘ரேகை சாஸ்திரம்’ போன்ற நூல்களையும் கமல முனி இயற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இறப்பு: ஆரூரில் ஜீவசமாதி ஆனார். இவரது ஆயுட்காலம் 4000-ஆண்டுகள், 48-நாட்கள் ஆகும்.

8. கருவூரார்:

18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு:- கருவூரார் போகரின் சீடராக கருதப்படுகிறார். இவர், “பூசா விதி” என்னும் நூலை இயற்றியுள்ளார். சித்திரை மாதம் “அஸ்தம்” நட்சத்திரத்தில் தோன்றினார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் மிக பிரம்மாண்டமான அளவில் உருவானதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

இறப்பு: கரூரில் சமாதி அடைந்தார். இவரது, ஆயுள் காலம் 300-ஆண்டுகள், 42-நாட்கள் ஆகும்.

9. கொங்கணர்:

கொங்கணர் பல மகான்களை சந்தித்து ஞான உதயம் பெற்றவர். சித்திரை மாதம் “உத்திராடம்” நட்சத்திரத்தில் தோன்றினார். போகரின் சீடராக கருதப்படுகிறார். கடைக்காண்டம், ஞானம், குளிகை, திருகாண்டம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இறப்பு: கொங்கணர் திருப்பதியில் சமாதி அடைந்துள்ளார். இவரது, ஆயுட்காலம் 800-ஆண்டுகள், 16-நாட்கள் ஆகும்.

10. கோரக்கர்:

கோரக்கர் தத்தாத்ரேயர், மச்சமுனி, அல்லமா பிரபு போன்றோரை தனது குருக்களாக ஏற்றுக்கொண்டார். கார்த்திகை மாதம் “ஆயில்யம்” நட்சத்திரத்தில் தோன்றினார். மச்சமுனி அருளால் கோசாலையில் இருந்து தோன்றினார். அல்லமாத் தேவரிடம் அருள் ஞானம் பெற்றவர்.

இறப்பு: போயூர் என்ற இடத்தில் காலமானார். இவரின், ஆயுள் காலம் 880-ஆண்டுகள், 32-நாட்கள் ஆகும்.

11. குதம்பை சித்தர்:

குதம்பை சித்தர் அழுக்கு முனி சித்தரின் சீடராக கருதப்படுகிறார். ஆடி மாதம் “விசாகம்” நட்சத்திரத்தில் பிறந்தார். குதம்பை சித்தரின் பாடல்கள் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என அழைத்து பாடியுள்ளார்‌. இவர்,பாடிய பாடல்களில் தமக்குத்தானே உபதேசம் அளித்தது போல் அமைந்த பாடலாக சிறப்பு பெற்றுள்ளது.

இறப்பு: மாயவரத்தில் சமாதியானார். இவரது, ஆயுள் காலம் 1800-ஆண்டுகள், 16-நாட்கள் ஆகும்.

12. மச்சமுனி:

அகத்தியர், பிண்ணாக்கீசர், பசுண்டர் ஆகியவர்கள் மச்சமுனியின் குருக்கள் ஆவார்கள். ஆடி மாதம் “ரோகிணி” நட்சத்திரத்தில் தோன்றினார். இவர், பிண்ணாக்கீசரிடம் சீடராக இருந்தது பல உபதேசங்களையும் பெற்றார். கதை யோகம் தந்திர யோகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

இறப்பு: திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இவரின்,ஆயுட்காலம் 300-ஆண்டுகள், 62-நாட்கள் ஆகும்.

13. பாம்பாட்டி சித்தர்:

பாம்பாட்டி சித்தரின் குரு சட்டைமுனி ஆவார். ‘ஆடு பாம்பே’ என்ற பாடலை பாம்பை முன்னிறுத்தி பாடியதால் இவருக்கு “பாம்பாட்டி சித்தர்” என பெயர் வந்தது. சித்தராரூடம் என்ற நூலை எழுதியுள்ளார். கார்த்திகை மாதம் “மிருகசீரிடம்” நட்சத்திரத்தில் தோன்றினார்.

இறப்பு: மருதமலையில் சமாதி அடைந்துள்ளார். இவரின், ஆயிள் காலம் 123-ஆண்டுகள், 32-நாட்கள் ஆகும்.

14. பதஞ்சலி சித்தர்:

பதஞ்சலி சித்தரின் குரு நந்தி. “பதஞ்சலி யோக சூத்திரம்” என்ற அருமையான நூலை எழுதியுள்ளார். பங்குனி மாதம் “மூலம்” நட்சத்திரத்தில் பிறந்தார். ஆதிசேசனின் அம்சமாக தோன்றினார். பங்குனி மாதம் “மூலம்” நட்சத்திரத்தில் பிறந்தார்.

இறப்பு: ராமேஸ்வரத்தில் ஜீவசமாதி அடைந்தார். இவரின், ஆயுள் காலம் 5-யுகம், 7-நாட்கள் ஆகும்‌.

15. இராமதேவ சித்தர்:

இராமதேவர் சித்தர் இஸ்லாமிய மத கோட்பாடுகளால் அதிக அளவு கவரப்பட்டு அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மாசி மாதம் “பூரம்” நட்சத்திரத்தில் பிறந்தார். புலஸ்தியர், கருவூரார் ஆகியோர்களின் சீடராக கருதப்படுகிறார். தன்னுடைய ஞான சிந்தனையால் நபிகள் நாயகத்தின் தரிசனத்தை பெற்றார். இவர், எழுதிய பல நூல்கள் அரபு மொழியில் எழுதினார். ஒரு சமயம் போகர் இவருக்கு தரிசனம் அளித்தார். அதில், போகரின் மூலம் தாம் அறிந்தவற்றை தமிழ் நூல்களாக எழுதினார்.

இறப்பு: இவர், அழகர் மலையில் காலமானார். இவரது, ஆயுள் காலம் 700-ஆண்டுகள், 6-நாட்கள் ஆகும்.

16. சட்டை முனி:

சட்டைமுனி சிங்கள நாட்டில் பிறந்ததாக வரலாற்று புராணங்கள் கூறுகிறது. ஆவணி மாதம் “மிருகசீரிடம்” நட்சத்திரத்தில் பிறந்தார். இவர், போகரின் சீடராக கருதப்படுகிறார். வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் தொடர்பான “வாத காவியம்” என்ற நூலை எழுதியுள்ளார்.

இறப்பு: ஸ்ரீரங்கத்தில் சமாதி ஆனார். இவரின், ஆயுள் காலம் 880-ஆண்டுகள் 14-நாட்கள் ஆகும்.

17. நந்தீசுவரர்:

சிவசிவ என்று சொல்லியபடியே பிறந்ததால் இவருக்கு “சிவவாக்கியர்” என அழைக்கப்பட்டார். வைகாசி மாதம் “விசாக” நட்சத்திரத்தில் பிறந்தார்.வைத்தியம், வாதம், யோகம் மற்றும் ஞானம் பற்றிய பாடல்களை இயற்றி உள்ளார். இவரின், பாடல்கள் ‘சிவவாக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றது.

இறப்பு: கும்பகோணத்தில் சமாதி அடைந்தார். இவரின் ஆயுள் காலம் யாராலும் தெளிவாய் காணப்படவில்லை. கி.பி. 19-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது.

18. சுந்தரானந்தர்:

சுந்தரானந்தர் அகத்தியர் பூஜை செய்த சிவலிங்கத்தை சதுரகிரி மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். ஆவணி மாதம் “ரேவதி” நட்சத்திரத்தில் தோன்றினார். இவர், சட்டை முனியின் சீடராக கருதப்படுகிறார். ஜோதிடம் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர் அது தொடர்பான பல நூல்களை எழுதி உள்ளார்.

இறப்பு: மதுரையில் சமாதி அடைந்தார். இவரின், ஆயுட்காலம் 880-ஆண்டுகள் 14-நாட்கள்.

18 சித்தர்களின் மூல மந்திரம்:

1. அகத்தியர் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி’.

2. போகர் மூல மந்திரம்: ‘ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி’.

3. திருமூலர் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி’.

4. வான்மீகர் மந்திரம்: ‘ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி’.

5. தன்வந்த்ரி மந்திரம்: ‘ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி’.

6. இடைக்காடர் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி’.

7. கமலமுனி மந்திரம்: ‘ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி’.

8. கருவூரார் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி’.

9. கொங்கணர் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி’.

10. கோரக்கர் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி’.

11. குதம்பை சித்தர் மூல மந்திரம்:‌ ‘ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி’.

12. மச்சமுனி மந்திரம்: ‘ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி’.

13. பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி’.

14. பதஞ்சலி மந்திரம்: ‘ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி’.

15. இராமத்தேவர் மந்திரம்: ‘ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி’.

16. சட்டைமுனி மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி’.

17. சிவவாக்கியர் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி’.

18. சுந்தரானந்தர் மூல மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி’.

Read Also:-  சேரர்கள் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *