Surya namaskar benefits in tamil | சூரிய நமஸ்காரம் பயன்கள்

Surya namaskar benefits in tamil | சூரிய நமஸ்காரம் பயன்கள்
Surya namaskar benefits in Tamil : நமது உடலின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றாகும் . இதனால்தான் நம்ம முன்னோர்கள் முன்னரே இதை அறிந்து உணவில் ஆரம்பித்து உடற்பயிற்சி வரை என அனைத்து உடற்பயிற்சி வழிமுறைகளை கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளனர் . அந்த வகையில் முக்கியமான ஒன்று தான் சூரிய பகவான் முன் நின்று செய்யும் சூரிய நமஸ்காரம் .
சத்குரு கூறுவது :
அந்த ஒளியில், வெப்பத்தில் நாம் அனைவரும் பலன் பெறுகிறோம். பிரபஞ்சத்தின் இயல்பே அதுதான். மனிதனும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த வழியில் இருக்க அவன் விரும்பவில்லை. அப்படியிருக்க வேண்டுமென்று மனதில் நினைக்க மட்டுமே செய்கிறான். மற்றவர் முன்னிலையில் உயர்வாகத் தெரிவது எப்படி என்று தனக்குத்தானே சில எண்ணங்களை வகுத்துக் கொண்டு அதன்படி மட்டுமே வாழ்கிறான். இதனால் அவன் சிறிது மனநிறைவு அடைகிறான். இது ஒரு மிகச் சாதாரணமான வாழ்க்கை முறை.
சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன . அப்படிப்பட்ட உடற்பயிற்சியில் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதும் , அதை செய்யும் முறையைப் பற்றியும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
சூரிய நமஸ்காரம் பெயர்கள் – Surya namaskar 12 steps name in Tamil :
- பிராணமாசனம்,
- அஸ்த உட்டனாசனம்,
- 3.அஸ்தபாதாசனம்,
- அஸ்வ சஞ்சலாசனம்,
- துவி பாத அஸ்வானாசனம்,
- அஷ்டாங்க நமஸ்காரம்,
- புஜங்காசனம்,
- அத முக்த ஸ்வானாசனம்,
- அஸ்வ சஞ்ச்சலனாசனம்,
- அஸ்தபாதாசனம்,
- அஸ்த உட்டனாசனம்,
- பிராணமாசனம்.
சூரிய நமஸ்காரம் செய்யும் முறை :
பிரானாசனம் செய்முறை :
கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்கவும் . கைகளை தலைக்கு மேல் தூக்கவும். கைகளை ஒன்றாக இணைத்து உங்களது மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும் மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும்.
அஸ்த உட்டனாசனம் செய்முறை :
மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை மேலே தூக்கவும். கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும். மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும்.
அஸ்தபாதாசனம் செய்முறை :
மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடவும். மூட்டை தொட்டபடி இருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும்.
அஸ்வ சஞ்சலாசனம் செய்முறை :
மூச்சை உள் இழுத்தபடி உங்களது வலது காலை பின்னோக்கி வைக்கவும். அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும் .இதே நிலையில் ஒரு சில வினாடிகள் இருக்கவும்.
துவி பாத அஸ்வானாசனம் செய்முறை :
மூச்சை வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துச் செல்லவும். கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். இடுப்புப் பகுதி நன்கு உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும்.
அஷ்டாங்க நமஸ்காரம் செய்முறை :
மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை தரையில் படுமாறு வைக்கவும் .கால்கள் ,முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும் .இப்போது மூச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் .
புஜங்காசனம் செய்முறை :
மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும் .உங்கள் முதுகை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின் பக்கமாக வளைக்கவும். இதனை புஜங்காசனம் என்று அழைப்பர்.
அத முக்த ஸ்வானாசனம் செய்முறை :
மூச்சை வெளியே விட்டபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்தி மீண்டும் வளைவு தூண் அமைப்பை ஏற்படுத்தவும்.
அஸ்வ சஞ்ச்சலனாசனம் செய்முறை :
மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தபடி உயர்த்தவும். வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலே தூக்கி கைகளை நேராக வைக்கவும்.
அஸ்தபாதாசனம் செய்முறை :
வெளியே மூச்சு விட்டபடி வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும்.
அஸ்த உட்டனாசனம் செய்முறை :
மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளை பார்த்தபடி தலை இருக்க வேண்டும்.
பிராணமாசனம் செய்முறை :
முதலில் கூறிய படி பிராணமாசனம் நிலையில் மீண்டும் வணக்கம் செய்யும் நிலைக்கு வரவேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
- ரத்த ஓட்டத்தை சீராக்கும்,
- உடல் எடை குறைக்கும்,
- மாதவிடாய் காலத்தில்,
- நினைவாற்றல் அதிகரிக்கும்,
- சர்மம் பொளிவதற்கு,
- தசைகள் வலுவடையும்,
- நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும் :
- Surya namaskar benefits in Tamil :சூரியநமஸ்காரம் செய்வதால் நம்முடைய உடம்பில் ரத்த ஓட்டம் சீராக இயங்க வைக்கின்றது.
- அதனால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு விளங்குகின்றது .
- மேலும் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இதய துடிப்பு சீராக துடிக்க ஏதுவாக இருக்கின்றன.
உடல் எடை குறைக்கும் :
- benefits of Surya namaskar in Tamil : உடலின் எடையை குறைக்க சூரிய நமஸ்காரம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.
- உடல்பருமன் இருப்பவர்கள் செய்யவேண்டிய உடற்பயிற்சிகளில் மிக முக்கியமான ஒன்றுதான் சூரியநமஸ்காரம்.
- வயிறு ,தொடை , இடுப்பு , கழுத்து ஆகிய இடங்களில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறையும் .
- அதுமட்டுமில்லாமல் இந்த உடற்பயிற்சியை மேற்கொள்வதால் எலும்பு வளர்வதற்கு அதிகமாக உதவுகிறது . உடலின் உறுப்புகளுக்கு வலிமை தருகின்றது.
மாதவிடாய் காலத்தில் :
- Surya namaskar benefits in Tamil : மாதவிடாய் காலத்தில் பொதுவாகவே பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது என்னவென்றால் இந்த மாதவிடாய் சுழற்சி தான்.
- ஒருசில பெண்களுக்கு மாதவிடாய் வருவதில் தாமதம் ஏற்படும் அதனை குணப்படுத்த தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது .
நினைவாற்றல் அதிகரிக்கும் :
- benefits of Surya namaskar in Tamil :சூரிய நமஸ்காரத்தின் நன்மைகளில் வியக்க வைக்கும் ஒன்று தான் இந்த நினைவாற்றல் அதிகரிக்கும் சக்தி .
- நரம்பு மண்டலத்தை சீராக இயங்க வைப்பதற்கு சூரிய நமஸ்காரம் செய்வது மிக முக்கியமாகும் .
- நரம்புகளின் செயல்கள் சீராக இருக்கும் எனில் மூளையின் வளர்ச்சிக்கும் , நினைவாற்றலை உயர்த்தவும் உதவியாக உள்ளது.
சர்மம் பொளிவதற்கு :
- Surya namaskar benefits in Tamil : இது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, எனவே உங்கள் முகத்தில் ஆரோக்கியமான பிரகாசத்தை அளிக்கிறது.
- இது வயதான அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது.
- இந்த வரிசை முடி உதிர்தலையும், முடி நரைப்பதையும் தடுக்கிறது.
தசைகள் வலுவடையும் :
-
- benefits of Surya namaskar in Tamil :ஆசனங்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் செய்யப்படும்போது உங்கள் வயிற்று தசைகள் பலப்படுத்தப்படுகின்றன, அதாவது உங்கள் வயிறு உள்ளிட்ட உங்கள் முக்கிய தசைகள் ஒரு சிறந்த பயிற்சி பெறுகின்றன.
- தட்டையான மற்றும் நிறமான வயிற்றுக்கு இந்த பயிற்சிகளையும் முயற்சி செய்யலாம்.
நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும் :
- Surya namaskar benefits in Tamil : சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலுக்கு உயிர்நாடியாக இருக்கும் ஆக்சிஜன் எளிதாக கிடைக்கிறது .
- இதனால் நுரையீரல் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
- சீராக செயல்பட ஏதுவாக இருக்கின்றது .
- தைராய்டு மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு சீராக இருப்பதால் பதட்டம் மற்றும் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.
சூரிய நமஸ்காரம் யார் செய்யலாம் :
Surya namaskar benefits in Tamil: சூரிய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்குதல் என்று பொருள். இது பண்டைய காலம் முதலே சூரியனை வழிபடுதல் முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆசனம் பிராணாயாமம் மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைந்து பல்வேறு விதிகளில் உடல் பிரச்சனைகளில் எல்லைகளைக் கொண்டு ஒரு முழுமையான உடற்பயிற்சியாக சூரியநமஸ்காரம் உள்ளது. சூரிய நமஸ்காரம் பன்னிரண்டு ஆசனங்கள் ஒருங்கிணைந்த ஆசனம் உரையாகும். சூரிய நமஸ்காரம் சுவாசம் உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து. செய்யும் பயிற்சிமுறை சில காரணங்களால் உடல் பயிற்சியோ அல்லது யோகாவை செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறுவர். சூரிய நமஸ்காரத்தில் உள்ள ஆசனங்கள் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது .
சூரிய நமஸ்காரம் எவ்வளவு நேரம் செய்யலாம் :
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும் .இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.
நமஸ்காரம் எப்போது செய்ய வேண்டும் :
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும் .அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும் .
எச்சரிக்கை :
முதுகுப்புறத்தில் பிரச்சனை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும் . முதியவர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும்.