Swami Vivekananda History in Tamil

Swami Vivekananda History in Tamil – சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

Swami Vivekananda History in Tamil – சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

Swami Vivekananda History in Tamil

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு || Biography Swami Vivekananda :

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு சுருக்கம்

பிறப்பு – 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி.

பெற்றோர்கள் – விஸ்வநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி.

இயற்பெயர் – நரேந்திரநாத் தத்தா.

உடன் பிறந்தவர்கள் – மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர்.

பிறந்த இடம் – கல்கத்தா (மேற்கு வங்காளம்) இந்தியா.

இறப்பு : 1902-ஆம் ஆண்டு ஜீலை 4-ஆம் தேதி.

விவேகானந்தர் பிறப்பும் ஆரம்பகால வாழ்க்கையும் || Biography of Vivekananda in tamil

Swami Vivekananda History in Tamil:- சுவாமி விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தாவுக்கும், புவனேஸ்வரி தேவி அம்மையாருக்கும் மகனாய் பிறந்தார். இவருடைய தாய்மொழி வங்காளமாகும். இவருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் என இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.

சுவாமி விவேகானந்தருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. அதன் பிறகு தன்னுடைய பெயரை “சுவாமி விவேகானந்தர்” என மாற்றிக்கொண்டார்.

இளமைக் காலமும் கல்வியும் :

  • விவேகானந்தர் சிறுவயதில் இருந்து மிகச்சிறந்த நினைவாற்றலை கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி இசை மற்றும் இசைக்கருவிகள் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் ஈடுபாடும் இருந்ததால் சிறுவயதிலிருந்தே அதனை முறைப்படி தெளிவாக கற்றுக் கொண்டார். மேலும், இவருக்கு தியானத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது.
  • தனது ஆரம்பகால பள்ளி படிப்பை முடித்த விவேகானந்தர். 1879-ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநில கல்லூரியில் மேல்படிப்பிற்காக சேர்ந்தார்.
  • பின்னர், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார்.அப்போது அவர் மேல்நாட்டு தத்துவங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை கற்றறிந்தார்.
  • அதுமட்டுமின்றி,அச்சமயத்தில் அவர் மனதில் இறை நம்பிக்கையும், உண்மைகளையும் பற்றி பல சந்தேகங்கள் ஏற்பட்டது இது பற்றி பல பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

ராமகிருஷ்ணன் பரமஹம்சரும், விவேகானந்தரும் :

Swami Vivekananda History in Tamil:-  கல்லூரியில் தத்துவ மற்றும் ஆன்மீகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ள விவேகானந்தர் இறை நம்பிக்கை கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களில் ஒரு குழப்பத்தில் இருந்தார்.

இதைப்பற்றி இன்னும் ஆர்வமாக தெரிந்து கொள்ள விரும்பிய விவேகானந்தர் ராமகிருஷ்ணருடன் சந்திப்பு ஏற்பட்டது. அந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை நேரில் பார்த்தவர் என்று விவேகானந்தர் நண்பர்கள் அவரிடம் உன்னுடைய சந்தேகங்கள் அனைத்தையும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள் என்று கூறினார்.

விவேகானந்தர் எதையும் எளிதில் நம்ப மாட்டார் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அதன் முழுமையாக ஏற்றுக்கொள்வார். அதனால் விவேகானந்தர் ராமகிருஷ்ணன் பரமஹம்சரிடம் நீங்கள் கடவுளை நேரில் பார்த்தீர்களா என்று தனது சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்கத் தொடங்கினார். அது மட்டுமில்லாமல் அவருக்கு சில சோதனைகளை கொடுத்தார் அதன் பின்னரே ராமகிருஷ்ணன் பரமஹம்சர் நம்ம தொடங்கினார். இதனால் தன்னுடைய குருவாக ராமகிருஷ்ணன் பரமஹம்சரை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவரை முழுமையாக நம்ப தொடங்கினார்.

துறவியாக விவேகானந்தர் :

Swami Vivekananda History in Tamil:-  1886-ஆம் ஆண்டு தன்னுடைய குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்ததும் விவேகானந்தர் மற்றும் சில சீடர்கள் துறவியாக மாறினார்கள். இவர்களின் முதன்மை நோக்கமாக இந்தியா முழுவதும் நான் அறிவினை வெளிப்படுத்தும் நோக்கமாக இருந்தது.

இதனால், இந்திய மக்கள் நிலையினை பற்றி விவேகானந்தர் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டார். இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் மனநிலையும் அவர்களைப் பற்றி முழுமையாக விவரங்களையும் தெரிந்து கொண்டார்.

இந்த சமயம் மக்கள் அனைவரும் ஆங்கிலேய அரசிடம் அடிமைப்பட்டு இருந்தது. இதனால் பெரிதும் மனம் உடைந்து போனார் விவேகானந்தர். அதற்காக, அவர் பல சொற்பொழிவுகளை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் ஆறுதலாக இருந்தது.

1892-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்கு சென்ற விவேகானந்தர் அங்கே கடலின் நடுவில் உள்ள பாறையின் மீது உட்கார்ந்து மூன்று நாட்கள் ஆழ்ந்த தியானம் மேற்கொண்டார். அவர் தியானம் செய்யப்பட்ட பாறை விவேகானந்தரின் நினைவிடமாக இன்றளவும் தமிழக அரசால் பராமரிக்கப்படுகிறது.

வெளிநாடுகளின் உலக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர் :

Swami Vivekananda History in Tamil:-  விவேகானந்தர் வெளிநாடுகளில் நடக்கும் உலக மாநாட்டில் கலந்து கொள்வதாக தனது சீடர்களுடன் உரையாடினார்.

• அதன்படியே 1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமய சார்பாக கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார் விவேகானந்தர்.

• அதன் பிறகு அதே ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அந் நாட்டு மக்களால் பெறும் வரவேற்பை பெற்றது.

• 4-ஆண்டு காலம் பல்வேறு மேலை நாடுகளுக்கு சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார். அது மட்டும் இன்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

• நியூயார்க் மற்றும் லண்டன் நாடுகளில் வேதாந்த மையங்களை உருவாக்கினார்.

இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் :

  1. பல நாடுகளில் சொற்பொழிவு ஆற்றிய விவேகானந்தர் மீண்டும் 1897-ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
  2. அப்போது கொழும்பு நகரில் இருந்து கல்கத்தா வரை அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பேச்சுக்கள் இவை, அனைத்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட இந்திய மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
  3. உலக அரங்கில் இந்து மதத்தின் முன்னேற்றத்திற்காக தனது சொற்பொழிவுகளால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.

இந்தியாவில் ராமகிருஷ்ணா நினைவு மடம் அமைத்தல் :

Swami Vivekananda History in Tamil:- சமூக சேவை என்பது கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும் என்று உணர்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள், அதனை அடைய 1897-ஆம் ஆண்டு “ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பை தொடங்கி அதன் சிந்தனைகளின் விளக்குகளையும் முறைப்படி நிறுவினார்.

அடுத்து ஒரு 2-ஆண்டுகள் கழித்து கங்கை நதிக்கரையில் பேலூரில் “ஸ்ரீ ராமகிருஷ்ணர்” இயக்கம் மடத்தை தொடங்கினார்.

சுவாமி விவேகானந்தர் இரண்டாவது முறையாக மேலை நாடு பயணம் மேற்கொள்ளுதல் :

சுவாமி விவேகானந்தர் அவர்கள் மீண்டும் 1899-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

1900-ஆவது ஆண்டு வரை மேல்நாட்டு பயணத்தில் சுற்றுப்பயணம் சென்ற விவேகானந்தர் தனது சொற்பொழிவுகளால் மக்களின் மனங்களில் தைரியமான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தர் இறப்பு :

மேல்நாட்டு சுற்றுப்பயணம் முடித்து இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1902-ஆம் ஆண்டு ஜூலை 4-தேதி தனது 39-வயதில் பேலூரில் அவர் நிறுவிய “ஸ்ரீ ராமகிருஷ்ணா” மடத்தில் காலமானார்.

சுவாமி விவேகானந்தரை பற்றிய சில வரிகள் :

• 1863 – ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

• 1879 – ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ரெசிடென்சி கல்லூரியில் பயின்றார்.

• 1880 – ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவ பாடம் பயின்றார்.

• 1886 – ஆம் ஆண்டு தனது குருவாக ராமகிருஷ்ணர் மறைவிற்குப் பின் அவரது வாரிசாக சுவாமி விவேகானந்தர் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

• 1890 – ஆம் ஆண்டு மேலை நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.

• 1892 – ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு சென்றார்.

• 1893 – ஆம் ஆண்டு சிகாகோ உலக மத மாநாட்டில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.

• 1897 – ஆம் ஆண்டு “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பை தொடங்கினார்.

• 1899 – ஆம் ஆண்டு “ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை” கங்கை நதிக்கரையில் பேலூரில் நிறுவினார்.

• 1899 – 1900 மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

• 1902 – ஆம் ஆண்டு பேலூரில் அவரால் உருவாக்கப்பட்ட “ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில்” ஜூலை 4-ஆம் தேதி அன்று காலமானார்.

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் :

• உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

• கடவுள் இருந்தால் அவரை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லை ன்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நல்லது.

• உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும், இரவிலும் உன் முன் நிறுத்து.அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.

• நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்.

• இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

• இளைஞர்களே ! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது.

• வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

• சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.

• என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

• நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை உடையவன் ஆகிறாய்.

• நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *