Thanthai Periyar History in Tamil

Thanthai Periyar History in Tamil – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

Thanthai Periyar History in Tamil – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

Thanthai Periyar History in Tamil

Thanthai Periyar History in Tamil:- இந்திய சீர்திருத்தத்திற்காகவும், ஜாதியை ஒழிப்பதற்கும், பெண் விடுதலைக்காகவும் மிகவும் அயராது போராடிய தமிழகத்தின் மிக முக்கியமான வீரர் தான் இந்த ‘ஈரோடு வெங்கடப்பா ராமசாமி’. அவரைப் பற்றி முழுமையாக இத்தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

பெயர் – ஈரோடு வெங்கடப்பா ராமசாமி

பெற்றோர்கள் – வெங்கட்ட நாயகர், முத்தம்மாள் என்கிற சின்னத் தாய்.

உடன் பிறந்தவர்கள் – கிருஷ்ணசாமி என்ற சகோதரரும், கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாய் என்ற இரண்டு சகோதரிகளும்.

பெரியார் பிறந்த ஊர் மற்றும் பிறந்த தினம் :

பிறந்த வருடம் – 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

மனைவியின் பெயர் – நாகம்மை (1933), மணி அம்மையார் (1948-1973).

சிறப்பு பெயர்கள் – ஈ.வே.ராமசாமி பகுத்தறிவு பகலவன், “வைக்கம் வீரர்” மற்றும் தந்தை பெரியார்.

இறப்பு – 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, அகவை (94).

பெரியாரின் பிறப்பு || Biography of Periyar

Thanthai Periyar History in Tamil:- 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் வெங்கட்ட நாயக்கர், சின்னத்தாயம்மை என்ற தம்பதியினருக்கு மகனாகய் பிறந்தார். இவருக்கு, கிருஷ்ணசாமி என்ற சகோதரரும், கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாய் என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

இவரின், குடும்பம் ஒரு வணிக குடும்பமாகும். இவர்களின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

பெரியாரின் இளமை காலமும் பள்ளி படிப்பு:

பெரியார் தனது பள்ளி படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திவிட்டார். அதற்கு மேல் கல்வி கற்க விருப்பம் இல்லாத காரணத்தினால் தன்னுடைய தந்தையின் வணிகத்தில் ஓரளவு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பெரியாரின் திருமண வாழ்க்கை :

Thanthai Periyar History in Tamil:-  பெரியார் தனது 19-வயதில் நாகம்மை என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரின் புரட்சிக்கும் போராட்டங்களுக்கும், முழுவதுமாக ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இணைந்து பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

திருமணமான இரண்டு வருடங்கள் கழித்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஐந்து மாதங்களிலேயே அந்த பெண் குழந்தை இறந்துவிட்டது.

பெரியார் என்று அழைத்தவர் யார் ?

நாயக்கர் என்று சொல் இருந்த இடத்தில் பெரியார் என்று சொல்லை முதன் முதலாக சேர்த்து ஈ.வே.ராமசாமி பெரியார் என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் ‘திரு.பி.சிதம்பரம் பிள்ளையே’ ஆவார்.

பெரியாரின் அரசியல் வாழ்க்கை || பெரியார் வரலாறு புத்தகம் :

  • 1919-ஆம் ஆண்டு இராமசாமி அவர்கள் தனது வணிக தொழிலை முழுமையாக விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.
  • காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன் தான் வைத்த முக்கிய பதவிகளான ஈரோடு நகராட்சி தலைவர் பதவியை முழுவதுமாக ராஜினாமா செய்து விட்டு தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
  • அது மட்டுமல்லாமல், காந்தியின் வழியில் கதர் ஆடைகளை மட்டுமே உடுத்தினார். உறுப்பினர்களையும், கதர் ஆடையை உடுத்த சொல்லி கேட்டுக்கொண்டார்.
  • 1921-ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற கல்கடை மறியலில் ஈடுபட்டதற்காக ராமசாமி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறதண்டனை அனுபவித்தார். இந்த கல்லு கடை மறியலில் அவரது மனைவியும் மற்றும் அவர் தங்கையும் கலந்து கொண்டனர்.
  • 1922-ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம், மது குடித்தல் சட்டங்களை ஈடுபட்ட வரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே ஆண்டு சென்னை மாநகரில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • இதன் காரணமாக திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் அரசு பணிகளிலும், கல்வியிலும் இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன் நிறுத்தினார். ஆனால், அப்போது இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், 1925-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு பெரியார் முழுமையாக வெளியேறினார்.

வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்:- 

Thanthai Periyar History in Tamil:-  பெரியாருக்கு காந்தியின் கொள்கையில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. இதன் காரணமாக கேரளாவில் வைக்கம் என்னும் சிற்றூரில் அரசின மக்கள் என கருதப்படும் ‘தலித்’ மக்களும், ஈழவர்களும் கோவில்கள் இருக்கும் வீதிகளிலும் நடக்கவும், கோயிலுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால், இதனை எதிர்த்து 1924-ஆம் ஆண்டு டி.கே.மாதவன் காந்தியின் வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டத்தில் நாடு எங்கும் உள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியாரும் கலந்து கொண்டார். இதன் விளைவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய மனைவி நாகம்மையாரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். என்னதான் பெரியார் கைது செய்யப்பட்டு இருந்தாலும், காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.

இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலமாகத்தான் தன்னை பெரியார் அவர்களுக்கு “வைக்கம் வீரர்” என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார் ?

Thanthai Periyar History in Tamil:-  1925-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களால், சுயமரியாதை இயக்கம் என்று ஒரு இயக்கம் நிறுவப்பட்டது. “மூட பழக்க வழக்கங்களை சமூகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை” முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட தொடங்கியது.

தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை, பெண்கள் சுதந்திரம் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தார்.

சுயமரியாதை இயக்கம் பல்வேறு கடமைகளை அறிமுகப்படுத்தியது.

• ஆணும், பெண்ணும் சமம். அவர்கள், வேறுபாடு இன்றி சரி சமமாக வாழும் முறையை பின்பற்ற வேண்டும்.

• சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.

• இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை தடுத்து குடும்ப கட்டுப்பாட்டை 1920-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியது.

• கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் “தேவதாசி” முறையையும் குழந்தை திருமணத்தையும் முழுமையாக தடை செய்தது.

• சுயமரியாதையாளர்கள் பிராமணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.

• இதைவிட முக்கிய கொள்கையாக அரசு நிர்வாக பணி, கல்வியில் இட ஒதுக்கீடு முறையை கடைபிடிக்காத மதராசு அரசு நிர்வாகத்தை 1928-ஆம் ஆண்டு வலியுறுத்தியது.

இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் :

Thanthai Periyar History in Tamil:-  1937-ஆம் ஆண்டு ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு “இந்தி மொழி” கட்டாய மொழியாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டது.

இதனை, எதிர்த்து 1938-ஆம் ஆண்டு தந்தை பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், பெரியார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பல பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1931-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பிறகு தந்தை பெரியார் “நிதிகட்சியின்” தலைவராக நியமிக்கப்பட்டார். தந்தை பெரியார் தலைமையில் நிதி கட்சியின் செல்வாக்கு மிகவும் பெரும் வளர்ச்சியினை பெற்றது‌. இதனை விரும்பாத படித்த உறுப்பினர்கள் பெரியாரின் கீழ் செயல்பட விருப்பம் இல்லாமல் கட்சியில் இருந்து விலகினர்.

பெரியார் திராவிட கழகம் – Thanthai Periyar History in Tamil:

1944-ஆம் ஆண்டு நிதி கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பெரியார் அவர்கள், நிதி கட்சியின் பெயரை “திராவிடர் கழகம்” என்று மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திராவிட கழகத்தின் முக்கிய கொள்கைகளாக சமூகத்தில் பரவி கிடந்தது தீண்டாமை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறை மறுப்பு, பெண்ணுரிமை மற்றும் பெண் கல்வி போன்றவற்றை வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் சமூக இயக்கமாக செயல்பட்டது. “கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்” என்பதை திராவிட கழகத்தின் கொடி ஆகும்.

பெரியாருக்கும், அண்ணாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு :

  • பெரியாரின் திராவிட கழகத்தின் கொள்கையாக சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு,மூட நம்பிக்கையை அகற்றுதல், கடவுள் மறுப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தால் திராவிட கழகத்தை அரசியல் கட்சி மாற்ற பெரியார் முடிவு செய்யவில்லை.
  • ஆனால், அண்ணாதுரை அவர்கள் மத்திய அரசின் இணக்கமாக இருந்து கொண்டு அதிகமான அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் பெரும் அக்கரை காட்டி வந்தார். இதனால், அண்ணாதுரையுடன் பெரியாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • இதனால், 1948-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி ராமசாமி அவர்கள் தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை திருமணம் செய்ததாக காரணம் கூறி கட்சியில் இருந்து அண்ணாதுரை அவர்கள், கட்சியில் இருந்து விலகினர்.
  • அண்ணாதுரை கட்சியை விட்டு விலகும் பொழுது தனக்கு அரசியல் யுக்திகளை கற்றுக் கொடுத்த ஆசானை விட்டு பிரிவதை நினைத்து மனம் உடைந்து போனார். அதன் பிறகு தி.மு.க என்ற தனிக்கட்சியை அண்ணாதுரை அவர்கள் உருவாக்கினார்.
  • தனது ஆசானுக்கு உதவும் வகையில் அண்ணாதுரை அவர்கள், பெரியாருக்காக திமுக கட்சியின் தலைவர் பதவி என்றும் காலியாகவே இருக்கும் என்று கூறினார்.
  • அண்ணாதுரையின் இறப்பிற்கு பின்னர், பெரியாரின் ஆசியுடன் திரு.மு.கருணாநிதி அவர்கள் தி.மு.க கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

பெரியார் கொள்கைகள் :

1952-ஆம் ஆண்டு விநாயகர் உருவ பொம்மைகளை உடைத்து மத மூடநம்பிக்கை எதிராக போராட்டத்தை நடத்தினார்.

1956-ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் இந்து கடவுளான ராமனின் திருவுருவப் படத்தை எதிர்த்து போராடின பெரியார் அவர்களை கைது செய்தது சிறையில் அடைத்தனர்.

1973-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் பெரியார் கடைசியாக ஒரு கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தில் சாதிமுறையையும், இழிவு நிலையையும் ஒலித்துக் கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்த பாடுபட வேண்டும் என்று பேசி தனது கடைசி உரையை முடித்தார்.

பெரியாரின் இறப்பு :

Thanthai Periyar History in Tamil:-  சமூகத்திற்காக பல நன்மைகளையும் தொண்டுகளையும் செய்த மக்களால் அன்போடு “பகுத்தறிவு பகலவன்” என்று அழைக்கப்பட்ட பெரியார் அவர்கள், 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி தனது 94-வது வயதில் காலமானார்.

பெரியாரின் சிறப்பு பெயர்கள் :

1. 1973-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி “யூனஸ்கோ நிறுவனம்” பெரியாரை “புத்துலக தொலைநோக்காளர்”, “தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்”, “சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை” எனப் பாராட்டி விருது வழங்கியது.

2. பகுத்தறிவு பகலவன்.

3. வைக்கம் வீரர்.

4. தந்தை பெரியார்.

5. ஈ.வே.ராவுக்கு “பெரியார்” என்னும் பட்டம் வழங்கியவர் பெண் போராளியான ‘மீனாம்பாள்’ ஆவார்.

பெரியாரைப் பற்றி சில வரிகள் :

• 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

• பெற்றோர்கள் – வெங்கட்ட நாயக்கர், சின்னத்தாயம்மை.

• 1892-ஆம் ஆண்டு தனது தந்தையின் வணிகத் தொழிலில் ஈடுபட்டார்.

• 1898-ஆம் ஆண்டு நாகம்மையை திருமணம் செய்தார்.

•1902-ஆம் ஆண்டு கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடன் சேர்ந்து விருந்து உண்டார்.

• 1904-ஆம் ஆண்டு பெரியார் மற்றும் நாகம்மை தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.

• 1909-ஆம் ஆண்டு தங்கையின் மகளுக்கு கைமைத் திருமணம் நடத்தி வைத்தார்.

• 1994-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.

• 1929-ஆம் ஆண்டு ஐரோப்பிய ராசியா மற்றும் மலேசியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.

• 1949-ஆம் ஆண்டு மணியம்மையை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்தார்.

• 1977-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி தனது 94வது வயதில் காலமானார்.

தமிழகத்தில் பெரியாரின் நினைவு சின்னங்கள் :

1. தமிழ்நாடு அரசு ஈ.வே.ராமசாமியின் நினைவை போற்றும் வகையில் அவர் ஈரோட்டில் வாழ்ந்த இல்லத்தை பெரியார் – அண்ணா நினைவு இல்லமாக மாற்றி உள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் அங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

2. கேரள மாநிலத்தில் தந்தை பெரியார் போராடிய ‘வைக்கம்’ என்னும் இடத்தில் பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

3. அதுமட்டுமின்றி, பெரியார் அவர்கள் உட்கார்ந்து நிலையிலான 4 – அடி திருஉருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

4. ஏறத்தாழ 400 – பேர் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் மற்றும் நூல் நிலையம் உள்ளது.

பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

தந்தை பெரியார் எழுதிய நூல்களில் மிகவும் புகழ் பெற்றது பெண் ஏன் அடிமையானால் ! என்ற நூல் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. சமூகம் சார்ந்த வாசிக்க விரும்புவோருக்கு முதல் நூலாக அறிமுகப்படுத்தக்கூடிய இந்த நூல், சமூகத்தில் நிலவிய அறிவுக்குப் பொருந்தாத சமத்துவம் இல்லாத மூட ன் நம்பிக்கைகள் மீது அதிர்ச்சி அளிக்கும் விதமான மாற்று கருத்துக்களை முன் வைத்தது.

பெரியார் பொன்மொழிகள் :

• வாழ்க்கை என்பது அவனவனுக்கு என்று கருதக் கூடாது…! மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

• உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் தேவையில்லை.

• உருவில் மனிதனாகவும் செயலில் மிருகமாகவும் இருப்பதாய் மாற்றி மனித தன்மையுடைய மனித சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம்..!!!

• கடவுளுக்கும் மரணம் வரும் மனிதனுக்கு தன்னம்பிக்கை வரும்போது…!!!

Read Also:- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *