Thirunelveli History in Tamil

Thirunelveli History in Tamil – திருநெல்வேலி வரலாறு

Thirunelveli History in Tamil pdf – திருநெல்வேலி வரலாறு

Thirunelveli History in Tamil

Thirunelveli History in Tamil: இந்தியாவில் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம் தான் இந்த “திருநெல்வேலி” ஆகும். இந்த திருநெல்வேலி உருவான வரலாறு, அதன் செல்வ செழிப்பு மிக்க இயற்கை அழகுகள் மற்றும் பாரம்பரிய கலாசார முறைகள் போன்றவற்றை இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

திருநெல்வேலி உருவான வரலாறு || Thirunelveli history in tamil essay

பழங்காலத்தில் ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய, விஜயநகர நாயக்க மன்னர்கள் போன்ற பல்வேறு மன்னர்களின் வம்சங்களால் இந்த திருநெல்வேலி மாவட்டம் ஆனது ஆட்சி செய்யப்பட்டது. இந்த திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாறு மிகவும் சுவாரசிய மற்றும் பல வரலாற்று சாதனை கொண்டுள்ளது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி செய்த போது இது சென்னை மேயரின் ஒரு பகுதியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வைத்த “செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை” மற்றும் “கே.காமராஜ்” போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பிறந்த பகுதியாகவும் இருந்தது.

1890-ஆம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் கிழக்கிந்திய கம்பெனியால் “திருநெல்வேலி” என்னும் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,876.06 ச.கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி “திருநெல்வேலி உருவான” தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி || Thirunelveli history in tamil wikipedia

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது பழங்கால தமிழர்கள் எவ்வித நாகரிகத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பது இந்த உலகிற்கு தெளிவாக தெரிந்தது.

பண்டைய தமிழர்களின் நாகரிகங்கள், பழக்கவழக்கங்கள், தொழில் செய்த திறமை, வேளாண்மை போன்ற பல நாகரிகங்களின் சிறப்பை இந்த அகழ்வாராய்ச்சியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பொருளாதாரம்:

• கோதுமை, நெய், முந்திரி மற்றும் சர்க்கரை போன்றவற்றால் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஒரு சுவையான உணவாக பார்க்கப்படும் “இருட்டுக்கடை அல்வாவுக்கு” இந்த திருநெல்வேலி மிகவும் சிறந்த இடமாகும்.

• உலக நாடுகள் முழுவதும் இருக்கும் மக்களை ஈர்க்கும் வகையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இந்த திருநெல்வேலியில் உள்ளது.

திருநெல்வேலியின் முக்கிய சுற்றுலா தலங்கள் || Thirunelveli history in tamil in english

1.குற்றாலம் நீர் வீழ்ச்சி:

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் இந்த இயற்கை நிறைந்த மூலிகைகள் கலந்த நோய்களை குணமாக்கும் இந்த குற்றாலம் அருவி இந்த திருநெல்வேலியில் பாய்கிறது. இதன், காரணமாக இது “தென்னிந்தியாவின் ஸ்பா” என்று அழைக்கப்படுகிறது.

2. மணிமுத்தாறு நீர் வீழ்ச்சி:

இந்த மணிமுத்தாறு அருவியானது திருநெல்வேலியில் இருக்கும் இரண்டாவது அழகிய அருவியாகும். இந்த இடத்திற்கு செல்லும் ஏராளமான மக்கள் மிகுந்த மன அமைதியுடனும், இயற்கை காட்சிகளை ரசித்து இயற்கையுடன் கலப்பது போல் எண்ணி மகிழ்கின்றனர். அந்த அளவு இயற்கை வளம் செல்வ செழிப்பாக உள்ள இடமாக கருதப்படுகிறது.

3. நெல்லையப்பர் கோவில்:

முதன்மை கடவுளான சிவபெருமானின் பெருமைமிக்க புகழ்பெற்ற ஒரு கோவிலாக இந்த நெல்லையப்பர் கோவில் மக்களால் அறிய அளவில் தரிசிக்கப்படுகிறது.

இதன், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்ப கலைகள் அனைத்தும் மிகவும் புகழ்பெற்றது. ஏனெனில், இதில் பல அதிசயங்களும் பார்க்கும் மக்களை ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

4. அகத்தியர் நீர்வீழ்ச்சி:

அகத்தியர் மலையில் இருக்கும் இந்த அருவியானது மிகவும் பிரம்மாண்டமான மலையில் இருக்கும் அருவியாகும். இந்த மலைதான் சித்த வைத்தியத்தில் புகழ்பெற்ற “அகத்திய சித்தர்” தவம் புரிந்த மலை ஆகும்.

5. முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்:

திருநெல்வேலியில் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதியில் அமைந்துள்ள களக்காடு மற்றும் முண்டந்துறை வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளி மான்கள், சிங்கவால் குரங்கு, புலிகள், யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பல வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களின் சரணாலயமாக காணப்படுகிறது.

6. திரிகூடர் மலை:

இவற்றையெல்லால் விட முக்கியமானது திரிகூடர் மலை இந்த மலையின் இயற்கை தோற்றமும், செல்வ செழிப்பும் பார்ப்பவரின் கண்ணை கவர்ந்து ஈர்க்கும் அளவிற்கு அழகாக தோற்றமளிக்கும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள்:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகளில் மாணவர்கள் சிறந்து விளங்க உயர்கல்விகள் சிறந்து விளங்கக்கூடிய பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளது.

இந்தத் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏறக்குறைய அரசு பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கால்நடை கல்லூரி, ஆராய்ச்சி கழகம், அரசு சட்டக் கல்லூரி போன்ற ஏராளமான தொழில் சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி, தொழில்முறை கல்வி கற்றுக் கொடுக்கும் மையமாக தமிழ்நாட்டில் கருதப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் பெயர்கள்:

1. ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி:

இது தொழில்நுட்பம் மற்றும் பொறியியலில் சிறந்து விளங்க கூடிய இளங்களை கல்வி வழங்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும்.

இதைத் தவிர திருநெல்வேலியில் அறிவியல் கலை, சட்டம், வணிகம் போன்ற பலவகையான கல்வி துறைகளை வழங்கக்கூடிய அளவில் மிக அதிக அளவில் கல்லூரிகள் காணப்படுகிறது.

2. செயின்ட் சேவியர்ஸ் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி:

இந்தக் கல்லூரியிலும் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கும் ஒரு தனியார் கல்லூரி ஆகும்.

3. பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி:

அறிவியல் மற்றும் பொறியியலில் சிறந்து விளங்க கூடிய கல்வி நிறுவனமாக இந்த பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி சிறந்து விளங்குகிறது. இதுவும் ஒரு தனியார் கல்லூரி ஆகும்.

4. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்:

தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதிய “மனோன்மணியம் சுந்தரனார்” பெயரில், அறிவியல், கலை, வணிகம், வரலாறு, கணினி தொழில்நுட்ப முறை போன்ற பல்வேறு துறைகளில் இளங்களை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மாநில பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.

5. திருநெல்வேலி மருத்துவ கல்லூரி:

மருத்துவத்துறையில் மாணவர்களை தங்களை மற்றும் முதுகலை துறைகளில் சிறந்த முறையில் உருவாக்குவதில் முக்கிய பங்கு வைப்பது இந்த அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். 6-மருத்துவக் கல்லூரிகளும், 7-பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளது.

திருநெல்வேலியில் பிறந்து பெருமை சேர்த்த வீரர்கள்:

• இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவரான “கப்பலோட்டிய தமிழன்” வா.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த ஊர் தான் இந்த திருநெல்வேலி.

• 12-ஆழ்வார்களில் நம்மாழ்வார் மற்றும் பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்கள் பிறந்த ஊர் இதுதான்.

• திரிகூடராசப்பகவிராயர்.

• கவிராச பண்டிதர்.

• குமரகுருபரர்.

• வீரபாண்டிய கட்டபொம்மன்.

• வாஞ்சிநாதன்.

இது போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும், புலவர்களும் இந்த திருநெல்வேலி சீமையில் தான் பிறந்து இந்திய நாட்டிற்காகவும், தமிழில் புலமையை உலகிற்கு உணர்த்தவும் தங்களது உயிரை நீத்தனர்.

ஜி.யு.போப், வீரமாமுனிவர், கால்டுவெல் போன்ற வெளிநாட்டு அறிஞர்கள் தமிழ் மொழியின் மீது அன்பு கொண்டதற்கு காரணமாக இருந்தது இந்த திருநெல்வேலி தான்.

திருநெல்வேலி சிறப்பு:

• திண்டுக்கல் என்றால் முதலில் நாம் நினைவிற்கு வருவது “பூட்டும், கம்பீரமான மலைக்கோட்டை” தான் அது போல திருநெல்வேலி என்றால் தமிழகத்தில் உள்ள அனைவரின் மனதில் தோன்றும் ஒரே அடையாளம் திருநெல்வேலி “இருட்டுக்கடை அல்வா” மட்டும் தான்.

• திருநெல்வேலியில் முதன்மையாக சிறப்பு பெற்றது இந்த “இருட்டுக்கடை அல்வா”தான்.

• திருநெல்வேலியை சுற்றி நெல் வயல்கள் ஒரு வேலி போல் சூழ்ந்து காணப்படுவதால் இது “திருநெல்வேலி” என பெயர் பெற்றதாக பழங்கால புராணங்கள் கூறுகிறது.

• தற்போது திருநெல்வேலி மாவட்டம் ஆனது “நெல்லை” என அழைக்கப்படுகிறது.

• இந்த நெற்பயிர்கள் இவ்வளவு அழகாகவும், செல்வ செழிப்பாகவும் இருப்பதற்கு முக்கியமான காரணம் இங்கு பாயும் “தாமிரபரணி” ஆறு ஆகும்.

• இதன் கிளை ஆறுகளாக மணிமுத்தாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, பச்சையாறு, சிற்றாறு போன்ற ஆறுகள் திருநெல்வேலி மாவட்டத்தின் செல்வ செழிப்பிற்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது.

• உழவுத் தொழிலில் சிறந்து காணப்படும் திருநெல்வேலி குளத்து பாசனமும், கிணற்று பாசனமும் அதிகளவில் பயன்படுத்தும் நகரமாக திகழ்கிறது.

• காய்கறிகள், பயிர் வகைகள், பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள், நெல் உற்பத்தி போன்ற விவசாயங்களில் செல்வ செழிப்பாக காணப்படும் தமிழ்நாட்டின் முக்கிய மாநிலமாக உள்ளது.

“நெல்லிக்காய்” உற்பத்தி செய்வதில் தமிழகத்தில் முதன்மை இடம் வகிக்கிறது.

• சேர மன்னர்களின் முக்கிய துறைமுகமான “கொற்கை” என்னும் துறைமுகம் இந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தான் உள்ளது. அங்கு தினமும் “மீன் பிடித்தல்” தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

• திருநெல்வேலி மாவட்டத்தில் மைய பகுதியில் முதன்மை கடவுளான சிவபெருமானின் “நெல்லையப்பர் திருக்கோயில்” உள்ளது.

• அகத்தியர் வாழ்ந்த இடமான “பொதிகை மலை” இங்குதான் உள்ளது.

• ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் அதிக அளவில் உருவாக்கப்பட்டு மாணவர்களின் வருங்கால கனவுகளையும், சாதனைகளையும் நிறைவேற்றுவதற்கான வெற்றி பாதையாக உள்ளது.

• தமிழ்நாட்டின் முக்கியமான சரணாலயமான “முண்டந்துறை” புலிகள் சரணாலயம் இங்கு தான் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகள்:

மேற்கே தென்காசி மாவட்டம் மற்றும் கேரளா எல்லைப் பகுதிகள் வரை, கிழக்கே தூத்துக்குடி வரை, வடக்கே விருதுநகர் வரை தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் முதல், தென்கிழக்கில் மன்னர் வளைகுடா வரை இந்த திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரிவுகள்:

1986-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி சில பகுதிகளை திருநெல்வேலியில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டங்களாக மாற்றப்பட்டது.

2019-நவம்பர் 12-ஆம் தேதி முதல் சில பகுதிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டமாக தமிழ்நாடு அரசால் மாற்றப்பட்டது.

திருநெல்வேலி பெயர் காரணம்:

• திருநெல்வேலி மாவட்டத்தை சோழர்கள் ஆட்சி செய்த போது “சோழமண்டலம்” என்று அழைக்கப்பட்டது.

• விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்த போது “திருநெல்வேலி சீமை” என்று அழைக்கப்பட்டது.

• பாண்டியர்கள் ஆட்சி செய்த போது “தென்பாண்டிய சீமை” என்று அழைக்கப்பட்டது.

• ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது “தின்னெல்வேலி” அழைக்கப்பட்டது.

புராணக்கதை கூறும் கருத்து:

“வேத பட்டர்” என்னும் மனிதர் பழங்காலத்தில் சிவன் மீது மிகுந்த பக்தியாக இருந்தார். இதனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் சென்று சிவனை வழிபட தொடங்கினார்.

• இதனால், வேதப்பட்டருக்கு வரம் அளித்த சிவ பெருமான் சகல செல்வங்களையும் கொடுத்து அவரை, பாதுகாத்து வந்தார். இப்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் சென்று சிவன் மீது கொண்ட அன்பினால் சிவனுக்கு நித்திய பூஜை செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய வேதபட்டர் இறுதியாக திருநெல்வேலி வந்தார்.

• சிவபெருமானுக்கு பூஜை செய்வதற்காக ஒருநாள் நெல்லை காய வைத்து விட்டு வேதப்பட்டர் குளிப்பதற்காக ஆற்றுக்கு போய்விட்டார்.

• அச்சமயத்தில் கரு மேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு கனத்த மழை பொழிந்தது. இதனால், பதற்றம் அடைந்த வேதப்பட்டர் இறைவனின் பூஜைக்காக காய போட்ட நெல் நனைந்துவிடும் என்று பதட்டத்துடனும், மிகுந்த கவலையுடனும் கோயிலுக்கு சென்றார்.

• சிவபெருமானின் அருளால் காய போட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் அதனை சுற்றி ஒரு “வேலி போல்” அமைப்பு உருவாகி பாதுகாக்கப்பட்டு இருந்தது. இதனை, பார்த்த வேதப்பட்டர் வியந்து போய் பாண்டிய மன்னனிடம் கூறினார்.

• இதனை, கண்ட மன்னரும் வியப்புற்று பார்த்தார். நெல்லுக்கு வேலிட்டு இறைவன் பாதுகாத்ததால் ஆரம்ப காலத்தில் இதற்கு, “நெல் வேலி” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

• அதன்பிறகு, காலப்போக்கில் “திரு” என்ற அடைமொழியை பெற்று “திருநெல்வேலி” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

• நெல்லை காய வைத்து இறைவனுக்கு படைக்க வேண்டும் என்று நல்ல குணம் கொண்ட ஒரு ஏழை விவசாயி இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக கருமேகங்கள் ஒன்று கூடி மழை கொட்டியதால் சிவபெருமான் நெல் மீது மழைத்துளி படாமல் பாதுகாத்தார். இதனால், சிவபெருமான் “நெல்லையப்பர்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

• இதனால், திருநெல்வேலிக்கு “நெல்லை” என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இதுபோன்று, திருநெல்வேலி என்ற பெயர் உருவாவதற்கு பல சுவாரசியமான வரலாற்று காரணங்கள் இருக்கின்றது.

திருநெல்வேலியின் பொருளாதாரம் முக்கியத்துவம் || thirunelveli katturai in tamil

  • திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியமான பொருளாதாரம் விவசாயம் தான். இந்த விவசாயத்தில் முக்கியமாக நெல், கரும்பு, பருத்தி, நெல்லிக்காய், பருப்பு வகைகள் போன்ற ஏராளமான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
  • இவை, அனைத்தும் இயற்கையாக மிகவும் செல்வ செழிப்பாகவும் விளைச்சலை தருவதற்கான காரணம் இங்கு பாயும் “தாமிரபரணி” ஆற்றின் நீர் தான்.
  • கைத்தறி நெசவு உற்பத்தி, பீடி தயாரித்தல், தீப்பெட்டி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களும் விவசாயம் தவிர இங்கு பார்க்கப்படுகிறது.
  • தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற “இருட்டு கடை அல்வா” இங்கு தான் தயாரிக்கப்படுகிறது.
  • திருநெல்வேலி மாவட்டம் கடந்த சில ஆண்டுகளில் புதிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள், தொழில் பூங்கா அமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சிகளை பெற்றுள்ளது.
  • தமிழகத்தில் கல்வியில் சிறந்த விளங்கக்கூடிய முதன்மை மாவட்டமாக திருநெல்வேலி பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இங்கு ஏராளமான மருத்துவ மற்றும் பொறியியல் தனியார் மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள் சிறந்து காணப்படுகிறது.
  • இங்கு இயற்கையாக காணக்கூடிய இயற்கை சுற்றுலா தளங்களும், பழமையான கோவில் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்கின்றது. இதனால், சுற்றுலாத்தலங்கள் காணப்படும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பொருளாதார ரீதியாக அதிகரிக்கிறது.

திருநெல்வேலி சிறப்பு 10 வரிகள் || Thirunelveli history in tamil pdf

• இந்தியாவில் தமிழ்நாட்டில் தென் பகுதியில் உள்ள மாவட்டங்களில் ஒரு மாவட்டம் தான் இந்த திருநெல்வேலி.

• கிட்டத்தட்ட 2000-ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற சிறந்த நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிறிது காலம் செயல்பட்டது.

• இந்த திருநெல்வேலி 1890-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் கிழக்கிந்திய கம்பெனி மூலம் உருவாக்கப்பட்டது.

• செப்டம்பர் 1-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் “திருநெல்வேலி உருவான” தினமாக கொண்டாடப்படுகிறது.

• திருநெல்வேலி மாவட்டத்தை சோழர்கள் ஆட்சி செய்த போது “சோழமண்டலம்” என்று அழைக்கப்பட்டது.

• விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்த போது “திருநெல்வேலி சீமை” என்று அழைக்கப்பட்டது.

• பாண்டியர்கள் ஆட்சி செய்த போது “தென்பாண்டிய சீமை” என்று அழைக்கப்பட்டது.

• ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது “தின்னெல்வேலி” அழைக்கப்பட்டது.

• திருநெல்வேலி தற்போது “நெல்லை” எனவும் அழைக்கப்படுகிறது.

• முதன்மை கடவுளான சிவபெருமானின் “நெல்லையப்பர்” கோவில் இங்கு உள்ளது.

• ஆரம்ப காலத்தில் இறைவனுக்கு படைக்க காய வைத்த நெல் மழையில் நனையாமல் இறைவனின் திருவிளையாடலால் வேலி போல் பாதுகாக்கப்பட்டது. இதனால், இது “நெல் வேலி” என்றும் அழைக்கப்பட்டது.

• திருநெல்வேலி மாவட்டத்தில் “இருட்டுக்கடை அல்வா” மிகவும் புகழ் பெற்ற, சிறப்பு வாய்ந்த ஒரு சுவைமிக்க இனிப்பு உணவு ஆகும்.

“நெல்லிக்காய்” உற்பத்தி செய்வதில் தமிழகத்தில் முதன்மை இடம் வகிக்கிறது.

• தமிழ்நாட்டின் முக்கியமான சரணாலயமான “முண்டந்துறை” புலிகள் சரணாலயம் இங்கு தான் உள்ளது.

• சேரர்களின் மிகவும் புகழ் பெற்ற துறைமுகமான “கொற்கை” துறைமுகம் இங்குதான் உள்ளது.

• அகத்தியர் வாழ்ந்த இடமான “பொதிகை மலை” இங்குதான் உள்ளது.

• இந்த திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் கல்வியில் புகழ்பெற்று காணப்படுகிறது.

• நெல்லையப்பர் கோவில், குற்றால அருவி, அகத்தியர்மலை, மணிமுத்தாறு அருவி போன்ற இயற்கை சூழல் மிகுந்த சுற்றுலாத்தலங்கள் இங்கு தான் உள்ளது.

• திரிகூட ராசப்பகவிராயர், கவிராச பண்டிதர், குமரகுருபரர், வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, கே.காமராஜர் போன்ற சுதந்திரப் போராட்டம் வீரர்களும், தமிழுக்கு தொண்டாற்றிய கவிஞர்களும் பிறந்தது இந்த திருநெல்வேலி தான்.

• 12-ஆழ்வார்களில் பெரிய ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்கள் பிறந்த ஊரும் இந்த திருநெல்வேலி தான்.

• திருநெல்வேலியில் முக்கியமான பொருளாதாரம் நெல், கரும்பு, பருத்தி, நெல்லி காய் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியது தான்.

• ஆதிச்ச நல்லூர் ஆழ்வாராய்ச்சியில் ஏராளமான மீன் சின்னம் பதித்த நாணயங்களும், பண்டையகால மன்னர்களின் ஆட்சி முறை பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளது.

கால்டுவெல்லின் கருத்துக்கள்:

தாயுமானவர், கால்டுவெல் போன்ற புகழ்பெற்ற மொழியியலாளர்கள் தமிழ் மொழியின் மீது அதிக அளவில் பற்று வர காரணமாக இருந்தது இந்த திருநெல்வேலியில் வரலாற்று கதைகளும், குறிப்புகளும் தான். 1877-ஆம் ஆண்டு கால்டுவெல் திருநெல்வேலியை பற்றி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார்.

இதில், சங்க இலக்கியங்களும் ஏராளமான பனை ஓலை சுவடிகளையும் ஆய்வு செய்தார். கால்டுவெல்லியின் திருநெல்வேலி பற்றி ஆராய்ச்சியின் முடிவில் ஏராளமான பழமையான கட்டுமானங்கள், மீன் சின்னம் அச்சிடப்பட்ட நாணயங்கள், பாண்டிய மன்னர்கள் காலத்தின் சடங்கு முறைகள் போன்றவற்றை உலகிற்கு தெரியப்படுத்தினார்.

1881-ஆம் ஆண்டு திருநெல்வேலியின் வரலாற்றை பற்றிய குறிப்புகளை கால்டுவெல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பிரசிடென்சியின் உதவியால் “டின்னெவெலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு” என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.

இவ்வாறு, திருநெல்வேலியின் சிறப்புகளை உலகிற்கு கொண்டு வந்த கால்டுவெல்லை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு கால்டுவெல் புகைப்படம் கொண்ட ஒரு “தபால் தலையை” வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *