திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள் | Thiruvalluvar History In Tamil

திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள் | Thiruvalluvar History In Tamil
திருவள்ளுவர் முழுமையான வாழ்க்கை வரலாறு:
Thiruvalluvar History In Tamil : இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய ஞானி ஆவார். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்று மனித வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்பதை முறையாக வழிவகுத்தவர் இவர்தான்.
பெரும்பாலும் உலகில் உள்ள அனைவருக்கும் திருவள்ளுவர் என்று சொன்னால் அவரைப் பற்றிய ஒரு சிறு விஷயங்களாவது தெரிந்து வைத்திருப்பார்கள்.
ஏனென்றால் அந்த அளவிற்கு தம்முடைய புல வலிமையால் இரண்டு அடியில் மட்டும் எழுதிய பாடல்கள் மூலம் இந்த உலகிற்கு அறிமுகமானவர்.
எண்ணற்ற பிறமொழி எழுத்தாளர்கள் திருவள்ளுவரின் ” என்னும் நூலை படித்துவிட்டு நம்முடைய மொழிகளில் இப்படி ஏதும் ஒன்று இல்லையே என் ஆச்சரியப்பட்டு அதனை அவரவர்கள் மொழிக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்துக் கொள்கின்றனர்.
Biography of thiruvalluvar – history of thiruvalluvar
திருவள்ளுவரின் முழுமையான பெயர் – திருவள்ளுவர்
திருவள்ளுவரின் மனைவி பெயர் – வாசுகி
திருவள்ளுவர் எழுதிய நூலின் பெயர் – திருக்குறள்
திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் – திருவள்ளுவர் ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர் என்று கிளாசவ் என்ற அறிஞர் எழுதியுள்ளார்.
திருவள்ளுவர் உருவப்படத்தை வரைந்தவர் யார் – திருவள்ளுவர் உருவப்படத்தை முதல் முறையாக “வேணுகோபால் சர்மா” என்பவர் வரைந்தார்.
திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார் – சென்னையில் உள்ள மயிலாப்பூர்
திருவள்ளுவர் பிறந்த வருடம் – கி. மு 31 ம் நூற்றாண்டு
திருவள்ளுவரின் பணி என்னது – புலவர்
திருவள்ளுவரின் பிறப்பு மற்றும் திருமண வாழ்க்கை:
திருவள்ளுவர் இந்திய நாட்டிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை என்னும் மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் என்ற பகுதியில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் திருவள்ளுவரின் பிள்ளைகள் பற்றிய எந்த தகவல்களும் தெரியப்படவில்லை. திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி. மேலும் மயிலாப்பூரில் திருவள்ளுவர் மற்றும் வாசுகி ஆகியோருக்கு கோவில் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:
• பொய்யில் புலவர்
• தெய்வ புலவர்
• பொய்யா மொழி புலவர்
• செந்ந போதர்
• தெய்வப் புலவர்
• திருவள்ளுவர்
• வள்ளுவர்
• பெருநாவலர்
• நான் முகனார்
• மாதுனுபங்கி
• நாயனார்
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு பற்றிய முழு தகவல்கள் | The History Of Thiruvalluvar
திருவள்ளுவர் சுமார் கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும், ஆனால் இவர் பிறந்ததற்கான சரியான பிறப்பிடம் மற்றும் எந்த சான்றும் இல்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் இவர் எழுதிய திருக்குறளின் மூலமே இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தவர் ஆய்வுகளின் மூலமே சொல்லப்படுகிறது தவிர தெளிவான எந்த சான்றுகளும் இல்லை.
திருவள்ளுவரைப் பற்றிய எண்ணற்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இருப்பினும் சிலர் இவர் கிமு 31 நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும், சிலர் இவரை மதுரையில் பிறந்தார் என்றும் மற்றும் சிலரோ இவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்து வாழ்ந்திருக்கிறார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் திருவள்ளுவரின் பெற்றோர் ஆதி மற்றும் பகவான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றிற்கும் எந்த உறுதியான சான்றிதழ்களும் இல்லை என்பதே உண்மை.
திருக்குறளைப் பற்றிய விரிவான விளக்கம்:
திருக்குறள் என்ற ஒற்றை நூல் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் இவர் ஒருவர் மட்டுமே.
பல அறிஞர்கள் இவர் திருக்குறள் மட்டுமல்ல மேலும் பல நூல்களை எழுதி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இவர் எழுதிய திருக்குறள் என்ற இந்த ஒரு நூல் மட்டுமே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
Biography of thiruvallur in Tamil:
• இதுவரை உலகத்தார் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே நூல் திருக்குறள் ஆகும்.
• திருக்குறள் மட்டுமே இரண்டு அடிகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
• மனித வாழ்வில் ஏற்படக்கூடிய மூன்று நிலைகளான அறம் பொருள் மற்றும் காமம் ஆகிய மூன்றையும் எவ்வாறு கடைபிடிப்பது என்பது முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
• திருக்குறளை கண்டு வியந்து படித்த ஜி யு போப் என்ற ஆங்கில எழுத்தாளர் ஒருவர் திருக்குறளை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
• திருக்குறளை ஒரு மனிதன் முழுமையாக படித்து கற்கின்றானோ அவன் தவறான வழிகளில் செல்வதை தவிர்த்து தான் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் நடத்தை ஆகியவற்றை உணர்ந்து வாழ்வில் சிறந்து விளங்குவான் என்று சொல்லப்படுகிறது.
• சைவர்கள் திருவள்ளுவரை நாயனார் என்று அழைக்கின்றனர். மேலும் திருவள்ளுவரின் மதம் பற்றி சரியாக குறிப்பிடாததால் அவரை சைவ சமயத்தை சேர்ந்தவர் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
திருக்குறள் மற்றும் அதில் உள்ள பிரிவுகளை பற்றிய குறிப்புகள்:
திருவள்ளுவர் எழுதிய இந்த திருக்குறள் என்னும் நூலானது பொருட்பால், அறத்துப்பால் மற்றும் காமத்துப்பால் என்ற மூன்று முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது.
மேலும், இந்த மூன்று அதிகாரங்களில் 1330 குறள்கள் எழுதப்பட்டுள்ளது.
அறத்துப்பால் என்னும் நூலில் சுமார் 380 பாடல்களில் ஒரு மனிதன் எவ்வாறு அறத்துடன் நடப்பது என்ற விதவிதமான குறிப்புகள் அங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அதே போல் பொருட் பாலிலும் சுமார் 700க்கும் அதிகமான பாடல்கள் அமையப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் அறத்தில் எவ்வாறு சிறந்து விளங்க வேண்டுமோ அதே போல் காமத்திலும் எவ்வாறு கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்பதற்கு சுமார் 250 பாடல்கள் எழுதப்பட்டுள்ளது.
திருக்குறளில் உள்ள பிரிவுகளின் விரிவான விளக்கம்:
1. அறத்துப்பால் அதிகாரத்தை பற்றிய விளக்கம்:
• திருக்குறளில் முதல் முதலாக எழுதப்பட்ட அதிகாரம் தான் இந்த அறத்துப்பால்.
• அறத்துப்பால் நூலை பொறுத்தவரையில் நான்கு பெரும் உட்பிரிவுகள் உள்ளது.
• பாயிரவியல், இல்லறவியல், துறவரவியல், மற்றும் ஊழியல் ஆகவே ஆகும்.
• இந்த அறத்துப்பால் நூலில் ஒரு மனிதன் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவினை பயன்படுத்தி எவ்வாறு செயல்பட வேண்டும் அல்லது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் அல்லது நல்ல நடத்தை ஆகியவை எவ்வாறு செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
• அறத்துப்பால் நூலில் மொத்தமாக 38 அதிகாரங்களும் மேலும் அதில் 380 பாடல்களும் உள்ளது.
2. பொருட்பால் அதிகாரத்தை பற்றிய விளக்கம்:
• இந்த பொருட்பால் நூலானது திருக்குறளில் எழுதப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய பிரிவு ஆகும்.
• மற்ற இரண்டு அதிகாரங்களை விட இந்த பொருட்பால் நூலில் மட்டுமே சுமார் 700 பாடல்கள் எழுதப்பட்டுள்ளது.
• மேலும் இதில் அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒலிம்பியல் என்ற நான்கு மிக பெரும் பிரிவுகளும் அடங்கியுள்ளது.
• சுமார் 70 அதிகாரங்கள் மற்றும் ஓரிடத்தில் அல்லது தேசத்தின் தலைவனாய் இருப்பவன் எவ்வாறு நியாய அநியாயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பன பற்றிய முழுமையான விளக்கங்கள் இந்த அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
3. காமத்துப்பால் அதிகாரத்தை பற்றிய விளக்கம்:
காமம் என்றால் என்ன:
காமம் என்ற இந்த ஒரு சொல் மனிதன் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சொல்லாகும். காமத்தால் மட்டுமே உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பெருகும் அடைகின்றன.
எனவே இந்த காமம் எவ்வாறு மனிதனிடத்தில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்துகின்றது என்பதை பற்றிய விளக்கம் தான் இந்த காமத்துப்பால்.
• இந்த காமத்துப்பால் நூலில் கலவியல் மற்றும் கற்பியல் என்ற இரண்டு பெரும் பிரிவுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
• மேலும் இந் நூலில் 250 பாடல்கள் உள்ளது.
• இந்த காமத்துப்பால் நூலை இன்பத்துப்பால் என்றும் பலர் அழைக்கின்றனர்.
• ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்படக்கூடிய காதல் மற்றும் மோகம் இவற்றால் ஏற்படக்கூடிய காமம் ஆகியவற்றை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் போன்ற விஷயங்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் எழுதிய வேறு நூல்கள் பற்றிய விவரங்கள்:
திருவள்ளுவர் திருக்குறள் மட்டுமல்லாது ஞானவெட்டியான் மற்றும் பஞ்சரத்தினம் என்ற இரண்டு நூல்களை இவர் ஏற்றி உள்ளதாக பலர் கூறி வருகின்றனர்.
ஆனால் இது ஆய்வுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படவில்லை.
திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள்:
• அவ்வையார்
• அதியமான்
• மாறனார்
திருவள்ளுவரின் இறப்பு:
இவரின் இறப்பு பற்றி இதுவரை எந்த ஒரு தகவல்களும் கிடைக்காததால், இவர் இறந்த காலம் சரியாகத் தெரியவில்லை.
ஆனால் மறைமலை அடிகள் என்பவர் இவர் இறந்த ஆண்டு பொ. உ. மு 31 என்று கணித்துள்ளார்.
திருக்குறளில் உள்ள மூன்று பிரிவுகள் மற்றும் அதன் முழுமையான விளக்கம்:
அறத்துப்பால் – Arathupaal Full Details In Tamil
1. அறத்துப்பாலில் உள்ள உட்பிரிவுகள் பெயர்கள் – பாயிரவியல் இல்லறவியல் துறவுறவியல் மற்றும் ஊழியியல்
2. பாயிரவியலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 5
3. பாயிரவியலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அரண் வலியுறுத்தல்.
4. இல்லறவியலில் உள்ள உட்பிரிவுகளின்
எண்ணிக்கை – 20
5. இல்லறவியலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வரை பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றி அறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கம் உடைமை, திருணில் விளையாமல், பொறையுடைமை, அழுக்காறாமை, வெக்காமை, புறங்கூறாமை, பயனிலா சொல்லாமை, தீவினை அச்சம், ஒப்புரவரிதல், ஈகை, புகழ்
6. துறவறவியலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 13
7. துறவியலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – அருளுடைமை, புலான் மறுத்தல், தவம், கூட ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்கள், அவாவறுத்தல்
8. ஊழியலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 1
9. ஊழலில் உள்ள உட்பிரிவின் பெயர் : ஊழ்
Thiruvalluvar History In Tamil
பொருட்பால் – Porutpaal Full Details In Tamil
1. பொருட்பால் நூலில் உள்ள பிரிவுகளின் பெயர்கள் – அரசியல், அமைச்சியல், அரணியியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல்.
2. அரசியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 25
3. அரசியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ்சேராமை, தெரிந்துசெயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்துதெளிதல், தெரிந்துவினையாடல், சுற்றந்தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்தசெய்யாமை, கண்ணோட்டம், ஒற்றாடல், ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கணழியாமை
4. அமைச்சர் நூலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 10
5. அமைச்சர் நூலில் உள்ள உட்பிரிகளின் பெயர்கள் – அமைச்சு, சொல்வன்மை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, தூது, மன்னரைச் சேர்ந்தொழுதல், குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை
6. அரணியியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 2
7. அரணியியல் நூலில் உள்ள உட்பிரிகளின் பெயர்கள் – நாடு, அரண்
8. கூழியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 1
9. கூழியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – பொருள்செயல்வகை
10. படையியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 2
11. படையியல் நூலில் உள்ள
உட்பிரிவுகளின் பெயர்கள் – படைமாட்சி, படைச்செருக்கு
12. நட்பியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 17
13. நட்பியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடாநட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகைமாட்சி, பகைத்திறந்தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின்மகளிர், கள்ளுண்ணாமை, சூது, மருந்து
14. குடியியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 14
15. குடியியல் நூலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – குடிமை, மானம், பெருமை, சான்றான்மை, பண்புடைமை, நன்றியில்செல்வம், நாணுடைமை, குடிசெயல்வகை, உழவு, நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை
காமத்துப்பால் – Kamathipura Full Details In Tamil:
1. காமத்துப்பால் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 2
2. காமத்துப்பால் நூலில் உள்ள அதிகாரங்களின் பெயர்கள் – களவியல் ,கற்பியல்
3. களவியலில் உள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை – 7
4. களவியலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – தகையணங்குறுத்தல், குறிப்பறிதல், புணர்ச்சிமகிழ்தல், நலம்புனைந்துரைத்தல், காதற்சிறப்புரைத்தல், நாணுத்துறவுரைத்தல், அலரறிவுறுத்தல்
5. கற்பியலில் உள்ள உட்பிரிகளின் எண்ணிக்கை – 18
6. கற்பியலில் உள்ள உட்பிரிவுகளின் பெயர்கள் – பிரிவாற்றாமை, படர்மெலிந்திரங்கல், கண்விதுப்பழிதல், பசப்புறுபருவரல், தனிப்படர்மிகுதி, நினைந்தவர்புலம்பல், கனவுநிலையுரைத்தல், பொழுதுகண்டிரங்கல், உறுப்புநலனழிதல், நெஞ்சொடுகிளத்தல், நிறையழிதல், அவர்வயின்விதும்பல், குறிப்பறிவுறுத்தல், புணர்ச்சிவிதும்பல், நெஞ்சொடுபுலத்தல், புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை.