Vallalar History in Tamil

Vallalar History in Tamil – வள்ளலார் வாழ்க்கை வரலாறு

Vallalar History in Tamil – வள்ளலார் வாழ்க்கை வரலாறு

Vallalar History in Tamil

Vallalar History in Tamil:- “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறிய ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் ஒரு இந்து சமய ஆன்மீகவாதி ஆவார். அதுமட்டுமின்றி, தமிழ் சங்கத்தில் வாழ்ந்த ஆன்மீகவாதிகளில் இராமலிங்கம் எனும் வள்ளலாரும் ஒருவர் ஆவார். உண்மையாகவும், நேர்மையாகவும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் இராமலிங்க அடிகள்.

நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வரப் பிரசாதமாக இந்த உலகிற்கு கிடைத்த வரம் தான் திருவருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள்.

பெயர் – திருவருட் பிரகாச வள்ளலார். ( இராமலிங்க அடிகள் )

பெற்றோர்கள் – இராமையா பிள்ளை, சின்னமையார்.

பிறந்த வருடம் – 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5-தேதி மருதூரில் பிறந்தார். ( கடலூர் மாவட்டம் , சிதம்பரம் அருகில்).

உடன் பிறந்தவர்கள் – சபாபதி, பரசுராமன், உண்ணாமலை, சுந்தராம்பாள்.

மனைவியின் பெயர் – தனக்கோடி.

வேறு பெயர்கள் – வள்ளலார்,திருவருட்பிரகாசர்.

இறப்பு – 1874-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காலமானார். (அகவை 50).

இராமலிங்க அடிகளார் பிறப்பு || இராமலிங்க அடிகளார் பெற்றோர் யார் ?

Vallalar History in Tamil:- இராமலிங்க அடிகள் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திலிருந்து கிட்டத்தட்ட 12-மையில் தொலைவில் உள்ள மருதூரில் இராமையா பிள்ளை, சின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தார்.

இராமலிங்க அடிகளுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இராமலிங்க அடிகள் பிறந்து சரியாக 6-மாத காலத்தில் அவரது தந்தை காலமானார். இதன் காரணமாக தன் குழந்தைகளுடன் இராமலிங்க அடிகளின் தாயாரான சின்னம்மையார் அவர் பிறந்த ஊரான திருவள்ளுவர் மாவட்டத்தில் பொன்னேரி என்ற ஊருக்கு குடியேறினார். சிறிது காலம் பொன்னேரியில் வாழ்ந்த பிறகு சென்னையில் உள்ள ஏழு கிணறு என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.

வள்ளலார் கல்வி :

Vallalar History in Tamil:- ஏழு கிணறு பகுதியில் வாழ்ந்த வந்த வள்ளலார் தனது மூத்த சகோதரர் சபாபதியின் பராமரிப்பிலும் அவரது பாதுகாப்பிலும் வளர்ந்து வந்தார். சபாபதிக்கு இராமலிங்க அடிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று சிந்தனையில் அவரை உயர்ந்த கல்வி பெற வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதனால், வள்ளலாரை கல்வி சாலைக்கு அனுப்பி வைத்தார். எனினும் வள்ளலாருக்கு இந்த உலக கல்வி அறிவில் அதிகம் நாட்டம் இல்லாமல் எப்போதும் முருக தானத்தில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

கல்வி கற்காமலேயே தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார் இராமலிங்க அடிகள். இதனைக் கண்டு மிகவும் வியந்த அவரது ஆசிரியர் ராமலிங்கத்திற்கு கல்வி எதுவும் தேவையில்லை என கூறிவிட்டார்.

வள்ளலாரின் திருமண வாழ்க்கை || வள்ளலாரின் முதல் மனைவி பெயர்

Vallalar History in Tamil:- 1850-ஆம் ஆண்டு இராமலிங்க அடிகளார் அவரது மூத்த சகோதரியின் மகளான தனகோடி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்தில் அதிக நாட்டம் இல்லாத இராமலிங்க அடிகள் திருமணம் முடித்த அன்று இரவே திருமண வாழ்க்கை துறந்து, தனது துறவு வாழ்க்கையை மேற்கொண்டு உலக மக்கள் மற்றும் பிற உயிர்களின் துயரை போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள் :

Vallalar History in Tamil:- வள்ளலார் தனது தியான, யோகா சிந்தனைகளை ஆன்மீக மற்றும் பிற மக்களின் துயரை போக்குவதற்கான பயன்படுத்தி உள்ளார். இதற்கு சான்றாக ஒரு முறை வள்ளலார் தனது ஆன்மீக சிந்தனை கருத்துக்களை எழுதிக் கொண்டிருந்த பொழுது இரவு நேரம் ஆகிவிட்டது இதனால் தெய்வத்தை வைத்துக்கொண்டு வள்ளலார் தனது சிந்தனை கருத்துக்களை எழுதிக் கொண்டிருந்தார்.

அப்போது தீபத்தில் உள்ள எண்ணெய் சிறிது சிறிதாக குறைந்து தீபம் அணையும் நிலைக்கு வந்துவிட்டது. இதனை, கவனித்த வள்ளலார் “அந்த தீபத்தில் எண்ணெயை ஊற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றினார். ஆனாலும், அந்த தீபம் அணையாமல் எண்ணெய் ஊற்றியது போலவே நன்றாக சுடர் விட்டு எறிந்தது”. இந்த காட்சியை அங்கிருந்த மக்கள் பலரும் கண்டு வள்ளலாரின் யோகா ஆற்றலை பார்த்து வியந்தனர்.

அதுமட்டுமின்றி, ஒரு முறை வள்ளலார் அவர்கள் நண்பர்களுடன் இரவு வேளையில் சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்கள் சில பேர் அவர்களை நிறுத்தி கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது கொள்ளையர்கள் தனது கைகளில் இருந்த ஆயுதங்களை கொண்டு வள்ளலாரை தாக்க முற்பட்ட பொழுது வள்ளலார் கொள்ளையர்களை பார்த்து “உயர்த்திய கை உயர்த்தியபடியே நிற்கட்டும்” என கூறினார்.

அவர் கூறியது போலவே அந்தக் கொள்ளையர்களின் கை அப்படியே நின்று விட்டது அவர்களால் அந்த கையை இறக்க முடியாமல் கதறி அழுது வள்ளலாரின் சக்தியை உணர்ந்து தங்களின் கேவலமான செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். உடனே வள்ளலார் அவர்களும் அவர்கள் செய்த தவறை மன்னித்து இனிமேல் களவுத் தொழிலை செய்யாமல் நியாயமான முறையில் உழைத்து வாழும்படி அறிவுரை கூறிய அனுப்பி வைத்தார்.

சத்திய தர்மசாலை :

1858-ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கடலூருக்கு சென்ற ராமலிங்க அடிகளார் அங்கு 1865-ஆம் ஆண்டு “சமரச சன்மார்க்க சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். இதன் நோக்கம் மக்களுக்கு கடவுள் ஒருவரே ஆவர், அவர் ஜோதி வடிவமானவர் , ஜீவகாருண்யம், பிற உயிர்களின் பசியை போக்குதல், ஜாதி சமய வேறுபாடுகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குதல் போன்ற கொள்கைகளை மக்களிடம் பரப்பி வைத்தார்.

1867-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் என்னும் கிராமத்தில் சத்திய தர்மசாலை எனும் ஒரு தர்ம சாலையை நிறுவி உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன், ஆண், பெண் என எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைவரின் பசியை போக்கும் ஒரே நோக்கத்தோடு ஒரு அன்னதான கூடமாக இந்த சத்திய தர்மசாலையை நிறுவினார்.

வள்ளலார் என்பவர் யார் ?

இதனால், பசித்தவர்களுக்கு பசி என்னும் நோயை குணமாக்கும் ஆற்றல் உடைய “வள்ளல்” தன்மை கொண்ட ஒரு தாழ்மை மனப்பாட உடைய மனிதனாக இராமலிங்க அடிகள் திகழ்ந்தார். இதனால், மக்கள் இவரை “வள்ளலார்” என அன்போடு அழைத்தனர்.

அன்று அவர் அந்த சர்ம தர்மசாலையில் ஏற்றி வைத்த தனலின் நெருப்பு இன்றளவும் மக்களின் மிகப்பெரிய நோயான பசி என்னும் நோயை போக்குவதற்காக இன்றளவும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, அங்கு வரும் மக்களுக்கு மூன்று வேலையும் இலவசமாக உணவளிக்கப்பட்டு இன்றளவும் அவர் உருவாக்கப்பட்ட தர்மசாலை பராமரிக்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த தர்மசாலைக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு கொடுத்து வருகிறது என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது.

இதுமட்டுமின்றி, காலப்போக்கில் இந்த சத்திய தர்மசாலை தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் வள்ளலாரின் கொள்கையை பின்பற்றும் ஆன்மீகவாதிகளால் தொடங்கப்பட்டு இன்றளவும் பசி என்று வருவோரின் நிற, இன, மதம், மொழி வேறுபாடுகள் இன்றி அவர்களின் “பசி என்னும் பிணியை” போக்கும் ஒரே நோக்கமாக செயல்பட்டு வருகிறது.

துறவியாக வள்ளலார் :

Vallalar History in Tamil:- 1850-ஆம் ஆண்டு இராமலிங்க அடிகளார் அவரது மூத்த சகோதரியின் மகளான தனகோடி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்தில் அதிக நாட்டம் இல்லாத இராமலிங்க அடிகள் திருமணம் முடித்த அன்று இரவே திருமண வாழ்க்கை துறந்து, தனது துறவு வாழ்க்கையை மேற்கொண்டு உலக மக்கள் மற்றும் பிற உயிர்களின் துயரை போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

வள்ளலாரின் கொள்கைகள் || vallalar speech in tamil

யோக, தியானம் ஆகியவற்றில் நான் நிலை பெற்றிருந்த வரலாறு அவர்கள் உலக மக்கள் அனைவரும் நல்ல வாழ்வினை வாழ்வதற்காக அவர்கள் கடைபிடிக்க சில உயரிய கொள்கைகளை கூறினார்.

1. பசித்த வயிறு கொண்ட ஏழைகள் மற்றும் பிற இன உயிர்களின் பசியை போக்குவது கடவுளுக்கு செய்கின்ற மிகப்பெரிய தொண்டாகும்.

2. இறைவன் ஜோதி வடிவமானவர் எனவே ஜோதி தெய்வத்திலேயே ஒவ்வொருவரும் இறைவனை தியானித்து பூஜிக்க வேண்டும்.

3. மனிதர்களுக்கு “ஜீவகாருண்யம்” எனப்படும் கொள்கையை இறைவனை அடையக்கூடிய எளிய வழியாகும்.

4. இறந்துவிட்ட நமது முன்னோர்களுக்கு திதி, ஸ்ரார்த்தம், தர்ப்பணம் போன்ற சடங்குகளை செய்வதால் எந்த விதமான பலன்களும் நமக்கோ, அவர்களுக்கோ ஏற்படப் போவதில்லை.

5. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஜாதி, மத, மொழி, நிற பாகுபாடுகளை பாராமல்அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும்.

6. இறைவழிபாட்டிற்குரிய கோவில்களில் அந்த இறைவனை படைப்பதாக கூறி எந்த ஒரு உயிரையும் பலியிடக் கூடாது.

7. புலால் உண்ணல், மது அருந்துதல், சூதாடுதல், புகைபிடித்தல், புறம்கூறுதல், பிறன்மனை நோக்குதல் போன்ற கீழான செயல்களை ஒவ்வொருவரும் விட்டொழிக்க வேண்டும்.

8. நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் புகுந்து விட்ட மூடப்பழக்க வழக்கங்களை எல்லாம் அறவே நீக்க வேண்டும்.

வள்ளலார் கூறும் உணவு முறைகள் :

ஒரு மனிதன் தெய்வீக நிலையை அடைய அவன் சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை வள்ளலாரின் முக்கிய கொள்கையாகும். இறைநிலையை அடைய ஒரு மனிதன் புலால் உணவுகள், மது அருந்தால், புகை பிடித்தல், சூதாட்டத்தை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை அறவே நீக்க வேண்டுமென கூறினார்.

மேலும், மனித உடல் ஆரோக்கியத்திற்கும், ஆன்மா மேம்பாட்டிற்கும் சில உணவு வகைகளை நாம் உட்கொள்ள எனவும் வள்ளலார் கூறியுள்ளார்.

• நாம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசி வகைகளில் சீரக சம்பா அரிசி மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.

• கீரை வகைகள் – பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை, கரிசலாங்கண்ணி கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை ஆகியவற்றை பக்குவம் செய்து அதனுடன் பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.

• பருப்பு வகைகளில் துவரம் பருப்பு தவிர மற்ற வகையான பருப்புகளை குறைந்த அளவிலேயே உண்ண வேண்டும்.
• காய்கறி வகைகள் – வாழைக்காய் அவரைக்காய் கத்திரிக்காய் முருங்கைக்காய் பீர்க்கங்காய் புடலங்காய் பூசணிக்காய் கருணைக்கிழங்கு கொத்தவரங்காய் கொண்ட காய்கறிகளை அதிகம் சேர்த்து உணவு உண்ண வேண்டும்.

• பழ வகைகள் – பழ வகைகளில் குறிப்பாக வாழைப்பழங்களில் பேயன் மற்றும் ரஸ்தாளி போன்ற பழங்களை சாப்பிடுவதால் மனிதர்களின் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படும் என வள்ளல் பெருமான் கூறியுள்ளார்.

தினமும் நம் வாழ்க்கையில் சமைக்கின்ற உணவுகளை அன்றே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். முதல் நாள் சமைத்த உணவை மறுநாள் வைத்து சாப்பிடுவது கூடாது.

குழம்பு மற்றும் பதார்த்த வகையில் உப்பு, மிளகாய் போன்றவற்றை குறைந்த அளவே சேர்த்து கொள்ள வேண்டும். உணவில் மிளகாய்க்கு பதிலாக மிளகு அதிகம் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது.

உணவு பதார்த்தங்களை தாளிக்க எப்பொழுதும் பசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில், சீரகம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே கணம் கடுகு பயன்பாட்டை முற்றிலும் அகற்றுவது சிறந்தது எனவும் இராமலிங்க அடிகளார் கூறியுள்ளார்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள் :

1. அருளாசிரியர்.
2. இதழாசிரியர்.
3. இறையன்பர்.
4. உரையாசிரியர்.
5. சமூக சீர்திருத்தவாதி.
6. சித்த மருத்துவர்.
7. சிறந்த சொற்பொழிவாளர்.
8. ஞானாசிரியர்.
9. தீர்க்கதரிசி.
10. நூல் ஆசிரியர்.
11. பசிப்பிணி போக்கிய வள்ளலார்.
12. பதிப்பாசிரியர்.
13. போதகாசிரியர்.
14. தமிழ் மொழி ஆய்வாளர்.
15. பண்பாளர்.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் கூறிய அறிவுரைகள் || வள்ளலாரின் அருள் நெறிகள் கட்டுரை

1. நல்வர் மனதை நடுங்கச் செய்யாதே..!!

2.தானம் தருபவரை தடுத்து நிறுத்தாதே..!!

3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே..!!

4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே..!!

5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே..!!

6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே..!!!

7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே…!!

8. குருவை வணங்கக் கூசி நிற்காதே..!!

9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே…!!

10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே..!!

11. பிறரை இகழ்ந்து பேசாதே..!!

12. பிற உயிர்களிடமும் அன்பு கொள்க..!!

இராமலிங்க அடிகள் கொள்கைகள் :

1. இறந்தவர்கள் எரிக்கக் கூடாது சமாதி வைத்தல் வேண்டும்.

3. எதிலின் போது நோக்கம் வேண்டும்.

3. எந்த உயிரிகளையும் கொல்லக்கூடாது.

4. எல்லா உயிரினும் நமக்கு உறவு இல்லை அவற்றை துன்புறுத்த வலியுறுத்தக் கூடாது.

5. சிறு தெய்வ வழிபாடு இருக்க கூடாது அவற்றின் பெயரால் பலியிடத்திலும் கூடாது.

6. சாதி, மதம் எனும் மொழி என்று வேறுபாடுகள் கருதாமல் உணவு அளிக்க வேண்டும்.

7. கடவுள் ஒருவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

8. மதவெறி இருக்கக் கூடாது.

வள்ளலார் இயற்றிய நூல்கள் || வரலாறு எழுதிய பாடல்கள் தொகுப்பு என்ன ?

• மனுமுறை கண்ட வாசகம்.

• ஜீவகாருண்யா ஒழுக்கம்.

• சின்மய தீபிகை.

• ஒழிவிலொடுக்கம்.

• தொண்டை மண்டல சதகம்.

• இவர் பாடிய ஆயிரம் பாடல்களின் தொகுப்பு “திருவருட்பா” என அழைக்கப்படுகிறது.

வள்ளலார் இறப்பு :

நம் சமூகத்திற்கு பல தத்துவங்களையும், பல பயனுள்ள தகவல்களையும், பிற உயிர்களின் கஷ்டத்தை போக்கும் மிகுந்த மனப்பான்மை கொண்ட தெய்வத்தின் அருள் பெற்ற வள்ளலார் அவர்கள், 1874-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி இவ்வுலக விட்டு பிரிந்தார்.

Read Also:- திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *